ஓசூர் டு பாகலூர் சாலை கடந்த ஒரு வருடம் ஆக பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்று வந்த நிலையில் அது தற்பொழுது முடிவடைந்து சாலைகள் சீரமைக்கும் பணி நடைபெற்று வருகின்றன. அதற்காக அருகில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றி சாலைகளை விரிவுபடுத்தி தார் சாலை அமைக்கும் பணி தற்பொழுது இன்று (டிச.18) நடைபெற்றது. இதனால் அச்சாலையில் சற்று போக்குவரத்து நெரிசல் அவ்வப்போது ஏற்பட்டு வருகின்றன. #ஓசூர்