இயேசுகிறிஸ்து
#

இயேசுகிறிஸ்து

ஜீவத்தண்ணீரின் ஊற்று 'என் ஜனங்கள் இரண்டு தீமைகளைச் செய்தார்கள்; ஜீவத்தண்ணீர் ஊற்றாகிய என்னை விட்டுவிட்டார்கள்; தண்ணீர் நிற்காத தொட்டிகளாகிய வெடிப்புள்ள தொட்டிகளைத் தங்களுக்கு வெட்டிக் கொண்டார்கள்' - (எரேமியா 2:13). . இந்த இடத்தில் தேவன் தம் ஜனங்கள் தமக்கு விரோதமாக இரண்டு தீமைகளை செய்தார்கள் என்று முறையிடுகிறார். நன்மையான காரியத்தை விட்டு தீமையை தெரிந்தெடுப்பேதே மனிதனுடைய இயல்பாக இருக்கிறது. தேவனோடு மனிதன் கொண்டுள்ள உறவிலே தான் இப்படிப்பட்ட காரியங்கள் அதிகமாக காணப்படுகிறது. ஜீவத்தண்ணீர் ஊற்றாகிய தேவனை விட்டுவிட்டு, தண்ணீரே நிற்காத வெடிப்புள்ள தொட்டிகளை தெரிந்து கொள்வதே மனிதனின் இயல்பாக இருக்கிறது. கர்த்தர் தரும் இலவசமான ஜீவத்தண்ணீரின் ஊற்றிலே மொண்டு ஆனந்தமாக குடித்து மகிழ்வதை விட்டுவிட்டு, தண்ணீரே இல்லாத வெடிப்புள்ள தொட்டிகளை தங்களுக்கு வெட்டி கொண்டவர்கள் வேறு யாருமில்லை, தேவனுடைய ஜனங்களே ஆவார்கள். 'பண்டிகையின் கடைசிநாளாகிய பிரதான நாளிலே இயேசு நின்று, சத்தமிட்டு: ஒருவன் தாகமாயிருந்தால் என்னிடத்தில் வந்து, பானம்பண்ணக்கடவன். வேதவாக்கியம் சொல்லுகிறபடி என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ, அவன் உள்ளத்திலிருந்து ஜீவத்தண்ணீருள்ள நதிகள் ஓடும் என்றார்' (யோவான் 7:37-38). இயேசுகிறிஸ்து அருளும் இலவசமான ஜீவத்தண்ணீரை அருந்த மனமில்லாதபடி இன்றைய நாட்களில் அவருடைய ஜனங்கள் அவரை விட்டுவிட்டார்கள். அவரிடத்தில் விசுவாசிக்கிறவனுடைய உள்ளத்திலிருந்து ஓடும் ஜீவத்தண்ணீருள்ள நதிகளை அவர்கள் தெரிந்து கொள்ளாமல், தண்ணீரே நிற்காத வெடிப்புள்ள தொட்டிகளை தெரிந்து கொண்ட அவருடைய ஜனம், அதனால் ஒரு வெறுமையை தங்கள் இருதயங்களில் பெற்றவர்களாயிருக்கிறார்கள். கிறிஸ்தவர்கள் என்று பெயர் கொண்டிருந்தாலும், இருதயத்தில் மகிழ்ச்சி இல்லாதவர்களாக, ஏதோ வாழ்கிறோம் என்று வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் உள்ளத்தில் உள்ள வெறுமையை இயேசுகிறிஸ்துவினால் மட்டுமே நிரப்ப முடியும்! தேவன் இல்லாத வெறுமையை மாற்ற அவருடைய ஜனம் என்று சொல்லி கொள்ளுகிறவர்கள், தண்ணீர் நிற்காத தொட்டிகளாகிய வெடிப்புள்ள தொட்டிகளைத் தங்களுக்கு வெட்டிக் கொண்டார்களாம். நம்மை திருப்தி செய்து கொள்ள நாமே எடுத்து கொள்கிற முயற்சி இது. இது நம்முடைய பெருமையையே வெளிப்படுத்துகிறது. நாம் எடுத்து கொள்கிற முயற்சிகள் எல்லாம், தண்ணீர் நிற்காத வெடிப்புள்ள தொட்டியை போன்றதாகும். எத்தனை முயற்சிகள் எடுத்தாலும், அந்த தொட்டி வெடிப்புள்ளதாக இருப்பதால், அங்கு தண்ணீர் ஒருக்காலும் நிற்காது. தேவன இல்லாதபடி நாம் எடுக்கிற எந்த முயற்சிகளும் வீணாணதே! எத்தனை முறை அதில் நிரப்பினாலும், அது நிறைவடையவே முடியாது. உலகத்தின் காரியங்களில் நாம் நம்மை திருப்தி படுத்தி கொள்ள நினைத்தால் அது ஒரு போதும் நம்மை திருப்தி படுத்தவே முடியாது. ஆரம்பத்தில் இனிமையாக மனமும் இருதயமும் நிரம்பினதை போல தோற்றமளிக்கும். ஆனால் அது சிறிது நேரமே, ஓட்டையான தொட்டியில் ஊற்றின தண்ணீரை போல அது சீக்கிரமே வடிந்து போய் விடும். பின் இருதயத்தில் இருப்பது வெறுமையும், குற்ற உணர்ச்சியுமே! உலக சிற்றின்பங்கள் எல்லாம் சந்தோஷத்தை கொடுப்பது, சில மணி நேரங்களுக்கு மாத்திரமே! எதுவும் நிரந்தரமானது அல்லவே அல்ல! இதற்கு ஒரே ஒரு பதில், நாமாக முயற்சி எடுத்துகொண்டிராமல், , உடைந்து போன தொட்டியில் ஊற்றின தண்ணீரை போல தற்காலிக திருப்திப்பட்டு கொள்ளாமல், ஜீவ தண்ணீரின் ஊற்றான கிறிஸ்துவை பற்றி கொள்வோம். அந்த ஜீவத்தண்ணீர், நிரந்தரமானது, தொடர்ந்து ஊறிக்கொண்டே இருப்பது மட்டுமல்ல, அதுவே நம்முடைய ஆத்துமாவையும் ஆவியையும் திருப்திபடுத்த வல்லது. மற்றவை எல்லாம் ஓட்டையான தொட்டியில் ஊற்றப்பட்ட தண்ணீரே! வேதவாக்கியம் சொல்லுகிறபடி என்னிடத்தில் (இயேசுகிறிஸ்துவினிடத்தில்) விசுவாசமாயிருக்கிறவன் எவனோ, அவன் உள்ளத்திலிருந்து ஜீவத்தண்ணீருள்ள நதிகள் ஓடும்.ஆமென் அல்லேலூயா! *🌹GLORY TO JESUS🌹*
401 காட்சிகள்
6 மாசத்திற்கு முன்
#

இயேசுகிறிஸ்து

நம் மேல் விழுந்த கடமை சுவிசேஷத்தை நான் பிரசங்கித்துவந்தும், மேன்மைபாராட்ட எனக்கு இடமில்லை; அது என்மேல் விழுந்த கடமையாயிருக்கிறது; சுவிசேஷத்தை நான் பிரசங்கியாதிருந்தால், எனக்கு ஐயோ. - (1கொரிந்தியர் 9:16). . மோட்ச பிரயாணம் என்ற புத்தகத்தை அறியாத கிறிஸ்தவர்கள் யாரும் இருக்க முடியாது. அதனை எழுதியவர் ஜான் பனியன் என்பவர் ஆவார். வேத புத்தகத்திற்கு அடுத்தபடியாக 130க்கும் அதிகமான மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்ட புத்தகம் இதுவே ஆகும். அவர் அப்புத்தகத்தை எப்படி எங்கு எவ்வாறு எழுதினார் என்ற தகவலை அறிந்தோமானால், ஆச்சரியமாக இருக்கும். அவரது வாழ்க்கை குறிப்புகள் நம் கிறிஸ்தவ வாழ்விற்கும் அதிக பிரயோஜனமாயிருக்கும். இங்கிலாந்தில் கிறிஸ்தவரல்லாத குடும்பத்தில் பிறந்த இவர் தனது சிறு வயதிலிருந்தே தனது மூதாதையரின் தொழிலான பாத்திரங்களை பழுது பார்த்து விற்பனை செய்யும் தொழிலை தந்தையுடன் சேர்ந்து செய்து வந்தார். குடும்பத்தின் ஏழ்மை நிலையால் பள்ளிப்படிப்பை கூட பாதியிலேயே விட வேண்டியதாயிற்று. இளம் பிரயாத்தில் தீய மனிதனாக வாழ்ந்தார். நிம்மதியற்ற பனியன் 16 வயதில் இராணுவத்தில் சேர்ந்தார். ஒரு முறை அரசின் ஆணைப்படி போருக்கு செல்ல உத்தரவிடப்பட்டார்; ஆனால் கடைசி நேரத்தில் இவருக்கு பதிலாக வேறொருவர் அனுப்பப்பட்டார். அந்த நபர் போரின் முதல நாளிலேயே போரில் மரணமடைந்தார். இந்த நிகழ்ச்சி இவரை சித்திக்க வைத்தது. மயிரிழையில் தன் உயிர் தப்பினது ஏனோ? என்று யோசித்து நல்லவனாக வாழ விரும்பினார். ஆனால் அது முடியவில்லை. இரண்டு ஆண்டுகளில் வீடும் திரும்பினார். 19 வயதில் ஒரு கிறிஸ்தவ பெண்ணை மணமுடித்தார். மனைவி அடிக்கடி கிறிஸ்துவை பற்றி கூறியும் அவர் ஆண்டவரை ஏற்க மனமற்றவராகவே இருந்தார். இந்நிலையில் ஒருநாள் தெருவில் பாத்திரம் ரிப்பேர் செய்யும் மூன்று பெண்கள் இயேசுவை பற்றி கூறி கொண்டிருப்பதை கேட்டு தன்னை முற்றிலும் கிறிஸ்துவுக்கு ஒப்பு கொடுத்தார். ஆண்டவரை ஏற்று கொண்ட கொஞ்ச நாட்களிலேயே அவரது மனைவி இறந்து போனார். தனது வாழ்வை முற்றிலும் ஆண்டவருக்கு அர்ப்பணித்து, அவருக்காக தன்னால் இயன்றதை செய்ய முன் வந்தார். பாத்திரங்களை ரிப்பேர் பார்க்கும் வீடுகளில் தனது தொழிலை செய்து கொண்டே இயேசுவைப் பற்றி அறிவிக்க ஆரம்பித்தார். அக்காலத்தில் இங்கிலாந்தில் போதகர் தவிர யாரும் சுவிசேஷத்தை பிரசங்கிக்க கூடாது என்ற சட்டம் இருந்தது. ஆனால் வேதத்தில் 'நீங்கள் உலகமெங்கும் போய் சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தை பிரசங்கியுங்கள்' என்ற வசனத்திற்கு கீழ்ப்படிவதே உத்தமம் என உணர்ந்து, சுவிசேஷத்தை தைரியமாய் பிரசங்கித்தார். ஆகவே சட்டத்தை மீறிய குற்றத்திற்காக நீதிபதி முன் நிறுத்தப்பட்டார். 'இனி சுவிசேஷம் அறிவிக்கமாட்டேன் என கூறினால் விடுதலை' என்றார் நீதிபதி. அப்படி உறுதியளிக்க பனியன் முன்வரவில்லை. உடனே நீதிபதி மூன்று மாதம் சிறை தண்டனை என அறிவித்தார். பனியனோ, மறு நிமிடமே 'இன்று நான் விடுவிக்கப்படாமல் தேவ உதவியால் நாளை பிரசங்கிப்பேன்' என்றார். அதனால் மூன்று மாத சிறை தண்டனை பன்னிரண்டு வருடங்களாக நீடித்தது. அதிக அழுக்கு நிறைந்த சிறிய அறையில் 50 பேருடன் தங்க வேண்யதாயிருந்தது. மங்கலான வெளிச்சம், துஷ்டர்கள், சுகாதாரமற்ற நிலை இந்த நிலையில் தான் மோட்ச பிரயாணம் புத்தகத்தை எழுதினார். சற்று யோசித்து பாருங்கள், சிறிய அறைக்குள், 50 பேரின் பேச்சு, சத்தம் தொட்டதற்கெல்லாம் குற்றம் சொல்லி அடிக்க வரும் துஷ்டர்கள் மத்தியில் ஒரு பெரிய புத்தகத்தை எழுதினார். அவர் பிறப்பிலே கிறிஸ்தவரல்ல, படித்தவரல்ல, அவருக்கு தெரிந்தது ஓட்டை விழுந்த பாத்திரத்தை ஈயம் கொண்டு அடைப்பது மட்டுமே. தேவன் இவரது சாமர்த்தியத்தை பார்க்கவில்லை, அர்ப்பணத்தை பார்த்தார். நாற்றமெடுக்கும் அறையில் உலகிற்கே மணம் வீசும் மோட்ச பிரயாணத்தை எழுதினார். தேவன் உங்களுக்கு கொடுத்து சிறிய பொறுப்பை நிறைவேற்ற இன்று உங்களுக்கு எத்தனை சௌகரியங்கள் உண்டு? அத்தனை பாடுகள் அசௌகரியங்கள் மத்தியிலும் உலகமே போற்றத்தக்கதான ஒரு புத்தகத்தை, ஒரு ஜான் பனியனால் எழுத முடியும் என்றால், உங்களால் எத்தனை காரியங்களை தேவனுக்காக செய்ய முடியும்! உங்கள் இருதயத்தில் கர்த்தருக்காக எதையாவது செய்ய வேண்டும் என்ற வாஞ்சை கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தால், எந்த சூழ்நிலையிலும் நீங்கள் அவருக்காக எதையும் செய்ய முடியும் என்பதற்கு அவரே சான்றாக இருக்கிறார். நம்மால் இயன்றதை கர்த்தருடைய நாம மகிமைக்காக செய்வோமா? சுவிசேஷத்தை பிரசங்கிப்பது நம்மேல் விழுந்த கடமை என்று பவுல் அப்போஸ்தலன் சொல்கிறாரே, அதை நம் கடமையாக எடுத்து ஏதாவது ஒரு வகையில் நாம் கர்த்தருக்காக காரியங்களை செய்வோமா? இதோ, சீக்கிரமாய் வருகிறேன், அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது என்று சொன்னவர் சீக்கிரம் வருகிறார். அவர் வருகைக்குள் நம்மால் இயன்றதை செய்து, அவருடைய கரத்தினால் நல்ல பலனை பெறுவோமா? *🌹GLORY TO JESUS🌹*
349 காட்சிகள்
6 மாசத்திற்கு முன்
மத்த ஆப்-ல் ஷேர் செய்ய
Facebook
WhatsApp
காப்பி லிங்க்
அழிக்க
Embed
நான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட் ...
Embed Post