கொடி காத்த திருப்பூர் குமரன் பிறந்த நாள்

கொடி காத்த திருப்பூர் குமரன் பிறந்த நாள்

#

கொடி காத்த திருப்பூர் குமரன் பிறந்த நாள்

திருப்பூர் குமரன்! எல்லோருக்கம் பிறந்த ஊரே அவர்கள் பெயருடன் பெருமையாக சொல்லப்படும்.ஆனால் திருப்பூர் குமரன் என்ற பெயர் அந்த வழியில் வந்ததல்ல! பிறந்த ஊர் ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் ஆமாம் அம்மலையில் தான் பிறந்தார். உயரமான மலையில் பிறந்ததாலோ என்னவோ இன்றும் அவர் எல்லோராலும் புகழப்பட்டு எல்லோர் மனதிலும் உயர்ந்த இடத்தில் இருக்கிறார்! விடுதலை போராட்டத்தில் பங்கு பெற்ற இளம் தியாகி ஆவார். அவர் திருப்பூரில் நடந்த போராட்டத்தின் போது ஆங்கிலேயர்களால் தாக்கப்பட்டும் துன்புறுத்தப்பட்டாலும் தன் கையில் இருந்த தேசிய கொடியை,நமது வெற்றி சின்னத்தை கைவிடாமல் பாதுகாத்தார்.இறுதியில் அதற்காக தன் விலை மதிப்பில்லாத உயர்ந்த உயிரையும் தியாகம் செய்து தேசிய கொடியை காத்தார். அவர் மடிந்து மண்ணில் விழுந்தபோதும் தேசிய கொடி விழாமல் அவர் கைகளில் இருந்து. இதனாலே அந்த இளம் தியாக நம் திருப்பூர் குமரன் ஆனார்! வாழ்க பாரதம்!
680 காட்சிகள்
8 மாசத்திற்கு முன்
போஸ்ட் இல்லை
மத்த ஆப்-ல் ஷேர் செய்ய
Facebook
WhatsApp
காப்பி லிங்க்
அழிக்க
Embed
நான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட் ...
Embed Post