Failed to fetch language order
🐿️ ஜெய் அனுமான் 🙌
1K Posts • 3M views
RamaswamyAnnamali
797 views 20 hours ago
#🙏ஆன்மீகம் #🤩ஜெய் ஸ்ரீ ராம்🙏 #🐿️ ஜெய் அனுமான் 🙌 தீப வழிபாடு பரிகாரம்... அதிகாலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் கண் விழிக்க வேண்டும். சுத்தமாக குளித்து விட வேண்டும். பூஜை அறைக்கு சென்று ஒரு மண் அகல் எடுத்துக்கொள்ளுங்கள். அதில் சுத்தமான நெய்யை ஊற்றி விட வேண்டும். அந்த நெய்யில் 2 பஞ்சுத் திரியை ஒன்றாக திரித்துப் போட்டுக் கொள்ளுங்கள். இரண்டு கிராம்பு எடுத்து வலது உள்ளங் கைகளில் வைத்துக் கொள்ள வேண்டும். உடையாத முழுமையாக இருக்கும் கிராம்பை பரிகாரத்திற்கு பயன்படுத்தினால் தான் முழுபலனையும் நம்மால் பெற முடியும். வலது கையில் கிராம்பை வைத்துக் கொண்டு உங்களுடைய வேண்டுதலை மனதார இந்த பிரபஞ்சத்திடம் சொல்லவேண்டும். எந்த வேண்டுதலாக இருந்தாலும் அதை மனதில் நினைத்துக் கொள்ளலாம். உங்கள் கஷ்டத்திற்கு தகுந்தவாறு பிரார்த்தனை இருக்கட்டும். மனதார பிரார்த்தனை செய்து முடித்துவிட்டு வலது கையில் இருக்கும் இரண்டு கிராம்பை அந்த விளக்கில் இருக்கும் நெயில் போட்டு விட்டு தீபத்தை ஏற்றி வைத்து விட வேண்டும். நீங்கள் ஏற்றிய இந்த தீபத்திற்கு முன்பாக அமர்ந்து தீபச்சுடரை பார்த்தவாறு மீண்டும் உங்களுடைய பிரார்த்தனையை தொடங்குங்கள். உங்களால் எவ்வளவு நேரம் மனதார தியான நிலையில் வேண்டுதல் வைக்க முடியுமோ, அந்த தீப சுடரை பார்த்து உண்மையான நம்பிக்கையோடு மனதை ஒருநிலைப்படுத்தி வேண்டுதல் வைக்க வேண்டும். குறைந்தது பத்து நிமிடமாவது தீபத்தின் முன்பு பிரம்ம முகூர்த்த நேரத்தில் அமர்ந்து வேண்டுதல் செய்வது அவசியம். வேண்டுதலை முடித்துவிட்டு எப்போதும் போல உங்களுடைய தினசரி வேலையைத் தொடங்கலாம். இந்த தீப வழிபாட்டினை நாற்பத்தி எட்டு நாட்கள் தொடர்ந்து ஒரே கோரிக்கையை முழு மூச்சாக நினைத்துச் செய்யவேண்டும். தீபத்தின் முன்பு அமர்ந்து நீங்கள் இறைவனிடம் வைக்கக்கூடிய அந்த கோரிக்கை நிச்சயமாக 48 நாட்களுக்குள் நடப்பதற்கு நிறையவே வாய்ப்புகள் உள்ளது. தினமும் பழைய கிராம்பை எடுத்துவிட்டு புது கிராம்பை போடவேண்டும். பழைய கிராம்பை கால் படாத இடங்களில் போட்டு விடலாம். ஒட்டுமொத்தமாக நேர்மறை ஆற்றல் அனைத்தும் ஒன்றாக சேர்ந்து உங்கள் மனதில் நினைத்த காரியத்தை நடத்திதரும் என்பதில் ஒரு துளி அளவும் சந்தேகமே கிடையாது. நம்பிக்கையோடு இந்த தீபத்தை ஏற்றினால், நல்ல பலனைப் பெறலாம்.
10 likes
9 shares