🌾 தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள் 🌾
🍜🍜🍜🍜🍜🍜
🌾தை 1 தமிழர்களால் சிறப்பாக கொண்டாடப்படும் ஒரு தனிப்பெரும் விழா. தமிழர் திருநாளாக தமிழ்நாடு, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகள், வட அமெரிக்கா, தென் ஆபிரிக்கா, மொரிசியசு என உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இவ்விழா சமயங்கள் கடந்து அனேக தமிழர்களால் கொண்டாடப்படுகிறது. பொங்கல், உழைக்கும் மக்கள் இயற்கைக்கும், மற்ற உயிர்களுக்கும் சொல்லும் விழாவாக கொண்டாடப்படுகிறது.
🍝🍜🍝🍜🍝🍜
🌾சங்ககாலத்தில் அறுவடை காலத்தில் நல்ல மழை பெய்யவும், நாடு செழிக்கவும் பெண்கள் இந்த விரதத்தைக் கடைப்பிடித்தார்கள். தை முதல் தினத்தில் இந்த விரதத்தை முடிப்பார்கள். நல்ல விளைச்சல் கொடுத்தமைக்காக பூமி, சூரியன், உதவிய மாடு போன்றவற்றிற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சர்க்கரைப் பொங்கல் படைத்து வழிபட்டனர். இதுவே நாளடைவில் கொண்டாடும் பொங்கல் திருநாள் கொண்டாட்டமாக மாறியது.
❤❤❤❤
🌾உழவர் திருநாள்
❤❤❤❤❤
பொங்கல் விழா, மக்களால் இயல்பாகக் கொண்டாடப்படுகிறது. உழைக்கும் தமிழ் மக்கள் தாமே கண்டுணர்ந்து, தமது உழைப்பிற்கு உதவிய இயற்கை சக்திகளுக்கும், தம்மோடு சேர்ந்து உழைத்த கால்நடைகளுக்கும் தமது நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் விழா. உழவர்கள் மழையின் உதவியால் ஆடி மாதம் முதல் உழைத்துச் சேர்த்த நெல்லை மார்கழியில் வீட்டிற்குக் கொண்டு வந்து தமது உழைப்பின் பயனை நுகரத் தொடங்கும் நாளே தைப்பொங்கல்.
❤💛❤💛❤💛🐮🐮🐮
🐄மாட்டுப் பொங்கல்
🐮🐮🐮🐮🐮🐮
உழவுத் தொழிலுக்கு உறுதுணையாக விளங்கும் ஆவினத்திற்கு நன்றி கூறும் நாளே இந்நாளாகும். பொங்கலிட்ட பிறகு எச்சில் தண்ணீர் தெளித்தல் என்றொரு மரபு இந்திய மதுரை மாவட்டத்தில் உண்டு. ‘பொங்கலோ பொங்கல் மாட்டு பொங்கல் பட்டி பெருக பால் பானை பொங்க நோவும் பிணியும் தெருவோடு போக‘ என்று கூறி மாடு பொங்கல் உண்ட எச்சில் தண்ணீரை தொழுவத்தில் தெளிப்பர்.
🐮🐮🐮🐮🐮🐮🐮
🌾சங்க இலக்கியங்களில் தைப்பொங்கல்
☀☀☀☀☀
“தைஇத் திங்கள் தண்கயம் படியும்” என்று நற்றிணை
“தைஇத் திங்கள் தண்ணிய தரினும்” என்று குறுந்தொகை
🍋🍓🍋🍋🍋🍋
“”தைஇத் திங்கள் தண்கயம் போல்” என்று புறநானூறு
✨✨✨🌟✨🌟✨🌟
“தைஇத் திங்கள் தண்கயம் போல” என்று ஐங்குறுநூறு
💙💜💙💜💙💚💙💜
“தையில் நீராடி தவம் தலைப்படுவாயோ” என்று கலித்தொகை
💗💗💗💗💗💗💗💗
💪👌💪இனிய👌💪
காலைவணக்கம்
💪🙏💪🙏💪🙏💪 #பொங்கல் #😆 பொங்கல் அலப்பறைகள் 🔥 #🎊பொங்கல் சிறப்பு நிகழ்வுகள்🫶 #🌼 இனிய தை பொங்கல் நல்வாழ்த்துக்கள்🌄 #🌺இனிய மாட்டு பொங்கல் நல்வாழ்த்துக்கள்🐃