கந்தன் தமிழனாகப் பிறக்க வேண்டும்!!
===========================
பாடியவர்: சந்திரசேகரன் சுப்பிரமணியம்
தலம்: வடவள்ளி, கோயம்புத்தூர்
கந்தன் தமிழனாகப் பிறக்க வேண்டும்!! அவன்
கடற்கரையில் சென்னைத் தமிழைக் கேட்க வேண்டும்!
இவர்பேசுந் தமிழின் பொருளை உணரவேண்டும்!
இதில் மொழிப்பிழையாதெனக் குழம்ப வேண்டும்!
கந்தன் தமிழனாகப் பிறக்க வேண்டும்!! அவன்
கடற்கரையில் சென்னைத்தமிழ் கேட்க வேண்டும்!
எத்தனை மொழி படைத்தான் ? எல்லாவற்றிற்கும்
சொற் கொடுத்தான் ! அத்தனைச் சொற்களிலும்
அரிய நற்பொருள் பொதித்தான் ! ஆயினும்
நற்றமிழுக்கே சுவை கொடுத்தான் ! அச்சுவையிலே உள்ளத்து உணர்ச்சியை மீட்டிவிட்டான் ! இசையிலே உயிரை துடிக்கவிட்டு குன்றின்மேல் நின்று விட்டான்!!
கந்தன் தமிழனாகப் பிறக்க வேண்டும்!! அவன்
கடற்கரையில் சென்னைத்தமிழ் கேட்க வேண்டும் !
ஆங்கிலத்தை கலக்கவிட்டு அசிங்கமேயில்லாது
அன்னைத்தமிழை இழிவுபடுத்தி அலைகின்றார்!
இல்லாத உட்சரிப்பும் தேவையில்லா சங்கத ஒலியு
எழுத்தும் சேர்த்துக் கொண்டு கன்னித்தமிழைக்
கலப்படமாக மொழியாக்கிக் களிக்கின்றார்!!
கந்தன் தமிழனாகப் பிறக்க வேண்டும்!! அவன்
கடற்கரையில் சென்னைத்தமிழ் கேட்கவேண்டும் !
கந்தனை அழைத்துவந்து அச்சிரப்பாக்கத்திலே நடக்கவிட்டுச் செந்தமிழைக் கேளடா கேளுஎன்று கேட்கவிட்டு இரசித்திருப்பேன்! வந்திடுவான்!! சிரித்திடுவான்!! இக்குடிக்கு முச்சங்கம் வைத்ததெல்லாம் வீண் என்றே புலம்பிடுவான்!
ஞானி அவன் தமிழ்மொழியை எடுத்துக்கொண்டு
பழனிமேல் சென்றே தண்டமொடு நின்றிடுவான்!
கந்தன் தமிழனாகப் பிறக்க வேண்டும்!! அவன்
கடற்கரையில் சென்னைத்தமிழ் கேட்கவேண்டும் !
#ஆன்மிக சிந்தனைகள் ஓம் நமசிவாய🙏🙏🙏🙏 #🙏🙏🙏ஆன்மிக சிந்தனைகள் 🙏🙏🙏 #🕉️ஓம் முருகா #🙏ஓம் முருக சரணம்🙏