உழைப்பாளர் தினம்
667 Posts • 12M views
ஆதி தமிழன்
1K views 5 months ago
#உழைப்பாளர் தினம் வாழ்த்துக்கள் மே 1 #மே #மே தினம் #உழைப்பாளர் தினம் #💐உழைப்பாளர் தினம் 💐 உழவன் வாழ்வும் வயலோடு முடியும் உழைப்பில் உதிரம் வியர்வையாய் கொட்டும் நாம் யாவருமே உழைக்கப் பிறந்தோம் இம்மண்ணில் வாழும்வரை இதுதான் விதியுமானது காடு கழனியைச் சீர்படுத்தி விதைத்தோம் வாடும் மக்களுக்கு தானியம் பகிர்ந்தோம் கடலும் தாண்டி பலநாடுகளுக்கும் கொடுத்தோம் கடவுளும் வாரிகொடுத்தான் உழைப்பிற்கேற்ற ஊதியம் ஓய்வறியா சூரியனாய் ஓடியே உழைக்கிறாய் ஓய்வெடுக்க நேரமில்லை உனக்கென்று நாளுமில்லை கானல் நீராய் களைப்போடு செல்கிறாய் வானமும் பூமியும் உன்னருமைச் சொல்லும் ஏர்ப்பூட்டி காளையோடு வயலில் உழைப்பாய் ஓர் உயிராய் யாரும் மதிப்பதில்லை இரும்பு பட்டறையில் வளையாத இரும்பும் கருத்தாய் சம்மட்டியால் அடித்திட வளையும் வேளாண்மையில் மேட்டுக்காடு நிலமும் விளையும் வேளாண் தொழிலில் பூத்தும் காய்த்திடும் பழங்களும் கனிந்து சுவையும் தரும் ஆழமான சிந்தனை உழவனிடம் காணலாம் மே தினத்தில் வாழ்த்தி மகிழ்கிறேன் மேன்மை அடைந்திட மனதார வேண்டுகிறேன் தமிழ் தாசன்
8 likes
6 shares