பழைய டயர் டியூப் களை எரிக்காதே புகையில்லா போகி விழிப்புணர்வு பேரணி
செய்யாறு வட்ட சட்டப்பணிகள் குழு சார்பாக புகையில்லா போகி விழிப்புணர்வு பேரணியை சார் ஆட்சியர் செல்வி அம்பிகா ஜெயின் கொடியசைத்து துவங்கி வைத்தார் மேலும் மாணவர்களிடையே புகையில்லா போகியினை கொண்டாடுவதாக உறுதிமொழியை மேற்கொண்டார். இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியை திருமதி தேன்மொழி தலைமை ஏற்றார். வட்டார கல்வி அலுவலர் திரு பெருமாள் மற்றும் அறிவொளி வெங்கடேசன் முன்னிலை வகித்தனர். வட்ட சட்டப்பணிகள் குழு துணை தன்னார்வலர்கள் திரு.மலர் சாதிக் மற்றும் டாக்டர் இரா பாஸ்கரன் நிகழ்ச்சியினை ஒருங்கிணைத்து
டயர் டியூப் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை எரிக்கக் கூடாது என கருத்துரை வழங்கினார்கள். இந்த பேரணியில் 50க்கும் மேற்பட்ட நடுநிலைப்பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியைகள் பங்கேற்றார்கள்.
#⚡ஷேர்சாட் அப்டேட் #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📰தமிழக அப்டேட்🗞️ #📺உள்ளூர் தகவல்கள்📰