சமையல்
டிப்ஸ் ....டிப்ஸ்... பாகற்காய் க்ரேவி -- கசப்பே இல்லாமல் ! கால் கிலோ பாகற்காயை விறல் நீள துண்டுகளாக நறுக்கி , ஒரு பெரிய எலுமிச்சை அளவு புளியைக்கரைத்து (முதல்( கரைசலில் )வேகவிடுங்கள் . தேவையான உப்பு சேர்த்துக் கொள்ளலாம் . கடாயில் எண்ணெய் விட்டு கடுகு , 2 பெரிய வெங்காயம் நறுக்கியது , கறிவேப்பிலை சேர்த்து வதக்கி , 2 பெரிய பெங்களூர் தக்காளி நறுக்கி சேர்த்து வதக்குங்கள் .வதங்கிய பின் மஞ்சள் பொடி கால் டீஸ்பூன் ,மிளகாய்ப்பொடி 2 டீஸ்பூன் (அல்லது 3 டீஸ்பூன் )மல்லிப்பொடி 3 டீஸ்பூன் சேர்த்து , ஒரு மாங்காயையும் மீடியம் சைஸ் துண்டுகளாக சேர்த்து , புளியை 2வது & 3 வது கரைசல் சேருங்கள் . கொதி வந்ததும் வெந்த பாகற்காயையும் தேவையான உப்பும் சேர்த்து கொதிக்க விடுங்கள் . கடைசியாக 5 டேபிள் ஸ்பூன் தேங்காய் விழுது சேர்த்துக்கலந்து , மல்லித்தழை நறுக்கிப்போட்டு , கடாயை இறக்கவும் . விரும்பினால் பாதி எலுமிச்சை சாறு stove off பண்ணிய பின்பு சேர்த்துக் கலந்து விடலாம் .
#

சமையல்

சமையல் - ShareChat
434 காட்சிகள்
3 மாசத்திற்கு முன்
மத்த ஆப்-ல் ஷேர் செய்ய
Facebook
WhatsApp
காப்பி லிங்க்
அழிக்க
Embed
நான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட் ...
Embed Post