Failed to fetch language order
Failed to fetch language order
geopolitics
33 Posts • 5K views
Rationalist
598 views 3 months ago
அமெரிக்காவின் பேர்ல் ஹார்பரை ஜப்பான் தாக்கியது. அமெரிக்கா ஜப்பானின் ஹிரோசிமாவில் குண்டு போட்டது. வேண்டுமானால் ஆசியாவில் அது போரை நிறுத்தியது எனச் சொல்லலாம். அதற்கு ஜப்பானிய அப்பாவி மக்கள் கொடுத்த உயிர்விலை எவ்வளவு? இது இருக்கட்டும். இரண்டாம் உலகப்போர் எதற்கு எதிரானது? ஹிட்லருக்கு-பாசிசத்திற்கு முடிவுகட்டியது யார்? செஞ்சேனை. டிரம்ப் ஹிரோசிமா குண்டுவீச்சை ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதலுடன் ஒப்பிட்டிருக்கிறார். இரண்டாம் உலகப் போரை முடித்து வைத்தது போல டிரம்ப் ஈரான் போரை முடித்து வைத்திருக்கிறாராம். என்ன அபத்தம்! இன்றைய போரைத் தூண்டியது யார், தாக்குதல் நடத்தியது யார்? ஈரானா இஸ்ரேலா? இந்தத் தாக்குதலால் ஒன்றும் முடிவுக்கு வரவில்லை. ஈரான் தனது நிலைபாட்டில் மேலும் உறுதியாக இருக்கிறது. -தோழர் யமுனா ராஜேந்திரன் #geopolitics #📺அரசியல் 360🔴 #🚨கற்றது அரசியல் ✌️ #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️
7 likes
13 shares
Rationalist
653 views 3 months ago
‘பெதெரேவ் அணுசக்தி நிலையத்தைத் துடைத்து அழித்துவிட்டோம்(Obiliterate)’ என டிரம்ப் அறிக்கை வெளியிட்டார். இரண்டு நாட்களாக இஸ்ரேல் அதே பெதெரேவ் அணுசக்தி நிலையத்தின் மீது மறுபடி தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கிறது. இரண்டு நாட்களாக சேதம் எவ்வளவு என்று மதிப்பிட முடியவில்லை எனச் சொல்லிக் கொண்டிருந்த அணுசக்தி கட்டுப்பாட்டு அமைப்பின் இயக்குனர், இன்று ‘ஈரான் தனது அணுசக்தி சேமிப்புகளை வேறு இடத்திற்கு மாற்றியிருப்பதைக் கண்டிக்கிறோம்’ என்கிறார். ‘தனக்கு என்ன வேண்டுமோ அதனை அடைய ஈரானுக்கு உரிமை உண்டு’ எனப் புதின் தெரிவித்திருக்கிறார். ரஸ்யப் பாதுகாப்புக் கவுன்சிலின் துணைத் தலைவர் திமித்ரி மெட்வடோவ் ‘நேரடியாகவே சில நாடுகள் ஈரானுக்கு அணு ஆயுதம் தரத் தயாராக இருப்பதாக’ அவரது உரையாடலில் தெரிவித்திருப்பதாக ‘பாலஸ்டைன் குரோனிக்கல்’ கட்டுரை வெளியிட்டிருக்கிறது. #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #geopolitics #🚨கற்றது அரசியல் ✌️ #iran & us war / ஈரான் & அமெரிக்க போர்
8 likes
9 shares