இயேசு கிறிஸ்து
#

இயேசு கிறிஸ்து

182 காட்சிகள்
3 மாசத்திற்கு முன்
#

இயேசு கிறிஸ்து

235 காட்சிகள்
5 மாசத்திற்கு முன்
#

இயேசு கிறிஸ்து

173 காட்சிகள்
5 மாசத்திற்கு முன்
#

இயேசு கிறிஸ்து

சத்துருவுக்கு எதிர்த்து நில்லுங்கள் கிறிஸ்து இயேசுவினால் நான் எதற்காகப் பிடிக்கப்பட்டேனோ அதை நான் பிடித்துக்கொள்ளும்படி ஆசையாய்த் தொடர்கிறேன். சகோதரரே, அதைப் பிடித்துக்கொண்டேனென்று நான் எண்ணுகிறதில்லை; ஒன்று செய்கிறேன், பின்னானவைகளை மறந்து, முன்னானவைகளை நாடி, கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப்பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன். - (பிலிப்பியர் 3: 12-14). . ஒரு சிறுவனும் அவனது அக்காவும் தங்களது விடுமுறையை தங்கள் தாத்தா பாட்டியோடு கழிப்பதற்காக, அவர்கள் இருந்த கிராமத்திற்கு போனார்கள். அவர்களது தாத்தா, பக்கத்திலிருந்த காட்டிற்குள் சிறுவனான ஜானை தன்னோடு கூட்டிக்கொண்டுப்போய், அவனுக்கு கவண்கல் (catapult) எப்படி அடிப்பது என்று கற்றுக் கொடுத்தார். அவன் அங்கிருந்த எல்லா சிறு சிறு பறவைகள், மிருகங்கள் மேலும் குறி வைத்து அடித்துப் பார்த்தான். ஒன்றும், சிக்கவில்லை. அவன், சரியாக குறி வைக்காததால், அவை மாட்டவில்லை. மிகவும் சோர்வுடன் அவன் வீடு நோக்கி வந்தபோது, அவனது பாட்டி அன்பாக வளர்த்து வந்த ஒரு வாத்து அவன் கண்களில் பட்டது. இதையாவது அடித்துப் பார்ப்போம் என்று எண்ணி, அந்த வாத்தை குறி வைத்து கல்லை எறிந்தான். அது சரியாகப் போய்ப்பட்டு, அந்த வாத்து,செத்து விழுந்தது. அவன் வெலவெலத்துப் போனான். என்ன செய்வது என்று தெரியவில்லை. சுற்றி முற்றும் பார்த்து, பக்கத்தில் குழி பறித்து அந்த வாத்தை அவன் புதைத்துப் போட்டான். அவன் யாரும் பார்க்கவில்லை என்று நினைத்தான். ஆனால் அதை அவனது அக்கா பார்த்து விட்டாள். ஆனால் அவள் அவனிடம், எதையும் கேட்கவில்லை. மறுநாள், தாத்தா வேட்டைக்கு போகும்போது பிள்ளைகளை தன்னோடு வரும்படி, அழைத்தார். அப்போது, பாட்டியார் ‘ஜானை மட்டும் கூட்டிக் கொண்டு போங்கள், மகள் என்னோடு இருக்கட்டும்’ என்றுக் கூறினார்கள். அப்போது அக்கா ஜானிடம் வந்து, இரகசியமாக, ‘வாத்து தெரியுமில்ல’ என்று அவனை மிரட்டிவிட்டு, பாட்டியாரிடம், ‘பாட்டி இன்று ஜான் என்னுடைய வேலைகளை செய்வான். நான் தாத்தாவுடன் போகிறேன்’ என்று கூறிவிட்டு தாத்தாவுடன் சென்றாள். அப்படியே இரண்டு வாரங்கள், அவள் தொடர்ந்து, அவனை தனக்கு பதிலாக அவனை வைத்து வேலை வாங்கினாள். ஒரு நாள், ஜான், ‘நான் போய் பாட்டியிடம் நடந்ததை சொல்லி விடுகிறேன். நான் எந்த சந்தோஷத்தையும் அனுபவிக்க முடியாதபடி இந்த அக்கா என்னை எப்போதும் மிரட்டிக் கொண்டிருக்கிறாள். இவள் பண்ணுகிறது அநியாயம்’ என்று நினைத்தவனாக, பாட்டியிடம் சென்று, ‘பாட்டி என்னை மன்னித்து விடுங்கள்’, என்று நடந்ததைக் கூறினான். அப்போது பாட்டி சொன்னார்கள், ‘மகனே, நீ அன்று செய்த காரியத்தை நானும் பார்த்தேன். ஆனால் நான் பார்த்ததை நீ கவனிக்கவில்லை. நீயாக வந்து என்னிடம் சொல்லி மன்னிப்புக் கேட்பாய் என்று இத்தனை நாட்கள் காத்திருந்தேன். ஆனால் நீ உன் அக்காவிற்கு அடிமையாக இத்தனை நாள், அவளுக்கு வேலை செய்துக் கொடுத்துக் கொண்டிருந்தாயே!’ என்று அன்போடு கூறினார்கள். அவன், ஏன் நான் முன்பே பாட்டியிடம் வந்துச் சொல்லவில்லை என்று வருத்தப்பட்டான். நம்மில் அநேகர் நாம் செய்த தவற்றை மறைத்து வைத்து, கர்த்தரிடம் மன்னிப்புக் கேட்காமல், ஐயோ நான் தவறு செய்து விட்டேனே! கர்த்தர் என்னை ஏற்றுக் கொள்ள மாட்டார் என்று குற்ற உணர்ச்சியிலேயே வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம். சத்துரு அதை அறிந்து எப்போதும் நம்முடைய இருதயத்தில், நீ பாவம் செய்தவன் தானே, செய்தவள் தானே, நீயா போய் ஜெபிக்கிறாய்? உன் ஜெபம் ஏற்றுக் கொள்ள மாட்டாது என்று நம்மை ஏமாற்றிக் கொண்டிருக்கிறான். நாமும் அவன் சொல்லுகிற பொய்யை எல்லாம் உண்மை என்று எண்ணி நம்மை நாமே ஏமாற்றிக் கொண்டிருக்கிறோம். நாம் நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார் என்று 1 யோவான் 1:9ல் வாசிக்கிறோம். நம் தேவன் தம்மிடத்தில் வருகிற எந்த மனிதனையும் புறம்பே தள்ளுகிறவரல்ல. நம்மை மன்னித்து நம்மை கிருபையாய் நம்மை ஏற்றுக் கொள்கிறார்;. அவர் மன்னிக்கிறது மட்டுமல்ல, ‘என் பாவங்களையெல்லாம் உமது முதுகுக்குப் பின்னாக எறிந்துவிட்டீர்’ என்று எசேக்கியா இராஜா சொல்வதைப் பார்க்கிறோம். நம் தேவன் நம்மை மன்னித்து பாவங்களை மறந்து விடுகிற தேவன். ஆனால் நாம் அதை சாக்காக வைத்து தொடர்ந்து பாவங்களை செய்து விட்டு, தேவன் மன்னித்துவிடுவார் என்று பாவத்திலேயே இருப்போமானால் அதற்கு ஏற்ற தண்டனை உண்டு. ‘தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான்; அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான்’ என்று நீதிமொழிகள் 28:13ல் பார்க்கிறோம். அவைகளை விட்டுவிடுகிறவனே இரக்கம் பெறுவான். பவுல் அப்போஸ்தலன் சொல்கிறதுப்போல ‘ஒன்று செய்கிறேன், பின்னானவைகளை மறந்து, முன்னானவைகளை நாடி, கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப்பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன்| என்று, ஒரு முறை அறிக்கை செய்த பாவங்களையும், நடந்தவற்றையும் மறந்து, முன்னானவைகளை நாடி, இலக்கை நோக்கி உண்மையோடு தொடருவோம். ‘நீதிமான் ஏழுதரம் விழுந்தாலும் திரும்பவும எழுந்தரிப்பான்’ என்று வேதம் கூறுகிறது. ஆகவே நாம் விழுந்த இடத்திலேயே இருந்து, ‘ஐயோ நான் விழுந்துவிட்டேனே’ என்று புலம்பிக் கொண்டிருக்காமல், தேவ பெலத்தால் திரும்ப எழுந்தரிப்போம். கர்த்தருக்கென்று வாழ்வோம். பழையதை மறந்து, பந்தய பொருளை பெற்றுக் கொள்ளத்தக்கதாக ஓடுவோம். ஆமென் அல்லேலூயா! *🙏GLORY TO JESUS🙏*
412 காட்சிகள்
7 மாசத்திற்கு முன்
#

இயேசு கிறிஸ்து

திருப்தியுள்ள வாழ்வு நீங்கள் பணஆசையில்லாதவர்களாய் நடந்து, உங்களுக்கு இருக்கிறவைகள் போதுமென்று எண்ணுங்கள்; நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை என்று அவர் சொல்லியிருக்கிறாரே. - (எபிரேயர் 13:5). . பழங்காலத்து கதை ஒன்று உண்டு. ஒரு சேவலும், ஒரு எலியும், ஒரு முயலும் நண்பர்களாக ஒற்றுமையாக ஒரு வீட்டில் வசித்து வந்தன. அவை தங்கள் வேலைகளை சரியாக பங்கிட்டு, எந்த பிரச்சனையும் இல்லாமல் சந்தோஷமாக வாழ்ந்து வந்தன. சேவல், காட்டிற்கு சென்று, விறகுகளை பொறுக்கி கொண்டு வந்தும், எலி; பக்கத்திலிருந்த ஓடையில் தண்ணீரை கொண்டு வந்தும், முயலானது சமைத்தும் தங்கள் வேலையை ஒழுங்காக செய்து வந்தன. ஒரு நாள் சேவல் விறகுகளை பொறுக்கி கொண்டு இருந்தபோது, ஒரு காகம் அதனிடம் வந்து, நீ என்ன செய்கிறாய் என்று கேட்டது. அப்போது சேவல் தான் செய்து வருகிற வேலையை சொன்னபோது, அந்த காகம், ‘இது சரியே யில்லை, நீ பாவம் எத்தனை கடினமான வேலையை செய்கிறாய், மற்ற இருவரும் சுகமாக இலகுவான தங்கள் வேலைகளை செய்து வருகிறார்கள், நீ பாவம் உன்னை அவர்கள் ஏமாற்றுகிறார்கள்’ என்று அதனிடம் மூட்டிவிட்டது. சேவல் தன் வேலையை தொடர்ந்தாலும், அதற்கு காகம் கூறின காரியத்தை மறக்க முடியவில்லை, அதை தொடர்ந்து சிந்தித்து, தான் உண்மையாகவே மற்றவர்களை காட்டிலும் அதிகமாக வேலை செய்வதாக நினைத்து, வீட்டிற்கு சென்றவுடன், கண்ணீரும் கம்பலையுமாக “ இது அநியாயம், நான் எவ்வளவு கஷ்டப்பட்டு வேலை செய்கிறேன், நீங்கள் ஜாலியாக சின்ன சின்ன வேலைகளை செய்கிறீர்கள், எனக்கு தான் கடினமான வேலை, போதும், இனி நான் விறகு பொறுக்க போக மாட்டேன்” என்று கத்தியது. அதிருப்தியும் கோபமும் அங்கு நிலவ ஆரம்பித்தது. முயலும் எலியும் கூட தாங்களும் மிக கடினமாக வேலைகளை செய்வதாகவும், இனி எந்த வேலையும் செய்ய போவதில்லை என்றும் முடிவெடுத்தன. இதற்காக வாதித்து, வாதித்து கடைசியாக ஒரு முடிவெடுத்தன. அதன்படி, சேவல், தண்ணீர் எடுக்கவும், முயல் விறகு பொறுக்கவும் எலி சமைக்கவும் முடிவெடுத்தன. அடுத்த நாள், முயல் குதித்து, குதித்து விறகு பொறுக்க சென்றபோது, ஒரு நரி அதை தொடர்ந்து வந்து, அதன் மேல் பாய்ந்து அதை கொன்று சாப்பிட்டது. சேவல் தண்ணீர் எடுக்க ஓடைக்கு வந்தபோது, அதில் வந்த சுழியில் சிக்கி தண்ணீரில் மூழ்கி போனது, எலி சமைக்கும்போது, அதற்கு எட்டாதபடியால், எக்கி பார்த்தபோது, அதில் விழுந்து மரித்து போனது. திருப்தியில்லாததால், அது அவர்களுடைய சந்தோஷத்தை குலைத்தது மாத்திரமல்ல, அவர்களுடைய வாழ்க்கையையே அழித்து போட்டது. நாம் எல்லாருக்கும் செய்வதற்கென்று ஒரு வேலையை கர்த்தர் கொடுத்திருக்கிறார். அந்த வேலையில் நாம் உண்மையாக உத்தமமாக செய்ய வேண்டும். எந்த வேலையும் மற்ற வேலையை விட பெரிய வேலை கிடையாது. ஒரு மனிதனும் மற்ற மனிதனை விட பெரிய மனிதனும் இல்லை. அவரவருக்கு தேவன் தகுதிக்கேற்ப வேலையை கட்டளையிட்டிருக்கிறார். ஒரு நாள் அலுவலகத்தை சுத்தப்படுத்துகிற மனிதன் வரவில்லை என்றால் எத்தனை அசொளகரியங்கள்! அவரவர் செய்ய வேண்டிய வேலையை அவரவர் தான் செய்ய வேண்டும். சாதாரண கிளர்க்காக இருந்து கொண்டு மேனேஜர் வேலையை தான் நான் செய்வேன் என்றால், அது நடக்க கூடிய காரியமா? தேவன் கொடுத்திருக்கிற வேலையில் திருப்தியாக இருந்து, அந்த வேலையை உத்தமமாக செய்ய வேண்டும் என்றே தேவன் எதிர்ப்பார்க்கிறார். சில வேளைகளில், நமக்கு கீழே வேலை செய்பவர்களுக்கு நம்மை விட அதிகபடியான சம்பளம் கிடைக்கலாம், அதற்காக நாம் நான் கொஞ்ச வேலையை மட்டும் தான் செய்வேன், அவன் என்னை விட அதிக சம்பளம் வாங்குகிறான், அவன் செய்யட்டும் என்று பொறாமையோடு இருந்தோமானால், தேவன் அதில் மகிழ்கிறவரல்ல, அவர் அவனுக்கு அந்த சம்பளத்தை கொடுப்பது அவரது சித்தம். மட்டுமல்ல, நாம் உண்மையாக நம் வேலையில் நேர்மையாக இருக்கும்போது, நமக்கு கிடைக்கும் சொற்ப சம்பளத்தையும் தேவன் ஆசீர்வதிப்பார். அது நிச்சயமாகவே அதிக சம்பளம் வாங்குகிறவனைவிட நிறைவானதாக இருக்கும். ‘நீங்கள் பணஆசையில்லாதவர்களாய் நடந்து, உங்களுக்கு இருக்கிறவைகள் போதுமென்று எண்ணுங்கள்; நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை என்று அவர் சொல்லியிருக்கிறாரே’. காகத்தை போன்று மற்ற தந்திரமானவர்கள் சொல்லும் காரியங்களுக்கு செவிகொடாதிருங்கள். உங்கள் வேலையிடத்தில் காணப்படும் சந்தோஷமான சூழ்நிலையை மாற்றி நரகமாக்கி கொள்ளாதிருங்கள். கொஞ்சத்திலும் சந்தோஷமாய் அனுபவிக்கிறவர்களாக நிறைவுள்ளவர்களாக வாழ தேவன் தாமே ஒவ்வொருவருக்கும் கிருபை செய்வாராக! *🙏GLORY TO JESUS🙏*
283 காட்சிகள்
7 மாசத்திற்கு முன்
#

இயேசு கிறிஸ்து

சுகமளிக்கும் ஆண்டவர் பிரியமானவனே, உன் ஆத்துமா வாழ்கிறதுபோல நீ எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகமாயிருக்கும்படி வேண்டுகிறேன். - (3 யோவான் 1:2). . அது ஒரு கன்வென்ஷன் கூட்டம். ஸ்மித் விகிள்ஸ்வொர்த் என்ற ஊழியர் செய்தியை பகிர்ந்து கொண்டார். கூட்டம் முடிந்தது. மக்கள் தங்கள் வீடுகளை நோக்கி நடக்கலாயினர். சுமார் 15 பேர் தங்களுக்கு சுகம் பெற வேண்டி ஸ்மித்திடம்; ஜெபிக்க முன்வந்தனர். அதில் ஒருவர் இரு கைகளிலும் ஊன்று கோலுடன் வந்து நின்றார். அவர் மேல் கைகளை வைத்து ஸ்மித் ஜெபிக்க ஆரம்பித்தார். என்ன ஆச்சரியம்? ஊனமுற்றவர் தன் ஊன்று கோல்களை எறிந்து விட்டு துள்ளி குதித்தார். ஸ்மித்தால் நம்பவே முடியவில்லை. ஸ்மித்தை தேவன் பயன்படுத்த ஆரம்பித்தார். ஏராளம் ஏராளமான அற்புதங்கள் நடைபெற்றன. உயிருக்கு போராடி கொண்டிருந்தவாக்ள மீண்டும் புத்துயிர்; பெற்றனர். பிணியாளிகளின் கைகளில் எண்ணெய் பூசி ஜெபித்தவுடன் சுகம் பெற்றனர். ஆதி அப்போஸ்தலர் காலத்தில் நடந்தது போலவே அற்புதங்கள் அவர் மூலம் நடைபெற்றன. ஆம் அன்று இயேசு வாழ்ந்தபோது மட்டுமல்ல, இன்னும் அவர் அதே வல்லமையோடு செயல்பட்டு கொண்டுதான் இருக்கிறார். அன்று அவரிடம் வந்தவர்கள், அவரது வஸ்திர தொங்கலை தொட்டவர்கள், அவர் கைப்பட்டவர்கள் என அனைவரும் சுகம் பெற்று சென்றனர். அன்றுள்ள அவரது வல்லமை இன்றும் குறைந்து போகவில்லை. அவரது மகிமையும் மாறவில்லை. ஆனால் தன்னை நாடி வந்தவர்களிடம் அவர் ஒரு காரியத்தை எதிர்ப்பார்த்தார். ஆம் அவர்களிடம் விசுவாசத்தை எதிர்ப்பார்த்தார். விசுவாசித்த அனைவரும் வியாதியிலிருந்து விடுதலையாகினர். சரீரத்தில் மாத்திரமல்ல, ஆத்துமாவிலும் விடுதலை பெற்றனர். சுகம் பெற்றவுடன் மீண்டும் தங்கள் பழைய வாழ்விற்கு திரும்பாமல், இயேசுவின் அடிச்சுவடிகளை பின்பற்றினர். அவரோடு ஊழியம் செய்ய தங்களை அர்ப்பணித்தனர். புது வாழ்க்கையையே அவர்களுக்கு கொடுத்தார். இன்றும் சரீரத்தில் வியாதியோடு, தாங்கொண்ணா துயரோடு, என்று எனக்கு விடியல் வரும் என்று கலங்கி தவிக்கிறீர்களோ? இரவெல்லாம் தூக்கமின்றி புரண்டு புரண்டு படுத்து, எப்போது விடியும் என்று காத்து கொண்டிருக்கிறீர்களோ? வியாதியின் கொடுமை உங்களை சலிப்படைய செய்து விட்டதோ? கலங்காதீர்கள், இயேசு உங்களை சுகப்படுத்துவார். உங்களை அற்புத சாட்சியாக நிறுத்த போகிறார். அதற்கு முன் ஒரு விசை உங்களை ஆராய்ந்து பாருங்கள். எனது வியாதிக்கு என் பாவ வாழ்வு காரணமோ, எச்சரிப்பின் சத்தத்தை கேட்டும் மனக்கடினமாய் வாழ்ந்ததினிமித்தம் வந்தததோ, என உங்களை நிதானித்து பாருங்கள். தேவன் உங்கள் உளளத்தில் உணர்த்துவாரென்றால் தேவ சமுகத்தில் உங்கள் பாவங்களை அறிக்கையிடுங்கள். புகை, புகையிலை, மதுபானத்தால் உங்கள் சரீரத்தின் சுகம் கெட்டிருக்குமென்றால், அவற்றை விட்டுவிட தீர்மானியுங்கள். பின் முழு மனதோடு சுகத்திற்காக மன்றாடுங்கள். தேவன் உங்களை சுகப்படுத்துவார், நீங்கள் அவருக்கு ஊழியம் செய்வீர்கள். பிரியமானவனே, உன் ஆத்துமா வாழ்கிறதுபோல நீ எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகமாயிருக்கும்படி வேண்டுகிறேன் என்ற வசனத்தின்படி உங்கள் ஆத்துமாவாகிய உள்ளான மனிதன் பாவமில்லாமல் பரிசுத்தமாய் வாழும்போது, உங்கள சரீரமும் சுகமாய் வாழும். ஆகவே முதலாவது உங்கள் ஆத்துமா ஆரோக்கியமுள்ளதா என்று பாருங்கள். சரீரத்தைபார்க்கிலும் ஜீவன் விசேஷித்ததல்லவா? இந்த ஆயத்தத்தோடு சுகத்தை எதிர்பாருங்கள். தேவ வல்லமை உஙகளில் வெளிப்படும். நீங்கள் உயிருள்ள சாட்சியாய் வாழ்வீர்கள். ஆமென் அல்லேலூயா! *🙏GLORY TO JESUS🙏*
654 காட்சிகள்
7 மாசத்திற்கு முன்
#

இயேசு கிறிஸ்து

ராஜாவுக்கு தூக்கம் வராத இரவு 'அந்த ராத்திரியிலே ராஜாவுக்கு நித்திரை வராதபடியினால், காலவர்த்தமானங்கள் எழுதியிருக்கிற நடபடி புஸ்தகத்தைக் கொண்டு வரச்சொன்னான்: அது ராஜ சமுகத்தில் வாசிக்கப்பட்டது'. - (எஸ்தர் 6:1). . எத்தனை ஆச்சரியம்! அதே நாள் சாயங்காலத்தில் வஞ்சகனான ஆமான் மொர்தெகாயை தூக்கில் போடும்படியாக ஐம்பது முழம் உயரமான தூக்குமரத்தை செய்தான். அடுத்த நாள் காலையிலே இராஜாவிடம் சொல்லி அவனை தூக்கில் போட வேண்டும் என்ற எண்ணத்தோடு அவன் அந்த தூக்கு மரத்தை செய்வித்தான் (எஸ்தர் 5:14). ஆனால் தேவன் அதே இரவிலே எல்லாவற்றையும் மாற்றி போட்டார். கர்த்தருடைய வேளையை பாருங்கள், ஆமான் நினைத்திருப்பான், யாரும் தன் திட்டத்தை மாற்ற முடியாது, ராஜாவும் அரண்மனை கொலு மண்டபத்தில் இல்லை, தான் செய்த திட்டத்தை யாரும் அறிய முடியாது, நான் காலையில் போய் என் திட்டத்தை நிறைவேற்றுவேன் என்று நினைத்தவனாக அவன் அந்த இரவை கழித்திருப்பான், ஆனால் அந்த ஒரு இரவிற்குள்ளாக தேவன் எல்லாவற்றையும் மாற்றி போட்டார். தேவன் எல்லாவற்றையும் அறிந்தவர். ராஜாவுக்கு ஆமானின் திட்டமும், தூக்கு மரம் செய்ததும் தெரியாது, இராஜாத்தி எஸ்தருக்கும் தெரியாது, ஏன் மொர்தெகாயுக்கும் தெரியாது, ஆனால் தேவனுக்கு முன்பாக மறைந்திருப்பது எதுவுமில்லை. கர்த்தர் செயல்பட ஆரம்பித்தார். நீங்கள் தேவனுடைய பிள்ளையாயிருந்தால், உங்களுக்கு வர இருக்கும் ஆபத்தை நீங்கள் அறியாமலிருக்கலாம், ஆனால் தேவன் அறிந்தவராயிருக்கிறார். அவர் உங்களுக்காக செயல்பட ஆரம்பிப்பார், அவர் உங்களுக்காக யுத்தம் செய்வார். உங்கள் வாழ்க்கையில் நடைபெறும் எல்லா காரியத்தையும் அறிந்தவர் அவர். அவர் நம்முடைய வாழ்வில் நடந்த, நிகழ்கின்ற, வருகின்ற முக்காலத்தையும் அறிந்தவர். கர்த்தருடைய அருமையான செயலை பாருங்கள், அந்த இராத்திரி ராஜாவுக்கு தூக்கத்தை தேவன் வர விடவில்லை, அவனை காலவர்த்தமானங்களின் நடபடியை எடுத்து வர செய்து, படிக்க வைக்கிறார். அது வாசித்தபோது, இரண்டு பிரதானிகளான பிக்தானாவும், தேரேசும் ராஜாவாகிய அகாஸ்வேருவின் மேல் கைப்போடப்பார்த்த செய்தியை ராஜாவுக்கு மொர்தெகாய் அறிவித்தான் என்பது வாசிக்கப்பட்டது, அதற்காக மொர்தெகாயுக்கு கனமும் மேன்மையும் செய்யப்பட்டதா என்று ராஜா கேட்டபோது, ஒன்றும் செய்யப்படவில்லை என்பதும் ராஜாவுக்கு தெரிய வந்தது. அடுத்த நாள் காலையில், ஆமான் மொர்தெகாயை தூக்கில் போட வேண்டுமென்று ராஜாவிடத்தில் பேசும்படி முற்றத்திற்கு வந்திருந்தான். ராஜா அவனை உள்ளே அழைத்து, அவன் பேச ஆரம்பிப்பதற்கு முன்பாக, அவனிடம் 'ராஜா கனம் பண்ண விரும்புகிற மனுஷனுக்கு என்ன செய்யப்பட வேண்டும்' என்று அவனிடமே கேட்டு அதன்படியே மொர்தெகாயுக்கு செய்ய சொன்னபோது, அது அவனுடைய வாழ்க்கையின் பெரிய அதிர்ச்சியாக இருந்தது. யாரை அவன் தூக்கில் போட வேண்டும் என்று ராஜாவிடம் பேச வந்திருந்தானோ, அதே நபரை நகர வீதியில் எல்லா கனத்தோடும் கனம் பண்ண அவனையே ராஜா செய்ய வைக்கிறார். தேவன் மொர்தெகாயை தூக்கிலிடாதபடி காத்து, அவனை நகரமே வியக்கும்வண்ணம் கனம் பண்ணினது மாத்திரமல்ல, அவனுக்கு விரோதமாக ஆமான் செய்த தூக்கு மரத்தில் அவனே தூக்கிலிடும்படி செய்கிறார். நம் தேவனுடைய கரங்களில் நம்முடைய காலங்களும் வாழ்க்கையும் இருக்கிறது. ஒரு வேளை நீங்கள் வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு விரோதமாக திட்டம் செய்கிறார்களோ? அல்லது உங்கள் குடும்பத்திலேயே உங்களை வெறுத்து உங்களுக்கு விரோதமாக காரியங்களை செய்கிறார்களோ, நீங்கள் தேவனுடைய பிள்ளைகளானால் கலங்க தேவையில்லை, நீங்கள் ஒன்றும் அறியாமல், உறங்கி கொண்டு இருக்கலாம், அவர்களுடைய திட்டங்களைக் குறித்து நீங்கள் அறியாமலிருக்கலாம், ஆனால் எல்லவற்றையும் அறிந்த தேவன் உங்களுக்காக செயல்படுவார், உங்களை காப்பது மாத்திரமல்ல, நீங்கள் வேலை செய்யும் இடத்தில் அல்லது, நீங்கள் எந்த இடத்தில் தாழத்தப்பட்டீர்களோ அந்த இடத்தில் உங்களை கனம் பண்ணி, உங்களை உயர்ந்த இடத்தில் வைப்பார். நம் தேவனால் கூடாத காரியம் ஒன்றுமில்லை. உங்களுக்கு விரோதமாக வருபவர்கள் ஒன்றுமில்லாமற் இல்பொருளாவார்கள், அவர்கள் உங்களுக்கு விரோதமாக செய்யும் ஒரு காரியமும் வாய்காமற் போக செய்ய தேவன் வல்லவராயிருக்கிறார். இப்படிப்பட்ட அதிசய தேவனை தெய்வமாக கொண்டுள்ள நாம் எத்தனை பாக்கியவான்கள்! ஆகவே எதை குறித்தும் நீங்கள் கலங்காதிருங்கள். கர்த்தரிடத்தில் உங்கள் வாழ்க்கையை ஒப்புக்கொடுத்து விட்டு, அவருடைய வேளைக்காக காத்திருங்கள். கர்த்தர் உங்களுக்காக யுத்தம் செய்வார். தம்மை நம்பி ஜீவிக்கும் உங்களையும் என்னையும் மற்றவர்களுக்கு முன்பாக வெட்கப்படுத்த ஒரு நாளும் தேவன் அனுமதிக்கமாட்டார். அவர் நமக்காக காரியங்களை செய்வார். அவருடைய செயல்கள் மகத்துவமானது, ஆராய்ந்து முடியாத பெரிய காரியங்களையும், எண்ணி முடியாத அதிசயங்களையும் அவர் செய்கிறார். தாழ்ந்தவர்களை உயரத்தில் வைத்து, துக்கிக்கிறவர்களை இரட்சித்து உயர்த்துகிறார் (யோபு 5: 9-10). ஆமென் அல்லேலூயா! *🙏GLORY TO JESUS🙏*
314 காட்சிகள்
7 மாசத்திற்கு முன்
#

இயேசு கிறிஸ்து

ராஜாவுக்கு தூக்கம் வராத இரவு 'அந்த ராத்திரியிலே ராஜாவுக்கு நித்திரை வராதபடியினால், காலவர்த்தமானங்கள் எழுதியிருக்கிற நடபடி புஸ்தகத்தைக் கொண்டு வரச்சொன்னான்: அது ராஜ சமுகத்தில் வாசிக்கப்பட்டது'. - (எஸ்தர் 6:1). . எத்தனை ஆச்சரியம்! அதே நாள் சாயங்காலத்தில் வஞ்சகனான ஆமான் மொர்தெகாயை தூக்கில் போடும்படியாக ஐம்பது முழம் உயரமான தூக்குமரத்தை செய்தான். அடுத்த நாள் காலையிலே இராஜாவிடம் சொல்லி அவனை தூக்கில் போட வேண்டும் என்ற எண்ணத்தோடு அவன் அந்த தூக்கு மரத்தை செய்வித்தான் (எஸ்தர் 5:14). ஆனால் தேவன் அதே இரவிலே எல்லாவற்றையும் மாற்றி போட்டார். கர்த்தருடைய வேளையை பாருங்கள், ஆமான் நினைத்திருப்பான், யாரும் தன் திட்டத்தை மாற்ற முடியாது, ராஜாவும் அரண்மனை கொலு மண்டபத்தில் இல்லை, தான் செய்த திட்டத்தை யாரும் அறிய முடியாது, நான் காலையில் போய் என் திட்டத்தை நிறைவேற்றுவேன் என்று நினைத்தவனாக அவன் அந்த இரவை கழித்திருப்பான், ஆனால் அந்த ஒரு இரவிற்குள்ளாக தேவன் எல்லாவற்றையும் மாற்றி போட்டார். தேவன் எல்லாவற்றையும் அறிந்தவர். ராஜாவுக்கு ஆமானின் திட்டமும், தூக்கு மரம் செய்ததும் தெரியாது, இராஜாத்தி எஸ்தருக்கும் தெரியாது, ஏன் மொர்தெகாயுக்கும் தெரியாது, ஆனால் தேவனுக்கு முன்பாக மறைந்திருப்பது எதுவுமில்லை. கர்த்தர் செயல்பட ஆரம்பித்தார். நீங்கள் தேவனுடைய பிள்ளையாயிருந்தால், உங்களுக்கு வர இருக்கும் ஆபத்தை நீங்கள் அறியாமலிருக்கலாம், ஆனால் தேவன் அறிந்தவராயிருக்கிறார். அவர் உங்களுக்காக செயல்பட ஆரம்பிப்பார், அவர் உங்களுக்காக யுத்தம் செய்வார். உங்கள் வாழ்க்கையில் நடைபெறும் எல்லா காரியத்தையும் அறிந்தவர் அவர். அவர் நம்முடைய வாழ்வில் நடந்த, நிகழ்கின்ற, வருகின்ற முக்காலத்தையும் அறிந்தவர். கர்த்தருடைய அருமையான செயலை பாருங்கள், அந்த இராத்திரி ராஜாவுக்கு தூக்கத்தை தேவன் வர விடவில்லை, அவனை காலவர்த்தமானங்களின் நடபடியை எடுத்து வர செய்து, படிக்க வைக்கிறார். அது வாசித்தபோது, இரண்டு பிரதானிகளான பிக்தானாவும், தேரேசும் ராஜாவாகிய அகாஸ்வேருவின் மேல் கைப்போடப்பார்த்த செய்தியை ராஜாவுக்கு மொர்தெகாய் அறிவித்தான் என்பது வாசிக்கப்பட்டது, அதற்காக மொர்தெகாயுக்கு கனமும் மேன்மையும் செய்யப்பட்டதா என்று ராஜா கேட்டபோது, ஒன்றும் செய்யப்படவில்லை என்பதும் ராஜாவுக்கு தெரிய வந்தது. அடுத்த நாள் காலையில், ஆமான் மொர்தெகாயை தூக்கில் போட வேண்டுமென்று ராஜாவிடத்தில் பேசும்படி முற்றத்திற்கு வந்திருந்தான். ராஜா அவனை உள்ளே அழைத்து, அவன் பேச ஆரம்பிப்பதற்கு முன்பாக, அவனிடம் 'ராஜா கனம் பண்ண விரும்புகிற மனுஷனுக்கு என்ன செய்யப்பட வேண்டும்' என்று அவனிடமே கேட்டு அதன்படியே மொர்தெகாயுக்கு செய்ய சொன்னபோது, அது அவனுடைய வாழ்க்கையின் பெரிய அதிர்ச்சியாக இருந்தது. யாரை அவன் தூக்கில் போட வேண்டும் என்று ராஜாவிடம் பேச வந்திருந்தானோ, அதே நபரை நகர வீதியில் எல்லா கனத்தோடும் கனம் பண்ண அவனையே ராஜா செய்ய வைக்கிறார். தேவன் மொர்தெகாயை தூக்கிலிடாதபடி காத்து, அவனை நகரமே வியக்கும்வண்ணம் கனம் பண்ணினது மாத்திரமல்ல, அவனுக்கு விரோதமாக ஆமான் செய்த தூக்கு மரத்தில் அவனே தூக்கிலிடும்படி செய்கிறார். நம் தேவனுடைய கரங்களில் நம்முடைய காலங்களும் வாழ்க்கையும் இருக்கிறது. ஒரு வேளை நீங்கள் வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு விரோதமாக திட்டம் செய்கிறார்களோ? அல்லது உங்கள் குடும்பத்திலேயே உங்களை வெறுத்து உங்களுக்கு விரோதமாக காரியங்களை செய்கிறார்களோ, நீங்கள் தேவனுடைய பிள்ளைகளானால் கலங்க தேவையில்லை, நீங்கள் ஒன்றும் அறியாமல், உறங்கி கொண்டு இருக்கலாம், அவர்களுடைய திட்டங்களைக் குறித்து நீங்கள் அறியாமலிருக்கலாம், ஆனால் எல்லவற்றையும் அறிந்த தேவன் உங்களுக்காக செயல்படுவார், உங்களை காப்பது மாத்திரமல்ல, நீங்கள் வேலை செய்யும் இடத்தில் அல்லது, நீங்கள் எந்த இடத்தில் தாழத்தப்பட்டீர்களோ அந்த இடத்தில் உங்களை கனம் பண்ணி, உங்களை உயர்ந்த இடத்தில் வைப்பார். நம் தேவனால் கூடாத காரியம் ஒன்றுமில்லை. உங்களுக்கு விரோதமாக வருபவர்கள் ஒன்றுமில்லாமற் இல்பொருளாவார்கள், அவர்கள் உங்களுக்கு விரோதமாக செய்யும் ஒரு காரியமும் வாய்காமற் போக செய்ய தேவன் வல்லவராயிருக்கிறார். இப்படிப்பட்ட அதிசய தேவனை தெய்வமாக கொண்டுள்ள நாம் எத்தனை பாக்கியவான்கள்! ஆகவே எதை குறித்தும் நீங்கள் கலங்காதிருங்கள். கர்த்தரிடத்தில் உங்கள் வாழ்க்கையை ஒப்புக்கொடுத்து விட்டு, அவருடைய வேளைக்காக காத்திருங்கள். கர்த்தர் உங்களுக்காக யுத்தம் செய்வார். தம்மை நம்பி ஜீவிக்கும் உங்களையும் என்னையும் மற்றவர்களுக்கு முன்பாக வெட்கப்படுத்த ஒரு நாளும் தேவன் அனுமதிக்கமாட்டார். அவர் நமக்காக காரியங்களை செய்வார். அவருடைய செயல்கள் மகத்துவமானது, ஆராய்ந்து முடியாத பெரிய காரியங்களையும், எண்ணி முடியாத அதிசயங்களையும் அவர் செய்கிறார். தாழ்ந்தவர்களை உயரத்தில் வைத்து, துக்கிக்கிறவர்களை இரட்சித்து உயர்த்துகிறார் (யோபு 5: 9-10). ஆமென் அல்லேலூயா! *🙏GLORY TO JESUS🙏*
361 காட்சிகள்
8 மாசத்திற்கு முன்
#

இயேசு கிறிஸ்து

எதிர்பாராத நேரத்தில் வருவார் இப்படியிருக்க, பிள்ளைகளே, அவர் வெளிப்படும்போது நாம் அவர் வருகையில் அவருக்கு முன்பாக வெட்கப்பட்டுப்போகாமல் தைரியமுள்ளவர்களாயிருக்கும்படிக்கு அவரில் நிலைத்திருங்கள். - (1யோவான் 2:28). . நம் இயேசுகிறிஸ்து சீக்கிரம் வரப்போகிறார் என்பது நம்மனைவருக்கும் நன்கு தெரிந்த சத்தியமாகும். ஆனால் நாம் எவ்வளவு தூரம் ஆயத்தமாயிருக்கிறோம் என்பது சந்தேகத்துக்குரியதாகவே இருக்கிறது. ஒருமுறை அமெரிக்க அதிபர் ஈசன் ஹோவர் (Eisenhover) விடுமுறையில் இருந்தபோது, பத்திரிக்கையில் அவருக்கு என்று குறிக்கப்பட்டு ஒரு கடிதம் எழுதப்பட்டிருந்தது. அதில் ஆறு வயது நிரம்பிய பால் என்னும் சிறுவன் புற்று நோயால் பாதிக்கப்பட்டு, மரணதறுவாயில் இருப்பதாகவும், அவன் அமெரிக்க அதிபரை பார்க்க விரும்புவதாகவும் எழுதப்பட்டிருந்தது. இது அதிபரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டபோது, அவர் அந்த சிறுவனை போய் பார்க்க முடிவு செய்தார். அப்படியே ஒரு நாள் அந்த சிறுவனின் வீட்டிற்கு போய் கதவை தட்டினார். அச்சிறுவனின் தகப்பன் டொனால்ட் கதவை திறந்தபோது அமெரிக்க அதிபரைக்கண்டு அதிர்ச்சியுற்றார். சரியான உடை உடுத்தாமல், முகச்சவரன் செய்யாமல், மிகவும் சாதாரண உடைகளை உடுத்தியிருந்த அவர், அதிபரை உள்ளே அழைத்து, சிறுவனிடம் கொண்டு சென்றார். அதிபர் சற்று நேரம் அந்த சிறுவனிடம் பேசிவிட்டு கிளம்பினார். அக்கம்பக்கத்திலிருப்பவர்களுக்கு அதுவே அந்த நாளின் பேச்சாக இருந்தது. ஆனால் டொனால்ட்க்கோ சந்தோஷமேயில்லை. ஏனெனில் அவர் அதிபரின் வருகையை எதிர்ப்பார்க்காததினால், சரியான உடை உடுத்தாமல், முகச்சவரன்கூட செய்யாமல் இருந்து விட்டோமே என்று, மிகவும் துக்கப்பட்டார். ஆம் பிரியமானவர்களே! நம் ஆண்டவர் நாம் எதிர்பாராத நேரத்தில் வருவார். நாம் ஆயத்தமா? கறைதிரையற்ற இரட்சிப்பின் வஸ்திரத்தை உடுத்தியிருக்கிறோமா? அல்லது கறைகளோடு காணப்படுகிறோமா? *🙏GLORY TO JESUS🙏*
249 காட்சிகள்
8 மாசத்திற்கு முன்
#

இயேசு கிறிஸ்து

ஆவியின் கனியோ... சமாதானம் ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம்; இப்படிப்பட்டவைகளுக்கு விரோதமான பிரமாணம் ஒன்றுமில்லை. -(கலாத்தியர் 5:22-23) . மூன்றாம் சுளை சமாதானம்: இந்த நாட்களில் மனிதன் சமாதானத்தை தேடி எங்கெங்கோ அலைகிறான். நாட்டுக்கு நாடு சமாதானமில்லை, மனிதனுக்கு மனிதன் சமாதானமில்லை, மதத்திற்கு மதம் சமாதானமில்லை, குடும்பங்களுக்குள் சமாதானமில்லை, ஏன் மனிதனுக்குள்ளேயே சமாதானமில்லை. சமாதானப் பேச்சு வார்த்தை என்று சொல்லி, பெரிய நாடுகளின் தலைவர்கள் கூட்டங்கள் கூட்டி பேசினாலும், எந்த முடிவும் எடுக்கப்படாமல், சமாதான குறைவையே ஒவ்வொரு நாடும் சந்தித்து வருகின்றன. எந்த இடத்திலுமிருந்து சமாதானம் வராது. சமாதானத்தை தருகிறவர் இயேசுகிறிஸ்து மாத்திரமே ஏனெனில் அவரே சமாதானப்பிரபு என்றழைக்கப்படுகிறார். ஒரு கதை உண்டு, ஒரு முறை அமெரிக்க அதிபரும், ரஷிய அதிபரும், இஸ்ரவேலின் அதிபரும் சந்திக்கிறார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் கர்த்தரிடம் ஒரு கேள்வியை கேட்டார்கள். முதலாவது, அமெரிக்க அதிபர் வெள்ளையினத்தவருக்கும், கறுப்பினத்தவருக்கும் எப்போதாவது சமாதானம் உண்டாகுமா? ஏன்று கேட்டார். அதற்கு கர்த்தர் உன்னுடைய வாழ்நாள் முழுவதிலும் அதைக் காண மாட்டாய் என்றார். அடுத்தது ரஷிய அதிபர், அமெரிக்காவிற்கும், ரஷியாவிற்கும் சமாதான உடன்படிக்கை ஏற்படுமா? ஏன்று கேட்டார். அதற்கு கர்த்தர் உன்னுடைய வாழ்நாள் முழுவதிலும் அதைக்காண மாட்டாய் என்று கூறினார். அடுத்ததாக இஸ்ரவேலின் அதிபர், கர்த்தரிடம், இஸ்ரவேலருக்கும், பாலஸ்தீனியருக்கும் இடையே சமாதானம் உண்டாகுமா? ஏன்று கேட்டார். அதற்கு கர்த்தர் என்னுடைய வாழ்நாள் முழுவதும் அதைக்காண மாட்டாய் என்றாராம். எருசலேம் என்பதற்கு சமாதானம் என்றுப் பொருள். ஆனால் இதுவரை அங்கு சமாதானம் என்பது துளியளவும் இல்லை. நம்மைப் போல அல்ல, அரபியர் ஒருவரையொருவர் காணும்போது, சலாமாலைக்கும் என்று வாழ்த்து சொல்லிதான் சந்திக்கிறார்கள். ஆனால் சமாதானம் அவர்களிடம் கிடையாது. இஸ்ரவேலர் ஷாலோம் அலைக்கும் என்று வாழ்த்துகிறார்கள். அவர்களுக்குள் சமாதானம் இருந்தாலும், வெளிப்படையாக சமாதானம் என்பது இல்லை. வேதத்தில் மூன்று சமாதானங்களைக் குறித்துப் பார்க்கிறோம் 1. தேவனிடத்தில் சமாதானம்: இவ்விதமாக, நாம் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறபடியால், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துமூலமாய் தேவனிடத்தில் சமாதானம் பெற்றிருக்கிறோம் (ரோமர் 5:1). 2. உள்ளான சமாதானம்: நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தெரியப்படுத்துங்கள். அப்பொழுது, எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும் (பிலிப்பியர் 4:6-7). 3. வெளிப்புறத்தில் சமாதானம்: யாவரோடும் சமாதானமாயிருக்கவும், பரிசுத்தமுள்ளவர்களாயிருக்கவும் நாடுங்கள்; பரிசுத்தமில்லாமல் ஒருவனும் கர்த்தரைத் தரிசிப்பதில்லையே (எபிரேயர் 12:14). இந்த மூன்று வகை சமாதானமும் ஒரு மனிதனுக்குள் இல்லாவிட்டால் அவனது வாழ்வு நரகமாகவே இருக்கும். தேவனோடும், நம் உள்ளான மனிதனோடும், வெளியுலகில் உள்ள மற்றவர்களோடும் நாம் சமாதானம் அற்றிருப்போமானால் நம் வாழ்வில் சமாதானம் என்பது துளியும் இராது. நம் வாழ்வில் சமாதானம் எப்போது வரும்? சமாதானக்காரணராகிய இயேசுகிறிஸ்து வரும்போது மட்டுமே! ஏனெனில் அவர்தான் சொன்னார், சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன், என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன் உலகம் கொடுக்கிறபிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலும் இருப்பதாக (யோவான் 14:27) என்று நம்மை ஆற்றினவர் அவர்தாமே! ஒரு மனிதன் கையில் ஒரு துப்பாக்கியுடன் ஒரு பேங்க்கை கொள்ளையிட சென்றான். அவன் அதில் 6000 டாலரை கொள்ளையடிக்கும்போது, பிடிபட்டான். அவனுடைய துப்பாக்கி மியூசியத்திற்கு சென்றது. அவனுடைய துப்பாக்கி பழைமை வாய்ந்த அருமையான ஒரு துப்பாக்கி. ஆதை விற்றால் 10,000 டாலர் விலைபோயிருக்கும். ஆனால் அதை அவன் அறியாதவனாக வங்கியை கொள்ளையடிக்க சென்று, பிடிபட்டு, சிறையில் வாடினான். அதுப்போல கிறிஸ்தவர்களும், கிறிஸ்துவே நம்முடைய சமாதான காரணர் (எபேசியர் 2:14) என்பதை அறியாதவர்களாக, சமாதானத்தை தேடி அங்கும் இங்கும் அலைகிறார்கள். ஏந்த சூழ்நிலையிலும் கர்த்தர் நமக்குள் இருந்தால், ஆவியின் கனியாகிய சமாதானம் நம்மை சூழ்ந்திருக்கும். எந்த புயல் அடித்தாலும் மனதின் அடியில் அசைக்க முடியாத சமாதானம் நிறைந்திருக்கும். இயேசுவோடு பயணம் செய்த சீஷர்கள் நடுக்கடலிலே புயல் வீசி கடல் கொந்தளித்தபோது, 'ஆண்டவரே எங்களை இரட்சியும், மடிந்துபோகிறோம் என்றார்கள். அதற்கு அவர்: அற்பவிசுவாசிகளே! ஏன் பயப்படுகிறீர்கள் என்று சொல்லி; எழுந்து, காற்றையும் கடலையும் அதட்டினார். உடனே, மிகுந்த அமைதல் உண்டாயிற்று' (மத்தேயு 8:25-26) என்று காற்றையும் கடலையும் அதட்டி அமைதிப்படுத்தினவர், நம் வாழ்வில் கர்த்தர் இருந்தால் வீசும் புயலையும், காற்றையும் அதட்டி நம் வாழ்விலும் வசந்தம் வீசச்செய்வார். தேவ சமாதானத்தினால் நாம் ஒவ்வொருவரும் நிரம்பியிருப்போம். ஆவியின் கனியாகிய சமாதானம் நிறைந்திருக்கும்போது, நம் நித்திரை இனிமையாயிருக்கும், நம் குடும்ப வாழ்வு, சபை, சமுதாய வாழ்வு இனிதாயிருக்கும். சமாதானத்தின் கர்த்தர்தாமே எப்பொழுதும் சகலவிதத்திலும் உங்களுக்குச் சமாதானத்தைத் தந்தருளுவாராக. கர்த்தர் உங்களனைவரோடுங்கூட இருப்பாராக. (2தெச-3:16). ஆமென் அல்லேலூயா! *🙏GLORY TO JESUS🙏*
306 காட்சிகள்
8 மாசத்திற்கு முன்
#

இயேசு கிறிஸ்து

விசேஷித்தவர்களாய் மாற்றுபவர் வீடுகட்டுகிறவர்கள் ஆகாதென்று தள்ளின கல்லே, மூலைக்குத் தலைக்கல்லாயிற்று. அது கர்த்தராலே ஆயிற்று, அது நம்முடைய கண்களுக்கு ஆச்சரியமாயிருக்கிறது. - (சங்கீதம் 118: 22-23). பல வருடங்களாக அந்த மரம் அக்காட்டிலே இருந்தது. மிகுந்த ருசியுள்ள நல்ல கனிகளைக் கொடுத்து, பறவைகள், விலங்குகள், வழிப்போக்கர்கள் என அனைவரும் பசியாற பழங்களைக் கொடுத்தது, ஆனால் ஒருநாள் வீசிய பலத்த காற்றில் வேரோடு சாய்ந்தது அந்த மரம். அவ்வழியே சென்ற ஒருவரும் அதை தூக்கி நிறுத்த முன்வரவில்லை. பரிதாபத்தோடு அதைப் பார்த்துவிட்டு சென்று விட்டனர். அந்த மரமோ, 'நான் எவ்வளவோ கனிகளைக் கொடுத்து மற்றவர்களுக்கு உதவியாகத்தானே இருந்தேன். எனக்கு இப்படி ஒரு நிலை வந்துவிட்டதே' என மிகவும் வருத்தப்பட்டுக் கொண்டது. நாட்கள் உருண்டோடி வருடங்களாயின. மரம் மண்ணுக்குள் புதைந்து போனது. பூமியின் உஷ்ணம் மற்றும் அழுத்தத்தினால் அது நிலக்கரியாக மாறியது. ஒருநாள் சாலையமைப்பதற்காக ஆட்கள் வந்து தோண்டினபோது நிலக்கரி இருப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டார்கள். மேலும் தோண்டினபோது மிகவும் கடினமான கல்போன்ற ஒரு பகுதியை கண்டு அதை வெட்டி எடுத்து சோதித்தபோது அது விலையுயர்ந்த வைரம் என்று கண்டுபிடித்தனர். இறுதியில் சரியான அளவில் வெட்டப்பட்டு, ஜொலிக்கிற வைரமாக மாறினது. பிரியமானவர்களே, நீங்களும் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவை ஏற்றுக் கொண்டு, அவருக்காக வாழ்ந்து மிகுந்த கனிகளை கொடுத்து வருகிறவர்களாக இருக்கலாம். ஆனால் அதினிமித்தம் உங்கள் குடும்பத்தினர், உற்றார், உறவினர்கள் உங்களை வெறுத்து, ஒதுக்கிதத்ள்ளி தனிமைப்படுத்தலாம். இருப்பினும் எல்லா கஷ்டங்களையும் அவதூறான வார்த்தைகளையும் பொறுமையாய் சகித்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு நாளும் நீங்கள் கண்ணீரோடு மறைந்திருந்த ஜெபிக்கிற ஜெபங்கள் உங்களை விலையுயர்ந்ததாக்கி, உங்கள் குடும்பத்தாரையும் இரட்சிக்கும். ஒருநாளில் கர்த்தர் உங்களுக்கு ஜீவக்கிரீடத்தை தருவார். சோர்ந்து போகாதிருங்கள். நீங்கள் விசேஷித்தவர்கள்! வேதத்தில் யோசேப்பினுடைய வாழ்க்கையும் இப்படித்தான் இருந்தது. ஆகாது என்று தள்ளிவிடப்பட்டப்ட்டவராக, பாழும் கிணற்றில் தள்ளப்பட்டு, கிடந்தார். துன்பங்களையும் துயரங்களையும் பொறுமையாய் சகித்தார். முடிவு ஜொலிக்கிற வைரத்தைப் போல விலையேறப்பெற்றவனானார். அவருடைய வாழ்க்கை பல ஆண்டுகள் கடந்தும் நம்மோடு பேசுகிறது. 'நான் மற்றவர்களுக்கு எத்தனையோ நன்மைகள் செய்கிறேன், ஆனால் என் வாழ்வில் எனக்கு உதவுவார் யாரும் இல்லை, என்னை தூற்றுகிறவர்கள்தான்' என்று சொல்கிறீர்களா? சோர்ந்து போகாதிருங்கள். நீங்கள் விசேஷித்தவர்கள். கர்த்தர் மற்றவர்கள் உங்களை தூற்றிக் கொண்டே இருக்க அனுமதிக்க மாட்டார். ஒருநாள் வரும், உங்களை தூற்றினவர்களே உங்களிடம் வரும்படி கர்த்தர் உங்களை தலையை உயர்த்துவார். தற்போது நடப்பவை எல்லாம் ஒரு நாள் திரும்பிப்பார்த்து, கர்த்தர் உங்களை மேன்மையாக வைத்ததை நினைத்து அவரை துதிப்பீர்கள். ஆம், கர்த்தருக்குள் வாழுகிற நாம் விசேஷித்தவர்கள். அவர் நமக்குள் இருப்பதால் அவருடைய குணாதிசயங்கள் நம்முடைய வாழ்வில் தானாக வெளிப்படும். பிரச்சனைகள் மாறினப்பின் பொன்னாக, வைரமாக நாம் ஜொலிப்பதை மற்றவர்கள் காண்பார்கள். ஏனெனில் நம் தலையை உயர்த்துபவர் நம் தேவனே! ஆகையால் நாம் விசேஷித்தவர்களே! ஆமென் அல்லேலூயா! *🙏GLORY TO JESUS🙏*
978 காட்சிகள்
8 மாசத்திற்கு முன்
#

இயேசு கிறிஸ்து

AMEN1 கர்த்தரை நான் எக்காலத்திலும் ஸ்தோத்திரிப்பேன், அவர் துதி எப்போதும் என் வாயிலிருக்கும். சங்கீதம் 34:1 2 கர்த்தருக்குள் என் ஆத்துமா மேன்மைபாராட்டும், சிறுமைப்பட்டவர்கள் அதைக்கேட்டு மகிழுவார்கள். சங்கீதம் 34:2 3 என்னோடே கூடக் கர்த்தரை மகிமைப்படுத்துங்கள், நாம் ஒருமித்து அவர் நாமத்தை உயர்த்துவோமாக. சங்கீதம் 34:3 4 நான் கர்த்தரைத் தேடினேன், அவர் எனக்குச் செவிகொடுத்து, என்னுடைய எல்லாப் பயத்துக்கும் என்னை நீங்கலாக்கிவிட்டார். சங்கீதம் 34:4 5 அவர்கள் அவரை நோக்கிப்பார்த்துப் பிரகாசமடைந்தார்கள், அவர்கள் முகங்கள் வெட்கப்படவில்லை. சங்கீதம் 34:5 6 இந்த ஏழை கூப்பிட்டான், கர்த்தர் கேட்டு, அவனை அவன் இடுக்கண்களுக்கெல்லாம் நீங்கலாக்கி இரட்சித்தார். சங்கீதம் 34:6 7 கர்த்தருடைய தூதன் அவருக்குப் பயந்தவர்களைச் சூழப் பாளயமிறங்கி அவர்களை விடுவிக்கிறார். சங்கீதம் 34:7 8 கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப்பாருங்கள், அவர்மேல் நம்பிக்கையாயிருக்கிற மனுஷன் பாக்கியவான். சங்கீதம் 34:8 9 கர்த்தருடைய பரிசுத்தவான்களே, அவருக்குப் பயந்திருங்கள், அவருக்குப் பயந்தவர்களுக்குக் குறைவில்லை. சங்கீதம் 34:9 10 சிங்கக்குட்டிகள் தாழ்ச்சியடைந்து பட்டினியாயிருக்கும், கர்த்தரைத் தேடுகிறவர்களுக்கோ ஒரு நன்மையுங் குறைவுபடாது. சங்கீதம் 34:10 11 பிள்ளைகளே, வந்து எனக்குச் செவிகொடுங்கள், கர்த்தருக்குப் பயப்படுதலை உங்களுக்குப் போதிப்பேன். சங்கீதம் 34:11 12 நன்மையைக் காணும்படி, ஜீவனை விரும்பி, நீடித்த நாட்களை அபேட்சிக்கிற மனுஷன் யார்? சங்கீதம் 34:12 13 உன் நாவைப் பொல்லாப்புக்கும், உன் உதடுகளைக் கபட்டுவசனிப்புக்கும் விலக்கிக் காத்துக்கொள். சங்கீதம் 34:13 14 தீமையை விட்டு விலகி, நன்மை செய், சமாதானத்தைத் தேடி, அதைத் தொடர்ந்துகொள். சங்கீதம் 34:14 15 கர்த்தருடைய கண்கள் நீதிமான்கள்மேல் நோக்கமாயிருக்கிறது, அவருடைய செவிகள் அவர்கள் கூப்பிடுதலுக்குத் திறந்திருக்கிறது. சங்கீதம் 34:15 16 தீமைசெய்கிறவர்களுடைய பேரைப் பூமியில் இராமல் அற்றுப்போகப்பண்ண, கர்த்தருடைய முகம் அவர்களுக்கு விரோதமாயிருக்கிறது. சங்கீதம் 34:16 17 நீதிமான்கள் கூப்பிடும்போது கர்த்தர் கேட்டு, அவர்களை அவர்களுடைய எல்லா உபத்திரவங்களுக்கும் நீங்கலாக்கிவிடுகிறார். சங்கீதம் 34:17 18 நொறுங்குண்ட இருதயமுள்ளவர்களுக்குக் கர்த்தர் சமீபமாயிருந்து, நருங்குண்ட ஆவியுள்ளவர்களை இரட்சிக்கிறார். சங்கீதம் 34:18 19 நீதிமானுக்கு வரும் துன்பங்கள் அநேகமாயிருக்கும், கர்த்தர் அவைகளெல்லாவற்றிலும் நின்று அவனை விடுவிப்பார். சங்கீதம் 34:19 20 அவனுடைய எலும்புகளையெல்லாம் காப்பாற்றுகிறார், அவைகளில் ஒன்றும் முறிக்கப்படுவதில்லை. சங்கீதம் 34:20 21 தீமை துன்மார்க்கனைக் கொல்லும், நீதிமானைப் பகைக்கிறவர்கள் குற்றவாளிகளாவார்கள். சங்கீதம் 34:21 22 கர்த்தர் தமது ஊழியக்காரரின் ஆத்துமாவை மீட்டுக்கொள்ளுகிறார், அவரை நம்புகிற ஒருவன்மேலும் குற்றஞ்சுமராது. சங்கீதம் 34:22 Shared from MSA
509 காட்சிகள்
8 மாசத்திற்கு முன்
#

இயேசு கிறிஸ்து

*பிடியில் இல்லாமல்* அவர் (இயேசு) மரணத்தினால் கட்டப்பட்டிருக்கக்கூடாதிருந்தது. அப்போஸ்தலர் 2:24 மெக்சிகோ வளைகுடாவில் கெய்ட்லின் தன் நண்பர்களுடன் நீந்திக்கொண்டிருந்தபோது, ஒரு சுறா அவள் கால்களைக் கவ்வி, உடலை இழுத்தது. தன்னை விடுவித்துக்கொள்ள, கெய்ட்லின் சுறாவின் மூக்கில் ஓங்கிக் குத்தினாள். அந்த சுறா அவளை விடுவித்து, தோல்வியைச் சந்தித்து, நீந்திச்சென்றது. அந்த சுறா கடித்ததால் நூறு தையல்களுக்கு மேல் போடும் அளவிற்கு கெய்ட்லினுக்குக் காயங்கள் ஏற்பட்டிருந்தாலும், அதனால் கெய்ட்லினை தன் பிடியில் வைத்திருக்க முடியவில்லை. இயேசு மரணத்தின் கூரை முறித்ததையும், தன்னைப் பின்பற்றுபவர்களை அச்சுறுத்தி, தோல்வியடையச் செய்ய மரணத்திற்கு இருந்த வல்லமையை முடிவுக்குக் கொண்டுவந்ததையும் இந்த நிகழ்ச்சி எனக்கு நினைவுபடுத்துகிறது. “அவர் (இயேசு) மரணத்தினால் கட்டப்பட்டிருக்கக்கூடாதிருந்தது” (அப்போஸ்தலர் 2:24) என்று பேதுரு கூறுகிறார். பேதுரு எருசலேமில் இருந்த ஒரு கூட்டத்தினரிடம் இந்த வார்த்தைகளைக் கூறினார். அவர்களில் பலர், இயேசுவைக் கண்டனம் செய்து, “சிலுவையில் அறையுங்கள்” என்று கூச்சலிட்டவர்களாக இருந்திருக்கலாம். அதன் விளைவாக ரோம போர்ச் சேவகர்கள் அவரை சிலுவையில் அறைந்தார்கள். அவர் மரித்துவிட்டார் என்று அவர்கள் உறுதி செய்யும்வரை அவர் அந்த சிலுவையில் தொங்கினார். இயேசுவின் உடல் ஒரு கல்லறைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. பிதா அவரை உயிரோடு எழுப்பும் வரை அவர் உடல் அந்தக் கல்லறையில் மூன்று நாட்கள் இருந்தது. அவர் உயிர்த்தெழுந்த பிறகு, பேதுருவும், மற்றவர்களும் அவரோடு பேசி, அவரோடு சாப்பிட்டு,  நாற்பது நாட்கள் கழித்து அவர் பரலோகத்துக்கு எடுத்துக்கொள்ளப்படுவதைப் பார்த்தார்கள் (அப்போஸ்தலர் 1:9). சரீரப் பிரகாரமான பாடுகள், மன உளைச்சல்கள் மத்தியில், இந்த உலகத்தில் இயேசுவின் வாழ்க்கை முடிவடைந்தது. ஆனால் தேவனின் வல்லமை சாவின் கூரை முறித்தது. இதனால், மரணமோ, வேறு எந்த விதமான போராட்டமோ, அதன் பிடியில் நம்மை நிரந்தரமாக வைத்திருக்க முடியாது. விசுவாசிகள் அனைவரும், ஒரு நாள், நித்தியமான வாழ்வையும், முழுமையையும் தேவ பிரசன்னத்தில் அனுபவிப்பார்கள். இப்படிப்பட்ட எதிர்காலத்தைப்பற்றி யோசித்தால், இன்று நாம் விடுதலையைப் பெற்றுக்கொள்ள முடியும். எங்களை நேசிக்கும் இயேசுவே, மரணத்தின் மீதான உமது வெற்றி எனக்கு நம்பிக்கையை அளிக்கிறது. நான் நித்திய வாழ்வைப் பெறும்படியாக, மரித்து, உயிர்த்தெழுந்த உம்மைத் துதிக்கிறேன். கல்லறையின் பிடி தேவனின் வல்லமைக்கு ஈடாகாது. *🙏GLORY TO JESUS🙏*
237 காட்சிகள்
8 மாசத்திற்கு முன்
#

இயேசு கிறிஸ்து

தாகத்திற்கு தண்ணீர் தந்தவர் தாவீது பெத்லகேமின் ஒலிமுகவாசலில் இருக்கிற கிணற்றின் தண்ணீரின்மேல் ஆவல்கொண்டு: என் தாகத்திற்குக் கொஞ்சந் தண்ணீர் கொண்டு வருகிறவன் யார் என்றான். - (2 சாமுவேல் 23:15). தாவீது இராஜாவின் சொந்த ஊர், பிறந்த வளர்ந்த ஊரும் பெத்லகேமாகும். சிறுவனாக இருந்தபோது, அங்கு இருந்த கிணற்றின் தண்ணீரை அவர் வாஞ்சித்து குடித்திருப்பார். அவர் ஒரு இடையனாக இருந்தபடியால், தன் ஆடுகளுக்கு அங்கிருந்து தண்ணீரை மொண்டு ஆடுகள் குடிக்கும்படியாக ஊற்றியிருப்பார். அவர் கோலியாத்தை கொன்று, வெற்றியை இஸ்ரவேலருக்கு பெற்றுக் கொடுத்தப்பின்பு அவருடைய வாழ்வு மாறியது. இஸ்ரவேலின் இராஜாவாகிய சவுலுக்கு மருமகனாக மாறினபோது, அவர் நிலைமை மாறியது. ஆனால் சவுல் அவர்மீது பொறாமை கொண்டு, அவரை துரத்த ஆரம்பித்தபோது, அவர் வனாந்திரம், காடு, மேடு, நாடு என்று அலைய துவங்கினார். அந்த சமயத்தில் அவருக்கு தன் சிறுவயதில் பெத்லகேமில் இருந்த கிணற்றின் நீர் ஞாபகம் வந்தது. நான் சிறு வயதில் பிறந்து வளர்ந்த இடமாகிய சேலத்தை காண வேண்டும் என்கிற வாஞ்சை ஒரு முறை எனக்குள் அதிகமாக எழும்பியது. அதை பார்த்தே ஆகவேண்டும் என்று மிகவும் ஆசைப்பட்டேன். நான் படித்த பள்ளி, சென்ற ஆலயம், நான் சென்று வருகிற வழிதடங்கள் யாவையும் காண வேண்டும் என்கிற ஆசை தணியாததாக இருந்தது. அதைப்போல தாவீது பெத்லகேமின் ஒலிமுகவாசலில் இருக்கிற கிணற்றின் தண்ணீரின்மேல் ஆவல்கொண்டு: என் தாகத்திற்குக் கொஞ்சந் தண்ணீர் கொண்டு வருகிறவன் யார் என்றான். அந்த ஆசை அளவுக்கு அதிகமாக இருந்தபடியால்தான், யாராவது அங்குப் போய் அந்த தண்ணீரை கொண்டுவரமுடியுமா என்று கேட்டார். உடனே தாவீதிடம் இருந்த பராக்கிரமசாலிகளில் மூன்று பேர் போய், அங்கு இருந்த பெலிஸ்தரின் தாணைத்தையும் பொருட்படுத்தாமல், தங்கள் உயிரை பணயம் வைத்து, அங்கிருந்து தண்ணீரை கொண்டு வந்து தாவீது இராஜாவிடம் கொடுத்தனர். 'ஆனாலும் அவன் அதைக் குடிக்க மனதில்லாமல் கர்த்தருக்கென்று ஊற்றிப்போட்டு: கர்த்தாவே, தங்கள் பிராணனை எண்ணாமல் போய்வந்த அந்த மனுஷரின் இரத்தத்தைக் குடிக்கும் இந்தச்செயல் எனக்குத் தூரமாயிருப்பதாக என்று சொல்லி, அதைக் குடிக்க மனதில்லாதிருந்தான்; இப்படி இந்த மூன்று பராக்கிரமசாலிகளும் செய்தார்கள்' (2 இராஜாக்கள் 23:16-17). அந்த மூன்று பேரும் பெத்லகேம் கிணற்றின் நீரை கொடுத்தபோது, தாவீது எப்படி மகிழ்ந்திருப்பார்? ஆசை ஆசையாய் அதை வாங்கிப் பார்த்திருப்பார். ஆனாலும் தங்கள் உயிரை பணயம் வைத்து இந்த வீரர்கள் கொண்டு வந்தபடியால் அந்த நீரை தான் குடிக்க தகுதியற்றவன், அது கர்த்தருக்கே உரியது என்று சொல்லி, அதை தரையிலே ஊற்றிவிட்டார். எப்படிப்பட்ட உயரிய எண்ணம் உடையவர் இந்த தாவீது! ஆயிரம் வருடங்கள் கழித்து அதே பெத்லகேமில் இன்னொருவர் பிறந்தார். ஒருவேளை பெத்லகேமிலிருந்த கிணற்றின் நீர் வற்றிப் போயிருக்கலாம், ஆனால் வற்றாத நீரூற்றாக, அவரிடம் வாங்கிக் குடிப்பவர்களுக்கு ஜீவ நீரூற்றாக இயேசுகிறிஸ்து அங்கு பிறந்தார். அவரிடமிருந்து எடுத்துக் கொள்பவர்களை தடுக்க பெலிஸ்தியர் யாரும் கிடையாது. இலவசமாக, பரிசுத்தமான, ஆத்துமாவை திருப்தி செய்யும்படியான ஜீவத்தண்ணீர் வேறு எங்கும் கிடைக்காது. அவரிடமிருந்து தண்ணீரை குடிப்பவர்களுக்கு வேறு இடத்தில் சென்று தாகம் தீர்க்க வேண்டிய அவசியமும் இராது. அவரே நம் தாகத்தை தீர்ப்பவர். அல்லேலூயா! நாம் பெற்றுக் கொண்ட ஜீவ நீரூற்றை நமக்கு மாத்திரம் வைத்துக் கொள்ளாமல் மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொடுப்போம். அந்த மூன்று பராக்கிரமசாலிகளைப் பார்ப்போம் என்றால், தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல், அவர்கள் வேறு ஒருவருக்காக அவர் மேல் வைத்த அன்பினால் கொண்டு வந்தார்கள். இந்த உலகில் அநேக தாவீதுக்கள் இருக்கிறார்கள். நான் தாகமாயிருக்கிறேன் என்று அவர்களையும் அறியாமல் ஜீவத்தண்ணீரைக் கொடுக்கும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை வாஞ்சிக்கிறார்கள். அவர்களுக்கு கர்த்தர் கொடுக்கும் இலசவமான ஜீவத்தண்ணீரை கொடுக்க முன்வருவோமா? அந்த மூன்று பராக்கிரமசாலிகளைப் போல கர்த்தர் மேல் நாம் வைத்திருக்கும் அன்பினால், நம் வசதிகளையும், நம் இன்பங்களையும், நம் சுய விருப்பங்களையும் கடந்து, அவர் தரும் இலவசமான இரட்சிப்பை நற்செய்தியாக மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்வோமா? ஆத்துமாக்களின் மேல் பாரம் கொண்டவர்களாக, நம் இரட்சகரின் தாகத்தை தீர்க்கும்படியாக அவரிடத்தில் ஆத்துமாக்களை கொண்டு வருவோமா? ஆமென் அல்லேலூயா! *🙏GLORY TO JESUS🙏*
364 காட்சிகள்
8 மாசத்திற்கு முன்
#

இயேசு கிறிஸ்து

கிருஸ்த்வர்களுக்கு ஒரு வேண்டுகோள் .. தயவு செய்து மதம் மாறும்படி எங்கேயும் யாரிடத்திலும் வேண்டாதீர்கள்.. இரயிலில் பிச்சை எடுப்பவனுக்கும் உங்களுக்கும் அதிக வித்தியாசம் தெரிவதில்லை.. கொஞம் சுயமரியாதை வேண்டும்.. பார்ப்பதற்கே மிக அசிங்கமாகஉள்ளது.. தெருமுனையில் நின்று கொண்டு குறிப்பாக பெண்கள்.. கையில் ஒரு குப்பை காதிதத்தை வைத்துக்கொண்டும்.. போவோர் வருவோரை கையை பிடித்து இழுக்காத குறையாக... மிக கேவலம். பக்தி காதல் பாசம் அன்பு இவை அனைத்தும் தானாக ஊற்றெடுத்து பெருகி ..கசிந்து உருகி வரவேண்டும் .. கெஞ்சி கேட்டு வந்தால் அதற்கு பிச்சை என்றே பொருள். நீங்கள் அவமானப்படுத்துவது இயேசுவைத்தான். அவர் ஒன்றும் வியாபாரப்பொருள் அல்ல.. மார்கெட்டிங்க் செய்ய.. எட்டாணாவுக்கு கிடைக்கும் மிட்டாய் போல் மட்டமான பொருள் அல்ல.. கொஞ்சம் யோசியுஙகள்.. ஒரு பெண், ஒரு ஆண்மகனை அவனது திறன் அறிவு அழகு ஆளுமை இவற்றால் கவரப்பட்டு அவனில்லாமல் இனி வாழ்கை இல்லை என துடித்து உருகி தன்னையே அவனுக்கு கொடுத்தால் தான் காதல் அழகு.. இருட்டில் நின்று அழைப்பதற்க்கு வெறு பெயர் ஒரு ஆண் பெண்ணிடம் கெஞ்சி பிச்சை எடுத்து மிரட்டி உணர்ச்சியை தூண்டி .. அழுது தன் காதலை ஏற்க சொன்னால் அதைவிட சாவதே மேல். இப்படித்தான் இருக்கிறது நீங்கள் கெஞ்சுவது.. ரோஷம் வேண்டும்.. எந்த ஹிந்துவாவது இவ்வாறு கெஞ்சி பார்த்ததுண்டா.. ஹிந்து பெண் முச்சந்த்யில் நின்று கொண்டு பல் இளித்து மதம் பரப்பும் காட்சியை கண்டதுண்டா.. நல்லவற்றை யாரிடமும் கற்கலாம்.. தவறில்லை.. திருந்துங்கள்.. உங்களையும் தாழ்த்தி இறைவனையும் தாழ்த்தாதிர்
313 காட்சிகள்
8 மாசத்திற்கு முன்
#

இயேசு கிறிஸ்து

உப்பரிகையின் மேல் நின்ற இருவர் அப்பொழுது பிசாசு அவரைப் பரிசுத்த நகரத்திற்குக் கொண்டுபோய், தேவாலயத்து உப்பரிகையின்மேல் அவரை நிறுத்தி:... (மத்தேயு 4:5) வேதத்தில் இரண்டுப் பேர் உப்பரிகையில் நின்றபோது அவர்களுக்கு ஏற்பட்ட சோதனையைக் குறித்து வாசிக்கிறோம். உப்பரிகை என்பது உயரமான இடமாகும். இரண்டுப் பேருமே வாலிபர்கள். ஆனால் அவர்களுக்கு ஏற்பட்ட சோதனையை எப்படி சந்தித்தார்கள் என்றுப் பார்க்க போகிறோம். 'மறுவருஷம் ராஜாக்கள் யுத்தத்துக்குப் புறப்படுங்காலம் வந்தபோது, தாவீது யோவாபையும், அவனோடேகூடத் தன் சேவகரையும், இஸ்ரவேல் அனைத்தையும், அம்மோன் புத்திரரை அழிக்கவும், ரப்பாவை முற்றிக்கை போடவும் அனுப்பினான். தாவீதோ எருசலேமிலே இருந்துவிட்டான். ஒருநாள் சாயங்காலத்தில் தாவீது தன் படுக்கையிலிருந்து எழுந்து, அரமனை உப்பரிகையின்மேல் உலாத்திக் கொண்டிருந்தபோது, ஸ்நானம்பண்ணுகிற ஒரு ஸ்திரீயை உப்பரிகையின் மேலிருந்து கண்டான்; அந்த ஸ்திரீ வெகு சௌந்தரவதியாயிருந்தாள். அப்பொழுது தாவீது, அந்த ஸ்திரீ யார் என்று விசாரிக்க ஆள் அனுப்பினான்; அவள் எலியாமின் குமாரத்தியும், ஏத்தியனான உரியாவின் மனைவியுமாகிய பத்சேபாள் என்றார்கள். அப்பொழுது தாவீது ஆள் அனுப்பி அவளை அழைத்து வரச் சொன்னான்; அவள் அவனிடத்தில் வந்தபோது, அவளோடே சயனித்தான்; பிற்பாடு அவள் தன் தீட்டு நீங்கும்படி சுத்திகரித்துக்கொண்டு தன் வீட்டுக்குப் போனாள்' (2சாமுவேல் 11:1-4). தாவீது இராஜா யுத்தத்திற்கு போகும் காலம் வந்தபோது, தான் முன் நின்று நடத்தவேண்டிய யுத்தத்தை, தன் சேனாதிபதி, சேவகர்களை அனுப்பி நடத்தும்படி சொல்லிவிட்டு, இவர் சாயங்காலத்தில் தன்னுடைய அரண்மனையின் உப்பரிகையின் மேல் நேரத்தை செலவழிக்கும்படி உலாத்த ஆரம்பித்தார். அப்படி அவர் உலாத்தும்போது, அவர் கண்களும் உலாவ ஆரம்பித்தது. கண்களின் இச்சையில் விழுந்துப் போனார். பாவம் செய்து, அதற்காக பாவ மன்னிப்பு கேட்டாலும், அதன் விளைவுகளை அவர் சந்திக்க வேண்டியதாயிருந்தது. ஆனால் சுமார் ஆயிரம் ஆண்டுகள் கழித்து, அதே தாவீதின் குமாரன் என்றழைக்கப்பட்ட இயேசுகிறிஸ்து, தம்முடைய ஊழிய நாட்களின் ஆரம்பமாக நாற்பது நாட்கள் உபவாசம் இருந்து, முடித்தபோது, சாத்தானால் சோதிக்கப்பட்டார். அப்பொழுது ஏற்பட்ட மூன்று சோதனைகளில் ஒன்றில் 'அப்பொழுது பிசாசு அவரைப் பரிசுத்த நகரத்திற்குக் கொண்டுபோய், தேவாலயத்து உப்பரிகையின்மேல் அவரை நிறுத்தி: நீர் தேவனுடைய குமாரனேயானால் தாழக்குதியும்; ஏனெனில், தம்முடைய தூதர்களுக்கு உம்மைக்குறித்துக் கட்டளையிடுவார்; உமது பாதம் கல்லில் இடறாதபடிக்கு, அவர்கள் உம்மைக் கைகளில் ஏந்திக்கொண்டு போவார்கள் என்பதாய் எழுதியிருக்கிறது என்று சொன்னான். அதற்கு இயேசு: உன் தேவனாகிய கர்த்தரைப் பரீட்சை பாராதிருப்பாயாக என்றும் எழுதியிருக்கிறதே என்றார்' (மத்தேயு 4: 5-7) என்று வாசிக்கிறோம். இயேசுகிறிஸ்துவை சோதிக்கும்படி சாத்தான் எருசலேம் தேவாலயத்தின்மேல் நிறுத்தி, குதிக்க சொன்னபோது, அவர் வேதத்தின் வசனங்களை சொல்லி, அவனுக்கு எதிர்த்து நின்று ஜெயம் கொண்டார். சாத்தானின் சோதனையை முறியடித்தார். வெற்றி பெற்றார். மட்டுமல்ல, மற்றொரு சோதனையில் கண்களின் இச்சையாக 'மறுபடியும், பிசாசு அவரை மிகவும் உயர்ந்த மலையின்மேல் கொண்டுபோய், உலகத்தின் சகல ராஜ்யங்களையும் அவைகளின் மகிமையையும் அவருக்குக் காண்பித்து: நீர் சாஷ்டாங்கமாய் விழுந்து, என்னைப் பணிந்துகொண்டால், இவைகளையெல்லாம் உமக்குத் தருவேன் என்று சொன்னான் அப்பொழுது இயேசு: அப்பாலே போ சாத்தானே; உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு, அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக என்று எழுதியிருக்கிறதே என்றார்' (மத்தேயு 4:8-10). இயேசுகிறிஸ்து கண்களின் இச்சையிலிருந்தும் கர்த்தரின் வார்த்தைகளை சொல்லி, சத்துருவை ஜெயித்தார். அல்லேலூயா! தாவீது இராஜா கர்த்தரோடு ஒன்றியிருந்து, அவரை உயர்த்தும் அநேக சங்கீதங்களை இயற்றி இருந்தாலும், சோதனை வந்தபோது, தன்னுடைய இருதயத்தின், கண்களின் இச்சைக்கு இடம் கொடுத்து, அதிலே விழுந்துப் போனார். போருக்கு சென்றிருந்தால் இந்த நிலைமை அவருக்கு ஏற்பட்டிருக்காது. பிரியமானவர்களே, நாமும் கூட இந்த உலகத்தில் இருக்கும்போது, ஆவிக்குரிய யுத்தத்தில் இருக்கிறோம். அதை நாம் மறந்து நம்முடைய சொந்த இச்சைகளுக்கு இடம் கொடுக்கும்போது, நாம் அந்த யுத்தத்தில் தோல்வி அடைந்து, சத்துரு ஜெயம் எடுக்க அனுமதிக்கிறோம். அதினால் ஏற்படும் விளைவுகள் அதிகம். அதிலிருந்து வெளிவர வாஞ்சித்தாலும் அநேகருக்கு வெளிவர முடியாமற் போகிறது. கர்த்தரின் பரிசுத்த இரத்தத்தில் கழுவப்பட்டவர்கள், சேற்றிலே புரளும்படியாக இரட்சிப்பின் வஸ்திரத்தை கறைப்படுத்திக் கொள்ளுகிறார்கள். ஆனால் கிறிஸ்துவின் வார்த்தைகள், வேதத்தின் வசனங்கள் நம் இருதயத்தில் இருக்கும்போது, சத்துரு கொண்டுவரும் எந்த பிரச்சனைகளையும், சோதனைகளையும் கிறிஸ்து வசனத்தை அறிக்கை செய்து வெளிவந்ததுப் போல நாமும் வெளிவரமுடியும். 'நான் உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்யாதபடிக்கு, உமது வாக்கை என்னிருதயத்தில் வைத்து வைத்தேன்' (சங்கீதம் 119:11) என்று சங்கீதக்காரனைப் போல நாம் கர்த்தருடைய வார்த்தையை நம் இருதயத்தில் வைத்திருந்தால், பாவம் செய்யாதபடி நம்மைக் காத்துக் கொள்ள முடியும். சத்துருவுக்கு எதிர்த்துப் போராடும்படி நாம் வேதத்தை தினமும் வாசித்து அவற்றை நம் இருதயத்தில் பாதுகாத்து, வெற்றியின் ஜீவியம் செய்ய கர்த்தர் தாமே கிருபை புரிவாராக! ஆமென் அல்லேலூயா! *🙏GLORY TO JESUS🙏*
188 காட்சிகள்
8 மாசத்திற்கு முன்
#

இயேசு கிறிஸ்து

தேவனால் உண்டாகும் அன்பு பிரியமானவர்களே, ஒருவரிலொருவர் அன்பாயிருக்கக்கடவோம்; ஏனெனில் அன்பு தேவனால் உண்டாயிருக்கிறது; அன்புள்ள எவனும் தேவனால் பிறந்து, அவரை அறிந்திருக்கிறான். அன்பில்லாதவன் தேவனை அறியான்; தேவன் அன்பாகவே இருக்கிறார். தம்முடைய ஒரேபேறான குமாரனாலே நாம் பிழைக்கும்படிக்குத் தேவன் அவரை இவ்வுலகத்திலே அனுப்பினதினால் தேவன் நம்மேல் வைத்த அன்பு வெளிப்பட்டது. - (1 யோவான் 4:7-9) ஹென்றி போஸ் (Henry Bosch –Editor of Our Daily Bread) நான்கு அல்லது ஐந்து வயது இருக்கும்போது, அவர் தந்தையின் மேல் அலாதி பிரியம் வைத்திருந்தார். அவரது தந்தைக்கு கறுப்பு வால்நட் என்னும் பருப்பு மிகவும் இஷ்டம். அது அவர்கள் வீட்டில் வாங்குவது மிகவும் அரிது. ஒருநாள் அவர் வெளியில் தெருவில் ஒரு வால்நட் பருப்பை கண்டார். அதை எடுத்து வந்து தனது தாயாரிடம் கொடுத்து, உடைத்து சாப்பிட வேண்டும் என்று வீட்டிற்கு ஓடி வந்தார். அப்போது அவருக்கு தனது தந்தையின் ஞாபகம் வந்தது. அதை அப்படியே வைத்து தனது தந்தை சாயங்காலம் வீட்டிற்கு வந்தவுடன் கொடுக்க வேண்டும் என்று அதை அப்படியே பத்திரமாக வைத்தார். சாயங்காலம் அவரது தகப்பனார், தூரத்தில் வரும்போதே, அவர் ஓடிப் போய் காலை கட்டிக்கொண்டு, வீடு வரை அப்படியே நடந்து வந்தார். இரவில் சாப்பிட போகுமுன், அந்த வால்நட்டை எடுத்து வந்து தன் தகப்பனிடம் கொடுத்து, ‘அப்பா இந்தாருங்கள், இதை நான் இந்த நாள் முழுவதும் உங்களுக்கென்று வைத்திருந்தேன்’ என்று அன்புடன் கொடுத்தார். ஆனால் அவரது தகப்பன் அதை உடைக்கவும் இல்லை சாப்பிடவும் இல்லை. ஆனால் முப்பது வருடங்கள் கழித்து, அவரது தகப்பன் மரித்த பின்பு அவருடைய மேஜையில் ஒரு சிறிய பெட்டியில் அந்த வால்நட் பத்திரமாக வைக்கப்பட்டிருப்பதை அவர் கண்டார். அவரது தாயார் ‘என் மகனிடமிருந்து கிடைத்த இநத அன்பின் பரிசை நான் சாகும்வரை பத்திரமாக வைத்திருப்பேன்’ என்று தகப்பன் கூறினார் என்று கூறினார்களாம். இன்று நாம் எந்த அளவு நமது தாயையோ, தகப்பனையோ மனைவியையோ, கணவரையோ, பிள்ளைகளையோ நேசிக்கிறோம்? ‘ ஷாஜகானைப் போல ஒரு தாஜ்மகாலை கட்டினால்தான் அன்பு அதிகம் என்று அர்த்தமில்லை. நாம் நமது அன்பை சிறிய காரியங்களில் வெளிப்படுத்தினாலும், அது நிச்சயமாக கிரியை செய்யும். வெளிநாடுகளில், கணவன் தன் மனைவியை தினமும், உன்னை நேசிக்கிறேன், நீதான் எனக்கு இனியவள் எனறு கூறுவார்களாம். அந்த அன்பு எவ்வளவு உண்மை என்று நமக்கு தெரியாது. ஆனால் அதை அவர்கள் வெளிப்படுத்தும்போது, அந்த மனைவி சந்தோஷப்படுகிறாள். அந்த பழக்கங்கள் நமது இந்தியாவின் கலாச்சாரத்தில் இல்லை. ஆனால் வேறு விதத்தில் கணவன் அதை வெளிப்படுத்தலாம். மனைவியும் அப்படி வெளிப்படுத்தலாம். பெற்றோருக்கு ஒரு பரிசை வாங்கி வந்து கொடுத்து, ஒரு கார்டில், நீங்கள் என் தகப்பனாக, தாயாக இருப்பது எனக்கு பெருமையாக உள்ளது என்று எழுதி கொடுக்கலாம். உங்கள் கையெழுத்தினால் அதை பெற்றோர் காணும்போது மிகவும் மகிழ்ச்சி அடைவார்கள். உள்ளத்திலிருந்து ஆசீர்வதிப்பார்கள். பெரிய பெரிய காரியங்கள் செய்தால்தான் என்றில்லை, சிறிய காரியங்களின் மூலம் நம் அன்பை வெளிப்படுத்த நாம் மறக்க கூடாது. அதைப்போல நாம் தேவனை எந்த அளவு நேசிக்கிறோம்? தேவன் அன்பாகவே இருக்கிறார். தம்முடைய ஒரேபேறான குமாரனாலே நாம் பிழைக்கும்படிக்குத் தேவன் அவரை இவ்வுலகத்திலே அனுப்பினதினால் தேவன் நம்மேல் வைத்த அன்பு வெளிப்பட்டது என மேற்கண்ட வசனத்தில் பார்க்கிறோம். தேவன் நம்மேல் வைத்த அன்பினால், தம்முடைய ஒரே பேறான குமாரனை இந்த உலகத்திற்கு அனுப்பி பாவிகளை இரட்சித்தார். ஆனால் அப்படி அன்பு செலுத்தின தேவனுக்கு பதிலாக நாம் என்ன செய்கிறோம்? அவர் தேவன் அவருக்கு நான் என்ன செய்ய முடியும் என்று சொல்கிறோமா? அவர் உங்கள் பணத்தையோ, உங்கள் பொருளையோ எதிர்பார்க்கவில்லை. அவர் எதிர்ப்பார்ப்பதெல்லாம் உங்கள் முழு இருதயத்திலிருந்து வரும் அன்பைதான். அண்டசராசரங்களையும் படைத்த தேவன், உங்கள் அன்பை எதிர்ப்பார்க்கிறார் என்றால் என்ன ஆச்சரியம்! ‘ உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக இது முதலாம் பிரதான கற்பனை’ என்று இயேசு கூறினாரே! கர்த்தரிடத்தில் அன்புகூருவோமா? அப்படியென்றால் என்ன செய்ய வேண்டும்? தினந்தோறும் அவருடன் ஜெபத்தில் பேச வேண்டும். அவருடைய வார்த்தைகளை வாசித்து தியானிக்க வேண்டும். வேதத்தில் சொல்லியிருக்கிற கட்டளைகளை கைக்கொள்ள வேண்டும். செய்வோமா? கர்த்தர் அதை ஆவலுடன் எதிர்ப்பார்க்கிறார். ஆம் ஆண்டவரே, செய்வோம் என்று சொல்வோம், செய்து காட்டுவோம்! ஆமென் அல்லேலூயா! *🙏GLORY TO JESUS🙏*
246 காட்சிகள்
8 மாசத்திற்கு முன்
#

இயேசு கிறிஸ்து

ஆவியின் கனியோ... ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம்,சாந்தம், இச்சையடக்கம்; இப்படிப்பட்டவைகளுக்கு விரோதமான பிரமாணம் ஒன்றுமில்லை -(கலாத்தியர் 5:22-23). வேதத்தில் ஆவியின் கனி என்று ஒருமையில் சொல்லிவிட்டு, அதன்பின் ஒன்பது குணாதிசயங்களைக் குறித்து இந்த வசனம் விவரிக்கிறது. ஒரு கனியில் எப்படி இத்தனை கனிகள் இருக்க முடியும்? ஒரு ஆரஞ்சு சுளைக்குள் சுளைகள் இருப்பதுப் போல ஒரு பழத்திற்குள் இருக்கும் சுளைகளாக இந்த குணாதிசயங்கள் காணப்படுகிறது. இதை கொடுப்பவர் ஒரே ஆவியானவர். அவர் ஆவிக்குரிய கனியை ஒருபுறமும், ஆவிக்குரிய வரங்களை ஒருபுறமும் கொடுக்கிறார். ஒரு பறவை பறப்பதற்கு எப்படி இரண்டு இறக்கைகள் தேவைப்படுகிறதோ அதுப்போல ஒரு பக்கம், ஆவியின் கனியும், மறுபுறம் ஆவியின் வரங்களும் நாம் கர்த்தருக்குள் வளர, அவரோடு உயர்ந்த அனுபவத்திற்குள் பறப்பதற்கு தேவையாக இருக்கிறது. சிலருடைய வாழ்க்கையில் இயற்கையாகவே ஆவியின் கனி காணப்படலாம். மற்ற மதத்தினவரிடமும் இதுப் போன்ற கனி காணப்படலாம். ஆனால் ஆவியின் கனி என்பது பரிசுத்த ஆவியானர் நம்மில் ஊற்றப்பட்டு, கனிகளே இல்லாத ஒருவரின் வாழ்வில் இந்த ஒன்பது குணாதிசயங்களையும் வெளிப்படுவதே ஆகும். அநேகர் சாட்சி சொல்வதைக் கேட்டிருக்கிறேன். 'நான் வாலிப வயது வரை என் விருப்பம் போல நடந்தேன், ஒரு நாள் கர்த்தர் என்னை சந்தித்தார். அவருடைய பிள்ளையாய் என்னை மாற்றினார். அவர் என்னுள்ளத்தில் வந்தப்பின்பு என்னுடைய சுபாவம் மாறிற்று, கர்த்தருடைய குணாதிசயங்கள் என்னில் நிரம்பி, மற்றவர்களுக்கு அவற்றை வெளிப்படுத்த தேவன் கிருபை செய்தார்' என்று சொல்லக் கேட்டிருக்கிறேன். ஆம், ஆவியானவர் நமக்குள் வரும்போது, நம்முடைய மாம்ச சுபாவங்களும், மாம்ச கிரியைகளும் அழிந்து, கர்த்தருடைய சுபாவங்களும், ஆவியானவரின் கிரியைகளும் நமக்குள்ளிருந்து வெளிப்பட ஆரம்பிக்கின்றன. அப்படி வெளிப்படவில்லை என்றால் நம்முடைய இரட்சிப்பு சந்தேகத்திற்குரியதே! '...நீங்கள் போய்க் கனிகொடுக்கும்படிக்கும், உங்கள் கனி நிலைத்திருக்கும்படிக்கும், நான் உங்களை ஏற்படுத்தினேன்' (யோவான் 15:16) என்று இயேசுகிறிஸ்து கூறினாரல்லவா? ஆம் நாம் கனி கொடுக்க வேண்டும் என்றே தேவன் நம்மிடத்தில் எதிர்ப்பார்க்கிறார். நம்மிடத்தில் தேவன் வந்து பார்க்கும்போது கனி இல்லாதிருந்தால் நம் நிலை பரிதாபத்திற்குரியதே! சில நேரங்களில் 'என் கணவர் இப்படி இருக்கிறார், என் மனைவி இப்படி இருக்கிறாள், அவளிடத்தில், அவரிடத்தில் என் கனியை காட்டுவது என்பது ஒருபோதும் நடக்காத காரியம்' என்று நாம் நினைக்கிறோம். நாம் அந்த இடத்தில் கனிக் கொடுக்க வேண்டும் என்றே தேவன் நம்மிடத்தில் எதிர்ப்பார்க்கிறார். வேறு சிலர் 'நான் வேலை செய்யும் இடத்தில் உள்ளவர்கள் மிகவும் மோசமானவர்கள். அவர்களுக்கு என் கனியை நான் வெளிப்படுத்த முடியாது. அப்படி வெளிப்படுத்தினாலும் எல்லாமே வீண், அவர்கள் அதை புரிந்துக் கொள்ள மாட்டார்கள்' என்று நினைக்கிறோம். அவர்கள் மத்தியில் நாம் கொடுக்கும் கனியே மிகவும் சிறந்தது. அந்த கனியே பலன் கொடுக்கக்கூடியது. தேவன் நம்மை ஏற்படுத்தினதின் ஒரு காரணம் நாம் கனிகொடுக்கும்படிககும், அது நிலைத்திருக்கும்படிக்கும் என்று நாம் அறிந்துக் கொண்டோம். அதினால் அது எத்தனை முக்கியமானது என்றும் அறிவோம். ஆகையால் நாளையிலிருந்து ஆவியின் கனியாகிய ஒன்பது பலரச, பரவச சுவைகளால் நிரம்பியிருக்கும் சுளைகளை ஒவ்வொரு நாளும் ஒரு சுளையாக அனுதின மன்னாவில் ருசித்துப் பார்த்து, நம் வாழ்வில் அந்த சுவையான சுளைகள் இருக்கிறதா என்று சோதித்து, கனி கொடுக்கிறவர்களாக நாம் மாறுவோமாக! ஆமென் அல்லேலூயா! *🙏GLORY TO JESUS🙏*
247 காட்சிகள்
8 மாசத்திற்கு முன்
#

இயேசு கிறிஸ்து

ஆவியின் கனியோ.. சந்தோஷம் ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம்; இப்படிப்பட்டவைகளுக்கு விரோதமான பிரமாணம் ஒன்றுமில்லை. - (கலாத்தியர் 5:22-23) இரண்டாம் சுளை சந்தோஷம்: சந்தோஷம் என்றதும், நம் உள்ளம் மகிழ்ச்சியால் நிறைந்திருப்பதை நாம் நினைக்கிறோம். உலகத்தில் சந்தோஷம் தருபவை எத்தனையோ இருக்கின்றன. பூக்களை பார்க்கும்போது, சிறு குழந்தைகள் நடப்பதை, பேசுவதை பார்க்கும்போது, சூரிய உதயத்தையும், முழு நிலாவையும் பார்க்கும்போது என்று நம் மனம் பூரிப்படைகிறது. நம் பிள்ளைகள் நல்ல மார்க் வாங்கி வரும்போது ஒரு சந்தோஷம், நாம் செய்த ஒரு காரியத்தை மற்றவர்கள் பாராட்டும்போது ஒரு சந்தோஷம் என்று சொல்லிக் கொண்டே போகலாம்... ஆனால் எதுவும் நிரந்தரமானது இல்லை. இத்தனை சந்தோஷங்கள் இருந்தும் வாழ்க்கை சில வேளைகளில் நமக்கு தருவது, வெறுமையும், விரக்தியும், கவலையும், கண்ணீரும்தான். உலகத்திலேயே எப்போதும் சந்தோஷமாயிருக்கிற மனிதன் ஒருவனும் இல்லை. ஒருவேளை மனநிலை சரியில்லாதிருந்தால் அவன் அந்த நிலைமையில் இருக்கக் கூடும். வேதத்திலும் நாம் சந்தோஷத்தைக் குறித்து அநேக வார்த்தைகள் இருப்பதைக் காணலாம். மகிழ்ச்சி, சந்தோஷம், ஆனந்தம், களிகூருதல் என்று நான்கு வார்த்தைகள் குறிப்பிடப்பட்டிருக்கிறது. 'நீதிமான்களோ தேவனுக்குமுன்பாக மகிழ்ந்து களிகூர்ந்து, ஆனந்தசந்தோஷமடைவார்கள்' (சங்கீதம் 68:3). நீதிமான்கள்தான் இந்த நான்கு வகையான சந்தோஷமும் அடைவார்கள் என்று வேதம் கூறுகிறது. 'கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்; சந்தோஷமாயிருங்கள் என்று மறுபடியும் சொல்லுகிறேன்' (பிலிப்பியர் 4:4) என்று பவுல் அப்போஸ்தலன் கூறுகிறார். அவர் எந்த நிலையிலிருந்து அப்படி கூறுகிறார் என்றால் எல்லாம் நன்றாக, மனரம்மியமாக இருந்தபோதல்ல, சிறையில் இருந்துக் கொண்டுதான் இந்த கடிதத்தை அவர் எழுதினார். அவர் சிறையில் இருந்தபோதும், அவர் மனம் சோர்ந்துப் போய் உட்கார்ந்து விடவில்லை, 'பாருங்கள் நான் கர்த்தருக்காக பாடுகள் பட்டுக் கொண்டிருக்கிறேன். சிறையில் வாடிக் கொண்டிருக்கிறேன்' என்று முறுமுறுத்துக் கொண்டு கடிதத்தை எழுதவில்லை, மாறாக வெளியில் இருக்கும் மற்றவர்களை சிறையில் இருந்துக் கொண்டே உற்சாகப்படுத்தினார். கர்த்தருக்குள் எப்போதும் சந்தோஷமாக இருங்கள் என்று உற்சாகப்படுத்தினார். என்ன ஒரு அற்புதமான கர்த்தருடைய அப்போஸ்தலன் அவர்! பிரியமானவர்களே, நம் வாழ்வில் துக்கமான, துயரமான, தாங்க முடியாத பாரங்கள் அழுத்தும்போது, கண்ணீர் வடிப்பதும், இதிலிருந்து என்னை விடுவிப்பவர் யார் என்று கதறுவதும் சாதாரண மனிதனுடைய நிலைமையாகும். ஆனால் கர்த்தருக்குள் இருப்பவர்கள் அவர் கொடுக்கிற, ஆவியானவரால் உண்டாகிற சந்தோஷத்தால் நிறைந்தவர்களாக, எப்படிப்பட்ட சோதனைகள் வந்தாலும், அவற்றை தாங்கக்கூடிய, அவற்றால் சோர்ந்துப் போய் விடாமல், கர்த்தர் மேல் விசுவாசம் வைத்து, சந்தோஷமாக இருக்க முடியும். 'அவர்களை அநேக அடி அடித்தபின்பு, சிறைச்சாலையிலே வைத்து, அவர்களைப் பத்திரமாய்க் காக்கும்படி சிறைச்சாலைக்காரனுக்குக் கட்டளையிட்டார்கள். அவன் இப்படிப்பட்ட கட்டளையைப் பெற்று, அவர்களை உட்காவலறையிலே அடைத்து, அவர்கள் கால்களைத் தொழுமரத்தில் மாட்டிவைத்தான். நடுராத்திரியிலே பவுலும் சீலாவும் ஜெபம்பண்ணி, தேவனைத் துதித்துப்பாடினார்கள்; காவலில் வைக்கப்பட்டவர்கள் அதைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள்' (அப்போஸ்தலர் 16:23-25). இந்த வசனங்களை பார்க்கும்போது, பவுலும் சீலாவும் பிசாசு பிடித்திருந்த ஒரு பெண்ணை சுகப்படுத்தினதால் அவள் மூலம் அவளுடைய எஜமானர்களுக்கு கிடைத்த வருமானம் போய் விட்டது என்று, அவர்கள், பவுல், சீலாவின்மேல் பொய்யாய் குற்றம் சாட்டி, அநேக அடிகளை அடித்து, சிறையில் அதுவும் உள்ளே இருக்கும் இருண்ட இடத்தில் காவலில் வைத்து, கால்களை தொழுமரத்தில் கட்டி வைத்திருந்தார்கள். இந்த நிலையிலும், அவர்கள் தேவனை துதித்துப் பாடினார்கள் என்று வேதம் கூறுகிறது. யார் பாடலை பாட முடியும்? சோகமாய், உலகத்தை வெறுத்தவர்கள் யாரும் எனக்கில்லை என்று அழுது வடிந்து பாடுவார்கள். இல்லையென்றால் சந்தோஷமாய் இருப்பவர்கள் பாடுவார்கள். பவுலும் சீலாவும் அழுது வடிகிற பாடலை அல்ல, தேவனை துதித்துப் பாடினார்கள் என்று பார்க்கிறோம். அப்படியென்றால் ஆவியானவர் கொடுக்கிற, எந்த சூழ்நிலையிலும் மாறாத சந்தோஷத்தினால் நிறைந்தவர்களாக அவர்கள் உள்ளம் நிறைந்திருந்தபடியால் அவர்கள் தேவனை துதித்துப் பாடினார்கள். அல்லேலூயா! நம்மைப் போல மனிதனாக இருந்த பவுலினால் பயங்கரமான சூழ்நிலையிலும் சந்தோஷமாயிருக்க முடியுமென்றால், அவருக்குள் இருந்த ஆவியானவர் அவரை தேற்றி, திடப்படுத்தி, சந்தோஷத்தினால் நிறைத்திருந்தார். நாமும் நம் வாழ்வில் சந்திக்கும் பிரச்சனைகள், போராட்டங்களில் சோர்ந்துப் போகாமல், சந்தோஷமாய் அவற்றை சந்தித்து, கர்த்தருக்குள் களிகூருவோமா! ஆவியின் இரண்டாம் சுளையாகிய சந்தோஷத்தினால் நாம் எப்போதும் நிரம்பியிருப்போமா? 'நீதிமான்களோ தேவனுக்குமுன்பாக மகிழ்ந்து களிகூர்ந்து, ஆனந்தசந்தோஷமடைவார்கள்' ஆமென் அல்லேலூயா! *🌹GLORY TO JESUS🌹*
349 காட்சிகள்
8 மாசத்திற்கு முன்
#

இயேசு கிறிஸ்து

கர்த்தருக்கு செய்யும் உபகாரம் அதற்கு ராஜா பிரதியுத்தரமாக: மிகவும் சிறியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்பார். - (மத்தேயு 25:40). ரூத்திற்கு ஒரு கடிதம் வந்திருந்தது. அதில் ஒரு ஸ்டாம்ப்போ, எந்த அடையாளமும் இல்லை. அவர்களுடைய முகவரி மட்டும்தான் இருந்தது. ஆச்சரியத்துடன் அவர்கள் அதை திறந்து பார்த்தபோது அதில், அன்புள்ள ரூத், நான் நீ இருக்கும் ஊருக்கு பக்கம் வருகிறபடியால், உன்னை வந்துப் பார்க்கலாம் என்று இருக்கிறேன். இன்று இரவு வருவேன். எப்போதும் உன்னை நேசிக்கும், இயேசுகிறிஸ்து என்று எழுதப்பட்டிருந்தது. அதைப் படித்தவுடன் ரூத்திற்கு கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை, 'ஏன் என்னைப் பார்க்க வருகிறார் இயேசு? நான் ஒன்றும் மற்றவர்களை விட ஸ்பெஷல் இல்லையே, என்னன்னு தெரியலையே, அவருக்கு என்ன நான் கொடுப்பேன், என்னிடம் கொடுப்பதற்கு ஒன்றுமே இல்லையே' என்று தனக்குள்ளே பேசிக் கொண்டார்கள். கையில் இருந்த பணத்தை எண்ணிப்பார்த்தார்கள். ஐந்து டாலர்கள் தேறினது. அதை எடுத்துக் கொண்டு, பக்கத்தில் இருக்கும் கடைக்கு ஓடினார்கள். பால் ஒரு பாட்டில், ரொட்டி ஒரு பாக்கெட்டும், இறைச்சி கொஞ்சமும் வாங்கி வீட்டிற்கு வேகமாக வந்துக் கொண்டிருந்தபோது, வழியில் வயதான இருவர் அவர்களிடம் 'அம்மா, சாப்பிட ஏதாவது கிடைக்குமா?' ஏன்று கேட்டார்கள். அவர்களை பார்த்தபோது, அழுக்காக, குளிருக்கு போதுமான உடைக்கூட இல்லாமல் நடுங்கிக் கொண்டு நின்று கொண்டிருந்தார்கள். ரூத் அதற்கு, 'ஐயா, நானும் ஒரு ஏழைப் பெண்தான், என்னிடம் இருந்த பணத்தில் ஒரு முக்கியமான விருந்தினர் என் வீட்டிற்கு வரப்போகிறார் அவருக்கு உணவு கொடுப்பதற்காக வாங்கிக் கொண்டு போய்க் கொண்டிருக்கிறேன். என்னை மன்னித்துக் கொள்ளுங்கள்' என்று அவசர அவசரமாக சொல்ல ஆரம்பித்தார்கள். அவர்களின் அவசரத்தை பார்த்த அந்த மனிதர், 'பரவாயில்லை, நன்றி, நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்' என்று சொல்லி நகர்ந்தார்கள். அவர்கள் கொஞ்சதூரம் போவதற்குள் ரூத், அவர்களை அழைத்து, 'ஐயா நீங்கள் இந்த உணவை வைத்து சாப்பிடுங்கள், நான் என்னுடைய விருந்தினருக்கு வேறு பார்த்துக் கொள்கிறேன்' என்று சொல்லி, வாங்கி வந்திருந்ததை அவர்களின் கைகளில் கொடுத்தார்கள். கூட இருந்த வயதான பெண்மணி நடுங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்து, தன் மேல் அணிந்திருந்த ஸ்வெட்டரை கொடுத்து, 'எனக்கு வேறொன்று வீட்டில் இருக்கிறது நீங்கள் இதைப் போட்டுக் கொள்ளுங்கள்' என்று கொடுத்து விட்டு, வீடு வந்து சேர்ந்தார்கள். 'ஐயோ, இப்போது இயேசுகிறிஸ்து வருவாரே, அவருக்கு நான் என்னக் கொடுப்பேன்' என்று வருந்தியவாறே அவர்கள் வீட்டுக்கு முன் வந்தபோது, அவர்களுக்கு இன்னொரு கடிதம் வந்திருந்ததை கண்டார்கள். ஒரு நாளில் இரண்டு முறை கடிதம் வராதே என்று சொல்லிக் கொண்டே அதை பிரித்தபோது, அன்பு ரூத், உன்னை கண்டது மிகவும் சந்தோஷமாக இருந்தது. நீ கொடுத்த உணவு மிகவும் நன்றாக இருந்தது. மட்டுமல்ல, உன்னுடைய ஸ்வெட்டரும் அருமை! எப்போதும் உன்னை நேசிக்கும் இயேசுகிறிஸ்து என்று எழுதப்பட்டிருந்தது. பிரியமானவர்களே, 'மிகவும் சிறியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்பார்' என்று இயேசுகிறிஸ்து சொன்னதாக மத்தேயுவில் வாசிக்கிறோம். ஏழையாயிருக்கிற ஒருவருக்கு நாம் செய்யும் உதவி கர்த்தருக்கே செய்ததற்கு சமம். ஏழைக்கு இரங்குகிறவன் கர்த்தருக்கு கடன் கொடுக்கிறான். அவன் கொடுத்ததை அவர் திரும்பக் கொடுப்பார் என்று வேதம் கூறுகிறது. இந்த வருட கடைசி மாதங்களில் வந்திருக்கிற நமக்கு தேவன் இந்த வருட முழுவதும் கொடுத்த ஆசீர்வாதங்கள் மிகவும் அதிகம். நாம் நினைப்பதற்கும், வேண்டுவதற்கும் மிகவும் அதிகமாக நம்மை ஆசீர்வதித்திருக்கிறாரல்லவா? அவற்றை நாம் நமக்கு தெரிந்தவர்களுடன், நண்பர்களுடன், உறவினர்களுடன் பங்கிட்டு சந்தோஷத்தை வெளிப்படுத்திக் கொள்கிறோம். ஆனால், அவைகளோடுக்கூட, நாம் இந்த சமயங்களில் ஏழ்மையானவர்களையும் நினைத்துப் பார்க்க வேண்டும். 'அப்பொழுது, ராஜா தமது வலதுபக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து: ...பசியாயிருந்தேன், எனக்குப் போஜனங்கொடுத்தீர்கள்; தாகமாயிருந்தேன், என் தாகத்தைத் தீர்த்தீர்கள்; அந்நியனாயிருந்தேன், என்னைச் சேர்த்துக்கொண்டீர்கள்; வஸ்திரமில்லாதிருந்தேன், எனக்கு வஸ்திரங்கொடுத்தீர்கள்; வியாதியாயிருந்தேன், என்னை விசாரிக்க வந்தீர்கள்; காவலிலிருந்தேன், என்னைப் பார்க்கவந்தீர்கள் என்பார். அப்பொழுது, நீதிமான்கள் அவருக்குப் பிரதியுத்தரமாக: ஆண்டவரே, நாங்கள் எப்பொழுது உம்மைப் பசியுள்ளவராகக் கண்டு உமக்குப் போஜனங் கொடுத்தோம்? எப்பொழுது உம்மைத் தாகமுள்ளவராகக்கண்டு உம்முடைய தாகத்தைத் தீர்த்தோம்? எப்பொழுது உம்மை அந்நியராகக்கண்டு உம்மைச் சேர்த்துக்கொண்டோம்? எப்பொழுது உம்மை வஸ்திரமில்லாதவராகக் கண்டு உமக்கு வஸ்திரங்கொடுத்தோம்? எப்பொழுது உம்மை வியாதியுள்ளவராகவும் காவலிலிருக்கிறவராகவும் கண்டு, உம்மிடத்தில் வந்தோம் என்பார்கள்' (மத்தேயு 25:34-39). இயேசுகிறிஸ்து பசியாயிருந்தபோது, தாகமாயிருந்தபோது, அந்நியனாக இருந்தபோது, வஸ்திரமில்லாதவராக இருந்தபோது, வியாதியிலிருந்தபோது, காவலிலிருந்தபோது அவருக்கு உதவி செய்தவர்களைப் பார்த்துதான் சொல்கிறார், 'மிகவும் சிறியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்' என்பார். உண்மையில் அவர் பசியாக இல்லை, தாகமாக இல்லை, காவலில் இல்லை, வியாதியாக இல்லை. ஆனால் அப்படிப்பட்டவர்களுக்கு நாம் செய்த உதவி கர்த்தருக்கே செய்ததைப் போன்றதாகும். நமக்கு கொடுக்கப்பட்ட மீதியான நேரங்களில், கூட இரண்டு மூன்று பேரை கூட்டிக் கொண்டு, ஆஸ்பத்திரியில் வியாதியிருப்பவர்களை சந்தித்து ஆறுதல் சொல்வோமா? எனக்கு தெரிந்த வயதான ஒருவர், ஒவ்வொரு நாளும் காலையில் தனக்கு அறிமுகமில்லாத வியாதியஸ்தர்களை கண்டு, அவர்களுக்கு ஆறுதல் சொல்லி, தன்னால் இயன்றதை கொடுத்து விட்டு செல்வார். அவர் மரித்தபோது அங்கிருந்தவர்கள் எல்லாரும் கலங்கினர். வயதானவரே செய்யும்போது, நாம் வாரத்தில் ஒருநாள் சிலமணி நேரம் ஒதுக்கி வியாதியஸ்தர்களை சென்று ஆறுதல் கூறுவது எத்தனை முக்கியம்? சிறைச்சாலையில் இருப்பவர்களை கண்டு ஆறுதல் கூறலாம். அக்கம் பக்கத்தில் இருப்பவர்களிடம் தேவையற்ற சிறிதாய் போன உடைகளை வாங்கி, உடையில்லாதவர்களுக்கு கொடுக்கலாம். தேவன் விரும்புகிற இந்த காரியங்களை நம்மால் இயன்றதை நாம் செய்வோமா? அப்படி செய்யும்போது, 'அப்பொழுது, ராஜா தமது வலதுபக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து: வாருங்கள் என் பிதாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே, உலகம் உண்டானது முதல் உங்களுக்காக ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற ராஜ்யத்தைச் சுதந்தரித்துக்கொள்ளுங்கள்' என்று நம்மை ஆசீர்வதிப்பார். ஆமென் அல்லேலூயா! *🌹GLORY TO JESUS🌹*
822 காட்சிகள்
8 மாசத்திற்கு முன்
#

இயேசு கிறிஸ்து

ஆவியின் கனியோ... விசுவாசம் ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம்; இப்படிப்பட்டவைகளுக்கு விரோதமான பிரமாணம் ஒன்றுமில்லை. - (கலாத்தியர் 5:22-23). ஏழாம் சுளை......... விசுவாசம்: ஆவியின் கனியாகிய விசுவாசம் என்பது 'எவனாகிலும் இந்த மலையைப் பார்த்து: நீ பெயர்ந்து, சமுத்திரத்திலே தள்ளுண்டுபோ என்று சொல்லி, தா சொன்னபடியே நடக்கும் என்று தன் இருதயத்தில் சந்தேகப்படாமல் விசுவாசித்தால், அவன் சொன்னபடியே ஆகும் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்'; (மாற்கு 11:23) என்று இந்த இடத்தில் சொல்லப்பட்டிருக்கிற விசுவாசம் அல்ல. ஆவியின் கனியாகிய விசுவாசம் என்பதற்கு உண்மை, நேர்மை, உத்தமம் என்பது பொருளாகும். ஒரு எஜமானுக்கு ஒரு வேலைக்காரன் விசுவாசமுள்ளவனாக இருந்தால், அவன் நேர்மையாக, உண்மையாக, தன் செயல்கள் எல்லாவற்றிலும் தன் எஜமானுக்கு எந்த விதத்திலும் நஷ்டம் கொண்டு வராதவனாக இருப்பான். ஒரு உண்மையுள்ள கணவனுக்கு நல்ல மனைவி விசுவாசமுள்ளவளாக இருப்பாள், நல்ல மனைவிக்கு ஒரு உண்மையுள்ள கணவன் விசுவாசமுள்ளவனாக இருப்பான். வேதத்தில் தேவன் எத்தனை உண்மையுள்ளவராயிருக்கிறார் என்றுப் பார்க்கிறோம். 'வாக்குத்தத்தம்பண்ணினவர் உண்மையுள்ளவராயிருக்கிறாரே' (எபிரேயர் 10:23), 'தம்முடைய குமாரனும் நம்முடைய கர்த்தருமாயிருக்கிற இயேசுகிறிஸ்துவுடனே ஐக்கியமாயிருப்பதற்கு உங்களை அழைத்த தேவன் உண்மையுள்ளவர்' (1 கொரிந்தியர் 1:9) 'மனுஷருக்கு நேரிடுகிற சோதனையேயல்லாமல் வேறே சோதனை உங்களுக்கு நேரிடவில்லை. தேவன் உண்மையுள்ளவராயிருக்கிறார்' (1 கொரிந்தியர் 10:13) என்று நம் தேவன் எத்தனை உண்மையுள்ளவர் என்று வேதத்தில் பார்க்கிறோம். அந்த வார்த்தைகளின்படியே அவர் இந்நாள் பரியந்தம் உண்மையுள்ளவராகவே இருக்கிறார். தேவன் உண்மையுள்ளவராக இருப்பதால் இந்த நாள் பரியந்தம் நம்மை நடத்தி வருகிறார், நம்மை அழைத்தவர் உண்மையுள்ளவராக இருப்பதால்தான் எந்த போராட்டங்கள், பாடுகள், துன்பங்கள் வந்தாலும் கூடவே இருந்து தாங்கிக் கொள்ளவும், எல்லா பிரச்சனைகளிலிருந்து விடுவிக்கவும் வல்லவராக இருக்கிறார். நம்மை அழைத்தவர் உண்மையுள்ளவராக இருக்கிறதுப் போல நாம் அவருக்கு உண்மையுள்ளவர்களாக இருக்கிறோமா? கர்த்தர் நம்மை நம்பிக் கொடுத்திருக்கிற வேலைகளில், பொறுப்புகளில், குடும்பங்களில், சபைகளில், சமுதாயத்தில் நாம் உண்மையுள்ளவர்களாக இருக்கிறோமா? எத்தனை குறைவுள்ளவர்களாக காணப்படுகிறோம்? அநேக ஊழியர்கள் தேவன் அவர்களை நம்பிக் கொடுத்த சிறிய ஊழியத்தில் உண்மையுள்ளவர்களாக இருந்தபடியால், தேவன் அவர்களை அநேகத்திற்கு அதிகாரிகளாக மாற்றி, அவர்களை நம்பி தமது பணியினை ஒப்படைத்தார். சிறிய காரியத்திலும் நாம் உண்மையுள்ளவர்களாக இருக்கும்போது நிச்சயமாகவே தேவன் நம்மை நம்பி பெரிய காரியங்களை ஒப்படைப்பார் என்பதில் சந்தேகமேயில்லை. உண்மையுள்ள மனுஷன் பரிபூரண ஆசீர்வாதங்களைப் பெறுவான் (நீதிமொழிகள் 28:20) என்று வேதம் கூறுகிறதல்லவா? 'என் தாசனாகிய மோசேயோ அப்படிப்பட்டவன் அல்ல, என் வீட்டில் எங்கும் அவன் உண்மையுள்ளவன்' (எண்ணாகமம் 12:7) என்று தேவனே நம்மைப் போல ஒரு மனிதனைக் குறித்து சாட்சி கொடுக்கிறார் என்றால் அவர் எத்தனை உண்மையுள்ளவராக இருந்திருக்க வேண்டும்? தேவன் நம்மைக் குறித்து அப்படிப்பட்ட சாட்சிக் கொடுப்பாரா? 'லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து' என்ற வாசகத்தை தனது தாரக மந்திரமாக கொண்டு திரு. உ. சகாயம் I.A.S. அவர்கள் தன் வேலையில் உண்மையாக இருந்தபடியால், தான் வேலை செய்த 23 வருடங்களில் 24 முறை இடமாற்றம் செய்யப்பட்டார். ஆனாலும் அவர் மனம் உடைந்துப் போகவில்லை, தொடர்ந்து அநீதிக்கு எதிராக போராடினார். திருட்டுத்தனமாக மணல் கொள்ளை அடிப்பதை கண்டு, அதற்கு எதிராக அவர் செயல்பட்டார். அதில் ஈடுபட்டிருந்தவர்கள் சும்மாவா இருந்திருப்பார்கள்? கொலை மிரட்டல் விட்டாலும் தன் வேலையை உண்மையாய் செய்வேன் என்று தொடர்ந்து எதிராக போரிட்டதால், தற்போது, அவரையே விசேஷித்த ஆபிசராக கோர்ட் நியமனம் செய்திருக்கிறது. அவர் தன் தேவனுக்கு முன்பாக தன் உண்மையை காத்துக் கொண்டார். கர்த்தரின் வருகையின் நாளில், 'அவனுடைய எஜமான் அவனை நோக்கி: நல்லது, உத்தமமும் உண்மையுமுள்ள ஊழியக்காரனே, கொஞ்சத்திலே உண்மையாயிருந்தாய், அநேகத்தின்மேல் உன்னை அதிகாரியாக வைப்பேன்; உன் எஜமானுடைய சந்தோஷத்திற்குள் பிரவேசி என்றான்' என்று கர்த்தர் அவரை கனப்படுத்துவார் (மத்தேயு 25:23). எத்தனைப் பேர் நமக்கு எதிராக வந்தாலும், நமக்கு விரோதமாக போராடினாலும், நாம் நம் உண்மையில் நிலைத்திருப்போம். ஆவியின் கனியாகிய விசுவாசத்தை காத்துக் கொள்வோம். கர்த்தர் சீக்கிரம் வருகிறார். அவர் அளிக்கும் பலன் அவரோடேக் கூட வருகிறது. ஆமென் அல்லேலூயா! *🌹GLORY TO JESUS🌹*
276 காட்சிகள்
8 மாசத்திற்கு முன்
#

இயேசு கிறிஸ்து

ஆவியின் கனியோ... நற்குணம் ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம்; இப்படிப்பட்டவைகளுக்கு விரோதமான பிரமாணம் ஒன்றுமில்லை. -(கலாத்தியர் 5:22-23) ஆறாம் சுளை .....நற்குணம்: நாம் அனைவரும் ஆலயத்திலும், வீட்டிலும் பாடும் பாடல்கள் கர்த்தர் நல்லவர் என்று சொல்லும், அர்த்தம் கொள்ளும் பாடல்களையே! நம் கர்த்தர் அத்தனை நல்லவர்! அவரை ஆயிரம் முறை அப்பா நீர் நல்லவர், நல்லவர் என்று சொல்லிக் கொண்டே இருந்தாலும் திகட்டாது. அவர் அத்தனை நல்லவர்! நற்குணம் கொண்ட ஒரு மனிதனையோ, மனுஷியையோ அனைவரும் நேசிப்பார்கள். கேட்டால் சொல்வார்கள், 'அவரு ரொம்ப நல்லவருங்க' என்று. இயற்கையிலேயே நற்குணம் கொண்டவர்கள் இருப்பார்கள். ஆனால் ஆவியின் கனியாகிய நற்குணத்தை கொண்டவர்களோ, எல்லா நற்குணத்திற்கும் மேம்பட்டவர்களாக கிறிஸ்துவையே வெளிப்படுத்திக் காட்டுகிறவர்களாக இருப்பார்கள். கர்த்தரை பின்பற்றுகிறவர்களாகிய நம்மை பார்த்து மற்றவர்கள் இவர் நல்லவர், இவர்கள் நல்லவர்கள் என்று சொல்லமுடியுமா? நம் கிரியைகள் மற்றவர்களுக்கு நன்மை தரத்தக்கதாக, மற்றவர்கள் பாராட்டும்படியாக, மற்றவர்களுக்கு பிரயோஜனமுள்ளதாக இருக்கிறதா? '..முட்செடிகளில் திராட்சப்பழங்களையும், முட்பூண்டுகளில் அத்திப்பழங்களையும் பறிக்கிறார்களா? அப்படியே நல்ல மரமெல்லாம் நல்ல கனிகளைக் கொடுக்கும் கெட்ட மரமோ கெட்ட கனிகளைக் கொடுக்கும். நல்ல மரம் கெட்ட கனிகளைக் கொடுக்கமாட்டாது கெட்ட மரம் நல்ல கனிகளைக் கொடுக்கமாட்டாது' (மத்தேயு 7:16-18) என்று இயேசுகிறிஸ்து கூறினார். ஆம், நல்ல மரத்தால்தான் நல்ல கனியை கொடுக்க முடியும். கெட்ட மரங்களோ கெட்ட கனியைத்தான் கொடுக்கும். நம்முடைய வேலையிடங்களில், நம்மைச் சுற்றியிருக்கிற இடங்களில், நல்ல மரங்களைப் போன்றவர்களும் இருக்கலாம், கெட்ட மரங்களைப் போன்றவர்களும் இருக்கலாம். கெட்ட மரங்களைப் போன்றவர்களிடம் நாம் நல்ல கனியை எதிர்ப்பார்க்க முடியாது. ஏனெனில் அவர்களின் சுபாவமே அப்படிப்பட்டது. அவர்கள் கெட்டகனியைத்தான் தருவார்கள் என்று இயேசுகிறிஸ்து கூறியிருக்கிறாரே! கிரகாம் ஸ்டெயின்ஸ் அவர்களும், அவர்களுடைய இரண்டு பிள்ளைகளையும் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டபோது, அவர்களின் துணைவியார் கர்த்தரோடு இருந்தபடியால், அவர்களிடத்தில் ஆவியின் கனியாகிய நற்குணம் வெளிப்பட்டது. அவர்கள் உடனே அவர்களை கொன்றவர்களை சபிக்கவில்லை, அவர்கள் கொல்லப்பட வேண்டும் என்று போர்க்கொடி ஏற்றவில்லை, மாறாக அவர்களை மன்னித்தார்கள். நல்ல மரத்திலிருந்து நல்ல கனியே கிடைக்கும். கெட்ட கனியை எதிர்ப்பார்க்க முடியாது. ஈராக்கிலும், சிரியாவிலும் நடக்கும் கொடுமைகளை பார்க்கும்போது, ஒரு சகோதரி கதறுகிறாள், 'என்னை 32 முறை மதிய நேரத்திற்குள் கற்பழித்திருக்கிறார்கள், தயவுசெய்து குண்டு வீசி எங்களைக் கொன்று போடுங்கள், நாங்கள் உயிரோடு இருப்பதைப் பார்க்கிலும் சாவது எங்களுக்கு மேல்' என்று கதறுகிறாள். கெட்ட மரத்திலிருந்து கெட்ட கனியே வரும், நல்ல கனியை எதிர்ப்பார்க்கவே முடியாது. வேதத்தில் எத்தனையோப் பேர் நற்குணசாலிகளாக இருந்திருக்கிறார்கள். யோசேப்பு, மோசே, ரூத், தாவீது என்று சொல்லிக் கொண்டே போகலாம். அவர்கள் தாங்கள் தாங்கள் நாட்டப்பட்ட இடத்திலே நற்குணசாலிகளாக விளங்கினார்கள். 'பெரோயா பட்டணத்தார் மனோவாஞ்சையாய் வசனத்தை ஏற்றுக்கொண்டு, காரியங்கள் இப்படியிருக்கிறதா என்று தினந்தோறும் வேதவாக்கியங்களை ஆராய்ந்துபார்த்ததினால், தெசலோனிக்கேயில் உள்ளவர்களைப்பார்க்கிலும் நற்குணசாலிகளாயிருந்தார்கள்' (அப்போஸ்தலர் 17:11) என்று வேதம் கூறுகிறது. வேதத்தை ஆராய்ந்து, 'ஓ, வசனத்தில் இப்படி இருக்கிறது, அதன்படி நான் நடக்க வேண்டும்' என்று அவர்கள் தினந்தோறும் வேதத்தையும் தங்களையும் ஆராய்ந்து பார்த்தபடியால் நற்குணசாலிகளாக விளங்கினார்கள் என்றுப் பார்க்கிறோம். தினமும் வேதத்தை வாசித்து, அதன்படி நம்மை மாற்றிக் கொள்வோமானால் நாமும் நற்குணசாலிகளாக விளங்குவோம் என்பதில் சந்தேகமேயில்லை! நமக்கு தீமை செய்கிறவர்களுக்கு நாம் நன்மை செய்வதன் மூலம், கைமாறு கருதாமல் மற்றவர்களுக்கு உதவிகள் செய்வதன் மூலம், தீமைக்கு தீமை சரிகட்டாமல், மற்றவர்களோடு நம்முடைய நன்மைகளை பகிர்ந்து கொள்வதன் மூலம், நியாயமாக காரியங்களை செய்வதன் மூலம், மற்றவர்களுக்காக ஜெபிப்பதன் மூலம், நல்ல வார்த்தைகளையே பேசுவதன் மூலம் நம்மிடத்தில் உள்ள ஆவியின் கனியாகிய நற்குணத்தை வெளிப்படுத்த முடியும். 'சகலவித நற்கிரியைகளுமாகிய கனிகளைத் தந்து, தேவனை அறிகிற அறிவில் விருத்தியடைந்து, கர்த்தருக்குப் பிரியமுண்டாக அவருக்குப் பாத்திரராய் நடந்துகொள்ள'... (கொலோசேயர் 1:10)தேவன் தாமே கிருபை செய்வாராக! ஆமென் அல்லேலூயா! *🌹GLORY TO JESUS🌹*
340 காட்சிகள்
8 மாசத்திற்கு முன்
#

இயேசு கிறிஸ்து

கிறிஸ்துவ பொன்மொழிகள் :- 1. தேவனுடைய சித்தத்தை எங்கே அறிகிறோமோ அங்கே விசுவாசம் பிறக்கிறது - கென்னெத் இ ஹகின் ( kenneth E hagin ) 2. நம்முடைய பயத்தின் ஆரம்பம் விசுவாசத்தின் முடிவு, உண்மையான விசுவாசத்தின் ஆரம்பம் பயத்தின் முடிவு - ஜார்ஜ் முல்லெர் ( George Mueller ) 3. சிறிய விசுவாசம் உங்கள் ஆத்துமாவை பரலோகத்திற்கு கொண்டு செல்லும் அனால் அதிகமான விசுவாசம் பரலோகத்தை உங்களுக்குள் கொண்டு வரும் - டிவித் ல மூடி (Dwight L. Moody ) 4.நம்முடைய பழைய சரித்திரம் சிலுவையோடு முடிகிறது, புதிய சரித்திரம் உயிர்தெலுதலில் துவங்குகிறது - வாட்ச்மன் நீ ( watchman nee ) 5. உங்களுடைய சிந்தனையை மாற்றுங்கள் அப்போது உங்கள் உலகத்தையும் மாற்ற முடியும் - நார்மன் வின்சென்ட் பெலே ( norman vincent peale) 6. தேவனுடைய வார்த்தையை வெறுமனே படிப்பதை விட அது உங்கள் வாழ்கையை மாற்றும் என்று விசுவாசியுங்கள் - ஜாய்ஸ் மேயர் ( joyce meyer ) 7. ஒவ்வொரு நாளும் காலையில் எழுந்து தேவனை நேசித்து , செய்ய வேண்டிய காரியங்களை முடிந்தவரை சிறப்பாக செய்யுங்கள் மற்றவைகளை தேவன் பார்த்து கொள்வார் - ஜாய்ஸ் மேயர் ( joyce meyer ) 8. நான் ஒவ்வொரு நாளும் காலையில் ஆவியிலே தேவனோடு நேரம் செலவிடாமல் எனது படுக்கையை விட்டு எழுவது இல்லை - ஸ்மித் விக்க்லேச்வோர்த் ( smith wigglesworth ) 9. ஜெபம் என்பது உங்களுக்கும் தேவனுக்கும் உள்ள இரண்டு வழி உரையாடல் - பில்லி கிரகாம் ( billy graham ) 10. என்னுடைய வீடு பரலோகம் நான் இந்த உலகத்தை பயணியாக கடந்து செல்கிறேன் - - பில்லி கிரகாம் ( billy graham )
321 காட்சிகள்
8 மாசத்திற்கு முன்
#

இயேசு கிறிஸ்து

மனுஷனுடைய சுயவழிகள் மனுஷனுக்குத் செம்மையாய்த் தோன்றுகிறவழி உண்டு; அதின் முடிவோ மரண வழிகள். - (நீதிமொழிகள் 14:12). . பிளான்க் மலை உயர்ந்த சிகரங்களுள்ளது. மலையேறுவோர் அதில் பாதுகாப்புடன் ஏறுவதற்கு உதவியாக வழிகாட்டிகள் நியமிக்கப்பட்டிருந்தனர். இளைஞன் ஒருவன் அம்மலையின் சிகரங்களை சென்றடைய வேண்டுமென்று சவாலுடன் ஒரு வழிகாட்டியின் துணையோடு புறப்பட்டான். தன் சாதனையில் வெற்றி கண்டவனாக மலை சிகரங்களை அடைந்தான். இளைஞனின் வீரச்செயலால் அவனது கிராமம் முழுவதும் குதூகலமடைந்தது. அவனது வெற்றியை அறிவிக்கும் வண்ணம் அம்மலையோரத்தில் ஒரு கொடி ஏற்றப்பட்டு பறந்து கொண்டிருந்தது. அவ்விளைஞனோ தன் கிராமத்தை நோக்கி கீழே இறங்கிக் கொணடிருந்தான். இந்நேரத்தில் அந்த வழிகாட்டி தனக்கு அவசியமில்லை என அவனுக்கு தோன்றிற்று. சுயாதீனமாய் செல்ல விரும்பிய அவன் தன் விருப்பத்தை வழிகாட்டியிடம் தெரிவித்தான். வழிகாட்டியோ “இது பனிப்பாறைகள் நிறைந்த இடம், பழக்கமற்ற நீங்கள் தனியாக வருவது பாதுகாப்பற்றது” என எச்சரித்தார். ஆனால் வாலிபனோ தான் சுயாதீனமாக விடப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தான். வழிகாட்டியும் வேறுவழியில்லாமல் சம்மதித்தார். ஜாலியாக பாட்டு பாடி கொண்டே கீழே இறங்கிய அவன் கவனக்குறைவாக சரிவான பனிக்கட்டி பாறைகளில் கால்களை வைக்கவும், அதனால் தன்னை கட்டுப்படுத்த முடியாமல் சறுக்கி வந்து கொண்டிருந்தான். இப்போது கயிற்று பிணைப்பும் இல்லை, வழிகாட்டியின் உதவியும் இல்லை. ஒரு சில மணி நேரத்தில் பனி பாறையின் மீது அவ்வாலிபனின் உடல் உயிரற்று கிடந்தது. வெற்றியோசை முழங்கிய கிராமம் இப்போது துயரத்தில் மூழ்கியது. கிராம மக்களின் சந்தோஷத்திற்கு காரணமானவனே துக்கத்திற்கும் காரணமானான். இவ்வாலிபன் சிகரத்தை தொட காரணமென்ன? முதலாவது அவனது விடா முயற்சி, அடுத்து வழிகாட்டியின் ஆலோசனை. வெற்றியடைய பிறரது உதவியை நாடிய அவன் வெற்றிக்கு பின் பிறரது கண்காணிப்பையும் ஆலோசனையையும் விரும்பவில்லை. வழிகாட்டியாடு இணைக்கப்பட்டிருந்த கயிறு அறுபட்டது. முடிவு என்ன ஒரு பரிதாபம்! நமது வாழ்விலும் நமக்கு இறுதிவரை வழிகாட்டி அவசியம். பரிசுத்த ஆவியானவரும், ஒரு நல்ல ஆவிக்குரிய சபையின் போதகரின் ஆலோசனைகளும் நம்மை ஒவ்வொரு நாளும் சிறந்த வழிகாட்டியாக இருந்து நடத்துகின்றனர். பரிசுத்த ஆவியானவர் நம்மை ஒவ்வொரு நாளும் போதித்து நடத்துகின்றார். “நான் உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன்; உன்மேல் என் கண்ணை வைத்து, உனக்கு ஆலோசனை சொல்லுவேன்” - (சங்கீதம் 32:8) என்று அருமையான ஆலோசனையை நமக்கு கூறி அனுதினமும் நம்மை அதிசயமாய் நடத்துகின்றார். ஒவ்வொரு வாரமும் சபைக்கு சென்று ஆவிக்குரிய போதகர் மூலமாய நமக்கு தேவன் ஆலோசனை தருகின்றார். சிலர் ஆவியானவரும் எனக்கு வேண்டாம், ஆவிக்குரிய சபையும் எனக்கு வேண்டாம் என்று விதண்டாவாதம் செய்து கொண்டு, தங்களுடைய சுயவழிகளில் நடந்து கொண்டிருக்கிறார்கள். மனுஷனுக்குத் செம்மையாய்த் தோன்றுகிறவழி உண்டு; அதின் முடிவோ மரண வழிகள் என்ற வேதம் நம்மை எச்சரிக்கின்றது. ஆரம்பத்தில் கர்த்தரை பிடித்து கொண்டதால் கிடைத்த வெற்றி, என்னால் எல்லாம் செய்ய முடியும் என்று சுயத்தை நம்பி செயலாற்றும்போது, தோல்வியாகவே முடிகிறது. உலகத்திற்குரிய வாழ்விலும் ஆவிக்குரிய வாழ்விலும் நாம் பெறும் ஒவ்வொரு வெற்றியும் கர்த்தரால் மாத்திரமே வந்தது என்று அவரையே சார்ந்து, கடைசிவரை நம்முடைய வாழ்வின் வழிகாட்டியாக அவரே இருக்கும்போது நாம் செய்யும் எல்லா காரியங்களும் வெற்றியாகவே முடியும் என்பதில் சந்தேகமேயில்லை! *🌹GLORY TO JESUS🌹*
381 காட்சிகள்
8 மாசத்திற்கு முன்
#

இயேசு கிறிஸ்து

மனுஷனுடைய சுயவழிகள் மனுஷனுக்குத் செம்மையாய்த் தோன்றுகிறவழி உண்டு; அதின் முடிவோ மரண வழிகள். - (நீதிமொழிகள் 14:12). . பிளான்க் மலை உயர்ந்த சிகரங்களுள்ளது. மலையேறுவோர் அதில் பாதுகாப்புடன் ஏறுவதற்கு உதவியாக வழிகாட்டிகள் நியமிக்கப்பட்டிருந்தனர். இளைஞன் ஒருவன் அம்மலையின் சிகரங்களை சென்றடைய வேண்டுமென்று சவாலுடன் ஒரு வழிகாட்டியின் துணையோடு புறப்பட்டான். தன் சாதனையில் வெற்றி கண்டவனாக மலை சிகரங்களை அடைந்தான். இளைஞனின் வீரச்செயலால் அவனது கிராமம் முழுவதும் குதூகலமடைந்தது. அவனது வெற்றியை அறிவிக்கும் வண்ணம் அம்மலையோரத்தில் ஒரு கொடி ஏற்றப்பட்டு பறந்து கொண்டிருந்தது. அவ்விளைஞனோ தன் கிராமத்தை நோக்கி கீழே இறங்கிக் கொணடிருந்தான். இந்நேரத்தில் அந்த வழிகாட்டி தனக்கு அவசியமில்லை என அவனுக்கு தோன்றிற்று. சுயாதீனமாய் செல்ல விரும்பிய அவன் தன் விருப்பத்தை வழிகாட்டியிடம் தெரிவித்தான். வழிகாட்டியோ “இது பனிப்பாறைகள் நிறைந்த இடம், பழக்கமற்ற நீங்கள் தனியாக வருவது பாதுகாப்பற்றது” என எச்சரித்தார். ஆனால் வாலிபனோ தான் சுயாதீனமாக விடப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தான். வழிகாட்டியும் வேறுவழியில்லாமல் சம்மதித்தார். ஜாலியாக பாட்டு பாடி கொண்டே கீழே இறங்கிய அவன் கவனக்குறைவாக சரிவான பனிக்கட்டி பாறைகளில் கால்களை வைக்கவும், அதனால் தன்னை கட்டுப்படுத்த முடியாமல் சறுக்கி வந்து கொண்டிருந்தான். இப்போது கயிற்று பிணைப்பும் இல்லை, வழிகாட்டியின் உதவியும் இல்லை. ஒரு சில மணி நேரத்தில் பனி பாறையின் மீது அவ்வாலிபனின் உடல் உயிரற்று கிடந்தது. வெற்றியோசை முழங்கிய கிராமம் இப்போது துயரத்தில் மூழ்கியது. கிராம மக்களின் சந்தோஷத்திற்கு காரணமானவனே துக்கத்திற்கும் காரணமானான். இவ்வாலிபன் சிகரத்தை தொட காரணமென்ன? முதலாவது அவனது விடா முயற்சி, அடுத்து வழிகாட்டியின் ஆலோசனை. வெற்றியடைய பிறரது உதவியை நாடிய அவன் வெற்றிக்கு பின் பிறரது கண்காணிப்பையும் ஆலோசனையையும் விரும்பவில்லை. வழிகாட்டியாடு இணைக்கப்பட்டிருந்த கயிறு அறுபட்டது. முடிவு என்ன ஒரு பரிதாபம்! நமது வாழ்விலும் நமக்கு இறுதிவரை வழிகாட்டி அவசியம். பரிசுத்த ஆவியானவரும், ஒரு நல்ல ஆவிக்குரிய சபையின் போதகரின் ஆலோசனைகளும் நம்மை ஒவ்வொரு நாளும் சிறந்த வழிகாட்டியாக இருந்து நடத்துகின்றனர். பரிசுத்த ஆவியானவர் நம்மை ஒவ்வொரு நாளும் போதித்து நடத்துகின்றார். “நான் உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன்; உன்மேல் என் கண்ணை வைத்து, உனக்கு ஆலோசனை சொல்லுவேன்” - (சங்கீதம் 32:8) என்று அருமையான ஆலோசனையை நமக்கு கூறி அனுதினமும் நம்மை அதிசயமாய் நடத்துகின்றார். ஒவ்வொரு வாரமும் சபைக்கு சென்று ஆவிக்குரிய போதகர் மூலமாய நமக்கு தேவன் ஆலோசனை தருகின்றார். சிலர் ஆவியானவரும் எனக்கு வேண்டாம், ஆவிக்குரிய சபையும் எனக்கு வேண்டாம் என்று விதண்டாவாதம் செய்து கொண்டு, தங்களுடைய சுயவழிகளில் நடந்து கொண்டிருக்கிறார்கள். மனுஷனுக்குத் செம்மையாய்த் தோன்றுகிறவழி உண்டு; அதின் முடிவோ மரண வழிகள் என்ற வேதம் நம்மை எச்சரிக்கின்றது. ஆரம்பத்தில் கர்த்தரை பிடித்து கொண்டதால் கிடைத்த வெற்றி, என்னால் எல்லாம் செய்ய முடியும் என்று சுயத்தை நம்பி செயலாற்றும்போது, தோல்வியாகவே முடிகிறது. உலகத்திற்குரிய வாழ்விலும் ஆவிக்குரிய வாழ்விலும் நாம் பெறும் ஒவ்வொரு வெற்றியும் கர்த்தரால் மாத்திரமே வந்தது என்று அவரையே சார்ந்து, கடைசிவரை நம்முடைய வாழ்வின் வழிகாட்டியாக அவரே இருக்கும்போது நாம் செய்யும் எல்லா காரியங்களும் வெற்றியாகவே முடியும் என்பதில் சந்தேகமேயில்லை! *🌹GLORY TO JESUS🌹*
290 காட்சிகள்
8 மாசத்திற்கு முன்
#

இயேசு கிறிஸ்து

ஆவியின் கனியோ... இச்சையடக்கம் ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம்; இப்படிப்பட்டவைகளுக்கு விரோதமான பிரமாணம் ஒன்றுமில்லை. - (கலாத்தியர் 5:22-23). ஒன்பதாவது சுளை......... இச்சையடக்கம்: கடந்த ஒன்பது நாட்களாக நாம் தொடர்ந்து, ஆவியின் கனியைக் குறித்து தியானித்து வருகிறோம். இந்த கனியை கொடுப்பதற்காகவே தேவன் நம்மை ஏற்படுத்தினார் என்று முதல் கட்டுரையில் பார்த்தோம். ஒரு மனிதனின் வாழ்வில் இந்த ஒன்பது சுளைகளாகிய ஆவியின் கனி இருந்தால், அவனை சுற்றி இருக்கிற இடம் குட்டி பரலோகமாகிவிடும். இந்த ஒன்பது சுளைகளால் நிரம்பிய ஆவியின் கனி நம் வாழ்வில் காணப்பட வேண்டும் என்று நாம் ஒவ்வொருவரும் வாஞ்சிக்க வேண்டும், அதற்காக ஜெபிக்க வேண்டும். தொடர்ந்து கடைசி சுளையாகிய இச்சையடக்கத்தைக் குறித்து காண்போம். ஒரு இடத்தில் தீப்பற்றி எதற்கும் அடங்காமல் எரிகிறது என்றால் அது அபாயகரமானதாகும். ஒரு கார் பிரேக் பிடிக்க முடியாமல் போனதால் கட்டுக்கடங்காமல் சென்றால் அதுவும் அபாயமாகும். ஒரு காளையோ ஒரு யானையோ கட்டுக்கடங்காமல் ஓடினால், பக்கத்தில் இருப்பவர்களுக்கு அபாயமாகும். ஆனால் ஒரு மனிதன் கட்டுக்கடங்காமல், மனதை அடக்காமல் இருப்பானானால் அவன் மற்ற முந்தின யாவற்றைப் பார்க்கிலும் மிகவும் அபாயகரமானவன். அதனால்தான் 'பலவானைப்பார்க்கிலும் நீடிய சாந்தமுள்ளவன் உத்தமன்; பட்டணத்தைப் பிடிக்கிறவனைப்பார்க்கிலும் தன் மனதை அடக்குகிறவன் உத்தமன்' (நீதிமொழிகள் 16:32) என்று வேதம் கூறுகிறது. மனதையும், கண்களையும் அதனதன் இஷ்டத்திற்கு விடுவதால்தான் பாவம் நம் வாழ்வில் நுழைகிறது. கண்களின் இச்சையினால்தான் ஆதித்தாயாகிய ஏவாள் பாவத்தில் விழுந்தாள். கிரேக்க நாட்டில் பாரம்பரிய கதை ஒன்று உண்டு. அடலாண்டா என்னும் பெண் மிகவும் வேகமாக ஓடக்கூடியவள். அது மாத்திரமல்ல, குறிதவறாமல் அம்பெய்வதிலும், சிறந்த வேட்டைக்காரியுமாயிருந்தாள். அவளை திருமணம் செய்ய அநேகர் முயன்றனர். அவர்களுக்கு அவள் ஒரு நிபந்தனை விதித்தாள். தன்னை ஓட்டப்பந்தயத்தில் யார் தோற்கடிக்கிறார்களோ, அவனை மணப்பதாகவும், இல்லாவிட்டால் அவனை கொன்று விடுவதாகவும் நிபந்தனை விதித்தாள். அநேகர் அவளோடு போட்டிப் போட்டு தோற்று தங்கள் தலைகளை இழந்தனர். ஹிப்போமெனஸ் என்பவன் இவளை நேரடியாக மோதி, தோற்கடிக்க முடியாது, எப்படியாவது தந்திரமாக தோற்கடிக்க வேண்டும் என்று சொல்லி, மூன்று தங்க ஆப்பிள்களை கொண்டு வந்து, ஓடும்போது, அவ்வப்போது ஒவ்வொன்றாக வீசினான். அடலாண்டா அது என்ன என்று பார்க்க குனிந்து எடுக்கும்போது, அவன் வேகமாக ஓடி ஜெயித்து, அவளுக்கும் மாலையிட்டான் என்பது கதை. எப்பேற்பட்ட வீராங்கனையாக இருந்தாலும், கண்களின் இச்சை என்று வரும்போது விழுந்து போவது சகஜம். தன்னுடைய பெலத்தினால் அநேகரை விழப்பண்ணினவள், கண்களின் இச்சையினால் அவளே விழுந்துப் போனாள். 'பந்தயத்திற்குப் போராடுகிற யாவரும் எல்லாவற்றிலேயும் இச்சையடக்கமாயிருப்பார்கள். அவர்கள் அழிவுள்ள கிரீடத்தைப் பெறும்படிக்கு அப்படிச் செய்கிறார்கள், நாமோ அழிவில்லாத கிரீடத்தைப் பெறும்படிக்கு அப்படிச் செய்கிறோம்' (1 கொரிந்தியர் 9:25) என்றுப் பார்க்கிறோம். ஒரு கிரிக்கெட் போட்டியில் விளையாட வேண்டும், அல்லது கால்பந்து விளையாட வேண்டும் என்றால் அதற்கான தொடர் பயிற்சியில் ஈடுபடவேண்டும். இச்சையடக்கம் உள்ளவர்களாக கண்டதையும் சாப்பிடவோ, குடிக்கவோ கூடாது. அப்படி அவர்கள் தங்களை ஒரு கட்டுக்குள் வைத்திருந்தால்தான், போட்டி அன்று நன்கு விளையாடி ஜெயிக்க முடியும். அவர்கள் அழிவுள்ள ஒரு கப்பையோ, பணத்தையோ பெறும்படி அவ்வளவு இச்சையடக்கமுள்ளவர்களாக தங்கள் சரீரங்களை பாதுகாக்கிறார்கள். ஆனால் நாம் கர்த்தருக்குள் பொறுமையோடு நம் ஓட்டத்தை தொடர்ந்து ஓடி ஜெயிக்கும்போது, அழிவில்லாத நித்திய நித்தியமாய் நமக்கு கிடைக்க போகிற கிரீடத்தை பெறுவோம். அப்படி பெற வேண்டுமென்றால் எத்தனை கவனமாக, இச்சையடக்கம் உள்ளவர்களாக இருக்க வேண்டும்! சிலருக்கு உணவு பொருட்களை பார்த்தவுடன் ஒரு இச்சை, சிலருக்கு இனிப்பு பண்டங்களை பார்த்தவுடன் ஒரு இச்சை, சிலருக்கு மதுபான வகைகள் மேல் இச்சை, சிலருக்கு பெண்களை பார்த்தவுடன் இச்சை, சிலருக்கு நகைகளை பார்த்தவுடன் இச்சை, சிலருக்கு நல்ல புடவைகளை பார்த்தவுடன் இச்சை என்று இச்சையின் இரகங்களை சொல்லிக் கொண்டே போகலாம். இவற்றில் நாம் எந்த இரகத்தில் இருக்கிறோம் என்று தெரியவில்லை. நாம் இப்படியே இதுப் போன்ற இச்சைகளில் விழுந்துக் கிடப்பது கர்த்தருடைய சித்தமல்ல, நாம் ஆவியின் கனியாகிய இச்சையடக்கத்தை உடையவர்களாக மாற வேண்டும் என்பதே அவரது விருப்பம். கொஞ்சம் கொஞ்சமாக நாம் நம்மை அடக்கி, இந்த இச்சைகளில் இருந்து வெளிவர வேண்டும். 'கிறிஸ்துவினுடையவர்கள் தங்கள் மாம்சத்தையும் அதின் ஆசை இச்சைகளையும் சிலுவையில் அறைந்திருக்கிறார்கள்' (கலாத்தியர் 5:24) என்று வேதம் கூறுகிறது. சிலுவையில் அறைந்து விட்ட ஆசை இச்சைகளை நாம் திரும்பவும் நம்முடைய சிந்தனையில், சரீரத்தில் கொண்டு வருவோமானால், நாம் கிறிஸ்துவினுடையவர்கள் அல்லவே! எப்போதெல்லாம் நேரம் கிடைக்கிறதோ, அப்போதெல்லாம் நம்முடைய வாழ்க்கையை ஆராய்ந்து, நான் ஏதாவது இச்சையில் விழுந்திருக்கிறேனா என்று பார்த்து, கர்த்தருடைய ஆவியானவரின் கிருபையுடன் வெளிவர முயற்சிக்க வேண்டும். ஒருவேளை விழுந்திருந்தால் எழுந்தரிக்க முயற்சிக்க வேண்டும். நாம் தவறி எங்காவது விழுந்து விட்டால், மற்றவர்கள் பார்க்குமுன் வேகமாக எழும்பி, எதுவுமே நடக்காததுப்போல தூசியை தட்டி எழுந்துச் செல்வதுப்போல பாவத்தில் விழுந்திருந்தாலும், கர்த்தருடைய கிருபையுடன் மீண்டும் எழும்பி, தூசியைப் போன்ற அழுக்கான பாவங்களை உதறிவிட்டு, மீண்டும் கர்த்தருடைய வழிகளில் நடக்க பிரயாசப்பட வேண்டும். விழுந்த இடத்திலேயே விழுந்துக் கிடந்தால் பார்ப்பவர்கள் நகைப்பார்கள், வெட்கப்பட வேண்டிய நிலை ஏற்படும். ஆவியின் கனியாகிய ஒன்பது சுளைகளும் நம் வாழ்வில் நிறைந்து காணப்படட்டும். அப்போது நம்மை காண்பவர்கள் நம்மில் கிறிஸ்துவை காண்பார்கள். நம்மால் தனியாக இந்த சுளைகளை வெளிப்படுத்த முடியாதுதான். ஆனால் கர்த்தருடைய ஆவியானவரே இந்தக் கனியை நமக்கு தருகிறபடியால், அவருடைய உதவியுடன், 'பலத்தினாலும் அல்ல, பராக்கிரமம் அல்ல, ஆவியினால் எல்லாம் ஆகும்' என்ற வார்த்தையின்படி ஆவியானவர் நமக்கு உதவி செய்ய வல்லவராகயிருக்கிறார். நம் வாழ்வில் ஆவியின் கனியை வெளிப்படுத்துவோமா? கர்த்தருக்கு பிரயோஜனமான, எந்த நற்கிரியையும் செய்ய ஆயத்தமாக்கப்பட்ட பாத்திரங்களாக நற்கனியை வெளிப்படுத்தி அவருக்காக பிரகாசிப்போமா? '...நீங்கள் போய்க் கனிகொடுக்கும்படிக்கும், உங்கள் கனி நிலைத்திருக்கும்படிக்கும், நான் உங்களை ஏற்படுத்தினேன்' (யோவான் 15:16) ஆமென் அல்லேலூயா! *🌹GLORY TO JESUS🌹*
246 காட்சிகள்
8 மாசத்திற்கு முன்
#

இயேசு கிறிஸ்து

*கர்த்தர் பெருகவும் நான் சிறுகவும் வேண்டும்* 'அவர் பெருகவும் நான் சிறுகவும் வேண்டும். உன்னதத்திலிருந்து வருகிறவர் எல்லாரிலும் மேலானவர்; பூமியிலிருந்துண்டானவன் பூமியின் தன்மையுள்ளவனாயிருந்து, பூமிக்கடுத்தவைகளைப் பேசுகிறான்; பரலோகத்திலிருந்து வருகிறவர் எல்லாரிலும் மேலானர். - (யோவான் 3:30-31). The last supper என்று சொல்லப்படும் படத்தை வரைந்தவர் மிகவும் அழகாக அதை வரைந்து முடித்து, தன் நண்பர்களிடம் அந்த படத்தை குறித்து அவர்களது கருத்தை கேட்டார். அவர்கள் அந்த அழகிய படத்தை பார்த்து விட்டு, மேலிருந்து தொங்கி அந்த அறையை அலங்கரித்திருந்த, அழகிய வண்ண விளக்கை புகழ்ந்து 'என்ன ஒரு அருமையான விளக்கு' என்று பாராட்டினார்கள். மற்ற ஓவியர்களாயிருந்தால் புகழ்ந்தவுடன் மயங்கி போயிருந்திருப்பார்கள். ஆனால் இவரோ, உடனே அந்த விளக்கை அந்த படத்திலிருந்து நீக்கி விட்டார். அவருடைய எண்ணமெல்லாம், எல்லாருடைய கவனமும் எஜமானாகிய கிறிஸ்துவின் மேல்தான் இருக்க வேண்டும், அதை தவிர வேறு எதுவும் மேலானதாக படக்கூடாது என்பதுதான். அதனால் இந்நாள் வரை அந்தப் படத்தில் விளக்கு இல்லாமல் வரையப்பட்டிருப்பதை காணலாம். யோவான் ஸ்நானகன் தன்னை ஒருபோதும் வெளிப்படுத்தவே இல்லை. அவருடைய பிரசங்கத்தில் கர்த்தரைக் குறித்தே மேன்மைப்படுத்தி, வனாந்தரத்தில் கூப்பிடுகிறவனுடைய சத்தமாக, வரப்போகிற மேசியாவாகிய கிறிஸ்துவிற்கு வழியை ஆயத்தப்படுத்துகிறவராகவே வாழ்ந்து, மரித்தார். கிறிஸ்துவும் அவரைக் குறித்து, 'அவன் எரிந்து பிரகாசிக்கிற விளக்காயிருந்தான் நீங்களும் சிலகாலம் அவன் வெளிச்சத்திலே களிகூர மனதாயிருந்தீர்கள்' (யோவான் 5:35) என்று சாட்சிக் கொடுத்தார். நாமும் எதைச் செய்தாலும் கிறிஸ்துவே அதில் பிரதானமாக இருக்க வேண்டும். உலக காரியங்களில் எந்த முடிவெடுப்பதானாலும் முதலில் அவரிடம் ஜெபித்து விட்டு, நீரே வழிநடத்த வேண்டும் என்று அவருடைய கரத்தில் ஒப்படைத்துவிட்டு, அவருடைய சித்தத்தின்படி முடிவெடுக்க வேண்டும். அவரை முதன்மையாக வைத்து செய்யப்படுகிற காரியங்கள் எதுவும் தோல்வியை பெறுவதில்லை. மட்டுமல்ல, நம்முடைய ஊழியங்களில், நம்முடைய வேலைகளில், நம்முடைய குடும்பங்களில், நம்முடைய சபைகளில் நாம் கர்த்தருக்கே முதலிடம் கொடுக்க வேண்டும். நம்மை ஒருபோதும் வெளிப்படுத்தக் கூடாது. ஆண்டவரே நான் சிறுகவும் நீர் பெருகவும் வேண்டும் என்பதே நம் ஜெபமாக, நம் குறிக்கோளாக இருக்க வேண்டும். நம்மை வெளிப்படுத்த ஆரம்பித்தோமானால், அது நாம் சரிந்து கீழே விழுவதற்கே ஏதுவாக அமையும். நம் பெயரோ, நம் புகழோ அல்ல, கிறிஸ்துவே நம் வாழ்வில் உயர வேண்டும். 'சுயமாய்ப் பேசுகிறவன் தன் சுயமகிமையைத் தேடுகிறான், தன்னை அனுப்பினவரின் மகிமையைத் தேடுகிறவனோ உண்மையுள்ளவனாயிருக்கிறான், அவனிடத்தில் அநீதியில்லை' (யோவான் 7:18) என்று இயேசுகிறிஸ்து கூறினார். ஒருவன் எப்போது தன் சுயத்திலிருந்து, தன்னைக் குறித்து, பெருமையாக பேசுகிறானோ, அவன் தன் சுயமகிமையைத் தேடுகிறான். ஆனால் கர்த்தருடைய நாமம் மகிமைப்பட வேண்டும் என்று அவருடைய மகிமையைத் தேடுகிறவன் உண்மையுள்ளவனாக, கர்த்தர் பெருக வேண்டும் என்று ஊழியம் செய்கிறான். எத்தனையோ மிஷனெரிகள், ஊழியர்கள் நன்கு படித்தவர்கள், நல்ல வேலையில் இருந்தவர்கள், தங்கள் படிப்பையும், வேலைகளையும், உயர்ந்த செல்வாக்குகளையும் தள்ளிவிட்டு, கர்த்தருக்காக தங்களை அர்ப்பணித்து, இன்றளவும் தங்கள் பெயர் புகழ் வெளிவராமல் அவருக்காகவே வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் எரிந்து பிரகாசிக்கிற விளக்காகவே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களது வெளிச்சத்தில் நாமும் இன்றளவும் களிகூர்ந்துக் கொண்டிருக்கிறோம். அவர்களது தியாகமான வாழ்விற்காக கர்த்தருக்கு நன்றி சொல்வோம். இவர்கள் 'இப்பொழுது இம்மையிலே, துன்பங்களோடேகூட நூறத்தனையாக, வீடுகளையும், சகோதரரையும், சகோதரிகளையும், தாய்களையும், பிள்ளைகளையும், நிலங்களையும், மறுமையிலே நித்தியஜீவனையும் அடைவான் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்' (மாற்கு 10:30) என்றபடி ஆசீர்வாத்தை பெறுவார்கள். நம்மை நாம் அல்ல, கர்த்தரே உயர்த்த வேண்டும். எல்லாவற்றிலும் அவரையே உயர்த்துவோம். அவரே உயர்ந்தவர். எல்லாவற்றிலும் மேலானவர். எல்லோரிலும் பெரியவர். அவரை நாம் உயர்த்த உயர்த்த அவர் நம்மை உயர்த்த ஆரம்பிக்கிறார். நம்மை மறைத்து அவரையே உயர்த்துவோம்! கிறிஸ்துவின் உண்மையான சீடர்களாக வாழ்வோம். ஆமென் அல்லேலூயா! *🌹GLORY TO JESUS🌹*
231 காட்சிகள்
8 மாசத்திற்கு முன்
#

இயேசு கிறிஸ்து

*வசனம் கிடைக்காத பஞ்சகாலம்* இதோ, நான் தேசத்தின்மேல் பஞ்சத்தை அனுப்பும் நாட்கள் வரும்; ஆகாரக் குறைவினால் உண்டாகிய பஞ்மல்ல, ஜலக்குறைவினால் உண்டாகிய தாகமுமல்ல, கர்த்தருடைய வசனம் கேட்கக் கிடையாத பஞ்சத்தை அனுப்புவேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார். - (ஆமோஸ் 8:11). . மனுஷன் அப்பத்தினாலேமாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் - (மத்தேயு 4:4) என்று வேதம் நமக்கு கூறுகிறது. அப்படி நாம் பிழைக்கும்படியாக கர்த்தர் நமக்கு கொடுத்த கிருபையின் வார்த்தைகள் கிடைக்காத பஞ்சம் ஏற்படும்போது, அது நிச்சயமாகவே ஒவ்வொருவரையும் பாதிக்கும் என்பதில் சந்தேகமில்லை. நாம் ஏற்கனவே அந்த காலத்திற்குள் வந்து கொண்டிருக்கிறோம். இன்றைய நாட்களில் அவரவருக்கு விருப்பமாக தேவனுடைய வார்த்தை மாற்றப்பட்டு பிரசங்கிக்கப்பட்டு வருகிறது. 'ஏனென்றால், அவர்கள் ஆரோக்கியமான உபதேசத்தைப் பொறுக்க மனதில்லாமல், செவித்தினவுள்ளவர்களாகி, தங்கள் சுய இச்சைகளுக்கேற்ற போதகர்களைத் தங்களுக்குத் திரளாகச் சேர்த்துக்கொண்டு. சத்தியத்துக்குச் செவியை விலக்கி, கட்டுக்கதைகளுக்குச் சாய்ந்துபோகுங்காலம் வரும்' (2 தீமோத்தேயு 4:3-4) என்று வசனம் எச்சரித்த காலத்திற்குள் நாம் வந்திருக்கிறோம். இப்போது சுத்தமான கலப்படமில்லாத கர்த்தருடைய வார்த்தையை கேட்பது மிகவும் அரிதாக இருக்கிறது. வசனம் சொல்லுகிறது, கர்த்தரே இந்த பஞ்சத்தை அனுப்புகிறார் என்று. 'இதோ, நான் தேசத்தின்மேல் பஞ்சத்தை அனுப்பும் நாட்கள் வரும்'. ஏன் கர்த்தர் இதை செய்ய வேண்டும்? கர்த்தருடைய ஜனங்கள் சத்தியத்திற்கு செவி கொடுக்காதபடி, ஆரோக்கியமான உபதேசத்தை கேட்க மனதில்லாமல், தங்களுடைய இச்சைக்கேற்றபடி பிரசங்கிக்கிறவர்களை தங்களுக்கு தெரிந்து கொண்டு, கர்த்தருடைய வார்த்தையை அசட்டை பண்ணும்போது கர்த்தர் இந்த பஞ்சத்தை அனுப்புகிறார். கர்த்தருடைய வார்த்தை நம்மை சீர்திருத்தும், நம் பாவத்தை கண்டித்து உணர்த்தும், கடிந்து கொள்ளும், நம்மை ஒழுங்கு படுத்தும். அதனால் தான் வசனத்திற்கு இருபுறமும் கருக்குள்ள பட்டயம் என்று பெயர். ஆனால் அதை கேட்பவர்களுக்கு அது வேதனையாகவும், தங்கள் சுகமான பாவ வழிகளில் இருந்து வெளிவர மனமில்லாமல் இருப்பதால், அதை கேட்க அவர்களுக்கு மனதில்லாமல் போகிறது. மனிதர்கள் கர்த்தருடைய வார்த்தையை கேளாதபடி அசட்டை செய்யும் போது கர்த்தர் அதை கேட்க கூடாத பஞ்சத்தை அனுப்புகிறார். ஒரு பஞ்சம் என்று வரும்போது, உணவை குறித்த பசியும் தாகமும் ஏற்படும். அதுப்போல கர்த்தர் வசனம் கிடைக்காத அந்த பஞ்ச காலத்தை அனுப்பும்போது அப்போதுதான் மனிதருக்கு கர்த்தருடைய வசனத்தை குறித்த பசியும் தாகமும் ஏற்படும். அப்பொழுது அவர்கள் கர்த்தருடைய வசனத்தைத் தேட ஒரு சமுத்திரந்தொடங்கி மறு சமுத்திரமட்டும், வடதிசை தொடங்கிக் கீழ்த்திசைமட்டும் அலைந்து திரிந்தும் அதைக் கண்டடையாமற் போவார்கள் (வசனம் 12). என்ன ஒரு பரிதாபமான நிலைமை! அப்போது வசனத்தை தேடியும் அவர்கள் கண்டடையாமற் போவார்களாம்! இந்த தீர்க்கதரிசன வார்த்தைகளை நமக்கு ஒரு எச்சரிக்கையாக எடுத்து கொள்வோம். நமக்கு இப்போது வசனம் தாராளமாய் கிடைக்கும்போதே அவற்றை நமது இருதயத்தில் பதித்து வைத்து கொள்வோம். நான் உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்யாதபடிக்கு, உமது வாக்கை என்னிருதயத்தில் வைத்து வைத்தேன் (சங்கீதம் 119:11) என்ற சங்கீதக்காரனை போல நாம் கர்த்தருடைய வார்த்தைகளை நம் இருதயத்தில் வைத்து வைப்போம். ஒருவேளை நாளை நமக்கு வசனம் படிக்க கூடாத நிலை ஏற்படுமென்றால் நமது நிலைமை என்னவாகும்? யோசேப்பு பார்வோன் கண்ட சொப்பனத்தின் அர்த்தத்தை சொன்னபோது, வரப்போகும் கொடிய பஞ்சத்தை குறித்து தேவன் பார்வோனை கனவின் மூலம் எச்சரித்திருந்தார். அதே சமயம் யோசேப்புக்கு அந்த கொடிய பஞ்சத்திலிருந்து விடுபடுவதற்கான வழிமுறைகளை செய்வதற்கு நல்ல ஞானத்தையும் கொடுத்தார். அவன் பரிபூரண வருஷங்களின் விளைவை எடுத்து சேமித்து வைத்தபடியினால், பின்னர் வந்த கொடிய பஞ்சத்தில் அநேகரை அவனால் போஷிப்பிக்க முடிந்தது. அதை போலவே நீங்களும் கர்த்தருடைய வார்த்தையை உங்கள் இருதயத்தில் வைத்து வைக்கும்போது, பஞ்ச காலத்திலும், வற்றாத நீரூற்றை போல அநேகரை போஷிக்க கூடியவர்களாக மாறுவீர்கள். வசனம் கிடைக்கும் இந்த நல்ல காலங்களிலேயே நாம் அவற்றை நம் இருதயத்தில் காத்து வைக்க தேவன் தாமே நம் ஒவ்வொருவருக்கும் கிருபை செய்வாராக! ஆமென் அல்லேலூயா! *🌹GLORY TO JESUS🌹*
243 காட்சிகள்
8 மாசத்திற்கு முன்
#

இயேசு கிறிஸ்து

ஆவியின் கனியோ.. நீடிய பொறுமை ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம்; இப்படிப்பட்டவைகளுக்கு விரோதமான பிரமாணம் ஒன்றுமில்லை. - (கலாத்தியர் 5: 22-23). . நான்காவது சுளை…….நீடிய பொறுமை: நாம் அவசர உலகத்தில் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம். எல்லாமே உடனுக்குடன் நடைபெற வேண்டும் என்கிற எதிர்ப்பார்ப்போடு வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம். ஏதாவது கொஞ்சம் தாமதித்தால் உடனே எத்தனை முறுமுறுப்புகள், எத்தனை முக கோணல்கள்! சமீபத்தில் ஒரு ஆஸ்பத்திரியில் வைத்தியரை பார்க்க வேண்டி இருந்தது. மூன்று மணி நேரம் காக்க வைத்து விட்டார்கள். மூன்று மணி நேரத்திற்கு மேல் பொறுமையாக இருக்க முடியவில்லை. அங்கிருந்த நர்ஸிடம், 'என்ன உங்க டாக்டர் ஒரு பேஷண்டை இத்தனை நேரம் பார்க்கிறார்? எத்தனை நேரம் காத்திருப்பது? பேப்பரை கிழித்துப் போட்டு நாங்கள் போகப் போகிறோம்' என்று சூடாக சொன்னபோது, அந்த நர்ஸ் 'இப்ப டாக்டர் உங்களை பார்ப்பார்' என்று சொல்லி, அழைத்துப் போனார்கள். அந்த டாக்டரை பார்த்தவுடன், அவர் பேசினதைக் கேட்டவுடன், ஏன் அப்படி கத்தினோம் என்று தோன்றியது. அத்தனை மெதுவாக, பொறுமையாக அந்த டாக்டர் பேசினார். நல்ல நண்பராக மாறினார். நம்மால் எதற்கும் பொறுமையாக காத்திருக்க முடிவதில்லை. டிராபிக் ஜாமில் வண்டியை ஓட்டும்போது, சிக்னலில் எத்தனை நேரம் காத்திருப்பது என்று முனகல்களும், முறுமுறுக்காமலும் நாம் இருப்பதில்லை. வீட்டில் சாப்பாடு கொஞ்சம் லேட்டானால் நம்மால் சும்மா இருக்க முடிவதில்லை. பொறுமை என்பதை இக்காலத்தில் மனிதன் கொஞ்சம் கொஞ்சமாக இழந்துக் கொண்டிருக்கிறான் என்பதே உண்மை. நம்முடைய தேவனின் தெய்வீக குணாதிசயங்களில் ஒன்றாக நீடிய பொறுமை விளங்குகிறது. பாவிகளாயிருக்கையில் நம்மேல் அவர் பொறுமையுள்ளவராக இருந்தாரே! உலகம் சென்றுக் கொண்டிருக்கிற பாதையை நோக்கினால், எத்தனை அக்கிரமங்கள், என்ன பயங்கரமான செயல்கள்! நம்மால் அதைப் பார்த்து, பொறுத்துக் கொள்ள முடிவதில்லை. எத்தனையோ முறை சொல்கிறோம், ஏன் ஆண்டவர் இவர்களை எல்லாம் விட்டு வைத்திருக்கிறார் என்று! ஆனால் அவையெல்லாவற்றையும் காண்கின்ற தேவன் அப்படி அக்கிரமம் செய்கிறவர்களையும் அழித்து விடாதபடி பொறுமையாயிருக்கிறாரே! அது நீடியப் பொறுமையல்லவா! 'தாமதிக்கிறார் என்று சிலர் எண்ணுகிறபடி, கர்த்தர் தமது வாக்குத்தத்தத்தைக்குறித்துத் தாமதமாயிராமல்; ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்பவேண்டுமென்று விரும்பி, நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார்' (2 பேதுரு 3:9) என்று வேதம் கூறுகிறது. தேவன் அத்தனை பொறுமையுள்ளவராயிருந்தார் என்றால் நாம் எத்தனை பொறுமையுள்ளவர்களாக இருக்க வேண்டும்! வேதத்தில் பொறுமையாயிருந்த ஆதி விசுவாசிகள் பலரைக் காண முடியும்! மோசே, ஆபிரகாம், யோசேப்பு, யோபு என்று பட்டியலை அடுக்கிக் கொண்டே போக முடியும்.. அவர்கள் பொறுமையாய் இருந்ததைப் போல புதிய ஏற்பாட்டு விசுவாசிகளாகிய நாமும் பொறுமையாக இருக்க கற்றுக் கொள்ள வேண்டும். நம்முடைய தேவைகளில், தேவன் ஏன் என் ஜெபத்திற்கு பதில் கொடுக்கவில்லை என்று பொறுமையை இழந்துப் போகாமல், அவருடைய நேரத்திற்காக நீடிய பொறுமையோடு காத்திருக்க பழகிக் கொள்ள வேண்டும். அப்போதுதான் 'கர்த்தருக்காகப் பொறுமையுடன் காத்திருந்தேன்; அவர் என்னிடமாய்ச் சாய்ந்து, என் கூப்பிடுதலைக் கேட்டார்' (சங்கீதம் 40:1) என்று நாமும் சொல்ல முடியும். எந்த காரியத்திலும் அவசரப்படாமல் பொறுமையாக இருக்க ஆவியானவரின் பெலன் தேவை. அவர் கொடுக்கிற நீடிய பொறுமையாகிய கனியின் சுளை நம் வாழ்வில் இருக்கும்போது 'பொறுத்தார் பூமி ஆள்வார்' என்கிற பழமொழியின்படி வெற்றி மேல் வெற்றி நம்மை வந்தடையும் என்பதில் சந்தேகமேயில்லை. 'நீங்களும் நீடிய பொறுமையோடிருந்து, உங்கள் இருதயங்களை ஸ்திரப்படுத்துங்கள்; கர்த்தரின் வருகை சமீபமாயிருக்கிறதே' (யாக்கோபு 5:8) ஆமென் அல்லேலூயா! *🌹GLORY TO JESUS🌹*
230 காட்சிகள்
8 மாசத்திற்கு முன்
#

இயேசு கிறிஸ்து

ஆவியின் கனியோ.. நீடிய பொறுமை ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம்; இப்படிப்பட்டவைகளுக்கு விரோதமான பிரமாணம் ஒன்றுமில்லை. - (கலாத்தியர் 5: 22-23). . நான்காவது சுளை…….நீடிய பொறுமை: நாம் அவசர உலகத்தில் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம். எல்லாமே உடனுக்குடன் நடைபெற வேண்டும் என்கிற எதிர்ப்பார்ப்போடு வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம். ஏதாவது கொஞ்சம் தாமதித்தால் உடனே எத்தனை முறுமுறுப்புகள், எத்தனை முக கோணல்கள்! சமீபத்தில் ஒரு ஆஸ்பத்திரியில் வைத்தியரை பார்க்க வேண்டி இருந்தது. மூன்று மணி நேரம் காக்க வைத்து விட்டார்கள். மூன்று மணி நேரத்திற்கு மேல் பொறுமையாக இருக்க முடியவில்லை. அங்கிருந்த நர்ஸிடம், 'என்ன உங்க டாக்டர் ஒரு பேஷண்டை இத்தனை நேரம் பார்க்கிறார்? எத்தனை நேரம் காத்திருப்பது? பேப்பரை கிழித்துப் போட்டு நாங்கள் போகப் போகிறோம்' என்று சூடாக சொன்னபோது, அந்த நர்ஸ் 'இப்ப டாக்டர் உங்களை பார்ப்பார்' என்று சொல்லி, அழைத்துப் போனார்கள். அந்த டாக்டரை பார்த்தவுடன், அவர் பேசினதைக் கேட்டவுடன், ஏன் அப்படி கத்தினோம் என்று தோன்றியது. அத்தனை மெதுவாக, பொறுமையாக அந்த டாக்டர் பேசினார். நல்ல நண்பராக மாறினார். நம்மால் எதற்கும் பொறுமையாக காத்திருக்க முடிவதில்லை. டிராபிக் ஜாமில் வண்டியை ஓட்டும்போது, சிக்னலில் எத்தனை நேரம் காத்திருப்பது என்று முனகல்களும், முறுமுறுக்காமலும் நாம் இருப்பதில்லை. வீட்டில் சாப்பாடு கொஞ்சம் லேட்டானால் நம்மால் சும்மா இருக்க முடிவதில்லை. பொறுமை என்பதை இக்காலத்தில் மனிதன் கொஞ்சம் கொஞ்சமாக இழந்துக் கொண்டிருக்கிறான் என்பதே உண்மை. நம்முடைய தேவனின் தெய்வீக குணாதிசயங்களில் ஒன்றாக நீடிய பொறுமை விளங்குகிறது. பாவிகளாயிருக்கையில் நம்மேல் அவர் பொறுமையுள்ளவராக இருந்தாரே! உலகம் சென்றுக் கொண்டிருக்கிற பாதையை நோக்கினால், எத்தனை அக்கிரமங்கள், என்ன பயங்கரமான செயல்கள்! நம்மால் அதைப் பார்த்து, பொறுத்துக் கொள்ள முடிவதில்லை. எத்தனையோ முறை சொல்கிறோம், ஏன் ஆண்டவர் இவர்களை எல்லாம் விட்டு வைத்திருக்கிறார் என்று! ஆனால் அவையெல்லாவற்றையும் காண்கின்ற தேவன் அப்படி அக்கிரமம் செய்கிறவர்களையும் அழித்து விடாதபடி பொறுமையாயிருக்கிறாரே! அது நீடியப் பொறுமையல்லவா! 'தாமதிக்கிறார் என்று சிலர் எண்ணுகிறபடி, கர்த்தர் தமது வாக்குத்தத்தத்தைக்குறித்துத் தாமதமாயிராமல்; ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்பவேண்டுமென்று விரும்பி, நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார்' (2 பேதுரு 3:9) என்று வேதம் கூறுகிறது. தேவன் அத்தனை பொறுமையுள்ளவராயிருந்தார் என்றால் நாம் எத்தனை பொறுமையுள்ளவர்களாக இருக்க வேண்டும்! வேதத்தில் பொறுமையாயிருந்த ஆதி விசுவாசிகள் பலரைக் காண முடியும்! மோசே, ஆபிரகாம், யோசேப்பு, யோபு என்று பட்டியலை அடுக்கிக் கொண்டே போக முடியும்.. அவர்கள் பொறுமையாய் இருந்ததைப் போல புதிய ஏற்பாட்டு விசுவாசிகளாகிய நாமும் பொறுமையாக இருக்க கற்றுக் கொள்ள வேண்டும். நம்முடைய தேவைகளில், தேவன் ஏன் என் ஜெபத்திற்கு பதில் கொடுக்கவில்லை என்று பொறுமையை இழந்துப் போகாமல், அவருடைய நேரத்திற்காக நீடிய பொறுமையோடு காத்திருக்க பழகிக் கொள்ள வேண்டும். அப்போதுதான் 'கர்த்தருக்காகப் பொறுமையுடன் காத்திருந்தேன்; அவர் என்னிடமாய்ச் சாய்ந்து, என் கூப்பிடுதலைக் கேட்டார்' (சங்கீதம் 40:1) என்று நாமும் சொல்ல முடியும். எந்த காரியத்திலும் அவசரப்படாமல் பொறுமையாக இருக்க ஆவியானவரின் பெலன் தேவை. அவர் கொடுக்கிற நீடிய பொறுமையாகிய கனியின் சுளை நம் வாழ்வில் இருக்கும்போது 'பொறுத்தார் பூமி ஆள்வார்' என்கிற பழமொழியின்படி வெற்றி மேல் வெற்றி நம்மை வந்தடையும் என்பதில் சந்தேகமேயில்லை. 'நீங்களும் நீடிய பொறுமையோடிருந்து, உங்கள் இருதயங்களை ஸ்திரப்படுத்துங்கள்; கர்த்தரின் வருகை சமீபமாயிருக்கிறதே' (யாக்கோபு 5:8) ஆமென் அல்லேலூயா! *🌹GLORY TO JESUS🌹*
291 காட்சிகள்
8 மாசத்திற்கு முன்
#

இயேசு கிறிஸ்து

எதிர்பாராத கிறிஸ்துவின் வருகை நீங்கள் நினையாத நாழிகையிலே மனுஷகுமாரன் வருவார்; ஆதலால், நீங்களும் ஆயத்தமாயிருங்கள். - (மத்தேயு 24:44). இரண்டு பேர் மாரத்தான் என்னும் ஓட்டப்பந்தயத்தில் பங்கெடுப்பதற்காக பெயரை கொடுத்திருந்தனர். ஒருவர் தினந்தோறும் மைல் கணக்கில் ஓடி பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தார். உடற்பயிற்சியும் மேற்கொண்டார். மற்றவர் சாதரணமாக தூங்குவதைவிட இன்னும் இரண்டு மணி நேரம் சேர்த்து தூங்க ஆரம்பித்தார். ஒரு உடற்பயிற்சியோ, ஓட்டம் ஓடியோ பழகவோ இல்லை. மாரத்தான் ஓடும் நாள் வந்தது. 26.2 மைல் தூரம் ஓட வேண்டும். யார் ஜெயித்திருப்பார்கள் என்று நினைக்கிறீர்கள்? நிச்சயமாக பயிற்சி எடுத்தவர்தான். அடுத்தவர் ஒரு மைல் தூரம் ஓடுவதற்குள் களைப்பாகி நிறுத்தியிருப்பார். இரண்டு கிறிஸ்தவர்கள் வரப்போகிற கொடுமையான நாட்களுக்கு தப்பித்துக் கொள்ளும்படி போதிக்கப்பட்டிருந்தனர். அதை உண்மையாக எடுத்துக் கொண்டு, ஒருவர் ஜெபித்து கர்த்தரோடு தான் கொண்டிருந்த உறவில், ஐக்கியத்தில் நிலைத்திருந்து, தினமும் வேதம் வாசித்து, தன்னால் இயன்ற வேத வார்த்தைகளை மனனம் செய்து கர்த்தருக்குள் தன்னுடைய ஆவியில் ஒருமனப்பட்டிருந்தார். மற்றவர் ஆலயத்திற்கு செல்லும்போதுதான் வேதத்தை பிரிப்பார். ஆலயத்தில் ஜெபிக்கும்போதுதான் ஜெபிப்பார். ஞாயிற்றுக் கிழமை வந்தால்தான் அவருக்கு கர்த்தரைப்பற்றியும், ஆலயத்திற்கு செல்ல வேண்டும் என்கிற ஞாபகமும் வரும். ஒரு நாள் அவர்கள் வாழும் பகுதியில் கிறிஸ்தவர்கள் துன்புறுத்தப்படும் நாட்கள் வந்தது. கர்த்தரோடு இணைந்திருந்தவர் கர்த்தர் தன்னை எந்த நேரத்திலும் கைவிடமாட்டார் என்று விசுவாசத்தோடு காத்திருந்து, வெற்றியும் பெற்றார். மற்றவரோ கர்த்தரையும், சபையையும், தன் நண்பர்களையும், குடும்பத்தினரையும் இந்த நிலைக்கு அவர்களே காரணம் என்று சாட ஆரம்பித்தார். பிரியமானவர்களே, நாமும் ஒரு மிகப்பெரிய சம்பவம் நிகழ்வுற காத்திருக்கிறோம். அதுதான் கர்த்தருடைய இரகசிய வருகை. நாம் எந்த அளவு கர்த்தரோடு ஐக்கியம் கொண்டுள்ளோம் என்பதைப் பொறுத்தே நாம் எடுத்துக் கொள்ளப்படுதலும் இருக்கும். நாம் கர்த்தரோடு கொண்டுள்ள ஐக்கியத்தில் நிலைத்திருப்போமானால் அவர் வந்தவுடன் நம்மை அடையாளம் கண்டு கொள்வார். நாமும் அவரோடு செல்லுவோம். 'அப்பொழுது, இரண்டுபேர் வயலில் இருப்பார்கள்; ஒருவன் ஏற்றுக்கொள்ளப்படுவான், ஒருவன் கைவிடப்படுவான். இரண்டு ஸ்திரீகள் ஏந்திரம் அரைத்துக்கொண்டிருப்பார்கள்; ஒருத்தி ஏற்றுக்கொள்ளப்படுவாள், ஒருத்தி கைவிடப்படுவாள்' (மத்தேயு 24:40-41) என்று இயேசுகிறிஸ்து கூறினார். இரண்டு பேர் சேர்ந்து ஒரு காரியத்தை செய்துக் கொண்டிருக்கும் திடீரென்று ஒருவர் மறைந்துப் போனால்,எபப்டி இருக்கும்? கர்த்தரின் வருகையிலும் அப்படியே இருக்கும். நம்முடைய நிலைமை எப்படி இருக்கிறது? கர்த்தரோடு உள்ள ஐக்கியத்தில் நிலைத்திருக்கிறோமா? கர்த்தரும் வேண்டும், உலகமும் வேண்டும் என்று இரண்டு மனமுள்ளவர்களாக இருக்கிறோமா? ஏனோக்கு கர்த்தரோடு சஞ்சரித்துக் கொண்டிருந்தார். திடீரென்று எடுத்துக் கொள்ளப்பட்டார். அவர் இருந்த நாட்களில் அநேகர் இந்த உலகத்தில் இருந்தார்கள். ஆனால் கர்த்தர் யாரையும் எடுத்துக் கொள்ளவில்லை. கர்த்தரோடு ஐக்கியம் கொண்டு, அவரோடு இணைந்து வாழ்ந்த ஏனோக்கையே தம்மிடம் எடுத்துக் கொண்டார். கிறிஸ்துவின் வருகையில் கைவிடப்பட்டவரோ அந்த நேரத்தில் கர்த்தரையோ, சபையையோ, குடும்பத்தையோ, நண்பர்களையோ குற்றம் சொல்லி எந்தப் பயனும் இல்லை. கர்த்தருடைய எச்சரிக்கைக்கு செவிக் கொடுத்தவர்கள் தங்களை ஆயத்தம் செய்துக் கொள்வார்கள். நிர்விசாரமாக கர்த்தர் வரும்போது பார்த்துக் கொள்ளலாம் என்று இருப்பவர்களோ கைவிடப்படுவார்கள். கர்த்தரோடு வாழ்வோம். அவரோடுள்ள ஐக்கியத்தில் எப்பொழுதும் நிலைத்திருப்போம். அப்போது அவர் எப்போது வந்தாலும் நாம் அவரை எதிர்க்கொள்ள முடியும். மாரநாதா! அல்லேலூயா! *🌹GLORY TO JESUS🌹*
542 காட்சிகள்
8 மாசத்திற்கு முன்
#

இயேசு கிறிஸ்து

*கிறிஸ்துவின் நியாயசனம்* ஏனென்றால், சரீரத்தில் அவனவன் செய்த நன்மைக்காவது தீமைக்காவது தக்க பலனை அடையம்படிக்கு, நாமெல்லாரும் கிறிஸ்துவின் நியாயாசனத்திற்கு முன்பாக வெளிப்படவேண்டும். - (2 கொரிந்தியர் 5:10). இந்த உலகில் வாழ்கிற விசுவாசிகளானாலும் சரி, அவிசுவாசிகளானாலும் சரி, நாம் ஒவ்வொருவர் செய்யும் ஒவ்வொரு கிரியையும் தேவனால் கவனிக்கப்பட்டு வருகிறது. அந்த எல்லா கிரியைக்கும் தக்க பலன் உண்டு. அந்த நாள் நியாயத்தீர்ப்பின் நாள் ஆகும். அந்த நாளில் சர்வத்திற்கும் நியாயாதிபதியாம் இயேசுகிறிஸ்து நியாயாசனத்தில் அமர்ந்து, நம் ஒவ்வொருவரிடமும் 'உன் உக்கிராணக் கணக்கை ஒப்புவி' என்று கட்டளையிட்டாரானால் நாம் என்ன பதில் சொல்லுவோம்? கீழ்க்ண்டவாறு நம்மை கேட்பாரானால் நாம் என்ன பதில் சொல்வோம்? நான் உன் கையில் ஒப்புவித்த உலகப் பொருட்களை நீ எவ்வாறு உபயோகித்தாய்? நீ உன் வீட்டையும், நான் உனக்கு தந்த அநேக சௌகரியங்களையும் என்னுடைய மகிமைக்காக மாத்திரம் உபயோகித்தாயா? அல்லது அவைகளை உன்னுடைய புகழ்ச்சிக்காகவும், உன்னையே பிரியப்படுத்திக் கொள்வதற்காகவும் பயன்படுத்திக் கொண்டாயா? நான் உனக்கு தந்த உடைகளை நீ எவ்வாறு உபயோகித்தாய்? அவைகளை பெருமைக்கும் மாயைக்கும், பிறரை பாவத்திற்கு ஏதுவாய் தூண்டுகிற விதமாக கவர்ச்சியாகவும் உடுத்தினாயா? அல்லது, தகுதியான வஸ்திரத்தினால் உன்னை ஒழுக்கமாய் மூடுவதற்கும், சீதோஷண நிலையிலிருந்து உன்னைக் காத்துக் கொள்வதற்காகவும் உடைகளை உடுத்தினாயா? உன் பணத்தை நீ எவ்வாறு உபயோகித்தாய்? உன் மாம்சத்தின் இச்சைகளையும் உன் கண்களின் இச்சைகளையும் உலகத்தின் ஜீவனத்தின் பெருமைகளையும் பூர்த்தி செய்வதற்கென உபயோகித்தாயா? வீணாக செலவு செய்து உன் பணத்தை சிதறடித்தாயோ? அப்படி இல்லாமல் பணத்தை உனக்கும், உன் குடும்பத்திற்கும் தேவையானதை உபயோகித்துவிட்டு, மீதியாய் இருப்பவைகளை வாங்கிக் கொள்ளும்படி நான் நியமித்த ஏழைகளின் மூலம் எனக்கு திருப்பித் தந்தாயா? நான் உனக்கு ஒப்புவித்த சரீரத்தை எப்படி உபயோகித்தாய்? நீ எனக்கு துதி செலுத்தும்படியே நாவை உனக்கு தந்தேன், அதை தீமை பேசுவதற்கும் பிரயோஜனமற்ற வீண் சம்பாஷணைகளுககும், பயன்படுத்தினாயா? அல்லது கேட்பவர்களின் செவியை கிருபை பொருந்திய வார்த்தைகளால் நிரப்பினாயா? மேலும் நான் உனக்கு நியமித்த கிரியைகளை நீ செய்து முடிக்கும்படி உனக்கு கரங்களையும் கால்களையும் இன்னும் பல உறுப்புகளையும் வழங்கியிருந்தேன். நீ அவைகளை பயன்படுத்தி உன்னை பூமிக்கு அனுப்பினவரின் சித்தத்தை செய்து முடித்தாயா? அல்லது உன் மாம்சத்தின் விருப்பத்தையும் உன் உணர்ச்சியும் நடத்திய பாதைகளுக்கு எல்லாம் உன் அவயவங்களை உன் இஷ்டத்திற்கு ஒப்புக் கொடுத்து விட்டாயா? நான் உனக்கு கொடுத்த நேரத்தை எப்படி உபயோகித்தாய்? உன் மீதியான நேரங்களில் உன் தேவனோடு உறவாட வேண்டிய நேரங்களில் உறவாடினாயா? ஊழியம் செய்ய வேண்டிய நேரங்களில் உல்லாசமாக, அல்லது உலக காரியங்களுக்காக செலவழித்தாயா? நியாயாதிபதியாம் இயேசுகிறிஸ்து நம்மைப் பார்த்து இந்தக் கேள்விகளை கேட்டால் நாம் என்ன பதில் சொல்வோம்? ஆம் ஆண்டவரே, நீர் என்னை உலகத்தில் படைத்த நோக்கத்தை நிறைவேற்றி முடித்தேன் என்று புன்னகையோடு சொல்ல முடியுமா? அல்லது தலைகுனிந்து நிற்போமா? ஒருவேளை நாம் குறைவாக காணப்பட்டால், இந்த நாளிலிருந்துதானே அதை சரியாக்க முற்படுவோம். நம் நடை உடை பாவனை சொல் செயல் எல்லாம் அவரையே பிரதிபலிக்கட்டும். கர்த்தர் கிருபையாக நமக்கு கொடுத்த எல்லாவற்றிலும் அவரையே மகிமைப்படுத்துவோம். 'ஏனென்றால், சரீரத்தில் அவனவன் செய்த நன்மைக்காவது தீமைக்காவது தக்க பலனை அடையம்படிக்கு, நாமெல்லாரும் கிறிஸ்துவின் நியாயாசனத்திற்கு முன்பாக வெளிப்படவேண்டும்' என்ற வார்த்தையின்படி நாம் நிச்சயமாக அவர்முன் நிற்க வேண்டும். அதற்காக நம்மை தயார்ப்படுத்துவோம். 'ஆதலால் நம்மில் ஒவ்வொருவனும் தன்னைக்குறித்துத் தேவனுக்குக் கணக்கொப்புவிப்பான்' (ரோமர் 14:12) என்ற வார்தையின்படி கணக்கொப்புவிக்கும அந்த நியாயத்தீர்ப்பின் நாளில் வெட்கப்பட்டு நிற்காதபடிக்கு சந்தோஷமாய் நாம் கணக்கொப்புவிக்கும்படியாக நம்முடைய கிரியைகள் காணப்படட்டும். கர்த்தரும் சந்தோஷமாய் நம்மைப் பார்த்து, உண்மையும் உத்தமுமான ஊழியக்காரனே எஜமானுடைய சந்தோஷத்திற்குள் பிரவேசி என்றுக் கூறுவார். ஆமென் அல்லேலூயா! *🌹GLORY TO JESUS🌹*
384 காட்சிகள்
8 மாசத்திற்கு முன்
#

இயேசு கிறிஸ்து

ஜீவத்தண்ணீருள்ள நதிகள் பண்டிகையின் கடைசிநாளாகிய பிரதான நாளிலே இயேசு நின்று, சத்தமிட்டு: ஒருவன் தாகமாயிருந்தால் என்னிடத்தில் வந்து, பானம்பண்ணக்கடவன். வேதவாக்கியம் சொல்லுகிறபடி என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ, அவன் உள்ளத்திலிருந்து ஜீவத்தண்ணீருள்ள நதிகள் ஓடும் என்றார். - (யோவான் 7:37-38). . நயாகரா நீர் வீழ்ச்சியில் ஒரு நிமிடத்திற்கு 50,00,000 டன் தண்ணீர் அருவியாக கொட்டப்படுகிறது. ஆனால் 1848ம் ஆண்டு, மார்ச் மாதம் 29ம் தேதி அந்த நீர்வீழ்ச்சியில் தண்ணீர் கொட்டுவது திடீரென்று நின்றது. அக்கம் பக்கத்தில் குடியிருந்தவர்கள், நீர்வீழ்ச்சியின் சத்தத்தை கேட்காததால், உலகின் கடைசி நேரத்திற்கு வந்துவிட்டோம் என்றே நினைத்தனர். ஆனால், 30 மணிநேரம் கழித்து, திரும்ப தண்ணீர் கொட்ட ஆரம்பித்தது. என்ன நிகழ்ந்தது? எரிக் ஏரி (Lake Erie) என்னுமிடத்தில் ஒரு பெரிய பனி கட்டி உடைந்து, அது மிதந்து வந்து, நயாகரா நீர்வீழ்ச்சியின் மேற் மட்டத்தில் அடைத்து கொண்டதால், தண்ணீர் போக முடியாதபடி நின்று போனது. திரும்ப வெயில் ஏறஏற பனிகட்டி உருகி, தண்ணீர் திரும்ப பாய தொடங்கியது. பனிகட்டியினால், அவ்வளவு பெரிய நயாகரா நீர்வீழ்ச்சியின் தண்ணீர் கொட்டப்படாமல் நின்று போனது. நம்முடைய வாழ்விலும் தேவனுடைய அன்பும், சந்தோஷமும் சமாதானமும் தொடர்ந்து பாய வேண்டுமானால், நம் வாழ்வில் எந்த பனிகட்டி போன்ற தடையும் காணப்படக்கூடாது. தேவன் பட்சபாதமுள்ள தேவனல்ல, அவர் நம்மேல் அன்பை எப்போதும் வெளிப்படுத்துகிற தேவனாகவே இருக்கிறார். ஆனால் நம் வாழ்வில் காணப்படும் பாவ பனிகட்டிகள், அவருடைய செயல்களுக்கு பெரிய தடையை கொண்டு வருகின்றன. அவைகளை இயேசுகிறிஸ்துவின் இரத்தத்தால் கழுவி அகற்றி விடும்போது, தேவனுடைய சமாதானமும், அன்பும் சந்தோஷமும் நம் வாழ்விலும் திரும்பவும் கரைபுரண்டு ஓடும். இயேசுகிறிஸ்து சொன்னார், 'என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ, அவன் உள்ளத்திலிருந்து ஜீவத்தண்ணீருள்ள நதிகள் ஓடும்' என்றார். இந்த ஜீவத்தண்ணீர் நம் உள்ளத்திலிருந்து நதியாக ஓடும்போது, மற்றவர்களுக்கு அது பிரயோஜனமாக மாறுகிறது. ஜீவத்தண்ணீராகிய பரிசுத்த ஆவியானவர் நம் உள்ளத்திலிருந்து நதியாக புறப்பட்டு செல்லும்போது, 'சம்பவிப்பது என்னவென்றால், இந்த நதி போகுமிடமெங்கும் சஞ்சரிக்கும் ஜீவபிராணிகள் யாவும் பிழைக்கும்; இந்தத் தண்ணீர் அங்கே வந்தபடியினால் வெகு ஏராளமான மச்சங்களும் உண்டாயிருக்கும்; இந்த நதி போகுமிடமெங்குமுள்ள யாவும் ஆரோக்கியப்பட்டுப் பிழைக்கும். நதியோரமாய் அதின் இக்கரையிலும் அக்கரையிலும் புசிப்புக்கான சகலவித விருட்சங்களும் வளரும்; அவைகளின் இலைகள் உதிர்வதுமில்லை, அவைகளின் கனிகள் கெடுவதுமில்லை; அவைகளுக்குப் பாயும் தண்ணீர் பரிசுத்த ஸ்தலத்திலிருந்து பாய்கிறபடியினால் மாதந்தோறும் புதுக்கனிகளைக் கொடுத்துக்கொண்டேயிருக்கும்; அவைகளின் கனிகள் புசிப்புக்கும், அவைகளின் இலைகள் அவிழ்தத்துக்குமானவைகள்' - (எசேக்கியேல் 47:9,12). இத்தனை ஆச்சரியமான காரியங்கள் அந்த நதி செல்லுமிடமெங்கும் நடக்கபோகிறபடியினால், அதை நாம் நம் கடின இருதயத்தினாலோ, பாவ கறைகளினாலோ கட்டுப்படுத்தாமல், அதன் போக்கிற்கு விட்டு விடும்போது, அந்த ஜீவநதி போகுமிடமெங்கும் யாவருக்கும் ஆரோக்கியத்தை கொடுக்க கூடியவர்களாக நாம் மாறுவோம். இந்த வசனங்கள், தீர்க்கதரிசன வார்த்தைகளாக உப்புக்கடலைப்பற்றி எழுதியிருந்தாலும், மிகுந்த உப்பு ஏறினபடியினால் பிரயோஜனமற்ற அந்த உப்புக்கடலே செழிப்பானதாக மாறும் என்றால், நம் வாழ்வில் பனிக்கட்டி போன்ற பாவங்களும், சுயநலங்களும், பெருமைகளும் நிறைந்த வாழ்க்கையை நாம் விட்டுவிடும்போது பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகம் நிறைந்த வாழ்க்கை அநேகருக்கு செழிப்பை நம்மூலம் நிச்சயமாக கொண்டு வரும் என்பதில் சந்தேகமேயில்லை! நாம் செல்லுமிடமெங்கும், நம் வார்த்தைகளினால், நம்மிடத்தில் உள்ள அபிஷேகத்தினால், நம்முடைய கனி நிறைந்த வாழ்க்கையினால் மற்றவர்களுக்கு ஆவிக்குரிய ஆரோக்கியத்தை கொடுக்கத்தக்கதாக நம்முடைய வாழ்க்கை மாற்றப்பட நம்மை கர்த்தருக்கு அர்ப்பணிப்போம். கர்த்தரின் சமாதானமும், சந்தோஷமும் நம் ஒவ்வொருவரின் வாழ்விலும் கரைபுரண்டு ஓடட்டும்! ஆமென் அல்லேலூயா! *🌹GLORY TO JESUS🌹*
279 காட்சிகள்
8 மாசத்திற்கு முன்
#

இயேசு கிறிஸ்து

நேர்த்தியாய் செய்கின்ற தேவன் அவர் சகலத்தையும் அதினதின் காலத்திலே நேர்த்தியாகச் செய்திருக்கிறார். - (பிரசங்கி 3:11). . வழிபோக்கன் ஒருவன் வயல்வழியே நடந்து வந்தான். அப்போது பூசணிக்காய் தோட்டத்தில் பெரிய பெரிய பூசணிக்காய்கள் காய்த்து தரையில் கொடி படர்ந்திருந்தது. அதை பார்த்த வழிப்போக்கன், என்ன கடவுளுடைய சிருஷ்டிப்பு, நிமிர்ந்து நிற்க முடியாத செடியில் இவ்வளவு பெரிய பூசணிக்காய்களை உருவாக்கியிருக்கிறார் என சலித்து கொண்டான். இதை சிந்தித்தவாறே நடந்து வந்தான் வெயில் அதிகமாயிருந்ததால் களைப்பின் மிகுதியினாலும் சாலையோரத்திலிருந்த ஒரு ஆலமரத்தின் நிழலில் படுத்தான். படுத்தவன் அயர்ந்த நித்திரை செய்தான். சிறிது நேரத்தில் ஆலமரத்தின் சிறிய பழம் ஒன்று அவன் தலையில் விழுந்தது. பூசணிக்காயை நினைத்துக்கொண்டே படுத்திருந்த அவன் தன் தலையில் பூசணிக்காய் தான் விழுந்து விட்டது என்று அலறி அடித்து கொண்டு எழுந்து பார்த்தபோது ஒரு குட்டி ஆலம்பழம் ஒன்று உருண்டு கிடந்தது. 'இந்த பெரிய மரத்தில் பூசணிக்காய் போன்ற பெரிய பழத்தை படைத்திருப்பீரானால் என் தலை தப்பியிருக்காது. ஞானமான உம் செயலுக்கு நன்றி' என்றான். ஆம் நம் தேவன் அனந்த ஞானமுள்ளவர். ஆனால் நாமோ தேவனுடைய செயலை குறை கூறும் வகையில் அநேக காரியங்களில் அதிருப்தி அடைகிறோம். குறிப்பாக ஆண்டவர் கொடுத்த வாழ்க்கைத்துணையிலே, தொழிலே, வேலையிலே ஏன் நமது உருவத்தை நினைத்தே கூட அநேக வேளையில் அதிருப்தியான எண்ணம் கடவுள் மேல் வைக்கிறோம். 'என் மனைவி அவர்களை போல் சுறுசுறுப்பானவளாகவும், கணவனின் தொழிலில் தோள் கொடுப்பவளாகவும் இருந்தால் நான் என்றோ எங்கோ போயிருப்பேன்' என்று கணவரும், 'என் கணவன் அவரை போல மனைவியை அளவுக்கதிகமாய் நேசித்து அன்பு செலுத்துகிறவராக இருந்தால், இவ்வுலகில் யாருடைய ஆதரவும் எனக்கு தேவையில்லை என உதறியிருப்பேன்' என்று மனைவியும் நினைப்பதுண்டு. யாருடன் யாரை இணைத்தால் அவர்கள் வாழ்க்கை தமக்கும் பிறருக்கும் பிரயோஜனமாய் இருக்கும் என்பதை தேவன் நன்கறிவார். அவர் உங்களுக்கு ஏற்ற துணையைத்தான் தந்திருக்கிறார்; அதுபோல, தொழிலில் வேலையிலும் கூட அந்த வேலை நமக்கு கிடைத்திருந்தால் நன்றாயிருந்திருக்குமே, என்னைவிட தகுதியறறவனுக்கு அந்த வேலை கிடைத்திருக்கிறதே, நான் இன்னும் அந்த நிலையிலேயே இருக்கிறேன்' என அவ்வப்போது எண்ணுகிறோம் தேவன் தமது தீர்மானத்தின்படி இந்த வேலையில் உங்களை வைத்துள்ளார். அந்த வேலையிலிருந்து நீங்கள் கற்றுக்கொள்ளவேண்டிய அநேக காரியங்கள் உண்டு. ஆகவே நீங்கள் எந்த நிலையில் இருந்தாலும் அது தேவனுடைய செயலே என்று அமரிக்கையோடு அமர்ந்திருங்கள். பிரியமானவர்களே, தேவனுடைய செயலை குறைபடுத்தும் அளவுக்கு எந்த ஒரு அதிருப்தியான எண்ணத்திற்கும் உங்கள் இருதயத்தில் இடம் கொடாதிருங்கள். 'நம் வாழ்வில் தேவன் செய்யும் அனைத்தும் சிறந்தவையே' என்ற திட்டமான எண்ணம் நமக்கிருக்கும்போது, நமக்கு வரும் பிரச்சனையிலே அதிருப்தியிலே என்னிடம் என்ன குறை இருக்கிறது என ஆராய்வோமேயன்றி நம் வாழ்க்கை துணையையோ வேறெந்த காரியத்தையோ நாம் குறை கூற துணிய மாட்டோம். இன்றே இப்போதே தேவன் நமது வாழ்வோடு இணைத்த அனைத்து காரியங்களுக்காகவும் நன்றி செலுத்துவோம். எல்லாம் எனக்கு ஏற்றதே என முழுமனதாய் கூறுவோம். மகிழ்ச்சியோடு வாழ்வோம். *🌹GLORY TO JESUS🌹*
195 காட்சிகள்
8 மாசத்திற்கு முன்
#

இயேசு கிறிஸ்து

ஜாமக்காரன் இதோ, திருடனைப்போல் வருகிறேன். தன் மானம் காணப்படத்தக்கதாக நிர்வாணமாய் நடவாதபடிக்கு விழித்துக்கொண்டு, தன் வஸ்திரங்களைக் காத்துக்கொள்ளுகிறவன் பாக்கியவான். - (வெளிப்படுத்தின விசேஷம் 16:15). . இந்த வசனத்திற்கு அநேக வியாக்கியானங்கள் இருக்கிற போதிலும், இஸ்ரவேலில் வழங்கப்பட்டு வந்த காரியம் இந்த வசனத்தின் அர்த்தத்திற்கு ஒத்துப் போவதால், இதை இங்கே எழுதுகிறேன். எருசலேமில் தேவாலயம் இருந்த நாட்களில் லேவியர்கள் அந்த ஆலயத்தை பரிசுத்தமாக பாதுகாத்துக் கொள்ள வேண்டியது அவர்களது வேலையாகும். ஆகையால் அவர்களின் தலைவன், முழு இரவும் பாதுகாப்பு ஒழுங்காக மற்றவர்கள் செய்கிறார்களா என்று கண்காணிப்பது வழக்கம். அதை அழுக்காகாதபடிக்கு அதைக் காக்க வேண்டியது, அங்கு ஜாமக்கார லேவியனின் பொறுப்பில் இருந்து வந்தது. எந்த ஜாமக்காரனாவது இரவில் களைப்பின் மிகுதியால் தூங்கிவிட்டால், அவர்களின் தலைவன் வந்து கண்காணிக்கும் நேரத்தில், அவனை தூங்குகிறவனாக கண்டால், அந்தக் ஜாமக்காரனை அடித்து, அவனுடைய துணிகளை உரிந்து, அவற்றை நெருப்பில் போட்டுவிடுவான். அப்போது அந்தக் காவல்காரன் துணியில்லாமல், நிருவாணமாகத்தான் தன் வீட்டிற்கு செல்ல வேண்டும். இதைத்தான் உவமையாக இயேசுகிறிஸ்து தன் மானம் காணப்படத்தக்கதாக நிர்வாணமாய் நடவாதபடிக்கு விழித்துக்கொண்டு, தன் வஸ்திரங்களைக் காத்துக்கொள்ளுகிறவன் பாக்கியவான் என்றுக் கூறிகிறார். இயேசுகிறிஸ்து சீக்கிரம் வரப் போகிறார். அதற்கான அடையாளங்கள் வெகு விரைவாக நடந்தேறி வருகின்றன. இதோ திருடனைப் போல் வருகிறேன் என்றுச் சொன்னவர் சீக்கிரம் வந்துவிடுவார். ஆனால் நாம் ஆயத்தமா? ஒவ்வொரு கிறிஸ்தவரும் இந்நாட்களில் ஜாமக்காரன்தான். கர்த்தருடைய வருகைக்கு விழித்திருந்து காத்திருக்க வேண்டியது நமது கடமை. அவர் வரும்போது நமது இரட்சிப்பின் வஸ்திரத்தில் கறை இருந்தால் அவரோடு போவது இயலாத காரியம். ஆகவே நம் வஸ்திரத்தை கறையில்லாதபடி காத்து, திருடனைப் போல் இருக்கப் போகும்; அவரது வருகைக்கு நாம் எப்போதும் ஆயத்தமாயிருக்க வேண்டும். தேவாலயத்தைக் காத்த அந்த காவல்காரன் தூங்கிவிட்டால், எப்படி தண்டனையோ, அதேப் போல நாமே தேவாலயம், இந்த சரீரத்திலும் எந்த அழுக்கும் இல்லாதபடி காத்துக் கொள்ள வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமையுமாகும். அப்படி காத்துக் கொள்ளாதப் பட்சத்தில் நம் வஸ்திரங்கள் இல்லாமல் இருக்கும் நிலைமைக்கு தள்ளப்படுவோம். அதாவது, இரட்சிப்பின் வஸ்திரம் இல்லாமல் நாம் பரலோக ராஜ்ஜியம் சேர முடியாது. இதை நாம் இயேசுகிறிஸ்து கூறின ஒரு உவமையில் காணலாம், ‘விருந்தாளிகளைப் பார்க்கும்படி ராஜா உள்ளே பிரவேசித்த போது, கலியாண வஸ்திரம் தரித்திராத ஒரு மனுஷனை அங்கே கண்டு: சிநேகிதனே, நீ கலியாண வஸ்திரமில்லாதவனாய் இங்கே எப்படி வந்தாய் என்று கேட்டான்; அதற்கு அவன் பேசாமலிருந்தான்.’ அப்பொழுது, ராஜா பணிவிடைக்காரரை நோக்கி: இவனைக் கையுங்காலும் கட்டிக் கொண்டுபோய், அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கிற புறம்பான இருளிலே போடுங்கள் என்றான் (மத்தேயு 22:11-13). ஆகவே ஜாமக்காரராய் நாம் நம் வஸ்திரம் கறைப்படாமல் பத்திரமாய்க காத்துக் கொள்வோம். இயேசுகிறிஸ்து சீக்கிரம் வருகிறார். ஆமென்! மாரநாதா! இயேசுகிறிஸ்துவே வாரும். *🙏GLORY TO JESUS🙏*
731 காட்சிகள்
9 மாசத்திற்கு முன்
போஸ்ட் இல்லை
மத்த ஆப்-ல் ஷேர் செய்ய
Facebook
WhatsApp
காப்பி லிங்க்
அழிக்க
Embed
நான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட் ...
Embed Post