ஜிபிலி ரோஜா♥️♥️♥️♥️
991 views • 2 months ago
நாளை மற்றும் நாளை மறுநாள் (நவம்பர் 23, 2025) தமிழ்நாட்டில் உள்ள கடலோர மாவட்டங்களில் அநேக இடங்களிலும், உள் தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யலாம்.
ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூர், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்காலிலும் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது.
வரும் 24-ம் தேதி தமிழ்நாட்டில் உள்ள கடலோர மாவட்டங்களில் அநேக இடங்களிலும், உள் தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யலாம்.
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்காலிலும் கனமழை பெய்வதற்கான வாய்ப்பு உண்டு.
இங்கு கனமழை பெய்யும் என்று குறிப்பிட்டுள்ள மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் வழங்கியுள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம் #🔴இன்றைய முக்கிய செய்திகள் ##🌪️உருவாகிறது புதிய புயல்⛈️
11 likes
10 shares