msra
#

MSRA

பாரம்பரிய நெல் வகைகளின் வயல் கண்காட்சி..!! 🌾 நாகை மாவட்டம், விதைகள் குழுமத்தின் அறிவர் விவசாய இயக்கம் சார்பாக இந்தியாவின் 340 பாரம்பரிய நெல் வகைகளின் வயல் கண்காட்சி மிகவும் கோலாகலமாக நடைபெற உள்ளது. 🌾 இந்த கண்காட்சியானது வருகின்ற பிப்ரவரி 9 மற்றும் 10-ம் தேதி அன்று நாகை மாவட்டத்திலுள்ள சீனிவாச சாலை, வேதாரண்யம் வட்டத்தில் நடைபெற உள்ளது. 🌾 கண்காட்சி நடைபெறும் நாள் : 09.02.2019 - 10.02.2019 🌾 கண்காட்சி நடைபெறும் நேரம் : காலை 9.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெறும். முகவரி : சீனிவாச சாலை, குரவப்புலம் மேற்கு, கரியாப்பட்டினம் வழி, வேதாரண்யம் வட்டம், நாகை மாவட்டம் - 614810. 📞 மேலும் விபரங்களுக்கு : 8124768464, 9003847824 சிறப்பம்சங்கள் : 🌾 இந்த கண்காட்சியில் இந்தியாவின் 340 பாரம்பரிய நெல் வகைகளின் வயல் கண்காட்சிகள் இடம் பெற உள்ளது. மேலும் விவசாயி பெருமக்கள் தங்களிடம் உள்ள நெல் இரகங்களை கண்காட்சியில் காட்சிபடுத்தி பயன்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. 🌾 இந்த நெல் கண்காட்சியில் கருப்புகவுனி, மாப்பிள்ளை சம்பா, கருங்குறுவை, சீரகச்சம்பா, மல்லிச்சம்பா, என 340 வகையான நெல் வகைகளோடு நெல் கண்காட்சி நடைபெற உள்ளது. இதில் அனைத்து விவசாய பெருமக்களும் கலந்து கொண்டு பயன்பெருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. எள் மற்றும் நிலக்கடலைச் சாகுபடியில் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்கள்..!! 🍁 சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி வேளாண் அறிவியல் மையம் சார்பாக மாதந்தோறும் பல்வேறு சாகுபடி மற்றும் செயல்முறை விளக்கப் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. 🍁 அந்த வகையில் வருகின்ற பிப்ரவரி 8-ம் தேதி அன்று எள் மற்றும் நிலக்கடலைச் சாகுபடியில் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்கள் என்ற தலைப்பில் பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது. 🍁 பயிற்சி நடைபெறும் நாள் : 08.02.2019 வெள்ளி 🍁 பயிற்சி நடைபெறும் நேரம் : காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறும். 🍁 பயிற்சி கட்டணம் : ரூ.100 முகவரி : வேளாண் அறிவியல் மையம், குன்றக்குடி, சிவகங்கை - 630206. 📞 தொடர்புக்கு : 04577264288 பயிற்சியின் சிறப்பம்சங்கள் : 🍁 இந்த பயிற்சி வகுப்பில் எள் மற்றும் நிலக்கடலைச் சாகுபடியில் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்கள் குறித்த விளக்கம் அளிக்கப்படுகிறது. 🍁 மேலும் எள் மற்றும் நிலக்கடலையில் அதிக மகசு+லை எவ்வாறு பெறலாம் என்பதற்கான வழிமுறைகளும் பயிற்சியில் இடம்பெற உள்ளது. 🍁 மேலும், இப்பயிற்சி வகுப்பில் விவசாயிகள், பண்ணையாளர்கள், ஊரக மகளிர், இளைஞர்கள் மற்றும் ஆர்வமுள்ளவர்கள் கலந்துகொள்ளலாம். பயிற்சிக்கு செல்லும் விவசாயிகள் கண்டிப்பாக தங்களுடைய ஆதார் எண்ணை பதிவு செய்ய வேண்டும்.
116 காட்சிகள்
3 மாசத்திற்கு முன்
#

MSRA

நம்ம ஊர் சந்தை !! 🌟 இயல்வாகை நம்ம ஊர் சந்தை சார்பாக பல்வேறு இயற்கைச் சந்தை தொடர்பாக நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் வருகின்ற பிப்ரவரி 03-ம் தேதி அன்று இயற்கைச் சந்தையானது திருப்பு+ரில் நடைபெற உள்ளது. 🌟 சந்தை நடைபெறும் நாள் : 03.02.2019 ஞாயிற்றுக்கிழமை. 🌟 நடைபெறும் நேரம் : காலை 10மணி முதல் மாலை 4மணி வரை நடைபெறும். முகவரி : திருப்பு+ர் தெற்கு ரோட்டரி திருமண மண்டபம், நடராஜ் தியேட்டர் ரோடு, திருப்பு+ர் - 641604. 📞 மேலும் விபரங்களுக்கு : 9942118080 சந்தையின் சிறப்பம்சங்கள் : 🌟 இந்த இயற்கை சந்தையில் காலையில் இலவசமாக தற்சார்பு பயிற்சியில் மூலிகை தேநீர் பொடிகள் தயாரிப்பு முறை மற்றும் பயன்பாடுகள் குறித்த பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது. இதில் பயிற்சியாளராக திரு.தங்கபாண்டியன் அவர்கள் விளக்கமளிக்கிறார். 🌟 மேலும் சந்தையில் இயற்கை முறையில் விளைந்த விளைப்பொருட்கள், உணவுப் பொருட்கள், கைவினைப் பொருட்கள், சமையல் பொருட்கள் போன்றவை இடம் பெற உள்ளது. 🌟 அதுமட்டுமல்லாமல் இதில் இயற்கை முறையில் விளைவித்த காய்கறி, கீரை, பழங்கள், மண்புழு உரம், மூலிகைப் பொருட்கள் மற்றும் உபயோகப் பொருட்கள் இடம் பெற உள்ளது. காய்கறி, பழங்களைப் பதப்படுத்தும் பயிற்சி..!! 🍊 விருத்தாசலம் வேளாண்மை அறிவியல் நிலையம் சார்பில், இந்த வருடம் காய்கறி, பழங்களைப் பதப்படுத்தும் பயிற்சி வருகின்ற பிப்ரவரி 6 ம் தேதி முதல் 8 ம் தேதி வரை நடைபெற உள்ளது. 🍊 மேலும் இந்த பயிற்சிகள் கடலு}ர் மாவட்டத்தைச் சார்ந்த விவசாய இளைஞர்கள் மற்றும் பண்ணை மகளிருக்காக நடத்தப்பட உள்ளது. பிப்ரவரி 4 ம் தேதிக்குள் நேரிலோ அல்லது தொலைபேசி மூலமோ பதிவு செய்து கொள்ள வேண்டும். 🍊 பயிற்சி நடைபெறும் நாள் : 06.02.2019 - 08.02.2019 🍊 பயிற்சி நடைபெறும் நேரம் : காலை 10.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை நடைபெறும். முகவரி : திட்ட ஒருங்கிணைப்பாளர், வேளாண்மை அறிவியல் நிலையம், விருத்தாசலம் - 606001 கடலு}ர் மாவட்டம். 📞 தொலைபேசி : 04143-238353 பயிற்சியின் சிறப்பம்சங்கள் : 🍊 தொழில் முனைவோருக்கான வணிக முறையில் காய்கறி, பழங்களைப் பதப்படுத்தும் பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது. 🍊 மேலும் இந்த பயிற்சி வகுப்புகள் சிறந்த முறையில் நடைபெற உள்ளதாக வேளாண்மை அறிவியல் நிலையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் எஸ். கண்ணன் கூறியுள்ளார்.
127 காட்சிகள்
3 மாசத்திற்கு முன்
#

MSRA

தென்னைச் சாகுபடிக்கேற்ற மண் மேலாண்மை !! 🍁 காஞ்சிபுரம் மாவட்டம், காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் மையம் சார்பாக மாதந்தோறும் பல்வேறு சாகுபடி, கால்நடை வளர்ப்பு குறித்த பயிற்சி வகுப்பு நடைபெற்று வருகிறது. 🍁 அந்த வகையில் வருகிற ஜனவரி 21 மற்றும் 22-ம் தேதி அன்று தென்னைச் சாகுபடிக்கேற்ற மண் மேலாண்மை என்ற தலைப்பில் பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது. 🌾 பயிற்சி நடைபெறும் நாள் : 21.01.2019 திங்கள் மற்றும் 22.01.2019 செவ்வாய் 🌾 பயிற்சி நடைபெறும் நேரம் : காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறும். 🌾 முகவரி : கால்நடை அறிவியல் முதுகலை ஆராய்ச்சி மையம், காட்டுப்பாக்கம், காஞ்சிபுரம் மாவட்டம் - 603203. 📞 முன்பதிவு செய்ய : 04427452371. பயிற்சியின் சிறப்பம்சங்கள் : 🌴 இந்த விவசாய பயிற்சியில் தென்னையில் சொட்டுநீர் பாசனம் அமைக்கும் முறை, தானியங்கி சொட்டுநீர் பாசன முறை, மூடாக்கு மற்றும் நீள் குழிகளினால் தண்ணீர் சேமிப்பு, தென்னையில் ஊடுபயிர் சாகுபடி செய்யும் முறை மற்றும் தென்னைச் சாகுபடிக்கேற்ற மண் மேலாண்மை போன்றவை குறித்து செயல்முறை விளக்க முறையில் கற்றுத்தரப்படுகிறது. 🌴 மேலும், இப்பயிற்சி வகுப்பில் விவசாயிகள், பண்ணையாளர்கள், ஊரக மகளிர், இளைஞர்கள் மற்றும் ஆர்வமுள்ளவர்கள் கலந்துகொள்ளலாம். பயிற்சிக்கு செல்லும் விவசாயிகள் கண்டிப்பாக தங்களுடைய ஆதார் எண்ணை பதிவு செய்ய வேண்டும். உயிர் பு+ச்சி, நோய்க்கொல்லி தயாரிப்பு !! 🍁 நாமக்கல் மாவட்டம், வேளாண் அறிவியல் மையம் சார்பாக மாதந்தோறும் பல்வேறு சாகுபடி மற்றும் கால்நடை வளர்ப்பு குறித்த செயல்முறை விளக்கப் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. 🍁 அந்த வகையில் வருகின்ற ஜனவரி 28 முதல் பிப்ரவரி 2-ம் தேதி வரை உயிர் பு+ச்சி, நோய்க்கொல்லி தயாரிப்பு முறை என்ற தலைப்பில் பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது. 🌾 பயிற்சி நடைபெறும் நாள் : 28.01.2019 திங்கள் முதல் பிப்ரவரி 02.02.2019 சனிக்கிழமை வரை. 🌾 பயிற்சி நடைபெறும் நேரம் : காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. 🌾 முகவரி : வேளாண் அறிவியல் மையம், மோகனு}ர் ரோடு, நாமக்கல் - 637001. 📞 முன்பதிவு செய்ய : 04286266345, 04286266650. பயிற்சியின் சிறப்பம்சங்கள் : 🐛 இப்பயிற்சி வகுப்பில் இயற்கை வேளாண்மை, இயற்கை விவசாயத்தில் உயிர் பு+ச்சி மற்றும் நோய்க்கொல்லி மருந்தின் முக்கியத்துவம், இயற்கை உயிர் கொல்லிகளான சு+டோமோனாஸ், டிரைகோடெர்மா விரிடி, என்.பி.வி., வைரஸ் பேசில்லஸ், வெர்டிசிலீயம், பேவேரியா உயிர் கொல்லி மருந்து தயாரிக்கும் முறை குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது. 🐛 அதை தொடர்ந்து தரக்கட்டுப்பாடு, மரவள்ளி மற்றும் பப்பாளி மாவு பு+ச்சியை கட்டுப்படுத்தும் இயற்கை உயிர் பு+ச்சிக் கொல்லி தயாரித்தல், வீட்டு தோட்ட காய்கறி பயிர்களுக்கான இயற்கை பு+ச்சி கட்டுப்பாட்டு முறை, வேளாண் மற்றும் தோட்டக்கலை பயிர்களில், இயற்கை முறையில் பு+ச்சி மற்றும் நோய் மேலாண் முறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது. 🐛 மேலும், இப்பயிற்சி வகுப்பில் விவசாயிகள், பண்ணையாளர்கள், ஊரக மகளிர், இளைஞர்கள் மற்றும் ஆர்வமுள்ளவர்கள் கலந்துகொள்ளலாம். பயிற்சிக்கு செல்லும் விவசாயிகள் கண்டிப்பாக தங்களுடைய ஆதார் எண்ணை பதிவு செய்ய வேண்டும்.
111 காட்சிகள்
4 மாசத்திற்கு முன்
#

MSRA

ஆடு வளர்ப்பு !! 🍁 சேலம் மாவட்டம், கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பாக மாதந்தோறும் பல்வேறு கால்நடை வளர்ப்பு மற்றும் நாட்டுக்கோழி வளர்ப்பு குறித்த செயல்முறை விளக்கப் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. 🍁 அந்த வகையில் வருகின்ற ஜனவரி 22 மற்றும் 23-ம் தேதி அன்று ஆடு வளர்ப்பு முறை என்ற தலைப்பில் பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது. 🌾 பயிற்சி நடைபெறும் நாள் : 22.01.2019 செவ்வாய் மற்றும் 23.01.2019 புதன் 🌾 பயிற்சி நடைபெறும் நேரம் : காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறும். 🌾 முகவரி : கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம், கால்நடை மருத்துவமனை வளாகம், பிரெட்ஸ் சாலை, கலெக்டர் அலுவலகம் அருகில், சேலம் - 636001. 📞 முன்பதிவு செய்ய : 04272410408. பயிற்சியின் சிறப்பம்சங்கள் : 🐐 இப்பயிற்சி வகுப்பில் வெள்ளாடு மற்றும் செம்மறியாட்டு இனங்கள், ஆடுகளை தேர்ந்தெடுத்து வாங்குதல், ஆடு கொட்டகை அமைப்பு, இனவிருத்தி பராமரிப்பு, தீவன மேலாண்மை, தீவன மரங்கள் சாகுபடி மற்றும் பயன்பாடு, நோய் தடுப்பு முறைகள், ஆலோசனை மற்றும் தொழில்நுட்பங்கள் போன்றவை குறித்து பயிற்சி வழங்கப்படுகிறது. 🐐 மேலும், இப்பயிற்சி வகுப்பில் விவசாயிகள், பண்ணையாளர்கள், ஊரக மகளிர், இளைஞர்கள் மற்றும் ஆர்வமுள்ளவர்கள் கலந்துகொள்ளலாம். பயிற்சிக்கு செல்லும் விவசாயிகள் கண்டிப்பாக தங்களுடைய ஆதார் எண்ணை பதிவு செய்ய வேண்டும். நாட்டுக்கோழி வளர்ப்பு !! 🍁 சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி வேளாண் அறிவியல் மையம் சார்பாக மாதந்தோறும் பல்வேறு சாகுபடி, கால்நடை வளர்ப்பு குறித்த பயிற்சி வகுப்பு நடைபெற்று வருகிறது. 🍁 அந்த வகையில் வருகிற ஜனவரி 24-ம் தேதி அன்று நாட்டுக்கோழி வளர்ப்பு என்ற தலைப்பில் பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது. 🌾 பயிற்சி நடைபெறும் நாள் : 24.01.2019 வியாழன் 🌾 பயிற்சி நடைபெறும் நேரம் : காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. 🌾 பயிற்சியில் கலந்து கொள்வதற்கான கட்டணம் : ரூ. 100 🌾 முகவரி : வேளாண் அறிவியல் மையம், குன்றக்குடி, சிவகங்கை - 630206. 📞 முன்பதிவு செய்ய : 04577264288. பயிற்சியின் சிறப்பம்சங்கள் : 🐓 இப்பயிற்சி வகுப்பில் நாட்டுக்கோழி இனங்கள், கொட்டகை அமைப்பு, தீவன மேலாண்மை, நாட்டுக்கோழிக்கு வரும் நோய்கள், அதை தடுக்கும் மூலிகை சிகிச்சை முறைகள், விற்பனை உத்திகள் போன்றவை குறித்து பயிற்சி வழங்கப்படுகிறது. 🐓 மேலும், இப்பயிற்சி வகுப்பில் விவசாயிகள், பண்ணையாளர்கள், ஊரக மகளிர், இளைஞர்கள் மற்றும் ஆர்வமுள்ளவர்கள் கலந்துகொள்ளலாம். பயிற்சிக்கு செல்லும் விவசாயிகள் கண்டிப்பாக தங்களுடைய ஆதார் எண்ணை பதிவு செய்ய வேண்டும்.
115 காட்சிகள்
4 மாசத்திற்கு முன்
#

MSRA

வாழைப் பயிருக்கு காப்பீடு செய்ய அழைப்பு..! 🎋 பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு எதிர்பாராமல் ஏற்படும் இழப்புகளில் இருந்து பாதுகாப்பாகவும், பண்ணை வருவாயை நிலைப்படுத்தவும் மற்றும் அதிநவீன தொழில்நுட்பங்களை கடைபிடிப்பதை ஊக்குவிக்கவும், 2018-19-ம் ஆண்டில் சாகுபடி செய்யப்படும் வேளாண்மை பயிர்களுக்கு பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் காப்பீடு செய்ய அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 🎋 அதன்படி வாழைப் பயிருக்கு காப்பீட்டு கட்டணம் பற்றி இங்கு காண்போம். 🎋 தர்மபுரி மாவட்டத்தில் வாழைப் பயிருக்கு காப்பீட்டு கட்டணம் ரூ.2263ஃஏக்கர் மற்றும் காப்பீடு செய்ய கடைசி தேதி 28.02.2019 ஆகும். 🎋 கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வாழைப் பயிருக்கு காப்பீட்டு கட்டணம் ரூ.2850ஃஏக்கர் மற்றும் காப்பீடு செய்ய கடைசி தேதி 28.02.2019 ஆகும். 🎋 புதுக்கோட்டை மாவட்டத்தில் வாழைப் பயிருக்கு காப்பீட்டு கட்டணம் ரூ.878ஃஏக்கர் மற்றும் காப்பீடு செய்ய கடைசி தேதி 28.02.2019 ஆகும். 🎋 தஞ்சாவு+ர் மாவட்டத்தில் வாழைப் பயிருக்கு காப்பீட்டு கட்டணம் ரூ.2150ஃஏக்கர் மற்றும் காப்பீடு செய்ய கடைசி தேதி 28.02.2019 ஆகும். 🎋 திண்டுக்கல் மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களில் வாழைப் பயிருக்கு காப்பீட்டு கட்டணம் ரூ.2550ஃஏக்கர் மற்றும் காப்பீடு செய்ய கடைசி தேதி 28.02.2019 ஆகும். 🎋 வேலு}ர் மாவட்டத்தில் வாழைப் பயிருக்கு காப்பீட்டு கட்டணம் ரூ.2298ஃஏக்கர் மற்றும் காப்பீடு செய்ய கடைசி தேதி 28.02.2019 ஆகும். 🎋 விழுப்புரம் மாவட்டத்தில் வாழைப் பயிருக்கு காப்பீட்டு கட்டணம் ரூ.1273ஃஏக்கர் மற்றும் காப்பீடு செய்ய கடைசி தேதி 28.02.2019 ஆகும். 🎋 விருதுநகர் மாவட்டத்தில் வாழைப் பயிருக்கு காப்பீட்டு கட்டணம் ரூ.1853ஃஏக்கர் மற்றும் காப்பீடு செய்ய கடைசி தேதி 28.02.2019 ஆகும். 🎋 ஈரோடு மாவட்டத்தில் வாழைப் பயிருக்கு காப்பீட்டு கட்டணம் ரூ.3700ஃஏக்கர் மற்றும் காப்பீடு செய்ய கடைசி தேதி 28.02.2019 ஆகும். 🎋 கன்னியாகுமரி மாவட்டத்தில் வாழைப் பயிருக்கு காப்பீட்டு கட்டணம் ரூ.3448ஃஏக்கர் மற்றும் காப்பீடு செய்ய கடைசி தேதி 28.02.2019 ஆகும். 🎋 கரூர், மற்றும் திருச்சி ஆகிய மாவட்டங்களில் வாழைப் பயிருக்கு காப்பீட்டு கட்டணம் ரூ.2790ஃஏக்கர் மற்றும் காப்பீடு செய்ய கடைசி தேதி 28.02.2019 ஆகும். 🎋 மதுரை மாவட்டத்தில் வாழைப் பயிருக்கு காப்பீட்டு கட்டணம் ரூ.2732ஃஏக்கர் மற்றும் காப்பீடு செய்ய கடைசி தேதி 28.02.2019 ஆகும். 🎋 நாமக்கல் மாவட்டத்தில் வாழைப் பயிருக்கு காப்பீட்டு கட்டணம் ரூ.2848ஃஏக்கர் மற்றும் காப்பீடு செய்ய கடைசி தேதி 28.02.2019 ஆகும். 🎋 திருவாரூர் மாவட்டத்தில் வாழைப் பயிருக்கு காப்பீட்டு கட்டணம் ரூ.2938ஃஏக்கர் மற்றும் காப்பீடு செய்ய கடைசி தேதி 28.02.2019 ஆகும். 🎋 தூத்துக்குடி மாவட்டத்தில் வாழைப் பயிருக்கு காப்பீட்டு கட்டணம் ரூ.907ஃஏக்கர் மற்றும் காப்பீடு செய்ய கடைசி தேதி 28.02.2019 ஆகும். 🎋 கடலு}ர் மாவட்டத்தில் வாழைப் பயிருக்கு காப்பீட்டு கட்டணம் ரூ.900ஃஏக்கர் மற்றும் காப்பீடு செய்ய கடைசி தேதி 28.02.2019 ஆகும். 🎋 கோவை மாவட்டத்தில் வாழைப் பயிருக்கு காப்பீட்டு கட்டணம் ரூ.3940ஃஏக்கர் மற்றும் காப்பீடு செய்ய கடைசி தேதி 28.02.2019 ஆகும்.
119 காட்சிகள்
4 மாசத்திற்கு முன்
#

MSRA

கோவிலுக்கு போன நீங்க என்ன வேண்டுவீங்க - ரிலாக்ஸ் ப்ளீஸ்!! கொஞ்சம் சிரிக்கலாமே!! கணவன் : சாமிக்கிட்ட என்ன மா... வேண்டிகிட்ட? மனைவி : அடுத்த ஜென்மத்திலும் நீங்க தான் என் புருஷனா வரணும்-னு வேண்டிகிட்டேங்க.. நீங்க என்னங்க வேண்டிகிட்டீங்க? கணவன் : எனக்கு அடுத்த ஜென்மமே வேணாம்-னு வேண்டிகிட்டேன்.. மனைவி : 😠😠. நீதிபதி : எதுக்கு கோயில்ல இருந்த பிள்ளையார் சிலைய திருடுன? திருடன் : இதுதாங்கையா என் முதல் திருட்டு. நீதிபதி : அதுக்கு?? திருடன் : அதான், தொழிலுக்கு ஒரு பிள்ளையார் சுழியா இருக்கட்டுமேன்னு.. நீதிபதி : ??????........... கொஞ்சம் யோசிக்கலாமே!! பல் வலின்னு வரவங்களோட பல்ல டாக்டர் புடுங்கலாம் ஆனா, கண் வலின்னு வரவங்களோட கண்ண டாக்டர் புடுங்க முடியுமா? ஜுர மாத்திரை சாப்பிட்டா ஜுரம் போயிடுது, தலைவலி மாத்திரையால தலைவலி போயிடுது, ஆனா, தூக்க மாத்திரை சாப்பிட்டா ஏன் தூக்கம் போகமாட்டேங்குது? புள்ளி மான் உடம்பு முழுக்க புள்ளி இருக்கும்.. ஆனா, கன்னுகுட்டி உடம்பு முழுக்க கண்ணு இருக்குமா? ஹோட்டல்ல காசுக் கொடுக்கலன்னா மாவாட்டச் சொல்லுவாங்க... ஆனா, பஸ்ல காசுக் கொடுக்கலன்னா... பஸ் ஓட்டச் சொல்லுவாங்களா? ........ இது சிரிக்க மட்டுமே!! விடியற்காலை 3 மணி. மழை பெய்து கொண்டிருந்தது. ஒரு வீட்டில் கணவன், மனைவி இருவரும் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது கதவு தட்டும் சத்தம் கேட்டது. கணவன் மட்டும் எழுந்து போனான். கதவை திறந்தால் அங்கே ஒரு குடிகாரன் நின்று கொண்டிருந்தார். சார் ஒரு உதவி.. கொஞ்சம் அங்க வந்து தள்ளி விட முடியுமா? என்று கேட்டார் அந்த குடிகாரர். கணவனோ 'முடியவே முடியாது" ஏம்பா விடியகாலை 3 மணிக்கு தொந்தரவு செய்யறே-ன்னு சொல்லிட்டு உள்ளே சென்றுவிட்டார். யாரது? என்று மனைவி கேட்டாள். எவனோ ஒரு குடிகாரன், வந்து எதையோ தள்ளி விட முடியுமான்னு கேட்கிறான். நீங்க உதவி செஞ்சீங்களா?. இல்லை, மணி 3 ஆகுது, மழை வேற பெய்யுது எவன் போவான்? பார்த்தீங்களா? 3 மாசம் முன்னாடி நம்ம கார் ரிப்பேராகி நடு ரோட்ல நின்னப்ப இரண்டு பேர் நமக்கு உதவி செஞ்சாங்களே? இப்ப நீங்க அது மாதிரி மத்தவங்களுக்கு உதவி செய்யலன்னா எப்படி? அதைக்கேட்ட கணவன் எழுந்து, சட்டைய போட்டுக்கொண்டு மழையில் நனைஞ்சுகிட்டே வெளியே போனார். ஹலோ, நீங்க இன்னும் இருக்கீங்களா? இன்னும் இங்கதான் சார் இருக்கேன். ஏதோ தள்ளிவிடனும்னு சொன்னீங்களே, இப்ப செய்யலாமா? ஆமா சார்... கொஞ்சம் தள்ளிவிட்டீங்கன்னா நல்லா இருக்கும். எங்கே இருக்கீங்க? இங்கதான் கிணத்து பக்கத்துல நின்னுகிட்டு இருக்கேன். வந்து தள்ளிவிடுங்க சார். ஐயோ... பொண்டாட்டி பேச்சைக் கேட்டதுக்கு கொலகாரனாக்கப் பாக்குறானே!! ............. உண்மை வரிகள் !! எவன் ஒருவன் பொறுமைசாலியாக இருக்கிறானோ, அவன் தான் நினைத்ததை கட்டாயம் அடைவான். கிரீடங்களை விட கனிந்த இதயங்கள் மேலானவை. ஒருவன் என்றைக்கு சிரிக்காமலே இருக்கிறானோ, அந்த நாள் அவனுக்கு தொலைந்துபோன நாளே. நல்லவராய் இருப்பது நல்லது தான். ஆனால், நல்லது, கெட்டது தெரியாத நல்லவராய் இருப்பது ஆபத்தானது.
100 காட்சிகள்
4 மாசத்திற்கு முன்
#

MSRA

மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றுடன் ஆந்திராவில் இன்று கரையை கடக்கிறது பெய்ட்டி புயல் கடல் கொந்தளிப்பால் மீனவர்களுக்கு எச்சரிக்கை தென்மேற்கு வங்கக் கடல் பகுதி யில் நிலவி வந்த "பெய்ட்டி" புயல், தீவிர புயலாக வலுப்பெற்று ஆந்திர கரையை நோக்கி நகர்ந்து வரு கிறது. அதன் காரணமாக வட தமிழக கடலோரப் பகுதிகளில் கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. புயலின் நகர்வு குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய துணை இயக்குநர் ஜெனரல் எஸ்.பாலசந்திரன் கூறியதாவது: தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் சென்னைக்கு தென் கிழக்கே சுமார் 410 கிமீ தொலை வில் "பெய்ட்டி" புயல் மையம் கொண்டுள்ளது. இது 19 கிமீ வேகத் தில் நகர்ந்து வருகிறது. இது தற் போது தீவிரப் புயலாக வலுப்பெற் றுள்ளது. மேலும் இது வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகே இன்று பிற்பகலில் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக வட தமிழகத் தின் கடலோர மாவட்டங்களில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தரைக் காற்றானது மணிக்கு 45 முதல் 55 கிமீ வேகத்தில் வீசக்கூடும். தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் கடல் கொந்தளிப்புடன் காணப்படுவதால், அப்பகுதியில் மீனவர்கள் 17-ம் தேதி வரை செல்ல வேண்டாம் என்று அறிவு றுத்தப்படுகிறார்கள். மேலும் காரைக்கால் முதல் சென்னை வரை யிலான அனைத்து துறைமுகங் களிலும் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இவ் வாறு அவர் கூறினார். வங்கக் கடலில் உருவான இந்த புயல் காரணமாக வட தமிழக கட லோரப் பகுதிகளில் சனிக்கிழமை முதலே தரைக்காற்று வீசி வரு கிறது. அதனால் கடல் மணல் அடித்துச் செல்லப்பட்டு அப் பகுதியே புழுதிக்காடாக காட்சி யளித்தது. அவ்வாறு அடித்துச் செல்லப்பட்ட மணல், மெரினா வளைவு சாலையில் குவியல், குவி யலாகச் சேர்ந்து போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தின. பட்டினப் பாக்கம் நொச்சிக்குப்பம் மீனவப் பகுதியில் கடற்கரையில் வைக்கப் பட்டிருந்த மீன்பிடி வலைகள் அனைத்தும் கடல் மணலால் மூடப்பட்டிருந்தன. சாலையில் நடந்து சென்ற பலரின் கண்களை மணல் தூசி பதம்பார்த்தது. இந்நிலையில் நேற்று காலை முதல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத் துடன் காணப்பட்டது. குளிர்ந்த தரைக்காற்றும் வீசியது. மெரினா கடற்கரையில் நேற்று பொதுமக்கள் அதிக அளவில் கூடினர். நேற்று வட தமிழக கடலோரப் பகுதிகள் அனைத்திலும் கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது. சுமார் 4 மீட்டர் உயரம் வரை கடல் அலைகள் மேலெழுந்து ஆர்ப்பரித் தன. இதனால் பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் மீனவ குடியிருப்புகள் வரை கடல் அலைகள் தொட்டுச் சென்றன. நொச்சிக்குப்பம் பகுதி யில் படகுகளை நிறுத்தி வைக்கப் பட்டிருந்த சுமார் 50 அடி தூரத்தில் உள்ள மணல் மேட்டுப் பகுதிகள் வரை அலைகள் வந்தன. அப்பகுதியைச் சேர்ந்த மீன் வியாபாரி பத்மா கூறும்போது, "இந்த அலைகளின் ஆக்ரோஷம், சுனாமியை நினைவுபடுத்துகிறது. இவ்வளவு ஆர்ப்பரிக்கும் என்று அரசு உட்பட யாரும் எந்த எச்சரிக் கையும் விடவில்லை. இந்த அலைகள் எங்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது" என்றார் பெயரில் குழப்பம் இந்த புயலின் பெயர் "பெய்ட்டி" என்றும் "பெதாய்" என்றும் இரு வேறு வார்த்தைகளில் அழைக்கப் படுவதால் பொதுமக்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மைய துணை இயக்குநர் ஜெனரல் எஸ்.பாலசந்திரனிடம் கேட்டபோது, “இந்த புயலுக்கு தாய்லாந்து நாட்டு மொழியில் பெய்ட்டி (PAYTI) என பெயரிடப்பட்டுள்ளது. அதை ஆங்கிலத்தில் எழுதும்போது பெதாய் (PHETHAI) என எழுதப்படுகிறது. அதை பெய்ட்டி என்று உச்சரிப்பது தான் சரி” என்று விளக்கமளித்தார். TheHindu Published : 17 Dec 2018 08:04 IST 17-12-2018 9:31 am
123 காட்சிகள்
5 மாசத்திற்கு முன்
#

MSRA

இந்திய பனைப் பொருளாதார மாநாடு - 2018 !! 🍀 வீட்டிற்கு ஒரு குடிசைத்தொழில்..! ஊருக்கு ஒரு வேளாண் தொழிற்சாலை..! என்ற நோக்கில் இந்திய பனைப் பொருளாதார மாநாடு - 2018 ஆனது இரண்டு நாட்கள் நடைபெறவுள்ளது. இம்மாநாட்டினை சுதேசி இயக்கமும் நடத்துகின்றது. 🍀 அழிந்து வரும் பனை மரங்களை காக்கும் முயற்சியிலும், பனை மரங்களிலிருந்து கிடைக்கும் பொருட்களை கொண்டு பல்வேறு பொருட்களை தயாரிக்கும் முறைகளை இலவசமாக கற்றுத்தரும் நோக்கிலும் பல்வேறு அமைப்புகள் மக்களுக்கு உதவி செய்து வருகிறது. 🍀 அவ்வகையில் தற்போது படித்து முடித்துவிட்டு வேலை தேடி வரும் மாணவர்களுக்கு நிரந்தர வேலை வாய்ப்பினை ஏற்படுத்தி தரும் வகையிலும், 🍀 பற்றாக்குறை வருமானத்திற்கு பகுதி நேர வேலையை ஏற்படுத்தி தரவும், 🍀 தொழில் முனைவோருக்கு புதிய தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தி தரவும், 🍀 விவசாயிகளுக்கு நிரந்தர வருமானம் ஏற்படுத்தி தருவதற்காகவும், 🍀 கவலையற்ற வேளாண்மை செய்யும் வகையிலும் இந்த இந்திய பனைப் பொருளாதார மாநாடு அமையவுள்ளது. 👉 டிசம்பர் - 16.12.2018 மற்றும் 17.12.2018 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. மாநாடு நடைபெறும் இடம் : 👉 ஆர்.எஸ். திருமண மண்டபம், கிள்ளை (பிச்சாவரம்), சிதம்பரம், கடலு}ர் மாவட்டம் - 608102. 🍀 இரண்டு நாள் மாநாட்டில் கலந்துகொள்வதற்கு ஏற்றவாறு தங்கும் இடம் மற்றும் உணவுகளானது கட்டணம் இன்றி அமைத்து தரப்படுகிறது. 🍀 கண்காட்சியில் கலந்துக்கொள்ள விருப்பம் உள்ளவர்கள் தங்களின் பெயர், முகவரி மற்றும் மின்னஞ்சல் முகவரியை தெரிவித்து முன்பதிவு செய்துக்கொள்ளவும். 🍀 முன்பதிவு செய்வதற்கு 9445069900, 9790979797, 9600044748 என்ற எண்ணிற்கு ஊயடட செய்து தெரிவிக்கலாம் அல்லது றுhயவளயிp 9445666700 எண்ணிற்கு தங்களின் தகவலை வுலிந செய்து அனுப்பலாம் அல்லது ளறயனநளாiலையமமயஅ@பஅயடை.உழஅ என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் தகவலை அனுப்பலாம். 🍀 இந்த மாநாட்டின் முதல் நாள் பனை தொழில்நுட்பம் தொடர்பான மாநாடும், இரண்டாம் நாள் பனை தொடர்பான சிறப்பு மாநாடும், பனை தொழில்கள் தொழில் பயிற்சி, மரபுவழி சித்தமருத்துவ முகாம் மற்றும் பயிற்சியும் நடைபெறவுள்ளது. 🍀 இது மட்டுமல்லாமல் இயற்கை சந்தை (பொருட்காட்சி), பனை கண்காட்சி ஆகியவையும் நடைபெறவுள்ளது. 🍀 இக்கண்காட்சியில் விவசாய அரங்கு (ளுவயடட) அமைக்க விருப்பம் உள்ளவர்கள் மேலே கொடுக்கப்பட்ட எண்ணிற்கு அழைத்து விவசாய அரங்கு அமைப்பதற்கான தகவல்களை பெற்றுக்கொள்ளலாம். 🍀 இந்த மாநாடு இயற்கையோடு புரிதலை ஏற்படுத்தும் விதமாக அமையவுள்ளது. குறிக்கோளற்று வாழ்கின்ற, மரபு வழிகளைப் புரிந்து கொள்ளாத இளைய தலைமுறையினருக்கு வழி காட்டுவதாக அமையவுள்ளது. 🍀 விவசாயிகளுக்கு நஞ்சற்றப் பயிரிடுதலுக்கு, செலவில்லாத மரபுவழி இயற்கை வேளாண்மைக்கு மாறிட, புரிதலையும், வழிகாட்டுதலையும் ஏற்படுத்தி தரவுள்ளது. 🍀 நீங்களும் உங்கள் நண்பர்களுடன் சென்று இந்த இலவச உலக பனைப் பொருளாதார மாநாட்டில் கலந்துக்கொண்டு வேலை வாய்ப்பை பெற்றிடுங்கள். விவசாயப் பணிகளுக்கு ஆட்கள் தேவையா? உங்கள் தோட்டத்தை பராமரிக்க ஆட்கள் தேவையா? அல்லது பண்ணையை பார்த்துக் கொள்ள ஆட்கள் தேவையா? உடனே நமது நித்ரா விவசாய செயலியில் உள்ள வாடகை இயந்திரங்கள் பகுதியில் + பட்டனை கிளிக் செய்து ஆட்கள் தேவை என்று பதிவு செய்து கொள்ளலாம்.
116 காட்சிகள்
5 மாசத்திற்கு முன்
#

MSRA

நெல் ஜெயராமனின் வாழ்க்கை வரலாறு (பகுதி-2)..!! நெல் ஜெயராமன் விவசாயத்தில் நல்ல சேவைகளையும், சிறப்புகளையும் செய்து பெருமைக்குரியவர் ஆனார். அவருடைய மற்ற சிறப்புகளை இந்த பதிவில் காண்போம். பாரம்பரிய நெல் திருவிழா : 🌾 ஆதிரெங்கத்தில் ஆண்டுதோறும் மே கடைசி வாரத்தில் பாரம்பரிய நெல் திருவிழாவை ஜெயராமன் கடந்த 2006 முதல் நடத்தி வந்துள்ளார். 🌾 தமிழகம் மட்டுமின்றி, நாட்டின் பிற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான விவசாயிகள் இதில் பங்கேற்றுள்ளனர். இதில் கலந்து கொள்ளும் ஒவ்வொருவருக்கும் 2 கிலோ பாரம்பரிய நெல் விதை இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. 🌾 அதை அவர்கள் தங்கள் வயல்களில் விளைவித்து, அவரவர் பகுதிகளில் அவற்றை பரவச் செய்ய வேண்டும். மீண்டும் அடுத்த ஆண்டு நெல் திருவிழாவுக்கு வரும் போது 4 கிலோ விதையை திரும்ப ஒப்படைக்க வேண்டும். 🌾 இந்த நிபந்தனையுடன் நெல் திருவிழாவில் பங்கேற்கும் விவசாயிகளால் 169 வகையான பாரம்பரிய நெல் ரகங்கள், தற்போது தமிழகத்திலும், பிற மாநிலங்களிலும் பரவலாக பயிர் செய்யப்பட்டுள்ளது. 🌾 தகவல் தொழில்நுட்பத் துறை உட்பட பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரியும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்றது இத்திருவிழாவின் வெற்றியை பறைசாற்றியது. சிறப்புகள் : 🌾 பாரம்பரிய நெல் ரகங்களைப் பாதுகாக்க வாழ்க்கையை அர்ப்பணித்த மாபெரும் பெருமைக்குரியவர். 🌾 கடந்த 15 ஆண்டுகளாக இயற்கைக்காக உழைத்து 169 பாரம்பரிய நெல் வகைகளை மீட்டவரும் இவர்தான். 🌾 நமது நெல்லைக் காப்போம் (கிரியேட்) இயக்கத்தின் தமிழகப் பொறுப்பாளாரக இருந்தவர். 150-க்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்து அவற்றை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டுவந்தவர். புற்றுநோய் பாதிப்பு : 🌾 தமிழகம் முழுவதும் கடந்த 15 ஆண்டுகளாக பயணம் செய்து, 169 அபு+ர்வ பாரம்பரிய நெல் விதைகளை அழிவிலிருத்து காப்பாற்றிய அவர், சுமார் 2 ஆண்டுகளாக புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். 🌾 இதையடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சில நண்பர்களின் உதவியோடு சிகிச்சை பெற்று வந்தார். 🌾 எனினும் உடல்நல பாதிப்பை பொருட்படுத்தாமல் நலம் விசாரிக்க வரும் நண்பர்களிடம் எப்போதும் போல, பாரம்பரிய நெல் வகைகளை பரவலாக்குவதற்கான அடுத்தகட்ட பணிகள் பற்றி உற்சாகமாகப் பேசி வந்தவர் நெல் ஜெயராமன். 🌾 கடந்த சில ஆண்டுகளாக கடுமையான தோல் புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்த ஜெயராமன் ஐயா அவர்கள் இன்று காலை 5.10 மணியளவில் சென்னையில் காலமானார். 🌾 நெல் ஜெயராமன் ஐயா அவர்களின் உடலானது நாளை மதியம் அடக்கம் செய்யப்படுகிறது. அவரது உடலின் ஆத்மா சாந்தியடைய நாம் அனைவரும் இறைவனிடம் பிரார்த்திப்போம். மேலும் அனைவரும் நெல் ஜெயராமன் ஐயா அவரின் வழியில் பயணிப்போம்.
128 காட்சிகள்
5 மாசத்திற்கு முன்
மத்த ஆப்-ல் ஷேர் செய்ய
Facebook
WhatsApp
காப்பி லிங்க்
அழிக்க
Embed
நான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட் ...
Embed Post