Failed to fetch language order
வேதாத்திரி மகரிஷி யோகா
29 Posts • 31K views
நீண்ட நாள் மருந்தினால் போகாத நோய் கூடத் துரியாதீத தவத்தால் போகும்: . "ஜீவகாந்தத்தின் விளைவுதான் மனம். மனம் தன் மூலத்தை அறிவதற்காகவே அடைவதற்காகவே விரிகிறது. விரிந்து விரிந்து நிற்கிறது. அனுபோக உணர்ச்சிகளில் இருக்கும் மனதிற்கு வழி தெரியவில்லை. வேகமோ குறையவில்லை. ஆகவே எங்கெங்கோ சென்று நிற்கிறது. எது எதிலேயோ சிக்கிக் கொள்கிறது துன்புறுகிறது. ஆனால் தன் லட்சியத்தை அடையும் வரை மனதின் விரியும் முயற்சி சோர்வடைவதில்லை. மெய்ப்பொருளை உணர்ந்த பிறகுதான் மனதிற்கு அமைதி கிட்டுகிறது. அதுவரை அமைதி கிடைப்பதேயில்லை. தன் மூலத்தை (ஆதி நிலை) அறிய எழுந்த வேகம் திசை தப்பி நிற்கும் அளவிற்கு அமைதியின்மையின் அளவும் துன்பத்தின் அளவும் இருக்கும். பிராயச்சித்தம், மேல்பதிவு, தேய்த்தழித்தல் (Expiation, Superimposition and Dissolution) என்று கருமப் பதிவுகளைப் (Sins and Imprints) போக்கிக் கொள்ள மூன்று வழிகள் இருப்பதை நான் பலமுறை விளக்கியுள்ளேன். அவற்றில் கடைசியான தேய்த்தழித்தல் ( Dissolution ) என்பது தவத்தினால் தான் சாத்தியமாகும். ஆக்கினைத் தவத்தினால் ஆகாமிய கர்மம் போகும். துரியநிலைத் தவத்தில் ஆகாமிய கர்மமும், பிராரப்த கர்மமும் போகும். துரியாதீத தவத்தில் ஆகாமிய கர்மமும், பிராரப்த கர்மமும், சஞ்சித கர்மம் ஆகிய மூன்றுமே போகும். நீண்ட நாள் மருந்தினால் போகாத நோய் கூடத் துரியாதீத தவத்தால் போகும். துரியாதீத தவம் ஒரு மாபெரும் புதையல். இதில் எல்லாமே அடக்கம். எந்த அதிர்வியக்கத்தில் ( Mind frequency) மனம் நின்றால் பிரபஞ்ச ரகசியம் எல்லாம் அறியப்படுமோ அந்த இடந்தான் சமாதிநிலை (ஆதி நிலை). துரியாதீத தவத்தால் இந்நிலையில் நிலைத்து பழக்க அறிவு அமைதியைப் பெறுகிறது. . துரியாதீதம்: "தூயப் பெருநிலை துரியாதீதமோ துயர், மகிழ் விரண்டையே துய்த்த என் அறிவை காலம், பருமன், தூரம் விரைவெனும் கணக்கினைக் கடந்து மெய்ப்பொருளோடு இணைத்தது; இனிப் பழிபுரியேன் புரிந்தவை களைந்தேன் இறைநிலை உணர்ந்தேன் இணைந்தேன் நிறைந்தேன் இனி என் உடல் உயிர் ஆற்றலை முறைப்படி இயக்கிக் கடமையை புரிவேன்." . சமாதி நிலை: "உடலியக்கம் நின்றுவிட்ட சவத்தை மண்ணில் உள்புதைத்து சமாதி என்று பூஜை செய்து உடலியக்கம்பெற்ற பல பொருள் அழித்து உள அமைதியை இழந்து சோர்ந்தோரேனும் உடலியக்கம் அறிவியக்கம் பிறப்பு இறப்பு உண்மைகளையறிந்து பயன் அடைய வென்றால் உடலியக்கம் நிற்கும் முன்னே கருதவத்தால் உள்நாடி சமாதி நிலையறிய வாரீர் !" . வாழ்க வையகம் வாழ்க வளமுடன். ,*-தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.* 🚩🕉🪷🙏🏻 #வேதாத்திரி மகரிஷி யோகா #வேதாத்திரி வாஸ்து எனர்ஜி சிஸ்டம்ஸ். #🤔 ஆன்மீக சிந்தனைகள் #🙏பக்தி போதனைகள் #மண்ணில் வாழ்ந்த மகான்கள்
20 likes
21 shares