💕குறும்புக்காரன்🐬
1.7K views
25 days ago
#கமல்ஹாசன் #😇நம்மவர் கமல்😎 கமலைச் சந்தித்தது குறித்து புகைப்படத்தைப் பகிர்ந்த அனுபம் கெர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது: தில்லி விமான நிலையத்தில் இந்தியாவின் மிகச்சிறந்த நடிகர்களுல் ஒருவரான கமல்ஹாசன் அவர்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். பல ஆண்டுகளாக அவரது நடிப்பு, இயக்கத்தின் மீது ரசிகராக இருந்துள்ளேன். நடிகராக அவரிடம் இருந்து நான் கற்றுக் கொண்டது மிகவும் அதிகம். அவரது சிறந்த நடிப்புக்கு கணக்கே இல்லை! விமான நிலைய ஓய்வறையில் நாங்கள் ஒருமணி நேரம் உட்கார்ந்து பேசியிருப்போம். அதில் நாங்கள் வாழ்நாள் முழுவதும் பேசியதுபோல் இருந்தது! பல தலைப்புகளில் பேசினோம். உலக சினிமா - கே.பாலசந்தர் சார், வாழ்க்கைப் பாடங்கள், பிடித்த புத்தகங்கள், ரஜினி சார் குறித்தும் பேசினோம்! அது மிகவும் ஆடம்பரமான பேச்சாக இருந்தது! உங்களின் பாராட்டு, அரவணைப்பு, அறிவுரைகளுக்கு நன்றி! அன்பு, மரியாதை மற்றும் பிரார்த்தனை எப்போதும் எனக் கூறியுள்ளார். #ரெங்கா! #renga-vamba! From FB platform