ShareChat
click to see wallet page

உங்கள் எழுத்து உங்களைச் செதுக்குகிறது! லிகித ஜெபம்: எழுதுவது என்பது மனஒருமைப்பாட்டுடன் செய்கிற ஒரு தியானத்திற்கு ஒப்பானதாகும். இது லிகித ஜெபத்தை விட மேலானது. லிகித ஜெபம் என்பது இறைவனின் நாமத்தை, காகிதத்தில் மீண்டும் மீண்டும் எழுதுவதாகும். இது ஒரு தியான முறை. இதில் மனதை ஒருமுகப்படுத்துதல் மூலம் அமைதி கிட்டுகிறது.  65வது நாயன்மார் என்று அன்புடன் அழைக்கப்படும் திருமுக கிருபானந்த வாரியார் சுவாமிகள் செய்த ஒரு உபதேசத்தில் இதைக் கேட்டதாக நினைவு: லிகித ஜெபத்தில் முதலில் இறைவனுடைய நாமத்தை நினைக்கிறோம், அதை வாயால் கூறிக்கொண்டே எழுதுகிறோம். அதனால் இரட்டைப் பலன் கிடைக்கிறது. நாம் செய்யும் இந்த தியானத்தில் ஒரு லயம் வசப்படுகிறது. நாம் தியானத்தை எப்படி நமக்காகச் செய்கிறோமோ, அப்படியே எழுதுவதையும் செய்யும்போது நமது எண்ணங்கள் சீரடைவதுடன் அதற்கு ஒரு வடிவம் பிறக்கிறது, நமது உணர்வுகளுக்கு ஒரு வடிகால் கிடைக்கிறது. எழுதும் பழக்கம் உள்ளவர்கள் பெரும்பாலும் நேர்மையான சிந்தனையாளர்களாக இருக்கிறார்கள். ஜாக் மா, இலன் மஸ்க், பில்கேட்ஸ் போன்ற தொழிலதிபர்கள் சிறந்த எழுத்தாளர்களாகவும் இருக்கிறார்கள். நேரு, அண்ணா, வாஜ்பாய் போன்ற அரசியல் தலைவர்கள் சிறந்த எழுத்தாளர்களாக விளங்கினர். ஒரு நண்பருடைய தந்தை சொன்னது: நான் கல்லூரியில் சேர்ந்த நாளில் இருந்து டைரி எழுதுகிறேன். நடந்ததை மட்டுமல்லாமல் நினைத்ததையும் சுருக்கமாக எழுதி வருகிறேன். இந்தப் பழக்கமானது நேர்மையான எண்ணங்களுக்கு அடித்தளமாக இருக்கிறது. எவ்வளவு பெரிய உண்மை! எழுதுவதற்கு நாம் ஒரு எழுத்தாளராக இருக்கவேண்டும் என்ற அவசியமோ, அதைப் படிப்பதற்கு வாசகர்கள் இருக்கவேண்டும் என்ற நிர்ப்பந்தமோ இல்லை. எழுதுவது என்பதை ஒரு செயல்முறை என வைத்து அதில் உள்ள படிகளைப் பார்க்கலாம். சிந்தனை: ஒரு எழுத்தாளர் நல்ல விஷயங்களைப் பற்றி எழுவேண்டும் என்றே பொதுவாக நினைப்பதால் அவரது சிந்தனைகள் நேர்வழியில் செல்கின்றன, மனம் விசாலமடைகிறது, பயம் அகல்கிறது. கற்பனை: நாம் நமது சிந்தனைகளை எழுத்தில் வடிக்கவேண்டும் என எண்ணும்போது நமது கற்பனை வளத்தை அதனுடன் கலக்கிறோம். இதனால் நமது கற்பனைத்திறன் மேம்படுகிறது. நேர்த்தி: நமது எண்ணங்களை கோர்வையாக எழுதுவது அடுத்த படி. அதனால் நமது எண்ணங்களில் ஒரு நேர்த்தி உருவாகிறது. கருத்து: நமது எண்ணங்களை எழுத்தில் வடிக்கும்போது நம்மில் ஒரு விஷயத்தைப் பற்றிய திடமான கருத்து உருவாகிறது. செயல்: நாம் எழுதியதை மற்றவர்களுக்குப் பகிர்வதற்கு முன் மீண்டும் படித்துப் பார்ப்பதால் நமது கருத்து வலுவடைகிறது, அது செயல்களில் வெளிப்படுகிறது. தொழில்முறை எழுத்தாளர்கள் மட்டுமே எழுதவேண்டும் என்பது அவசியமில்லை. யார் வேண்டுமானாலும் எழுதலாம். முதலில் நீங்கள் உங்களுக்காக எழுதுகிறீர்கள். உங்களுடைய கருத்துக்களை மற்றவர்கள் ஏற்றுக்கொள்வதும், பாராட்டுவதும் இரண்டாம் பட்சம்தான். இன்றைய சமூக ஊடகங்கள் ஏராளமானவர்களுக்கு எழுதுவதற்கான வாசலைத் திறந்து வைத்துள்ளது. பிறரைத் திட்டியோ, சினிமா அல்லது அரசியல் சம்பந்தமாகவோ எழுதும்போது அதற்கு அதிகமான வரவேற்பு இருந்தாலும், அதற்காக எழுதுவதில் பிரயோஜனம் இல்லை. எழுதியதை வெளிப்படுத்தும்போதுதான் உங்களது சிந்தனைகளுக்கு வடிவம் கிடைக்கிறது, உணர்வுகளுக்கு வடிகால் கிடைக்கிறது. உங்கள் எழுத்து உங்களைச் செதுக்குகிறது! நினைவலைகள் ஓய்வதில்லை! எழுதுங்கள்... https://www.amazon.in/dp/B0CR85RDBP உங்கள் எழுத்து உங்களைச் செதுக்குகிறது! "நினைவலைகள் ஓய்வதில்லை" @ அமேசான் KDP #அரசியல் #✍️ கதைகள் #✍🏻புது கவிதைகள்📝 #நாட்டுநடப்பு

618 காட்சிகள்
4 நாட்களுக்கு முன்