கலைஞரின் பாதையில் எடப்பாடி!
எடப்பாடி கடந்து வந்த அரசியல் பாதையை கொஞ்சம் ஆராய்ந்து பார்த்தால், அவர் தனது அரசியல் வாழ்க்கையில், கலைஞருடைய வழிமுறையைக் கடைப்பிடித்து நடந்து வருவது நன்கு புரியும். அது "கான மயிலாட கண்டிருந்த வான்கோழி தானும் தன் பொல்லாச் சிறகை விரித்து ஆடிய கதை" என்பதும் தெரிய வரும்.
கலைஞருக்கு அனைத்துக் கட்சித் தலைவர்களுடனும் இணக்கமான தொடர்பு உண்டு. எடப்பாடி எப்படியோ உருண்டு புரண்டு முதல்வரானபின்தான் இவர் யார், இவர் எப்பேர்ப்பட்ட ஜெகதலப்பிரதாபன் என்று இதர கட்சியினருக்கு மட்டுமல்ல இவரது கட்சியனருக்கே தெரிய வந்தது.
கலைஞர் தனக்கு கட்சியில் எதிரிகளாக இருந்த நெடுஞ்செழியன், MGR, மதியழகன், சத்தியவாணிமுத்து, கண்ணதாசன், க. ராசாராம் வைகோ போன்றவர்களை தயவுதாட்சண்யமின்றி ஒதுக்கித் தள்ளினார். இதில் பலர் கட்சியில் கலைஞருக்கீடான அனுபவம் கொண்டவர்களாக இருந்தவர்கள்.
எடப்பாடியும் கலைஞரைப் போலவே, சசிகலா, TTV, OPS, செங்கோட்டையன் போன்றவர்களை கட்சியில் இருந்து அகற்றினார். இவர்கள் அனைவருமே ஏதாவது ஒரு வகையில் எடப்பாடி முதல்வராவதற்கு காரணமாக இருந்தவர்கள் அல்லது அதற்கு தமது எதிர்ப்பினை வலிமையாக காட்டாமல் இருந்தவர்கள் என்பதை நாடறியும். இவர்களை அணைத்துச் செல்ல வேண்டும் என்று எடப்பாடி அவர்கள், காமராஜர் அல்லது MGR ஐப் போல நினைத்து செயல்பட்டதில்லை.
காமராஜர் சொந்த விருப்பு பாராட்டாதவர். தன்னை எதிர்த்து அரசியல் செய்த சி. சுப்ரமணியம் அவர்களை, அவரது நிர்வாகத்திறன் மற்றும் நேர்மையை கருத்தில் கொண்டு காமராஜர் மந்திரி ஆக்கினார். MGR க்கு பழிவாங்கும் குணம் அதிகம் என்ற ஒரு கருத்தை உருவாக்கி அது திட்டமிட்டு பரப்பப்பட்டாலும், அரசியலில் அவர் பெருந்தன்மையுடன்தான் நடந்துகொண்டார்.
தன்னுடன் கருத்தில் முரண்பட்ட கண்ணதாசனை MGR அரசவைக் கவிஞர் ஆக்கினார். அவருக்கு ஜெயலலிதாவுடன் கருத்து வேறுபாடுகள் நிலவிய காலத்திலும், ஜெயலலிதாவின் திறமை மற்றும் துணிச்சலின் மீது நம்பிக்கை வைத்து அவரை ஆளாக்கினார். தன்னை வரைமுறையின்றி வசை பாடிய காளிமுத்து அவர்களை MGR அமைச்சராக்கி அழகு பார்த்தார்.
கலைஞர் தன்னை எதிர்த்தவர்களை தயக்கமின்றி ஒடுக்கினார் என்றால் அவருக்கு அதற்கான திறமையும், கட்சித் தொண்டர்களின் ஆதரவும் இருந்தது. புறக்கடை வழியாக வந்து கட்சியையும் ஆட்சியையும் கைப்பற்றிய எடப்பாடிக்கு இது இரண்டும் இல்லை. MGR பெயரைச் சொல்லிக்கொண்டு சுயலாபத்துக்காக கலைஞர் பாதையில் நடந்து செல்லும் எடப்பாடி கட்சித் தலைமைக்கு பொருத்தமானவர் இல்லை என்பதில் சந்தேகம் இல்லை.
இன்று தமிழகம் மட்டுமல்ல அண்ணா திமுகவும் ஓர் இக்கட்டான சூழ்நிலையில் உள்ளது. ஆனால், எடப்பாடி அவர்கள் அரசியல் சாதுரியமற்ற தனது நடவடிக்கைகளினால், TTV, OPS, செங்கோட்டையன் போன்றவர்களை விஜயின் த.வெ.க.வின் வளையத்திற்குள் தள்ளும் வரை ஓயமாட்டார் என்றே தெரிகிறது. அவர்கள் மூவருக்கும் எடப்பாடியை விட மக்களிடம் செல்வாக்கு அதிகம் என்பதை எடப்பாடியிடம் யார் சொல்வது?
என்னத்தைச் சொல்றது? கூட்டணியெல்லாம் இவருக்கு தோதுப்பட்டு வராது. விஜயின் வீட்டு வாசல் திறப்பதற்காக காத்திருக்கும் எடப்பாடி, தனது வீட்டு வாசலில் காத்திருப்பவர்களை தொடர்ந்து உதாசீனம் செய்கிறார்.
எடப்பாடியின் பலவீனத்தை முழுமைம்யாக பலலமாக்கிக் கொள்கிற சூழ்நிலை இன்று சீமானுக்கு உள்ளது என்பதை எடப்பாடியின் வரலாற்றிலிருந்து சீமான் புரிந்துகொள்ளாவிட்டால் -
அது அவருக்கு நஷ்டம்
அவரது ஆதரவாளர்களுக்கு?
பெரு நஷ்டம்
தமிழகத்திற்கு?
துரதிருஷ்டம்...
படித்துவிட்டீர்களா?
திரைபாரதியின்
"திசைகெட்ட பயணங்கள்"
@ அமேசான் KDP
#அரசியல் #✍️ கதைகள் #✍🏻புது கவிதைகள்📝 #நாட்டுநடப்பு