என் படைப்பு
" போதும் ப்ளீஸ் பொள்ளாச்சி சம்பவத்த பத்தி தயவுசெய்து இனிமே யாரும் முகநூல்ல பதிவிடாதீங்க....! இங்க போடுற பதிவுகளலாம் பாக்றப்போ இன்னமும் கோவம் தான் வருது. இவ்வளவு பெரிய பிரச்சனைய கூட பாத்துட்டு இன்னமும் எப்படி இருக்க முடியுதோ தெரியல. அமைதியா இருந்தா கூட பரவல்ல ஆனா யார் மேல தப்புனு பாதி பேர் போடுற பதிவு பாக்றப்போ என்ன சொல்றதுனே தெரியல... பாதிக்கப்பட்ட அந்த பெண்களோட உறவினர்கள் , குடும்பத்துல இருக்கவங்க முகநூல்ல எவ்வளவோ பேர் இருப்பாங்க அவங்க இத பாத்தா இன்னமும் நொந்து போவாங்க. யார் வீட்டுல என்ன எழவு விழுந்தாலும் உங்களுக்கு தேவை ஒரு வாரம் பேசி சண்டை போட , பதிவு போட்டு பொண்ணுங்க கூட கடல போட ஒரு செய்தி அவ்ளோதான்ல , நம்ம வீட்டுல நடக்குற வர அது வெரும் செய்தி தான் நண்பா..! உங்க மனச தொட்டு சொல்லுங்க இப்படி ஒரு நிலமை உங்க வீட்டு பெண்களுக்கு வந்தா ( வர கூடாதுனு வேண்டிக்கிறேன் ) இப்படி தான் யார் மேல தப்புனு பதிவு போட்டு பேசிட்டு இருப்பிங்களா..? இதுல போடுற பதிவுல மீதி இருக்க பொண்ணுங்கள பச்ச பச்சையா திட்டி வேற பதிவு போடுறிங்க டேய்......டேய் அவன்ங்க உடம்பால பண்ண தப்ப தான்டா நீங்க வாயால பண்றிங்க உங்களுக்கும் அவன்ங்களுக்கும் என்ன வித்தியாசம்...! ஏன் நம்பி போனா..? ஏன் நம்பி போனா..னு கேக்றிங்க அதனால தான் இப்படி நடந்துச்சனு சொல்றிங்க சீ வெக்கமா இல்ல இப்படி சொல்ல அந்த இடத்துல அவன் அக்கா , தங்கச்சி இருந்தாலும் இப்படி தான் பண்ணுவானா.. இந்த பொண்ணுங்க யாரோ ஊர்ல பெத்துவிட்ட பொண்ணுங்க அதானே..? முகநூல்ல கட்சிகாரன்ங்க நெறைய பேர் இருக்காங்க தேர்தல் நேரத்துல இப்படி ஒரு விஷயம் நடந்துருக்குனு அத மறைக்க ஒரு மதத்தோட பேர்ல ஒரு அக்கொளன்ட் ஓபன் பண்ணி ஒரு மதத்த தப்பா பேசி மதக்கலவரம் பண்றாங்க. அத நம்பி அடிச்சுக்குறீங்க இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடுனு மறந்துறாதீங்க... உண்மைய சொல்லனும்னா எந்த அரசியல்வாதியும் இதுக்கு வருத்தபட மாட்டாங்க இதவச்சு அரசியல் பண்ண தான் பாப்பாங்க அதான் இந்தியா..... ஒரு பொண்ண தப்பா பாத்தாலே தலைய எடுக்குற முன்னோர்கள் வாழ்ந்த மண்னு இது இப்போ இவ்வளவு பெண்கள நாம வேடிக்கை பாக்றோம்னா அது நமக்கு எவ்வளவு அசிங்கம்னு நல்லா யோசிங்க நீங்க என்ன ஒரு வாரம் இத பேசிட்டு அடுத்த ஒன்னு நடக்கும் அப்றம் அத பேச போய்ருவிங்க அந்த நாய்ங்களும் ஜெயில்ல சொகுசா இருந்துட்டு வந்து மறுபடியும் ஆரம்பிப்பான்ங்க..அந்த பொண்ணுங்கள கொஞ்சமாச்சு யோசிங்க ஈஸியா தப்பு சொல்லலாம் அவங்க இனிமே எப்படி இங்க வாழ்வாங்க... நீங்க அமைதியா இருந்தா கூட பரவால முகநூல்ல இப்படி பதிவு போடும் போது உங்க வீட்டுல நடக்குற வர இப்படி சந்தோஷமா அமைதியா தான் இருப்பிங்கனா அந்த 4 பேர ரிலீஸ் பண்ணனும்னு வேண்டிக்க தோனுது.உங்க வீட்ல நடந்தாவாச்சு உண்மையான அந்த ஆம்பளைங்க வெளில வருவாங்களானு பாக்கனும். கடைசியா ஒன்னு பசங்க மேல தப்பா பொண்ணுங்க மேல தப்பாவா டேய் இப்படி ஒரு பிரச்சனைக்கு அங்க குரல் கொடுத்து போறாடுற பசங்க அவங்கள சுத்தி நின்னு போலீஸ்கிட்ட இருந்து காப்பாத்துற பொண்ணுங்க இதான்டா எங்க தமிழ்நாடு எங்க பொண்ணுங்கள எவ்வளவு கஷ்டப்படுத்துனாலும் அவங்க உங்கள காப்பாத்த தான் யோசிப்பாங்க.. கெஞ்சி கேக்றேன் முகநூல்ல இத பேசி ஒரு ம___________ம் லாயக்கு இல்ல அவங்களுக்கு தண்டனை கிடைக்க என்ன பண்ணனுமோ அத பண்ணுங்க. இனி ஒரு பெண் தமிழ்நாட்டுல எந்த மூலைலயும் இந்த நிலமைக்கு வந்தா இங்க ஆண்களே இல்லனு தான் நான் சொல்வேன்... யார்னே தெரயாதவன ஏன் நம்பி போனானு கேக்றிங்க உங்கள ஒரு பொண்ணு கல்யாணம்ன்ற பேர்ல நீங்க யாரு என்னனு தெரியாம வர காரணம் உங்க மேல வச்ச நம்பிக்கை கடைசி வர பாதுகாப்பா இருப்பிங்கனு நம்பிக்கை அது உடைக்குறதும் பாதுகாக்றதும் ஒரு ஆண் நானும் ஒரு ஆண் இப்படி கேள்வி கேட்டிங்கனா என்னோட பதில் ஆண்கள் மேல தான் தப்பு எல்லா ஆண்களையும் சொல்லாதனு சொல்றிங்க அப்படி சொல்ற அளவுக்கு நம்ம ஏன் வச்சிக்கனும் ஏதோ ஒரு மூலைல ஒரு பொண்ண பசங்க போராட்டத்துல நைட் முழுவதும் காப்பாத்துனா இதான் தமிழ்நாட்டுபசங்கனு கெத்தா சொல்றோம். அப்போ இப்படி தப்பு நடக்றப்போ மட்டும் ஏன் எல்லாரையும் சொல்லாதனு விலகுறோம் இதுக்கு எல்லாரும் தல குணியனும்... பதிவு போடுறத விட்டுட்டு பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நியாயம் கிடைக்க போறாடுங்க அண்ணனானு நான் சொல்ல மாட்டேன் அந்த வார்த்தைக்கு அர்த்தம் இல்லாம பண்ணிட்டாங்க ஒரு நல்ல மனுசனா பண்ணுங்க.... சட்டம் தண்டிக்கலனா சாமி தண்டிக்கும்னு விட்டுடாதிங்க அப்படி ஒரு சாமி இருந்தா இவ்ளோ நடந்துருக்காது. நம்ம மனசு தான் சாமி உங்க கோவத்த காட்ட வேண்டிய கரெக்ட் டைம் இந்த தேர்தல் காசுக்காக ஓட்ட விக்குற ஒவ்வொருத்தனும் மனசலவுள அந்த 4 பேர்ல ஒருத்தன் இதுக்கு மேல என்ன சொல்றது தெரியல...... கண்ண மூடி நிம்மதியா தூங்க முடியல பாதிக்கப்பட்ட ஒவ்வொரு பொண்ணும் இங்க ஆம்பளைங்க யாருமே இல்லையானு கேக்ற மாதிரி இருக்கு. தப்பா எதாது சொல்லிருந்தா ஸாரி....!! cute boy ❤❤
#

என் படைப்பு

என் படைப்பு - ShareChat
519 காட்சிகள்
3 மாசத்திற்கு முன்
போஸ்ட் இல்லை
மத்த ஆப்-ல் ஷேர் செய்ய
Facebook
WhatsApp
காப்பி லிங்க்
அழிக்க
Embed
நான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட் ...
Embed Post