ShareChat
click to see wallet page

10- 01- 2026 இன்று என்னுடைய அப்பாவின் 29 ஆம் ஆண்டு நினைவுநாள் 💐🙏 அப்பாவை சிறுவயதிலேயே இழந்துவிட்டால் எவ்வளவு வறுமை, அசிங்கம், அவமானம், கேலிப்பேச்சு, தலையில் ஏறி ஆட்டம் போடுவது என அனைத்தையும் நானும் எங்க அம்மாவும் நிறைய பார்த்து விட்டோம். என் அம்மா என்னைத் தனியாக வளர்க்க பட்டப்பாடு கொஞ்சம் நஞ்சம் இல்லை. எத்தனை நாள் நிம்மதி இல்லாமல் தங்குவதற்கு வீடு சாப்பாடு இல்லாமல் கூட நிறைய நாள் இருந்திருக்கிறோம். நான் சொன்ன இந்த உண்மையை சிறுவயதிலேயே தந்தையை இழந்த வீட்டிற்கு ஒரு பிள்ளையாய் தாயுடன் தனியாக வாழ்ந்த பலர் அனுபவித்து இருப்பார்கள். அவரவர் அவரவர் செய்த பாவத்திற்கும், துரோகத்திற்கும் கர்மவினை பலன் நிச்சயமாக உண்டு. இப்போதும் நான் பழயதை எல்லாம் நினைத்துப் பார்த்தால் தூக்கம் வராது. கடவுள் எல்லோருக்கும் ஒரே மாதிரியான வாழ்க்கையைத் தருவதில்லை வலி இல்லாமல் வாழ்க்கையும் இல்லை. நான் தனியாக வாழ்ந்த 14 வருடமும் எத்தனையோ பிளாக்மெயில்கள் துரோகங்களையும் ஏமாற்றங்களையும் கேட்க ஆள் இல்லாமல் என் தலையில் ஏறி ஆட்டம் போட்ட நன்றிகெட்டவர்களையும் நிறைய பார்த்துவிட்டதால் தற்போது எனக்கு எல்லாம் பழகிப் போய் விட்டது சாகும் வரை எனக்கு பாடம் கற்பிக்க தயாராக இருக்கும் கும்பலுக்கும் என்னுடைய அட்வான்ஸ் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன் #dad #death #DeathAnniversary #imissyou #dadlife #appa #fatherlove #father #fatherson #அப்பா #அம்மா அப்பா #அப்பா சோக கவிதைகள் #அம்மா #நினைவுநாள்

2.6K ने देखा
14 दिन पहले