"கவியரசரின் சந்தேகத்தைத் தீர்த்துவைத்த காஞ்சி மகான்"
கவியரசர் கண்ணதாசன் ஆத்திகத்தின் பக்கம் திரும்பத் தொடங்கியிருந்த காலகட்டம் அது.
நாத்திகத்தை நாடி நின்றபோது காஞ்சி மடத்தின் பக்கம்கூட வந்திராத அவர் பக்திப் பாதைக்குத் திரும்பியதும் மகானின் தரிசனத்தை நாடி பலமுறை ஸ்ரீ மடத்துக்கு வந்திருக்கிறார்.
அப்படி ஒரு முறை அவர் காஞ்சி மடத்துக்கு வந்திருந்த சமயத்தில் மகானுக்கும் அவருக்கும் இடையேயான உரையாடல் ரொம்ப நேரம் நீண்டது.
இந்து மதத்தின் தத்துவங்கள் பலவற்றில் தனக்கு இருந்த சந்தேகங்களைக் கேட்டுக் கொண்டிருந்தார், கண்ணதாசன்
இந்து மதம் சார்ந்த தத்துவங்களின் நம்பிக்கைகளின் இன்னொரு கோணத்தை அவருக்கு விவரித்துச் சொல்லிப் புரிய வைத்துக் கொண்டிருந்தார் மகாபெரியவர்.
அந்த சமயத்தில் சுவாமீ எனக்கு ஒரு சந்தேகம் பால் என்றாலே அது வெள்ளை நிறத்தில்தானே இருக்கும்.
ஆனால் பெருமாள் பள்ளிகொண்டிருக்கும் திருப்பாற்கடல் நீல நிறத்தில் காட்சி தருவதாக அல்லவா குறிப்பிட்டிருக்கிறார்கள்.
புராணங்களும் அப்படித்தானே சொல்கின்றன அது எப்படி பாற்கடல் நீலமாகத் தெரியும் என்று கேட்டார் கவியரசர்.
அவருக்கு உடனடியாக பதில் சொல்லாத மகான் கொஞ்ச நேரம் இரு ஒருத்தர் இங்கே வரப்போகிறார் அவர் வந்ததும் உனக்கு விளக்கமா சொல்றேன் என்றார்.
பெரியவர் சொன்னபடியே காத்திருந்தார் கண்ணதாசன் சுமார் அரைமணி நேரம் கழித்து பெரிய நகைக்கடை ஒன்றின் உரிமையாளர் மகானை தரிசிக்க வந்தார்.
மகாபெரியவரின் பரமபக்தரான அவர் விலை உயர்ந்த மரகதக்கல் ஒன்றை எடுத்து வந்திருந்தார்.
கனிகள் புஷ்பங்களுடன் அந்தக் கல்லையும் வைத்து பெரியவர் முன் சமர்ப்பித்தார்.
தனக்கு முன்னால் வைக்கப்பட்டவற்றைப் பார்த்ததும் மகான் தன்னருகே இருந்த அணுக்கத் தொண்டர் ஒருவரை அழைத்தார்.
கோசாலையிலிருந்து ஒரு பாத்திரத்துல கறந்த பால் கொஞ்சம் வாங்கிண்டு வா சொன்னார் பிறகு கண்ணதாசனை தம்மருகே அழைத்தார்.
சில நிமிடத்தில் கறந்த பசும்பாலுடன் வந்தார் அணுக்கத் தொண்டர்.
அந்தப் பாலை இதோ இங்கே வை இந்த மரகதக் கல்லை எடுத்து அதுல போடு உத்தரவு பிறந்தது மகானிடமிருந்து.
இந்த சமயத்தில் நகைக்கடை அதிபருக்குள்ளும் கவியரசருக்குள்ளும் இருவேறு விதமான எண்ணங்கள் ஓடின.
சுத்தமான மரகதத்தைப் பரிசோதிக்கும் முறை, அதைப் பாலில் போட்டுப் பார்ப்பதுதான். எனவே, 'தான் கொண்டுவந்த கல்லின் தரத்தை சந்தேகப்பட்டு மகான் அப்படிச் செய்கிறாரோ?' என்ற எண்ணம் நகைக்கடைக்காரருக்குள் எழுந்து அவரைப் பதற்றப்படுத்தியது.
கவியரசருக்கு உள்ளே கொஞ்ச நேரம் முன்னால் நாம் கேட்ட கேள்விக்கு யாரோ வந்ததும் பதில் சொல்வதாகச் சொன்னாரே அது இதுவாக இருக்குமோ என்ற எண்ணம் இழையோடியது.
மகான் உத்தரவுப்படி பாலில் மரகதக் கல்லை இட்டதும் பால் முழுக்க இளம் பச்சை நிறமாகத் தெரிந்தது.
என்ன பாலின் நிறம் மாறி இருக்கா இல்லை உள்ளே பச்சைக்கல் இருக்கறதால இப்படித் தெரிகிறதா தெரியாதவர் போல் கேள்விகேட்டு கவியரசர் முகத்தைப் பார்த்தார் மகான்.
புரிந்து கொண்ட தன் அடையாளமாக மெய்சிலிர்த்து வாய் பொத்தி நின்றார் கவிஞர்.
திருப்பாற்கடல் வெள்ளைதான் அதில் மேகவண்ணப் பெருமாள் சயனித்துஇருப்பதால் அந்த நிறத்தை உள்வாங்கி பாற்கடலும் மேகவண்ணமாய்க் காட்சி தருது எல்லோருக்கும் புரியும்படி சொன்னார் மகான்.
அதைக் கேட்டதும் நகைக்கடை அதிபருக்கும் சந்தேகம் தீர்ந்தது மகான் தான் சமர்ப்பித்த கல்லை சந்தேகப்படவில்லை.
கவிஞருக்கு இருந்த சந்தேகத்தைத் தீர்த்து வைக்க அதைப் படுத்தியிருக்கிறார் புரிந்து கொண்ட அவர் மகானைப் பணிந்து பிரசாதம் பெற்றுக் கொண்டு புறப்பட்டார்.
சற்று நேரத்துக்குப் பிறகு மகானிடம் உத்தரவு பெற்றுக் கொண்டு புறப்பட்ட கவியரசர் அந்த அனுபவத்தையே பாடமாகக் கொண்டு ஒரு பாடலை இயற்றினார்.
திருப்பாற்கடலில் பள்ளிகொண்டாயே ஸ்ரீமந் நாராயணா என்று இப்போதும் எங்காவது எதிரொலித்து எம்பெருமான் புகழ்பாடும் அந்தப் பாடல் பிறந்த வரலாற்றின் பின்னணியாக இருப்பது மகாபெரியவரின் இந்த மகத்தான அனுகிரஹம் தான் என்பதைச் சொல்ல வேண்டுமா என்ன.
"ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர"
#periyava #mahaperiyava #truestory
#kanchimahaperiyava #kanchimahan
#kanchipuram #kanchikamakshiamman #kamakshiamman
#mahaperiyavamagimaigal
#sageofkanchi #devotional #viralvideo #hindutamil #periyava mahaperiyava #jai mahaperiyava #🙏ஆன்மீகம் #🙏கோவில்