பரிதாபங்கள்
#

பரிதாபங்கள்

ஏழையின் கனவு: கருவரை என்னுமொர் கோவிலைத் தாண்டித் தெருவரை வந்துவிட்டேன்- நான் தெருவரை வந்துவிட்டேன். மீண்டும் கருவரை நிம்மதி வேண்டி கல்லறை வந்துவிட்டேன்-என் கடைவழி கண்டுவிட்டேன்... மணிதன் காணும் ஞான நிலை-அது மரணம் என்னும் யோகநிலை... நித்தமும் பூமியில் நாடகம் பார்த்தே நித்திரைக் கெட்டுவிட்டேன்- என் நெஞ்சையும் விட்டுவிட்டேன்- இந்த சத்திர வாழ்க்கையில் சகலமும் மாயையே!... 'நித்தியம்' தேடுகின்றேன்-ஒரு நிழல் வாடுகின்றேன்... அமைதி பொங்கும் இடம் வேண்டும்-நான் ஆன்மசாந்தி பெற வேண்டும் தாயெனும் தெய்வமும் தன்னாவி நீங்கிட பூவிழி மூடி விட்டாள் - காட்டுப் பாதையில் ஓடி விட்டாள் - என் தாயவள் தாங்கிய பாரங்கள் பூமியில் போட்டுவிட்டால் - காலப் பொய்கையில் மூழ்கி விட்டாள்!... என்னை எனக்கே புரியவில்லை - இது என்ன வாழ்க்கை தெரியவில்லை!... தந்தையின் ஒர் துளி தாயிடம் சேர்ந்திட விந்தையாய் வந்தவன் நான் - ஒரு கந்தைப் போல நொந்தவன் நான்- வாழ்க்கைச் சந்தையில் ஆயிரம் சஞ்சலம் தேங்கிட நிந்தையில் வாழ்ந்தவன் நான்!... பிச்சை பெறவா எண்ணி வந்தேன் - அட எச்சில் உணவா உண்ண வந்தேன்... கட்டிய தாரமும் கண்மணி பூக்களும் பட்டினிப்பாடு கண்டார் - வெற்றுப் பானையின் ஓடு கண்டார் - மாற்றிக் கட்டவோர் நூலாடைக் கண்டதும் இல்லையே! வெட்கத்தின் கேட்டுக் கண்டார் - இங்கு வேதனைக் கூடுக் கண்டார்... ஏழையின் வீடு தெரு வீதி - இங்கு நாயும் ஏழையும் ஒரு ஜாதி... என்னன்னை இம்மண்ணில் ஏனென்னைப் பெற்றாலோ? என் கண்ணை ஏங்க விட்டாள் - நெஞ்சை ஏக்கத்தில் வீங்க விட்டாள் - நான் என்னென்ன காண வந்தேன் எப்படியோ வாழ வந்தேன்!.. என் நெஞ்சை நோகவிட்டாள் - என்னை ஏழையாய் சாகவிட்டாள்... எனது வாழ்க்கை விடிய வில்லை - நான் வந்த கணக்கு முடிய வில்லை... துன்பமும் துக்கமும் தொல்லையும் இல்லாத இன்பத்தின் வீடுக் கண்டேன் - அதை இன்று நான் கண்டு கொண்டேன் - இங்கு என்றுமே நிம்மதி. ஏகாந்த சன்னதி!... கன்கவர் மாடம் என்பேன் - அது கல்லறைக் கூடம் என்பேன்!... வெயிலோ மழையோ இங்கில்லை - அந்த நிழலோ சுகமோ இங்கில்லை... கருவறை மாதங்கள் கல்லறைக் காலங்கள் இருமுறைக் காணும் சொர்க்கம் - இரண்டின் நடுவிலே இங்கு துக்கம் - தாயின் கருவறை ஆரம்பம்! கல்லறை ஆனந்தம்!!... இரண்டுக்கும் இடையே வெட்கம் - இன்பச் சொர்க்கமினி எந்தன் பக்கம்! கண்டேன் எனக்கோர் கல்லறையே - தினம் காண்பேன் மனதில் நிம்மதியே!!!...
534 காட்சிகள்
4 மாசத்திற்கு முன்
போஸ்ட் இல்லை
மத்த ஆப்-ல் ஷேர் செய்ய
Facebook
WhatsApp
காப்பி லிங்க்
அழிக்க
Embed
நான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட் ...
Embed Post