ShareChat
click to see wallet page

"பிரத்யட்ச நாராயணனுடைய பாததீர்த்தம் இன்றைக்குத் தான் நான் தன்யனானேன்" பிரதிவாதி பயங்கரம் உ.வே.அண்ணங்கராசாரி காஞ்சிபுரம் சமீபம் கீழம்பி என்னும் கிராமம். வயல் வரப்புகளின் மேல் நடந்து செல்ல வேண்டிய நிர்பந்தம் பிரதிவாதி பயங்கரம் உ.வே. அண்ணங்கராசாரியாரும் உடன் வந்து கொண்டிருந்தார் அவர் மிகப் பெரிய வைணவத் தலைவர். வைணவ சம்பிரதாயங்களைக் குறைவு இல்லாமல் அனுஷ்டிப்பவர் பெரியவாளிடம் இமாலய பக்தி வைத்திருந்தார். வரப்பின்மேல் தட்டுத்தடுமாறி நடந்து கொண்டிருந்த போது அண்ணங்கராசார்ய ஸ்வாமி கைகளை கூப்பிக்கொண்டு தேவரீர் ஒரு நிமிஷம் அப்படியே நிற்கணும் என்று வேண்டினார் பெரியவா நின்று விட்டார்கள். வரப்பை ஒட்டி வயலுக்கு நீர் பாய்ச்சும் வாய்க்கால் வழிந்து ஓடிக்கொண்டிருந்தது இரு கைகளாலும் அந்தத் தண்ணீரை எடுத்து பெரியவாளின் திருப்பாதங்களில் விட்டார் அண்ணங்கராசாரியார். பெரியவாள் அப்போது அசையாமல் நின்றார்கள் பெரியவாளின் பாத தீர்த்தத்தைத் தன் தலையில் தெளித்துக்கொண்டு சிறிதளவு அருந்தினார். இது பிரத்யட்ச நாராயணனுடைய பாததீர்த்தம் இன்றைக்குத் தான் நான் தன்யனானேன் என்று மனம் நெகிழக் கூறிவிட்டு தேவரீர் மன்னிக்கணும் தாமதப்படுத்தி விட்டேன் என்று உளமாரக் கூறினார். அண்ணங்கராசாரியார் எப்பொழுதும் பெரியவாளின் இரு பாதங்களையும் பிடித்துக் கொண்டு தான் வந்தனம் செய்வார். அவருடைய பிறந்த நாளுக்கு மடத்திலிருந்து ஒரு மூட்டை அரிசியும் பத்தாறு வேஷ்டியும் அனுப்புவது வழக்கம். இப்படி விளம்பரம் இல்லாமல் பெரியவாளிடம் பக்தி செலுத்தியவர்கள் அநேகம் பேர்கள். பெரியவா சிவனடியார்களுக்கு சிவன். திருமால் அடியார்களுக்குத் திருமால். ஆக மொத்தம் ஸகுண பிரம்மம். "ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர" #periyava #mahaperiyava #truestory #kanchimahaperiyava #kanchimahan #kanchipuram #kanchikamakshiamman #kamakshiamman #mahaperiyavamagimaigal #sageofkanchi #devotional #viralvideo #hindutamil #jai mahaperiyava #periyava mahaperiyava #🙏கோவில் #🙏ஆன்மீகம்

952 ने देखा