#முக்கிய செய்தி
கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் ஆர். ஸ்டாலின் ஐபிஎஸ்
நேற்றையே தினம் இரவு சுமார் 11.30 மணி அளவில் வசந்தம் மருத்துவமனை சாலையில் ஒரு கன்றுக்குட்டி அடிபட்டு கிடந்தது. அந்த கன்றுக்குட்டி ஐயோ என்று கத்தியது. அன்று ஒரு நாளில் மனுநீதி சோழனிடம் தைரியமாக சென்று தாய் பசு தன் பிள்ளை பசுவிற்காக நீதி கேட்டது, மகன் என்றும் பாராமல் தாய்பசுவிற்கு நீதி வழங்கினார். அதை போன்று ஐயோ என்று கத்திய கன்றுக்குட்டிக்கு அவ்வழியாக வந்த மருத்துவர் ஆர். ஸ்டாலின் ஐபிஎஸ் அவர்கள் அடிப்பட்டு கிடந்த கன்றுக்குட்டிக்கு முதல் உதவி செய்து அக்கன்றுக்குட்டியை அவர்கள் எஸ்எப் வாகணத்தில் உட்கார வைத்து கோட்டார் கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்..!