பெண்மை
பெண் பார்க்கும் படலம் தொடங்கி பல வருஷமாச்சி........ யார்க்க வந்த அனைவரையும் கணவனாய் நினைத்து தான் காப்பி கொடுத்கேன்.......... அடுத்து ஐந்து நிமிடங்களில் அறுக்க பட்டது என் தாலி........!!!!! சொல்லி அனுப்புறோமென்று சொல்லி சென்ற வார்த்தை கொண்டு........!!!!! நான் மலர்ந்தும் வாசம் வீசாத மலரோ........ தேடி தேனீக்கள் வர வேண்டாம்....... வண்டுகளுக்கு கூடவா வழி தெரியவில்லை.........!!!!!!! கல்யாண சந்தையில் விலை போகாத பொம்மை நான்........!!!! படைத்தவுனுக்கு பாரமாய் அவனிடத்திலே......!!!! கூட படித்தவள் கூப்பிடுகிறாள்..... அவள் பிள்ளை ஆளாகி விட்டாள் என்று..... கால சக்கரம் சுழன்று கொண்டேயிருக்கிறது என்னை சுமந்து கொண்டு.....!!!! அழகை மட்டும் அவையில் வைத்த நான் இன்று... அவற்றையும் அடமானம் வைத்து விட்டேன் என் அகவையிடம்......!!!! கட்டி முடிக்க பட்ட என் கருவறை...காலியாய் கிடைக்கிறது....... குடி போக குழந்தை இன்றி.....!!!!! என் தலையனையை கேட்டு பாருங்கள்....கணவனை நினைத்து அவற்றுடன் நான் புரிந்த காதல் காவியத்தை........!!!!!! பேருந்தில் உரசி சென்றவனுக்கு தெரிவதில்லை..... அவன் மூட்டி சென்ற காம தீயை தணிக்க நான் தவிக்கும் தவிப்பு......!!!!!!!?? நான் வினை நிலம் தான்........ விதைக்க ஆளில்லாமல் தரிசாய் மாறிய தமிழ்த்தாயின் எழுதெதுப்பிழை...... இராமன் வேண்டாம்....... இராவணன் கூடவா வரவில்லை......!!!!!! சீதனம் இல்லாமல் இந்த சீதையை தூக்கிச்செல்ல...... தந்தையே........!!!! பாரமாய் இருந்தால் சொல்லி விடுங்கள்..... இறக்கி வைத்து விடுகிறேன் எனது இறுதி மூச்சை..... இப்படிக்கு #பெண்மை
#

பெண்மை

பெண்மை - cine spot - ShareChat
109 காட்சிகள்
14 மணி நேரத்துக்கு முன்
மத்த ஆப்-ல் ஷேர் செய்ய
Facebook
WhatsApp
காப்பி லிங்க்
அழிக்க
Embed
நான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட் ...
Embed Post