ShareChat
click to see wallet page

கேப்டனின் பேரைக் கெடுக்காமல் ஓய மாட்டார்களா? தேமுதிக காங்கிரஸ் பா.ம.க. (ராமதாஸ்) இந்த மூன்று கட்சிகளுக்கும் யாருடன் கூட்டணி சேர்வது என்ற பிரச்சினை இன்னும் தீர்ந்த பாடில்லை. இவர்கள் எந்தப் பக்கம் வேண்டுமானாலும் சாயலாம். இந்த இலட்ணத்தில் இவர்களது ராஜதந்திரத்தை நம்பி மக்கள் இவர்களுக்கு ஓட்டு போடவேண்டுமாம். இவர்களா தமிழகத்தின் தலைவிதியை மாற்றி எழுதப் போகிறார்கள்? முன்னர் ஒரு தேர்தலில் வைகோ கூட்டணி பற்றிய முடிவு எடுப்பதில் தடுமாறினார். திமுகவுடன் நின்றவர் அதை விட்டு கடைசி நிமிடத்தில் அதிமுக பக்கம் சாய்ந்தார். அந்தோ பரிதாபம்! ஜெ யிடம் அவர் எதிர்பார்த்த சீட்கள் கிடைக்கவில்லை என்பது மட்டுமல்ல, அவர் தருவதாகச் சொன்ன சீட் எண்ணிக்கையை கேட்டு வைகோ அதிர்ச்சி அடைந்தார். அதை ஏற்றுக் கொள்ள அவரது தன்மானம் இடம் கொடுக்கவில்லை. தனித்து நின்றால் தவடை பெயர்ந்தூவிடும் என்பதை உணர்ந்த வைகோ தேர்தலையே புறக்கணிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார். காங்கிரஸ் கட்சியை விட்டுத் தள்ளுங்கள். அது ஐ.நா. சபை மாதிரி. ராமதாசுக்கு என்ன? எது எப்படிப் போனாலும் இனி ஒன்றுதான். தேமுதிகவிற்கு வருவோம். தேமுதிக இப்போதும்கூட கடைசி நிமிடம் வரை திமுக மற்றும் அதிமுக தலைவர்களுக்கு எரிச்சலை ஊட்டும் வண்ணம் பேரம் பேசிக்கொண்டே இருப்பது கட்சியின் நலனுக்கு உகந்தது இல்லை. பிரேமலதா, NDA கூட்டணியில் இருந்து யாரும் தங்களை அழைக்கவில்லை என்று பேசியிருக்கிறார். அவர் இதனால் தமது கட்சியினருக்கும் மக்களுக்கும் என்ன சொல்ல விரும்புகிறார்? கூட்டணிக்கு யாரும் வெற்றிலை பாக்கு வைத்து அழைக்கவேண்டும் என்பதில்லை. கூட்டணி அமைவதில் கட்சிகள் அனைத்திற்கும் பொறுப்பு இருக்கிறது. அதிமுக தலைமையும், "தேமுதிக எங்களிடம் வந்து கேட்கவே இல்லை" என்று கூறலாமே? ஒரு பேச்சுக்கு, தேமுதிக அதிமுகவுடன் சேர்ந்தால் திமுகவுக்கு நஷ்டம் அல்லது திமுகவுடன் சேர்ந்தால் அதிமுகவிற்கு நஷ்டம் என்று வைத்துக்கொள்வோம். ஆனால் தேமுதிக இவ்விரண்டு கூட்டணிகளிலும் இல்லை என்றால் இவ்விரு கட்சிகளுக்கும் இலாபம். அது எப்படி? அதாவது தேமுதிகவிற்கு கொடுக்க வேண்டிய சீட்டுகள் திமுகவுக்கும் அதிமுகவும் இலாபம்தானே? இப்போது, ஸ்டாலினும் எடப்பாடியும் கூடிப்பேசி மாறி மாறி பேரம் பேசிக் கொண்டிருக்கும் தேமுதிகவை அவர்களுடைய கூட்டணிகளில் சேர்ப்பதில்லை என்று முடிவெடுத்தால்? அப்படி ஒருவேளை நடந்துவிட்டால், தேமுதிகவின் நிலை என்ன அகும்? 10+1 கணக்கு எல்லாம் அப்போது வேலைக்காகுமா? சரி, ஸ்டாலினும் எடப்பாடியும் சேர்ந்து இப்படி ஒரு முடிவினை எடுப்பார்களா? அப்படி ஒரு காரியம் நடப்பதற்கு வாய்ப்பில்லை என்று மெத்தனமாக இருக்க வேண்டாம். அரசியலில் எதுவும் நடக்கலாம்! எது எப்படியோ, கேப்டனின் பேரைக் கெடுக்காமல் ஓய மாட்டார்களா? #📺அரசியல் 360🔴 #🚹உளவியல் சிந்தனை

1.9K ने देखा
1 दिन पहले