கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா?
செய்தி: பொன்முடிக்கு மீண்டும் மணிமுடி!
முந்நாள் அமைச்சர் பொன்முடி முந்தாநாள் பல்வேறு தளங்களில் இருந்து பதவி நீக்கம் செய்யப்பட்டதற்கு பல காரணங்கள் உள்ளன:
வருமானத்திற்கு அதிகமான சொத்துக் குவிப்பு வழக்கில் அவருக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதால், அவர் சட்டமன்ற உறுப்பினர் தகுதியை இழந்தார், இதனால் அமைச்சர் பதவி பறிபோனது. மேலும், சர்ச்சைக்குரிய பேச்சுக்களால் கட்சிப் பொறுப்புகளில் இருந்தும் சென்ற ஏப்ரல் மாதம் அவர் நீக்கப்பட்டார்.
அதாவது குறிப்பாக, அவர் பெண்கள் குறித்து அருவருக்கத்தக்க முறையில் பேசியது தமிழகத்தில் பெரும் பிரச்சினையாக மாறியது. அவரது பேச்சுக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், பதவி நீக்கக் கோரியும் புகார்கள் அளிக்கப்பட்டன. அதன் காரணமாக, அவர் திமுக துணைப் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
இப்போது மீண்டும் திமுக துணைப் பொதுச் செயலாளராக பொன்முடி அவர்களை நியமித்து திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதனால் மக்களின் மனதில் இயற்கையாகவே பல்வேறு சந்தேகங்கள் எழுகின்றன.
இதற்கு முதலிலேயே பதவியில் இருந்து நீக்காமலேயே இருந்திருக்கலாமே என்று கேட்கிறீர்களா? ஒருவேளை பொன்முடி மக்களுக்காக சிலபல தன்னலமற்ற சேவைகளை செய்து இந்த இடைப்பட்ட காலத்தில் உத்தமராகி இருக்கலாம் என்ற சந்தேகம் எழவும் ஒரு வாய்ப்பு உள்ளது. என்னத்தைச் சொல்றது?
அவர் பேசிய பேச்சைக் கேட்டு ஆத்திரமடைந்த மக்களை அப்போதைய சூழ்நிலையில் சமாதானப்படுத்தும் நோக்கிலேயே அந்த பதவி பறிப்பு நாடகம் நடந்தது என இப்போது வெட்டவெளிச்சம் ஆனது! இதுதான் ஆனானப்பட்ட திராவிட மாடல்
என்னதான் சொல்லுங்கள், எப்பேர்ப்பட்ட கொம்பனாக இருந்தாலும் எடுத்த முடிவுகளில் இருந்து ஜெயலலிதா எப்போதும் பின்வாங்கியதில்லை என்பது நினைவுக்கு வருகிறது. அப்படியே ஒருவேளை ஏதாவது நடந்திருந்தாலும், அது மன்னித்துவிட்ட நடவடிக்கையாக இருக்குமே தவிர, அழுத்தத்திற்கு அடிபணிந்த நடவடிக்கையாக இருந்திருக்காது!
கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா?
"திசைகெட்ட பயணங்கள்"
https://www.amazon.in/dp/B0CH12RHGR
#அரசியல் #✍️ கதைகள் #✍🏻புது கவிதைகள்📝 #நாட்டுநடப்பு