என் படைப்பு
#

என் படைப்பு

ஒரு இளைஞன் ஒரு அழகான,அறிவான பெண்ணை துரத்தி துரத்தி காதலிக்கிறான். அவள் விலகி விலகி போய் கொண்டிருந்தாள், ஒரு நா‌ள் அந்த இளைஞன் அவளிடம் தன் காதலை தெரிவித்தான்! அவள் முதலில் அவனுக்கு ஒரு சவால் விடுத்தால்!!! ஒரு நாள் முழுவதும் அவளை பார்க்காமல் பேசாமல் அவன் இருக்க வேண்டும்!எ‌ன்று! அப்படி உன்னால் முடிந்தால்!உன்னை காதலிக்கிறேன் என்று கூறினாள்! அழகான அறிவாளியான அந்த பெண்,தான் ஒரு புற்றுநோயாளி என்பது அவளுக்கு தெரியும் ...இந்த பூமியில் 24 மணி நேரம் மட்டும் அவளால் உயிர் வாழ முடியும்! அவன் அவளை பார்ப்பதற்கு நிறைய காதலோடும், ஒரு கடிதத்தோடும், ஒரு சிவப்பு ரோஜாவை கையில் ஏந்தி கொண்டு ஓடோடி வந்தான்! ஆனால்.....! அவன் அங்கே கண்டது, சுவாசம் இல்லமால் மரணப்படுக்கையில் கிடந்த அவளது உடலை....! அவளது அழகிய கையில் ஒரு கடிதம் இருந்தது... கடிதத்தில், நீ ஜெயித்துவிட்டாய், ஒரு நாள் முழுவதும் உன்னால் என்னிடம் பேசாமலும், பார்க்காமலும் இருக்க முடியும்! இனி வரும் காலங்களிலும் நீ இதே போல் வாழ்ந்து விடு!... என்று! அவன் வாழ்கிறான்.... இன்னும் அவளுக்காக.... சுவற்றில் அவளுடைய புகைப்படத்திற்கு அருகில் துணையாக புகைப்படமாக.... அங்கே இரண்டு கடிதங்கள் இருக்கின்றன... ஒன்று அந்த பெண்ணுடையது.. மற்றொன்று அவன் கடைசியாக ரோஜாவோடும் கொண்டு வந்த கடிதம், அதில் இரண்டு வரிகள் இப்படி எழுதப்பட்டு இருந்தது.... உன்னை காதலித்த பிறகு தான் அறிந்து கொண்டேன், ஒரு நாள், தான் நீ உயிர் வாழ்வாயென்று அதனால்தான் என் வாழ்நாளையும் ஒரு நாளாய் குறைத்துக் கொண்டேன். ஒரு நாள் உன்னைப் பார்க்காமல் இருந்தது என் காதலுக்கு நான் கொடுத்த உயரிய மரியாதை.... உன்னுடனே உறங்க வருகிறேன் உயிரே...!!! என்று எழுதப்பட்டிருந்தது ஆண்களின் காதலும் என்றும் சலித்தது அல்ல 🖤.... என்றும் நட்புடன், S. G😎 #என் படைப்பு
197 காட்சிகள்
23 நாள் முன்
#

என் படைப்பு

பாரதி... தீ உண்டு உன் வார்த்தையில்... தீங்கில்லை அதை கேட்டு நடக்கையில்... தாய் நாட்டின் அடிமை தனத்தினை உடைத்தெறிய நீ எந்தினாய் வார்த்தை போர்.. ஆம் .. பரங்கியரிடம் அடிமை பட்டதை வென்றதடா உன் சொல்... வென்றோம் உடைத்தெறிந்தோம் அடிமை தனத்தை... மதி கெட்டு திரிந்தோரை திருதியது உன் வார்த்தை.... தாய் நாட்டை தனதென்று புரிய வைத்தாய் உன் பாட்டில்.... ஆனால் புரியவில்லை இன்று.... ஆண்டுகள் ஓடின பல... ... அடிமை பட்டோம் மீண்டும் ஆங்கிலேய மோகத்திற்கு.... மீண்டும் பிறப்பானா ஒரு பாரதி?.... தெரியவில்லை எனக்கு... பெண் சுதந்திரம் தெடினாய் நாட்டினில் அன்று ... பெண் குழந்தை சுதந்திரத்தையும் சேர்த்து தேடுகிறோம் நாட்டில் இன்று.. உன் முன் மன்றாடினேன் பல நேரங்களில்... செவி கொடுக்க மருத்தாய் நீ என கடிந்து கொண்டேன் பல நேரங்களில்... இன்று புரிகிறது.. இவர்கள் மீண்டும் அடிமை பட்டு கதறும் ஓலம் கேட்க கூடாது என்பதற்காகத்தான் காதைடைத்து கட்டினாயோ முண்டாசை.... .
112 காட்சிகள்
6 மாசத்திற்கு முன்
#

என் படைப்பு

என் ‌வரலாறு என் பெயர் அருணாசலம்.பெ அப்பா: பெருமாள்.பெ அம்மா: லட்சுமி.பெ அக்கா: நாகம்மாள் அண்ணன்: அண்ணாமலை அப்புறம் (பாட்டி) நான்: பிறந்தது சேலம்(மா) மேட்டூர் (வ) பெரியசோரகை (கி) பெருமாக்கவுண்டனூர் நான் படித்தது எல்லாம் எங்க ஊர்ல தான். அம்மா நான் சின்ன வயசு எட்டு மாத குழந்தையாக இருந்த போது இறந்துட்டாங்க அப்புறம்.அப்பா வேற கல்யாணாம் பண்ணிக்கிட்டாறு அப்பறமும் என் பாட்டி கூட தான் நான் அக்கா அண்ணன் முன்று பேரும் வழந்தோம். அப்புறம் அக்கா 12வயது இருக்கும் போது இறந்துட்டாங்க அதுல சித்திக்கும் பாட்டிக்கும் பிரச்சினை வந்து அப்பா 2 கீலோமீட்டர் தள்ளி வீடு கட்டிக்கிட்டாரு அப்புறம் எங்க கூட பேசிக்கிட்டு தான் இருந்தார்.அப்புறம் சித்திக்கு எனக்கு அடிக்கடி பிரச்சினை வரும் அதனால் அப்பாவும் நாளாடைவில் பேசமாட்டார். இதுனால் அண்ணா வேலைக்கு போனான். இப்படி யே நான்கு வருடங்கள் போனது அப்புறம் அண்ணானும் லவ் பண்ணி கல்யாணம் பண்ணிகிட்டான் அதுவும் வேற ஜாதி பெண்ணுங்கிறது நால அவனையும் ஊரைவிட்டு தள்ளி வைத்து விட்டார்கள் அவனும் பேசுவது இல்லை. அப்புறம் நான் மாமாக்கூட கோவையில் வேலைக்கு போயிட்டேன் . எப்ப ஊருக்கு வந்தாலும் பாட்டி விட்டில் தான் வருவோன் அப்புறம் இப்படியே கிளம்பி கோவைக்கு போயிடுவேன் ஒரு ஒரு பத்து மாதமாக கோவையில் உள்ளோன் . தீபாவளிக்கு ஊருக்கு வந்தோன். இப்ப பாட்டி விட்டில் தான் உள்ளோன் இப்ப எனக்கு இருபது வயது ஆகுது. என்னுடைய அம்மா இறந்ததுலிருந்து என் பாட்டி விட்டில் தான் இருக்கிறோன். இப்பவும் பாட்டி விட்டில் தான் உள்ளோன்.
218 காட்சிகள்
7 மாசத்திற்கு முன்
போஸ்ட் இல்லை
மத்த ஆப்-ல் ஷேர் செய்ய
Facebook
WhatsApp
காப்பி லிங்க்
அழிக்க
Embed
நான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட் ...
Embed Post