திரைப்படம் : புது புது அர்த்தங்கள்
பாடலாசிரியர் :
வாலி
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : எந்நாளும்தானே தேன் விருந்தாவது…
பிறர்க்காக நான் பாடும் திரைப் பாடல்தான்…
இந்நாளில்தானே நான் இசைத்தேனம்மா…
எனக்காக நான் பாடும் முதல் பாடல்தான்
ஆண் : கானல் நீரால் தீராத தாகம்…
கங்கை நீரால் தீர்ந்ததடி…
நான் போட்ட பூமாலை மணம் சேர்க்கவில்லை…
நீதானே எனக்காக மடல் பூத்த முல்லை…
ஆண் : கேளடி கண்மணி பாடகன் சங்கதி…
நீ இதை கேட்பதால் நெஞ்சில் ஓர் நிம்மதி… #s.