ShareChat
click to see wallet page

பெரியவா ஓரிடத்தில் தங்கியிருந்தார் அன்று ஏகாதசி தண்ணீர் கூட சாப்பிடமாட்டார். அங்கே ஒருவர் மின்சாரம் பழுது பார்த்துக் கொண்டிருந்தார் மணி ஆகிக் கொண்டே இருந்தது. அதைப் பார்த்த பெரியவா, இந்த ஆள் சாப்பிடவே போகாமல் வெலை செய்து கொண்டிருக்கிறார் சாப்பிட்டு விட்டு வரச்சொல்லுங்கள் என்கிறார். அதைக் கேட்டுவிட்டு அவர் இன்று ஏகாதசி நான் சாப்பிட மாட்டேன் என்றார். அவர் மராட்டிக்காரர் மராட்டியர் ஏகாதசி உபவாசங்களில் மிகவும் கண்டிப்பாக இருப்பார்கள். ஆச்சர்யப்பட்ட பெரியவா சரி சாப்பிட வேண்டாம் டீயாவது குடித்து விட்டு வரச் சொல்லுங்கள் என்றார். அவரோ நான் தண்ணி கூடக் குடிக்க மாட்டேன் நீங்க கவலைப்படவேண்டாம் என்றார் அதைக் கேட்டதும் அன்று முதல் ஏகாதசியில் குடித்த வந்த பாலையும் பெரியவா விட்டுவிட்டார். அந்த பழுது பார்க்க வந்தவரிடமிருந்து ஓர் உபதேசம் பெற்றதாக நினைத்தாரோ இந்த ஜகத்குரு இப்படி ஏகாதசி தண்ணீர் கூட இல்லாமல் கழிந்தது மறுநாள் துவாதசி. ஏகாதசியில் பட்டினி கிடக்காவிட்டால் கூட நாமெல்லாம் துவாதசியில் பாரணை என்று சொல்லிக்கொண்டு சீக்கிரமாகச் சாப்பிட உட்கார்ந்துவிடுவோம். சாஸ்திரப்படி துவாதசி ஸ்ரவண நட்சத்திரத்தில் வந்துவிட்டால் ஏகாதசிக்கு பட்டினி கிடக்காவிட்டாலும் துவாதசியில் தண்ணீர் கூடக் குடிக்கக் கூடாது என்பர். அப்படிப்பட்ட துவாதசியாக அமைந்து விட்டதால் பெரியவாளுக்கு அன்றும் உபவாசம். அடுத்த நாள் பிரதோஷம் அதில் பகலெல்லாம் விரதமிருந்து இரவு சிவ பூஜை பண்ணி சிவ தரிசனமான பின் தான் உண்பது வழக்கம். அதிலும் பிரதோஷம் ஞாயிற்றுக்கிழமையில் வந்துவிட்டால் சூரியாஸ்தமனம் ஆன பிறகு சாப்பிடக் கூடாது. நாலாம் நாள் மகாசிவராத்திரி அன்றும் உபவாசம் தீர்த்தமாட மட்டும்தான் சுவாமிகள் தண்ணீரைப் பார்த்தார். அவ்வளவு கடுமையாக கடுமையாக உபவாசங்களைத் தொடர்ந்து அனுஷ்டித்தவர் அவர். அப்படிப்பட்டவர்தான் வேளாவேளைக்குப் பசியெடுக்காத நிலை எனக்கு இன்னும் வரவில்லை என்கிறார். பின் குறிப்பு : இன்று கார்த்திகை மாத தேய்பிறை ஏகாதசி - ரமா ஏகாதசி. "ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர" #periyava #mahaperiyava #truestory #kanchimahaperiyava #kanchimahan #kanchipuram #kanchikamakshiamman #kamakshiamman #mahaperiyavamagimaigal #sageofkanchi #devotional #viralvideo #hindutamil #jai mahaperiyava #periyava mahaperiyava #🙏கோவில் #🙏ஆன்மீகம்

874 காட்சிகள்