அனைத்து நண்பர்களுக்கும்
அனைத்து நபர்களுக்கும் பயனுள்ளத் தகவல்:---ரகசிய கேமெராக்களை மாணவிகள் விடுதியில் பெண்கள் கண்டுபிடித்தது எப்படி? அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகளை "சென்னை ஆதம்பாக்கம் தில்லை கங்கா நகரில் வாடகைக்கு எடுத்து மகளிர் விடுதி நடத்துபவர் சம்பத்குமார் என்ற சஞ்சய்.,பல் மருத்துவர் உட்பட மாத வாடகை அடிப்படையில் 7 பெண்கள், அந்த விடுதியில் தங்கி இருந்தனர். இந்நிலையில், நேற்று முன் தினம் மின்சார பிளக்கில் ஒரு பெண் தனது கூந்தலை உலர வைப்பதற்கான கருவியைசொருக முயன்றுள்ளார். பிளக் உடைந்து விழுந்ததால் , ஏதோ ஒரு கருவி பேட்டரியுடன் இணைக்கப்பட்டிருப்பது தெரிந்தது. இதன்மூலமே அது ரகசிய வீடியோ கேமரா என்று தெரிந்து அதிர்ச்சியடைந்தார். உடனே 'Hidden Camera Detector' என்ற ரகசிய கேமராக்களைக் கண்டறியும், செயலியை செல்போனில் பதிவிறக்கம் செய்து, அனைத்து சோதனைசெத்தபோதுதான் மொத்தம் 10 இடங்களில் வைக்கப்பட்டுள்ளது தெரிந்தது,மேலும் இது வயர்லெஸ் மூலம் சஞ்சய் கணினிக்கு இணைக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.இதனையடுத்து பெண் ஒருவர் புகார் செய்ததன் அடிப்படையில் அவரை கைது செய்து சஞ்சய்யை விசாரித்துவருகின்றனர், இதனால் பெண்கள் விழிப்புடன் இருக்குமாறு எங்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.மேலே கொடுக்கப்பட்டுள்ள 'Hidden Camera Detector' என்ற மொபைல் செயலியை உங்கள் மொபைலில் தரவிறக்கம் செய்து அதை ஓடவிடும்போது வீடியோ ரெக்கார்டு மாதிரி வரும் ரகசிய கேமரா ஏதேனும் இருப்பின் மொபைல் தானாக கண்டுபிடித்து சத்தத்தினை எழுப்பும் என்பது குறிப்பிடத்தக்கது.
#

அனைத்து நண்பர்களுக்கும்

அனைத்து நண்பர்களுக்கும் - ShareChat
142 காட்சிகள்
6 மாசத்திற்கு முன்
இந்த 26 வார்த்தைகள்! எவ்வளவு அழகு *A - Appreciation* மற்றவர்களின் நிறைகளை மனதாரப் பாராட்டுங்கள். *B - Behaviour* புன்முறுவல் காட்டவும் சிற்சில அன்புச் சொற்களைச் சொல்லவும் கூட நேரம் இல்லாதது போல் நடந்து கொள்ளாதீர்கள். *C - Compromise* அற்ப விஷயங்களைப் பெரிது படுத்தாதீர்கள். மனம் திறந்து பேசி சுமுகமாக தீர்த்துக்கொள்ளுங்கள். *D - Depression* மற்றவர்கள் புரிந்துகொள்ளவில்லையே என்று சோர்வடையாதீர்கள். *E - Ego* மற்றவர்களை விட உங்களை உயர்வாக நினைத்துக் கொண்டு கர்வப்படாதீர்கள். *F - Forgive* கண்டிக்கக்கூடிய அதிகாரமும் நியாயமும் உங்கள் பக்கம் இருந்தாலும், எதிர்த் தரப்பினரை மன்னிக்க வழி இருக்கிறதா என்று பாருங்கள். *G - Genuineness* எந்த விஷயத்தையும் நேர்மையாகக் கையாளுங்கள். *H - Honesty* தவறு செய்தால் உடனே மன்னிப்பு கேட்பதைக் கெளரவமாகக் கருதுங்கள். *I - Inferiority Complex* எவரையும் பார்த்து பிரமிக்காதீர்கள். நான் ஏன் இப்படி இருக்கிறேன் என்ற தாழ்வு மனப்பான்மையை விடுங்கள். *J - Jealousy* பொறாமை வேண்டவே வேண்டாம். அது கொண்டவனையே கொல்லும். *K - Kindness* இனிய இதமான சொற்களை மட்டுமே பயன்படுத்துங்கள். *L - Loose Talk* சம்பந்தமில்லாமலும் அர்த்தமில்லாமலும் பின் விளைவு அறியாமலும் பேச வேண்டாம். *M - Misunderstanding* மற்றவர்களைத் தவறாகப் புரிந்துகொள்ளாதீர்கள். *N - Neutral* எப்போதும் எந்த விஷயத்தையும், முடிவு எடுத்துவிட்டுப் பேச வேண்டாம். பேசிவிட்டு முடிவு எடுங்கள். நடுநிலை தவறாதீர்கள். *O - Over Expectation* அளவுக்கு அதிகமாக எதிர்பார்ப்பு வைக்காதீர்கள். தேவைக்கு அதிகமாக ஆசைப்படாதீர்கள். *P - Patience* சில சங்கடங்களை சகித்துத்தான் ஆகவேண்டும் என உணருங்கள். *Q - Quietness* தெரிந்ததை மாத்திரமே பேசுங்கள். அநேகப் பிரச்னைகளுக்குக் காரணம், தெரியாததைப் பேசுவதுதான். கூடுமானவரை பேசாமலே இருந்துவிடுங்கள். *R - Roughness* பண்பில்லாத வார்த்தைகளையும், தேவையில்லாத மிடுக்கையும் காட்டாதீர்கள். *S - Stubbornness* சொன்னதே சரி, செய்ததே சரி என பிடிவாதம் பிடிக்காதீர்கள். *T - Twisting* இங்கே கேட்டதை அங்கேயும், அங்கே கேட்டதை இங்கேயும் சொல்வதை விடுங்கள். *U - Underestimate* மற்றவர்களுக்கும் மரியாதை உண்டு என்பதை மறவாதீர்கள். *V - Voluntary* அடுத்தவர் இறங்கி வரவேண்டும் என்று காத்திராமல் நீங்களே பேச்சை முதலில் தொடங்குங்கள். பிரச்னை வரும்போது எதிர்த்தரப்பில் உள்ளவரின் கருத்துக்களுக்கும் காது கொடுங்கள். *W - Wound* எந்தப் பேச்சும் செயலும் யார் மனதையும் காயப்படுத்தாமல் இருக்கட்டும். *X - Xerox* நம்மை மற்றவர்கள் எப்படி நடத்த வேண்டும் என்று எதிர்பார்க்கிறோமோ, அப்படியே மற்றவர்களை நாம் நடத்துவோம். *Y - Yield* முடிந்தவரை விட்டுக் கொடுங்கள். விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப் போவதில்லை; கெட்டுப் போகிறவர்கள் விட்டுக் கொடுப்பதில்லை. *Z - Zero* இவை அனைத்தையும் கடைப் பிடித்தால் பிரச்னை என்பது பூஜ்ஜியம் ஆகும்......படித்ததில் பிடித்தது.....
#

அனைத்து நண்பர்களுக்கும்

அனைத்து நண்பர்களுக்கும் - ShareChat
259 காட்சிகள்
7 மாசத்திற்கு முன்
a general discussion newspaper post:-- -தீபாவளிக்கு முன் அறிவிப்பு, திருச்சியில் மாநாடு: ரஜினியின் மெகா பிளான் Webdunia 23 Oct. 2018 இதோ வருகிறார், அதோ வருகிறார் என கடந்த 20 வருடங்களாக ஜகா வாங்கி கொண்டிருந்த ரஜினிகாந்த், ஒரு வழியாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அரசியலுக்கு வருவதாக அறிவித்தார். இந்த அறிவிப்பு வெளிவந்து ஒரு வருடம் ஆகவுள்ள நிலையிலும் இன்னும் அரசியல் கட்சி அறிவிப்பு வரவில்லை என்பதால் ஒருசிலர் அவநம்பிக்கை அடைந்தனர். ஆனால் 'பேட்ட' படப்பிடிப்பு முடிந்து சென்னை திரும்பியதும் கட்சி ஆரம்பிக்கும் பணிகள் 90% முடிந்துவிட்டதாகவும் விரைவில் அரசியல் கட்சி அறிவிப்பு வெளிவரும் என்றும் ரஜினி பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார் இந்த நிலையில் சமீபத்தில் டெல்லியில் பிரதமர் மோடியை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து சென்றபின்னர் தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டசபை தேர்தல் என்பதை உறுதி செய்த பிரதமர், தமிழக பாஜகவினர்களை களத்தில் இறங்க தயாராகும்படி அறிவுறுத்தினாராம். இந்த தகவல் ரஜினிக்கு சென்றதை அடுத்து தீபாவளிக்கு முன் கட்சி அறிவிப்பு பின்னர் டிசம்பரில் கட்சி பொதுக்கூட்டம் என்பதை முடிவு செய்துவிட்டாராம். திருச்சியில் பொதுக்கூட்டம் வைத்தால் தமிழகத்தின் எந்த பகுதியில் இருந்து வந்தாலும் தொண்டர்கள் ஆறு மணி நேரத்திற்குள் வீட்டுக்கு திரும்பிவிடலாம் என்ற அறிவுரையின்படி முதல் கூட்டம் திருச்சியில் நடத்த ரஜினி திட்டமிட்டுள்ளாராம் மேலும் ரஜினியின் கட்சியில் சேர அதிமுக, திமுக, பாமக, காங்கிரஸ் ஆகிய கட்சியில் இருந்து முக்கிய பிரமுகர்கள் சேர தயாராகி வருகின்றார்களாம். அதேபோல் சிறிய கட்சிகள் நடத்தி வரும் ஒருசிலரும் கட்சியை கலைத்துவிட்டு கூண்டோடு ரஜினி கட்சியில் சேர பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றார்களாம். எனவே இந்த தீபாவளிக்கு ரஜினியின் பட்டாசு வெடிப்பது உறுதி என ரஜினி மக்கள் மன்ற வட்டாரங்கள் கூறுகின்றன
#

அனைத்து நண்பர்களுக்கும்

அனைத்து நண்பர்களுக்கும் - ShareChat
115 காட்சிகள்
7 மாசத்திற்கு முன்
நாம் யார் தயவிலும் வாழ்வதில்லை என்று தன்னம்பிக்கையோடு தன் சொந்த காலில் நிற்பவர்கள் அவர்கள் செய்யும் தொழிலில் இன்றைய கால கட்டத்தில் சிலர் போட்டி, போறாமை இல்லாமல் நடத்த இயலாது. ..... இருப்பினும் மனம் தளராதீர்கள்... தொழில்,வியாபாரம் தடையில்லாமல் நன்றாக நடக்க தாந்த்ரீக பரிகார இரகசியங்கள். தொழில்,வியாபாரம் நன்றாக நடக்க தாந்த்ரீக பரிகாரங்கள்: கலசம் கடையில் வியாபாரமே இல்லாமல் கஷ்டப்படுபவர்கள் மற்றும் தொழில் செய்யும் யாவரும் இம்மந்திரத்தைக் கடை மற்றும் தொழில் ஸ்தாபனத்தில் அமர்ந்திருக்கும் பொழுது மனதிற்குள் ஜெபித்து வர அதிகமான மக்கள் வரத்துவங்கி தொழில் சிறப்பாக நடைபெறும். இதை என் நண்பர்கள் பலரும் அனுபவித்துப் பலனடைந்திருக் கின்றனர். காலையில் கடை திறந்ததும் கலசத்தில் சிறிது மஞ்சள் ,குங்குமம் , சந்தனம் , பச்சைகற்பூரம் ,1 ஏலக்காய் போட்டு தண்ணீர் நிரப்பி மந்திரத்தை ஜெபிக்க வேண்டும் . இம்மந்திரத்தை 108, 1008 முறை ஜெபித்த நீரை கடையில் தெளிக்க நல்ல பலன்கள் ஏற்படும். அல்லது மாலை 6:15 முதல் 7:45 க்குள் இம்மந்திரம் ஜெபித்து நீரை கடை, தொழிற்சாலை மற்றும் வியாபார ஸ்தலங்களில் தெளித்து வர லக்ஷ்மி கடாட்சம் உண்டாகும். மந்திரம் : ஓம் நமோ பகவதி பத்மா பத்மாவதி | ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் பூர்வாய தக்ஷிணாய பஸ்சிமாய உத்தராய ஆனுபூரக சர்வே ஜன வஸ்யம் குரு ஸ்வாஹா ||
#

அனைத்து நண்பர்களுக்கும்

அனைத்து நண்பர்களுக்கும் - ShareChat
131 காட்சிகள்
7 மாசத்திற்கு முன்
போஸ்ட் இல்லை
மத்த ஆப்-ல் ஷேர் செய்ய
Facebook
WhatsApp
காப்பி லிங்க்
அழிக்க
Embed
நான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட் ...
Embed Post