Failed to fetch language order
💝 இல்லத்தரசிகளுக்கு இன்ப அதிர்ச்சி!🪙
93 Posts • 2M views
கரும்புலி
1K views 3 months ago
தமிழ் இனப்படுகொலை கண்டன கூட்டம் மீனவர் தாக்குதல் பிரச்சனை கூட்டத்தில் தன் படம் பற்றி பெருமை பேசும் தற்குறி ஈன பய 😈😡🤮 #🚌பஸ் மீது லாரி மோதி விபத்து – 15 பேர் நிலை!! #👶மூன்றாவது குழந்தையை பெற்ற பிரபல பாடகி! #📺வைரல் தகவல்🤩 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #💝 இல்லத்தரசிகளுக்கு இன்ப அதிர்ச்சி!🪙
13 likes
11 shares
கரும்புலி
596 views 3 months ago
சென்னை எம்.ஆர்.எஃப். நிறுவனத்தில் பயிற்சி முடித்த பணியாளர்ளுக்கு பணி நிரந்தரம், மருத்து காப்பீடு உள்ளிட்ட அடிப்படை உரிமைகள் கிடைக்கப்பெற தமிழ்நாடு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்! @CMOTamilnadu @mkstalin சென்னையில் உள்ள எம்.ஆர்.எப். நிறுவனத்தில் பயிற்சியாளர்களாக பணியில் சேருகின்ற தொழிலாளர்களை சட்டப்படி இரண்டு ஆண்டுகளுக்குள் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற விதிமுறைக்கு மாறாக 6 ஆண்டுகளுக்கும் மேலாக அவர்களை வெறும் பயிற்சியாளர்களாகவே உற்பத்தியில் ஈடுபடுத்தி, தமிழ்நாட்டு இளைஞர்களின் உழைப்பை சுரண்டும் கொடும்போக்கு வன்மையான கண்டனத்துக்குரியது. எம்ஆர்எஃப் நிறுவனத்தின் உழைப்புச்சுரண்டலுக்கு எதிராக தொழிற்சங்க நிர்வாகிகள் நிர்வாகத்துடன் பலமுறை பேச்சு வார்த்தை நடத்தியும் இதுவரை அவர்களின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. அதுமட்டுமின்றி, எம்ஆர்எஃப் தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கான குழு மருத்துவக் காப்பீடானது நிர்வாகத்தின் பணத்திலிருந்து மேற்கொள்ளப்படாமல் கடந்த 20 ஆண்டுகளாக தொழிலாளிர்களின் ஊதியத்திலேயே பிடித்தம் செய்யப்படுவது மற்றுமொரு பெருங்கொடுமையாகும். இது முழுக்க முழுக்க தொழிலாளர்களின் அடிப்படை உரிமைக்கு எதிரானதாகும். பயிற்சி தொழிலாளர்களின் பணி நிரந்தரம் தொடர்பாக தொழிற்சங்கங்களும், தொழிலாளர்களும், எம்ஆர்எஃப் நிர்வாகத்திற்கு அழுத்தம் கொடுக்கின்ற காரணத்தால், தொழிலாளர்களுடன் மோதல் போக்கை கடைபிடிக்க வேண்டும் என்ற தீய நோக்கத்துடன் எம்ஆர்எஃப் நிர்வாகமானது இந்த ஆண்டிற்கான மருத்துவ காப்பீட்டுக்கான முன் வைப்புத் தொகையை வழங்கவும் மறுக்கிறது. அதனால், சென்ற ஆண்டு மருத்துவ காப்பீடு முடிவுபெற்று, கடந்த இரண்டு மாதங்களாக, மருத்துவ காப்பீடு புதுப்பிக்கப்படாத சூழ்நிலையில் நோயுற்ற பல தொழிலாளர்கள் கடந்த இரு மாதங்களாக தங்கள் ஊதியத்தை செலவிட வேண்டிய நெருக்கடியும் ஏற்பட்டுள்ளது. மிகப்பெரிய உடல்நலப் பாதிப்புக்குள்ளான பல தொழிலாளர்கள் இலட்சக்கணக்கில் மருத்துவச் செலவு செய்ய வேண்டிய கொடுஞ்சூழலும் ஏற்பட்டுள்ளது மிகுந்த வேதனைக்குரியதாகும். இது குறித்தும் தொழிலாளர் நிர்வாகத்தினர், எம்ஆர்எஃப் நிறுவனத்திடம் முறையீடு செய்துள்ளதுடன், தங்களின் அடிப்படை உரிமைக் காக்க போராட்டத்திலும் ஈடுபட்டனர். மேலும், இந்திய ஒன்றிய அரசு புதிதாக கொண்டுவந்துள்ள 'நேப்ஸ்' திட்டத்தின் கீழ், திறன் மேம்பாட்டுக்காக தொழிலாளர்களை சேர்க்கும் எம்ஆர்எஃப் நிர்வாகம், தமிழ்நாட்டு இளைஞர்களை குறைந்த அளவில் சேர்த்துவிட்டு, அதிகளவில் வடமாநிலத்தவரை பணியில் சேர்க்கும் கொடுமையும் அரங்கேறி வருகிறது,எனவே ஒன்றிய அரசின் நேப்ஸ் திட்டத்தைசெயல்படுத்துவதை நிறுத்தக்கோரியும் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம் செய்கின்ற சூழல் ஏற்பட்டவுடன், எம்ஆர்எஃப் நிறுவனமானது போராட்டத்தை முடக்கும் நோக்கத்துடன் உடனடியாக தொழிலாளர்களின் உணவகத்தை மூடியதுடன், பேருந்து சேவையையும் நிறுத்துவிட்டது. அதுமட்டுமின்றி, தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறைக்கு எவ்வித அறிவிப்பும் தரமால் போராடிய தொழிலாளர்களை வெளியேற்றி கதவடைப்பும் செய்துவிட்டது. தொழிலாளர் நலச்சட்டத்தின் விதிமுறைகள் எதுவொன்றையும் பின்பற்றாத சென்னை எம்ஆர்எஃப் நிறுவனத்தின் தொழிலாளர் விரோதபோக்கிற்கு எதிராக, தொழிலாளர்கள் சார்பாக தமிழ்நாடு அரசின் தொழிலாளர் நலத்துறையிடம் பல முறை மனு அளித்தும் திமுக அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல், வேடிக்கை பார்ப்பதுதான் கொடுமையின் உச்சமாகும். தாராளமான நிலம், தடையற்ற மின்சாரம், வேண்டிய அளவு நீர், பல கோடி வரிச் சலுகை என்று வாரி வழங்கி பன்னாட்டு நிறுவனங்களிடம் ஒப்பந்தம் போடும் திமுக அரசு, நம் தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று எவ்வித நடவடிக்கையும் எடுக்காதது ஏன்? நிரந்தரப் பணி, முறையான ஊதியம், உரியப் பணி நேரம் என்று இவற்றில் எது ஒன்றையும் பன்னாட்டு நிறுவனங்கள் தரமறுப்பது தமிழ்நாட்டு தொழிலாளர்களின் உழைப்பை உறிஞ்சி குருதியைக் குடிக்கும் கொத்தடிமை முறையில்லையா? சமத்துவம், சம உரிமை, சமூகநீதி ஆகியவற்றின் காவலர்கள் தாங்கள்தான் என தற்பெருமை பேசும் திமுக ஆட்சியாளர்கள் உரிமைக்காகப் போராடும் தொழிலாளர்களின் பக்கம் நிற்காமல், எம்ஆர்எஃப் நிறுவனத்தின் தொழிலாளர் விரோதப்போக்கிற்குத் துணைபோவது நம்முடைய தொழிலாளர்களுக்குச் செய்கின்ற பச்சைத்துரோகமாகும். ஆகவே, தமிழ்நாடு அரசு சென்னை எம்ஆர்எஃப் தொழிற்சாலை நிர்வாகத்திடம் தொழிலாளர் நலத்துறை மூலம், உடனடியாக முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி, தொழிலாளர்களின் பணி நிரந்தரம், மருத்துவ காப்பீடு உள்ளிட்ட அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன். https://x.com/Seeman4TN/status/1970045720796209326?t=hHbhvBZGOYixz8f4F0z4iQ&s=19 #✨ இனிய நவராத்திரி நல்வாழ்த்துக்கள் 🎉🪔 #🛕புரட்டாசி மாதம் வழிபாடு #💝 இல்லத்தரசிகளுக்கு இன்ப அதிர்ச்சி!🪙 - செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📺வைரல் தகவல்🤩
15 likes
10 shares