மதுரை மீனாட்சிஅம்மன் திருக்கல்யாணம்
48 Posts • 233K views
Banu
1K views 4 months ago
#🙏🏻மதுரை மீனாட்சியம்மன்🛕 எங்கள் கம்பெனிக்கு தமிழ் தெரிந்த நபர்கள் மட்டும் தேவை விருப்பமுள்ளவர்கள் ஆம் என்று தெரியப்படுத்தவும் Whatsapp only- 8825570654 https://chat.whatsapp.com/DoyGcetxjrjHAqVkSDc8ku #மீனாட்சிஅம்மன் #மதுரை மீனாட்சிஅம்மன் திருக்கல்யாணம் #மதுரை மீனாட்சிஅம்மன் வளையல்அலங்காரம் #மதுரை மீனாட்சிஅம்மன்
19 likes
10 shares
மதுரை – மீனாட்சி அம்மன் திருக்கோவில்... மதுரை என்றாலே பலருக்கும் உடனடியாக நினைவுக்கு வருவது மீனாட்சி அம்மன் கோவிலாகும். சிவபெருமான் மற்றும் அம்மன் இருவருக்குமான கோவில்களில் முதன்மைச் சிறப்பு பெற்றது மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில். மதுரையில் மீனாட்சி பிறந்ததாகக் கருதப்படுவதால், மீனாட்சி சன்னிதானம் முதன்மையாக உள்ளது. அம்மனை வணங்கிய பின்பே சிவபெருமானை வணங்கும் மரபு கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த ஆலயம் மீனாட்சி, சுந்தரேஸ்வரரை முதன்மை விகிரகங்களாகவும் கடம்ப மரத்தினை தலவிருட்ஷமாகவும் கொண்டுள்ளது. பாண்டிய மன்னன் குலசேகரப் பாண்டியனின் கனவில் சிவபெருமான் வந்ததால் அவன் கடம்பவனம் என்ற காட்டை அழித்து மதுரை மாநகரையும் இந்த சிவசக்தி தலத்தையும் அமைத்ததாகக் கருதப்படுகிறது. மீனாட்சி அம்மன் கோவிலைச் சுற்றி நான்கு மாடங்கள் அமைத்துள்ளதால் நான்மாடக்கூடல் என்றப் பெயரும் மதுரைக்கு உண்டு. சிவபெருமானின் அணிகலன்களில் ஒன்றான பாம்பு வட்டமாக தன் வாலை வாயினால் கவ்விக் கொண்டு இத்தலத்தின் எல்லையைக் காட்டியதால் ஆலவாய் என்ற பெயர் இத்தலத்திற்கு ஏற்பட்டது என்று ஒரு வரலாறு கூறுகிறது. மதுரை மீனாட்சி சுந்தரேஷ்வரர் கோயில் 15 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இக்கோயில் எட்டுக் கோபுரங்களையும் இரண்டு விமானங்களையும் உடையது. இங்குள்ள கருவறை விமானங்கள், இந்திர விமானம் என்று அழைக்கப்படுகிறது. 32 சிங்கங்களும், 64 சிவகணங்களும், 8 வெள்ளை யானைகளும் இந்த கருவறை விமானங்களைத் தாங்குகின்றன √ #மதுரை #மதுரை பசங்க #மதுரை மீனாட்சிஅம்மன் #மதுரை மீனாட்சிஅம்மன் திருக்கல்யாணம் #மீனாட்சிஅம்மன்
95 likes
2 comments 37 shares