இது சிரிக்க மட்டும் அல்ல... கொஞ்சம் சிந்திக்கவும் - ரிலாக்ஸ் ப்ளீஸ்!!
இது சிரிக்க மட்டுமே !!
சாந்தி : சார்... என் புருஷனை மூணு நாளா காணோம் சார். யாராவது கடத்திட்டு போயிட்டாங்களோன்னு சந்தேகமா இருக்கு... நீங்கதான் கண்டுபிடிச்சு தரனும்.
அதிகாரி : அங்க அடையாளங்கள் சொல்லுமா?
சாந்தி : நெத்தில எலுமிச்சைப்பழம் அளவுக்கு புடைச்சு இருக்கும். பின்மண்டையில பாத்திரம் வெட்டுன அளவுக்கு தழும்பு ஒன்னு, கையில சூடு போட்ட தழும்பு, அப்புறம்....
அதிகாரி : போதும்மா... நிறுத்து. உன் புருஷனை யாரும் கடத்தல... அவனேதான் எங்கயோ காசி ராமேஸ்வரம்னு போய்ட்டான். இனி வர மாட்டான்.
சாந்தி : 😂😂
ரகு : டேய் மாப்ள, கல்யாணத்தில் மணமகனும், மணமகளும் ஏன் மாலை மாத்துகிறார்கள் தெரியுமா?
தீபக் : ஏன்டா, ஏதாவது ஸ்பெஷல் காரணம் இருக்கா?
ரகு : இன்னையோடு நீ செத்தன்னு தெரிவிக்கத்தான் அவர்கள் மாலையை மாத்துகிறார்கள்.
தீபக் : 😂😂
நோயாளி : டாக்டர்! புயளள பிராப்ளத்துக்குப் போய் எனக்கு ஆபரேஷன் பண்ணணும்னு சொல்றீங்களே!
டாக்டர் : என்ன பண்றது... எனக்கு உயளா பிராப்ளம்!
நோயாளி : 😠😠
சிறந்த வரிகள் !!
முயற்சியின் பாதைகள் கடினமானவை. ஆனால், முடிவுகள் இனிமையானவை.
தொடர்ந்து முயலுங்கள்... கனவுகள் நனவாகும் வரை.
யாரையும் குறைத்து எடை போட்டு விடாதீர்கள்.
ஒருவேளை உங்களுக்கு கிடைத்த வாய்ப்புகள்
அவர்களுக்கு கிடைத்து இருந்தால்
உங்களை விட திறமைசாலியாக இருந்திருப்பார்கள்.
நாம் உதவியவர் நமக்கு நிச்சயம் உதவுவார் என்ற எதிர்பார்ப்பு இல்லாதவரை நமக்கு மன அமைதி உண்டு.
கெடுதல் !!
நமது வாழ்க்கையில் சில விஷயங்களில் அக்கறை எடுப்போம். ஆனால், வேறு ஒரு விஷயத்தில் நாட்டம் செலுத்துவோம். இதனால் ஏற்படும் கெடுதிகள் சில :
பார்க்காத பயிரும் கெடும்,
பாசத்தினால் பிள்ளை கெடும்,
கேளாத கடனும் கெடும்,
கேட்கும்போது உறவு கெடும்,
தெகட்டினால் விருந்து கெடும்,
ஓதாத கல்வி கெடும்,
ஒழுக்கமில்லா வாழ்வு கெடும்,
சேராத உறவும் கெடும்.