#💐Have a nice day🤩*ஓம் சரவண பவ*⚜️
அழகின் வடிவம் கண்டு
அளவில்லா ஆனந்தத்தில்
அடியேனின் எழுது கோலும்
ஆர்ப்பரித்துக் கொண்டது
அருள் வேலனை அலங்கரிக்க
எனைக் காத்து
எந்தன் சிந்தையில்
எப்பொழுதும் வீற்றிருக்கும்
எம்பரம் பொருளே
என் முருகனே
தினமும் எனை எழுப்பும்
முதல் பறவை கொண்டவனே
வேட்டைக்கும் வேளாண் மைக்கும்
முதல் காவலனே என்
மானம் காத்தவனே
மூத்தவனே முதல் குடியோனே
தமிழ் கடவுளின் ஆதவனே
தாமரையில் தவழும் ஆறுமுகனே
என் முருகப் பெருமானே
உனை தினமும் தொழ வந்தேனே
உன் கவசம் எனைக் காத்திட
உனை நித்தம் பாடிட
ஓம் சரவண பவனே
என திருநாமம் ஒலித்திட
செந்தூரில் உனை சரணடைவேனே
*ஓம் முருகா போற்றி*
🙏⚜️🙏⚜️🙏⚜️🙏 #🙏வணக்கம்💐 #👌இந்த நாள் நல்ல நாள்🤝 #🙏ஆன்மீகம் #🌻🌻காலை வணக்கம்🌻🌻