🕉️ ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள்
253 Posts • 331K views
சுதர்சன மகிமை ௐ சுதர்சனாய வித்மஹே ஜூவால கஷ்தாய தீமஹி தந்நோ சக்ர ப்ரசோதயாத். ******************************** சுதர்சன சக்கரத்தின் மகிமை; சக்கரத்தாழ்வாரை வணங்குவோம்..!! கிருஷ்ணரின் கையில் உள்ளது சுதர்சன சக்கரம் என்பது நமக்கெல்லாம் தெரியும். சுதர்சன சக்கரம் குறித்து இன்னும் அறிந்துகொள்வோம். சுதர்ஷன் என்றால் மங்கலகரமானது, மங்கலகரமானவன் என்று அர்த்தம். ‘சக்ரா’ என்றால் எப்பொழுதும் செயல்பாட்டில் இருந்துகொண்டே இருப்பது என்று பொருள். மற்ற ஆயுதங்களைப் போல் சுதர்சன சக்கரம் இல்லை. எல்லா ஆயுதங்களைக் காட்டிலும் வலிமையானது. அத்துடன் எப்பொழுதும் சுழன்று கொண்டே இருக்கக் கூடியது. சாதாரணமாகவே, சுதர்சன சக்கரம் என்பது பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் சுண்டு விரலில் காணப்படும் மகாவிஷ்ணுவோ, தன் ஆள்காட்டி விரலில் வைத்துக் கொண்டிருக்கிறார். யார் மீதாவது ஏவும் பொழுது கிருஷ்ணனும், ஆள்காட்டி விரலில் இருந்து தான் ஏவுகிறார். எதிரிகளை, அசுரக்கூட்டத்தை அழித்த பின்னர், சுதர்சனச் சக்கரமானது மீண்டும் அந்த இடத்துக்கே திரும்ப வந்துவிடுகிறது. அதாவது, சுதர்சன சக்கரம் ஏவப்பட்ட பிறகு ஏவிய பகவானின் கட்டளைக்குக் கட்டுப்பட்டு, அவரின் திருக்கரங்களுக்கே வந்துவிடுகிறது. எவ்வித அழுத்தமும் இல்லாத சூன்யப்பாதையில் செல்வதால் சுதர்சன சக்கரத்தால் எந்த இடத்திற்கும் கண்மூடி கண் திறக்கும் நேரத்திற்குள் செல்ல முடியும் என்கிறது விஷ்ணு புராணம். மேலும் மகாவிஷ்ணுவின் திருக்கரத்திலிருந்து சுதர்சனச் சக்கரமானது கிளம்பியதும் தெரியாது, எதிரிகளை அழித்ததும் தெரியாது, மீண்டும் அவரின் திருக்கரங்களுக்கு வந்து விரலில் வந்து உட்கார்ந்துகொள்வதும் தெரியாது. எல்லாமே கணப்பொழுதில் அரங்கேறிவிடும். ஒருவேளை, எதிரியானவன் மிகுந்த பராக்கிரமம் மிக்கவனாக இருந்தால், சுதர்சனச் சக்கரத்தின் வேகத்தில் தடையேதும் ஏற்பட்டால்... அப்போது, சக்கரத்தின் வேகம் இதுவரை இல்லாத அளவுக்கு வேகம் கூடுமாம்! இதை ‘ரன்ஸகதி’ என்பர். இன்னொரு விஷயம்... சுதர்சனச் சக்கரம் சுழலும் தருணத்தில், சப்தங்கள் எழுப்புவதில்லை. சுதர்சனச் சக்கரத்தின் வடிவம் எத்தகையது தெரியுமா? ஒரு கைப்பிடி அளவு துளசியில் அடங்கக்கூடியது. அதேசமயம், இந்தப் பிரபஞ்சம் அளவுக்கு பரந்து விரிந்ததாகவும் இருக்கிறது. சுதர்சனச் சக்கரம் என்பதே சக்கரத்தாழ்வார். மகாவிஷ்ணுவின் திருப்பாதத்தை தரிசிப்பதும் பிரார்த்திப்பதும் எத்தனை விசேஷமோ அதேபோல், சக்கரத்தாழ்வாரை பூஜித்து வருவதும் விசேஷமானது. நம் எதிர்ப்புகளையும் எதிரிகளையும் அழித்து நமக்கான தடைகளையெல்லாம் தகர்த்தருள்வார் சக்கரத்தாழ்வார் என்கிறார்கள் ஆச்சார்யர்கள். ஏகாதசி, புதன்கிழமை, திருவோணம், சனிக்கிழமை உள்ளிட்ட நாட்களில், சக்கரத்தாழ்வாருக்கு துளசி சார்த்தி வேண்டிக்கொண்டால், நம் இன்னல்கள் யாவும் பறந்தோடும். இல்லத்தில் நிம்மதியும் ஆனந்தமும் குடிகொள்ளும் என்பது பக்தர்களின் நம்பிக்கை! ********ஸர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்******** #🕉️ ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் #🤔 ஆன்மீக சிந்தனைகள் #🙏பெருமாள் #✨கடவுள் #🥰அன்புடன் காலை வணக்கம்🌞
13 likes
18 shares
🌹ஓம் நமோ வேங்கடேஷாய... 🌹குன்றில் நின்று வான் இருந்து நீள் கடல் கிடந்து மண் ஒன்று சென்று அது ஒன்றை உண்டு அது ஒன்று இடந்து பன்றியாய் நன்று சென்ற நாளவற்றுள் நல் உயிர் படைத்து அவர்க்கு அன்று தேவு அமைத்து அளித்த ஆதிதேவன் அல்லையே?. 🌹பொருள்: பகவானே.. திருவேங்கடம் என்னும் குன்றிலும், வைகுந்தம் என்னும் வானுலகத்தி லும், திருப்பாற் கடலில் பள்ளி கொண்டும், திருவிக்கிரமனாக உலகளந்தும், இப்பரந்த பூமியை வயிற்றில் வைத்தும், வராகமாக பூமியை குத்தி எடுத்தும், காலங்களுக்கு தக்கபடி உயிர்க ளை படைத்தும், மனிதர்களின் குணத்திற்கு ஏற்ப தெய்வங்களை அமைத்தும், அனைத்து உயிர்களுக்கும் நன்மை செய்யும் ஆதிதேவன் நீயல்லவா. 🌹ஓம் நமோ வேங்கடேசாய.. 🌹03.09.2025.. நேசமுடன் விஜயராகவன்... #🙏பெருமாள் #🤔 ஆன்மீக சிந்தனைகள் #🙏கிருஷ்ணா #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #🕉️ ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள்
34 likes
4 comments 31 shares