உலக ஆண்கள் தினம்
பேருந்தில் எத்தனை முறை மாறி உட்கார சொன்னாலும் சலிக்காமல் பெண்களுக்காக உட்காரும் ஆண்களுக்கு.......! சினிமாவோ திருமணமோ எங்கு சென்றாலும் குழந்தையை தூக்கி வைத்து பார்த்துக்கொள்ளும் பொறுப்பை ஏற்கும் ஆண்களுக்கு.........! முப்பத்தைந்து வயது வரையிலும் குடும்ப சூழ்நிலை காரணமாக திருமணம் செய்து கொள்ளாமல் மாடாய் உழைத்துக் கொண்டிருக்கும் ஆண்களுக்கு...........! கிரிக்கெட் மேட்ச் மற்றும் செய்திகளை சீரியல் இடைவேளையின் மட்டும் பார்த்து மனைவிக்காக விட்டு கொடுக்கும் ஆண்களுக்கு........! தான் சம்பாதிக்கும் பாதி பணத்தை தன் தங்கையின் திருமணத்திற்கு சேர்த்து வைக்கும் நல் உள்ளங்களான ஆண்களுக்கு.........! ஊருக்கே ராஜா ஆனாலும் மனைவியிடம் மட்டும் குடும்பத்துக்காக அடங்கி இருக்கும் அனைத்து ஆண்களுக்கு.........! வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்!! வாழ்த்துக்கள்!!! ஆண்களுக்கும் வெட்கம் உண்டு தன் முதல் காதலிக்கு காதல் கடிதம் கொடுக்கும் நேரத்தில்... ஆண்களுக்கும் கூச்சம் உண்டு திருமண பேச்சை அம்மா முதன்முதலாய் சொல்லும் நேரத்தில்....‌ ஆண்களுக்கும் மாதாந்திர வலி உண்டு மாசகடைசி மூன்று நாளில் குடும்பத்தை ஓட்டும் நேரத்தில்... ஆண்களுக்கும் பிரசவ வலி உண்டு மனைவி தலைபிரசவத்தில் உள்ளே இருக்கும் நேரத்தில்... ஆண்களுக்கும் திமிர் உண்டு அனைத்து வலிகளையும் சேர்த்து வைக்கும் நேரத்தில்..‌. ஆண்களுக்கும் அழகு உண்டு ஆங்காங்கே அரும்பு மீசை முளைக்கும் நேரத்தில்.... ஆண்களுக்கும் அழுகை உண்டு பல ஏமாற்றங்களை நெஞ்சில் சுமந்த நேரத்தில்...‌ ஆண்களுக்கும் தாய்மை உண்டு தன் மகளை ஆசையாக கொஞ்சும் நேரத்தில்.. ஆண்களுக்கும் பொறுப்பு உண்டு தனக்கு சாப்பிடாமல் தன் குழந்தைக்கு ஊட்டும் நேரத்தில்..‌‌ ஆண்களுக்கும் மனசு உண்டு அந்த மனதில் ஈரம் உண்டு அந்த ஈரத்தில் பாசம் பரிவு உண்டு அந்த பரிவில் மனைவி மக்கள் உண்டு அந்த மனைவியிடம் உயிர் உண்டு அந்த உயிரில் அவள் மட்டுமே உண்டு ஆண்கள் தின நல்வாழ்த்துக்கள்
#

உலக ஆண்கள் தினம்

உலக ஆண்கள் தினம் - ShareChat
1.2k காட்சிகள்
7 மாசத்திற்கு முன்
போஸ்ட் இல்லை
மத்த ஆப்-ல் ஷேர் செய்ய
Facebook
WhatsApp
காப்பி லிங்க்
அழிக்க
Embed
நான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட் ...
Embed Post