மண்ணில் வாழ்ந்த மகான்கள்
3K Posts • 2M views
சிவமணியம் கேள்வி: ஹடயோகம் அவசியமா? பகவான்: அது ஒரு சகாயம். அவசியம் கிடையாது. சாதகனைப் பொறுத்தது. விசாரணையிலே பிராணன் அடங்கிடும். பிராணனை அடக்கியோ, மனசை அடக்கியோ உண்மைக்குப் போயிடலாம். ஹடயோகம் பிராணனை அடக்கும். விசாரம் மனசை நாசம் பண்ணிடும். கேள்வி: ஞானத்துக்கு அப்புறம் ஞானிக்கு தனித்தன்மை இருக்குமா? பகவான்: எப்படி வச்சுக்கொள்ள முடியும்! கேள்வி: 'நேதி நேதி'ன்னு நான் தியானம் பண்றேன். அது சரியா? பகவான்: இல்லே. அது முதல்லே தியானமே இல்லே. நான்கறதோட மூலத்தைக் கண்டுபிடிங்கோ. தவறாம அங்கே போகணும். போலியா இருக்கற 'நான்'கறது போய், எப்போதும் இருக்கற 'தான்' மாத்ரம் மிஞ்சும். 'தான்'கறது இல்லாம... போலியா நான் இருக்காது. கேள்வி: எனக்கு சில சமயங்கள்ல ஆத்மானுபவம் ஏற்படுது. அதை எப்படி திரும்பப் பெறுவது? எப்படி தக்க வைக்கறது? எப்படி நீடித்து இருக்கறது? இதுக்கு அப்பியாசம் என்ன? அந்த அப்பியாசத்துக்கு தனி இடம் தேவையா? பகவான்: நீங்க திரும்பப்பெறுவது எப்படின்னு கேக்கறேள்...ஆனா... ஆத்மா எப்போதும் நித்ய சித்தமாக இருக்கு. அஞ்ஞான நீக்கமே ஆத்மாவை அடையறதா சொல்லப்படறது. நீங்க தக்க வைக்கறது எப்படின்னுகேக்கறேள்... ஆனா... ஒருமுறை அடைஞ்சா.... அது இங்கேயே இப்போவே இருக்குன்னு தெரிஞ்சுடும். அது தொலையறதே இல்லே. நீங்க நீடித்து ஆத்மானுபவத்திலே இருக்கறது எப்படின்னு கேக்கறேள்...ஆனா... அதை நீட்டிக்க, சுருக்கிக்க முடியாது. அது இருக்கற வஸ்து. நீங்க தனியிடம் தேவையான்னு கேக்கறேள்...ஆத்மாவிலே இருக்கறதுக்கு பெயர்தான் ஏகாந்தம். ஆத்மாவிற்கு அன்னியமா இடம் இல்லை. நீங்க இதுக்கு என்ன அப்பியாசம்ன்னு கேக்கறேள்..... ஆத்ம விசாரணையே அப்பியாசம். கேள்வி: மனதை அடக்குவது எப்படி? பகவான்: இரண்டு வழியிருக்கு - ஒண்ணு மனசுன்னா என்னன்னு பாக்கறது. அப்படிப் பாத்தா அடக்கறதுக்கு மனசுன்னு ஒண்ணும் இருக்காது. இல்லே... மனசை ஏதோ ஒண்ணுலே நிலை நிறுத்தணும். அப்போ மனசு அமைதியா இருக்கும். கேள்வி: நாங்கள்லாம் உலகத்துல உழல்றவங்க. ஒண்ணு மாத்தி ஒண்ணு ஏதாவது பிரச்சனை இருந்துகிட்டேயிருக்கு! எப்படி வெளியே வர்றதுன்னே தெரியலை. இறைவன் கிட்டே எவ்வளவு முறையிட்டாலும் ஒண்ணும் திருப்தியா இல்லை. என்ன செய்யறது? பகவான்: இறைவன்கிட்டே முறையிடாதேள்! சரணடைங்கோ! கேள்வி. சரணடைஞ்சாலும் ஒண்ணும் மாறமாட்டேங்குது! பகவான்:சரணடைஞ்சாலும் ஒண்ணும் மாறமாட்டேன்றது..... அப்படின்னெல்லாம் குறை சொல்லக் கூடாது. சரணடைஞ்சுட்டா... அவர் எப்படி நடத்தறாரோ நடத்தட்டும்ன்னு... அவரிஷ்டத்துக்கு விட்டுடணும். நம்மளோட இஷ்டப்பிரகாரம் நடக்க வேண்டாம். உங்க இஷ்டப் பிரகாரமே நடத்துங்கோன்னு விட்டுடணும் அதுக்கு வருத்தப்படக் கூடாது. துன்பமா இருக்கறமாதிரி இருக்கும். முடிவிலே வேறுவிதமா இருக்கும். நமக்கு அதெல்லாம் பிடிபடாது. கேள்வி: நாங்க உங்கள மாதிரி இல்லை! எங்களுக்கு எல்லாம் குடும்பம் சொந்தம் பந்தம்னு நிறைய இருக்கு. அவங்கள்லாம் எக்கேடும் கெட்டுப் போகட்டும்! உன் இஷ்டம்ன்னு இருக்க முடியல பகவானே! பகவான்: அப்போ நீங்க சொன்ன மாதிரி சரணடையலேன்னுதான் அர்த்தம். எல்லாத்தையும் இறைவன் பாரம்ன்னு ஒப்படைச்சுடுங்கோ. கேள்வி: உடம்பில ஒரு பூச்சி ஏறுறது தெரியாம... ஏதாவது ஒரு யோசனையிலேயே மூழ்கி இருக்கலாம். ஆனா யோசனையே இல்லாம இருக்கலாம்னு சொல்றீங்களே... மனசைக் கடந்து இருக்க முடியுமா? பகவான்: முடியும். இருக்கறது ஆத்மா ஒண்ணுதான். அதுதான் மூணு நிலைமைலேயும் இருக்கு... மாறாம இருக்கு. தூக்கத்துலே நான்கற எண்ணம் இல்லை. அது வந்த உடனே விழிச்சுக்கறோம். உடலுலகம் வந்துடறது. தூங்கும்போது இந்த ராமமூர்த்தி எங்கே போனார்? நீங்க தூங்கும்போது இருந்தேளா? இல்லையா? தூங்கும்போது ராமமூர்த்தி இருந்திருக்கணும். ஆனா..... இப்போ இருக்கற ராமமூர்த்தியா இல்லே. இப்போ இருக்கறதுக்கு பெயர் 'நான்'கற முதல் எண்ணம். தூங்கும்போது இருக்கறதுக்கு பெயர்தான் உண்மையான 'நான்'. இந்த 'நான்'... மூணு நிலைமைலேயும் மாறாம இருக்கு. அது அறிவாவும் இருக்கு. 'நான்'கறது என்னன்னு தெரிஞ்சுகொண்டா... அது நினைப்புக்கு அப்பால்ன்னு தெரியும். கேள்வி: சிந்திக்காம இருக்க முடியுமா? பகவான்: மற்ற உடலியக்கங்கள் மாதிரி அதுவும் ஒரு இயக்கந்தான். அது இயங்கினாலும், இயங்கலேன்னாலும் நான்கற அறிவைப் பாதிக்காது. கேள்வி: பிறர் என்ன நினைக்கறாங்கன்னு தெரிஞ்சுக்க முடியுமா? பகவான்: மத்தவாளப் பத்தி நமக்கென்ன... நம்மளோட கதையப் பாப்போம். நாமதான் எல்லோரும். நமக்கு அன்னியமா யாரும் இல்லே. பக்கம்: 52 - 55. அப்பனேஅருணாசலம். 🚩🕉🪷🙏🏻 #பகவான் ரமணர் #பகவான் ஸ்ரீ ரமணமகரிஷி #🙏ஆன்மீக குருக்கள்🧘🏿‍♂️ #சித்தர்கள் வாக்கு #மண்ணில் வாழ்ந்த மகான்கள்
13 likes
18 shares
*பகவான் ஸ்ரீ ரமண மகரிஷிகள் – 146 ஆவது ஜயந்தி வைபவம்* ஞானச் சுடர் உதித்த நன்னாள் கௌண்டின்ய நதிக்கரையில், பூமிநாதரும் ஸஹாயவல்லியும் அருள்பாலிக்கும் புண்ணியத் தலமான திருச்சுழி, ஒரு ஞானப் புரட்சிக்கு வித்திட்டது. 1879-ஆம் ஆண்டு, மார்கழித் திருவாதிரை நன்னாளில் (டிசம்பர் 30), நடராஜப் பெருமானின் வீதியுலா முடிந்த அந்த அமைதியான நள்ளிரவில், சுந்தரமய்யர் - அழகம்மாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார் வேங்கடராமன். அக்குழந்தை நிலவுலகில் உதித்த அந்த விநாடியில், அங்கிருந்த கண்பார்வையற்ற மூதாட்டி ஒருவர் பேரொளியைக் கண்டு கண்பார்வை பெற்றார். அந்தச் சிறு சுடரே பின்னாளில் உலகிற்கு ‘நான் யார்?’ எனும் தத்துவத்தை வழங்கிய அத்வைத ஞானி பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி! திருச்சுழியில் நிகழ்ந்த அந்த அதிசய ஜனனம் எவ்வாறு ஒரு ஞானப் பேரொளியைத் தோற்றுவித்ததோ, அதே பேரொளி இன்றும் மாறாத அருளுடன் ஸ்ரீ ரமணாச்ரமத்தில் ஜயந்தி விழாவாக பக்தர்களின் இதயங்களைக் கொண்டாட்டத்தில் நனைக்கிறது. அருணாசல ரமணரின் 146-ஆவது ஜயந்தி விழா “ஆயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்தாலும், அன்பர்களின் இதயங்களில் ஆனந்த வெள்ளத்தைப் பாய்ச்சும் ஒரு மகா சங்கமம் - ரமண ஜயந்தி!” பகவான் ரமணரின் அணுக்கத் தொண்டர் எஸ்.எஸ். கோஹன் குறிப்பிடுவது போல, பழைய பக்தர்கள் பகவானின் மௌன மாற்றத்தையும், புதிய பக்தர்கள் தங்களின் ஆன்மீகத் தேடலுக்கு அவர் அளிக்கும் உத்வேகத்தையும் இன்றும் அனுபவப்பூர்வமாக உணர்கின்றனர். அவர் உடலைத் துறந்தாலும், அந்த ஞானப் பேரொளி இன்றும் பக்தர்களின் வழித்துணையாகவே இருக்கிறது. இன்றைய வைபவம் (4/1/2026): ஸ்ரீ ரமணாச்ரமத்தில் இன்று 146-ஆவது ஜயந்தி விழா பக்திப் பெருக்குடன் அரங்கேறியது. வைகறைப் பொழுதில் ஒலித்த தனுர் மாதப் பாக்களும், ஆச்ரமத்தின் திசையெங்கும் எதிரொலித்த மஹன்யாச ருத்ரஜப மந்திரங்களும், ஜயந்தி பாராயணங்களும் பக்தர்களின் உள்ளங்களில் ஒரு தெய்வீகப் பேரமைதியை நிலைநாட்டின. வண்ண மலர்களின் எழிலாலும், நறுமணத் திரவியங்களின் நறுமணத்தாலும் குரு ரமணனுக்கு நிகழ்த்தப்பட்ட விமரிசையான அபிஷேக அலங்காரங்கள், காண்போர் கண்களுக்கு ஒரு தெய்வீக விருந்தாக அமைந்தன. பக்தர்கள் தங்கள் இதயங்களில் ஊறிய பாமாலைகளையும், கரங்களால் தொடுத்த பூமாலைகளையும் கொண்டு ‘அருணாசல ரமணனை’ மனம் உருகி வழிபட, மகா தீபாராதனையின் ஒளிவெள்ளத்தில் இவ்விழா இனிதே நிறைவுற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்களின் வருகையால் ஆச்ரமமே விழாக்கோலம் பூண்டிருந்த வேளையில், குருவருளின் பிரசாதமாக அனைவருக்கும் மனநிறைவளிக்கும் சிறப்பு உணவு விருந்து உபசரிக்கப்பட்டது. 🚩🕉🪷🙏🏻 #பகவான் ரமணர் #பகவான் ஸ்ரீ ரமணமகரிஷி #🙏ஆன்மீக குருக்கள்🧘🏿‍♂️ #சித்தர்கள் வாக்கு #மண்ணில் வாழ்ந்த மகான்கள்
9 likes
14 shares