🍱 எனக்கு பிடித்த பாரம்பரிய உணவுகள்

🍱 எனக்கு பிடித்த பாரம்பரிய உணவுகள்

lunch special *முள்ளங்கி கூட்டு* உடம்பிலுள்ள சூட்டை தணித்து குளிர்ச்சியாக வைப்பதற்கு முள்ளங்கி உதவுகிறது. இன்று முள்ளங்கியை வைத்து கூட்டு செய்வது எப்படி என்று பார்க்கலாம். சிகப்பு முள்ளங்கியை விடவும் வெள்ளை முள்ளங்கியில் தான் நிறைய சத்துக்கள் இருக்கிறது. எலும்பு வளர்ச்சிக்கு தேவையான கால்சியம், பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் முள்ளங்கியில் உள்ளது. மேலும் முள்ளங்கி கீரையை கர்ப்பிணிகளும், பாலூட்டும் தாய்மார்களும் சாப்பிடும் போது எண்ணற்ற சத்துக்களை பெற முடியும். தேவையான பொருட்கள்: முள்ளங்கி - கால் கிலோ வெங்காயம் - 1 பெரியது தக்காளி - 2 கறிவேப்பிலை - 1 கொத்து மஞ்சள்தூள் - சிறிதளவு தனி மிளகாய்த்தூள் - காரத்திற்கேற்ப உப்பு - தேவைக்கு சிறு பருப்பு - 50 கிராம் கடுகு, சீரகம் - தாளிக்க எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன் செய்முறை : முள்ளங்கியின் தோலை சீவி விட்டு அதனை சிறு சிறு துண்டாக வெட்டி வைக்கவும். சிறு பருப்பை நன்றாக கழுவி ஒரு மணி நேரம் ஊற வைத்து கொள்ளவும். வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும். குக்கரில் ஊறவைத்த பருப்புடன் முள்ளங்கி, பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, மஞ்சள்தூள், தனி மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து அத்துடன் 1/4 கப்பிற்கும் குறைவாக தண்ணீர் ஊற்றி நன்கு கிளறி விட்டு இரண்டு விசில் வரை வேக விடவும். கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கடுகு, சீரகம், கறிவேப்பிலை போட்டு தாளித்து வேகவைத்த முள்ளங்கி கூட்டில் சேர்த்து நன்றாக கலந்து பரிமாறவும். சூப்பரான முள்ளங்கி கூட்டு ரெடி. இதனை சட்டியிலும் சமைக்கலாம். நீர் சத்துள்ள காய்கறி என்பதால் சமைக்கும் போது அதிகம் தண்ணீர் விட்டு வேக வைக்க தேவை இல்லை.
#

🍱 எனக்கு பிடித்த பாரம்பரிய உணவுகள்

🍱 எனக்கு பிடித்த பாரம்பரிய உணவுகள் - ShareChat
256 காட்சிகள்
3 மாசத்திற்கு முன்
சின்ன வெங்காய சப்பாத்தி செய்வது எப்படி? மாரடைப்பு நோயாளிகள், இரத்தநாள கொழுப்பு உள்ளவர்கள் சின்ன வெங்காயம் சாப்பிடுவது நல்லது. இன்று சின்ன வெங்காயம் சேர்த்து சப்பாத்தி செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : கோதுமை மாவு - 1 கப் நறுக்கிய சிறிய வெங்காயம் - 2 கப் பச்சை மிளகாய் - 3 எலுமிச்சை சாறு - சிறிதளவு உப்பு, எண்ணெய் - தேவைக்கு செய்முறை: சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும். ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும். கோதுமை மாவுடன் எலுமிச்சை சாறு, பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், ப.மிளகாய் மற்றும் தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்துக்கு பிசைந்து அரை மணி நேரம் ஊறவைக்கவும். பின்னர் அதனை மாவு கலவையுடன் சேர்த்து கலந்து சிறிய உருண்டைகளாக உருட்டி சப்பாத்திகளாக தயார் செய்யுங்கள். அடுப்பில் தோசைக்கல்லை வைத்து அது சூடானதும் தேய்து வைத்த சப்பாத்தியை ஒவ்வொன்றாக போட்டு சுற்றி எண்ணெய் விட்டு வெந்ததும் திருப்பி போட்டு வேகவைத்து பரிமாறுங்கள். சூப்பரான சின்ன வெங்காய சப்பாத்தி ரெடி
#

🍱 எனக்கு பிடித்த பாரம்பரிய உணவுகள்

🍱 எனக்கு பிடித்த பாரம்பரிய உணவுகள் - ShareChat
1.3k காட்சிகள்
4 மாசத்திற்கு முன்
சூப்பரான ஸ்நாக்ஸ் செட்டிநாடு பால் பணியாரம்செட்டிநாட்டு பால் பணியாரம் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ஒரு அருமையான ரெசிபி. குழந்தைகளுக்கு விருப்பமான இந்த பால் பணியாரத்தை எப்படி செய்வது என்று பார்க்கலாம். சூப்பரான ஸ்நாக்ஸ் செட்டிநாடு பால் பணியாரம் #தேவையானபொருட்கள்... பச்சரிசி – 1/2 கப் உளுந்தம் பருப்பு – 1/2 கப் தேங்காய் பால் – 1 கப் காய்ச்சிய பால் – 1/4 கப் ஏலக்காய் பொடி – 1/4 டீஸ்பூன் உப்பு – 1 சிட்டிகை சர்க்கரை – 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய் – தேவையான அளவு முந்திரி, பாதாம் – தேவையான அளவு #செய்முறை... * முந்திரி, பாதாமை பொடியாக நறுக்கி கொள்ளவும். * அரிசி மற்றும் உளுந்தம் பருப்பை 3 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதனை நன்கு கழுவி, மிக்ஸியில் போட்டு, நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு அதில் உப்பு சேர்த்து கலந்து தனியாக வைத்துக் கொள்ளவும். மாவானது கெட்டியாகவும், மென்மையாகவும் இருக்க வேண்டும். * ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், மாவை கொஞ்சம் கொஞ்சமாக கையில் எடுத்து, எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்து, டிஷ்யூ பேப்பரில் வைத்துக் கொள்ள வேண்டும். * அடி கனமான பாத்திரத்திதல் தேங்காய் பால், காய்ச்சிய பால், ஏலக்காய் பொடி மற்றும் சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். * கலந்த பாலில் பொரித்து வைத்துள்ள பணியாரத்தை சேர்த்து 15 நிமிடம் ஊற வைக்கவும். * பரிமாறும் போது நறுக்கி வைத்துள்ள பாதாம் முந்திரியை தூவி கொடுக்கவும். * சுவையான செட்டிநாடு பால் பணியாரம் ரெடி!!!
#

🍱 எனக்கு பிடித்த பாரம்பரிய உணவுகள்

🍱 எனக்கு பிடித்த பாரம்பரிய உணவுகள் - ShareChat
10.2k காட்சிகள்
4 மாசத்திற்கு முன்
போஸ்ட் இல்லை
மத்த ஆப்-ல் ஷேர் செய்ய
Facebook
WhatsApp
காப்பி லிங்க்
அழிக்க
Embed
நான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட் ...
Embed Post