திருநீற்றுச் சுவடு
3K views
12 days ago
#🌈🙏அம்மன் ஸ்டேட்டஸ் வீடியோ அம்மன் பக்தி பாடல்கள்❤️amman status video amman pakthi padalgal snvp🌈🙏 #வராகி அம்மன் பக்தி பாடல் #அம்மன் #🛕மார்கழி கோவில்கள் தரிசனம்🙏🏻 #✡️மார்கழி மாத ஜோதிடம் ஸ்ரீ ஆண்டாள் சரிதம் ஸ்ரீமன் நாராயணனின் பெருமைகளுள் ஆழ்ந்து அவரைப் பாடியவர்கள் ஆழ்வார்கள். ஆழ்வார்கள் பன்னிருவர். அவர்கள் பாடிய பாடல்களைக் கொண்ட நூல் ‘திவ்யபிரபந்தம்’. அதில் முதல் பகுதியான ‘திருப்பல்லாண்டு’ என்பதைப்பாடியவர் விஷ்ணுசித்தர். இவர் சுமார் ஆயிரத்து நூறு ஆண்டுக்ளுக்கு முன் வாழ்ந்தவர். பெருமை வாய்ந்த ஆழ்வார் என்ற கருத்தில் விஷ்ணுசித்தரை மக்கள் ‘பெரியாழ்வார்’ என்று வழங்கினர். பெரியாழ்வார் தாம் பெற்ற செல்வத்தையெல்லாம் ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்திரசாயிக்கே செலவிட்டு நந்தவனப்பணியிலும், எம்பெருமானுக்கு மாலை கட்டிச் சாத்துவதிலும் தமது வாழ்நாளைச் செலவிட்டு வந்தார். ஒருநாள் அதிகாலை பெரியாழ்வார் தம் நந்தவனத்தில் துளச்செடிகளுக்கு இடையே மண்வெட்டியால் பாத்திகளைச் செப்பனிட்டுக் கொண்டிருந்தார்.அப்போது மண்வெட்டி ஒரு பெட்டி மீது படுவதுபோல் ஓசை கேட்டது. அந்த இடத்தை அகழந்து பார்த்தபோது அங்கு ஓர் அழகிய பெட்டி காணப்பட்டது. என்னஆச்சரியம்! அதில் அழகான பெண் குழந்தை ஒன்று ஒளி வீசும் முகத்தோடு சிரித்துக்கொண்டிருந்தது. முதலில் திகைத்தார் ஆழ்வார்; பின்பு தெளிந்து ‘பூமிதேவி எனக்குத் தந்த மகள் இவள்!’ என்று மகிழ்ச்சி பொங்க எடுத்து அணைத்து உச்சிமோர்ந்தார். அன்று ஆடி மாதத்து பூர நட்சத்திர நாள். அந்த குழந்தைக்கு கோதை என்று பெயரிட்டு (கோ-பூமி, தா-கொடுக்கப்பட்டவள்) மிகுந்த அன்புடன் கண்ணெனப் போற்றி வளர்த்தார். ஆண்டுகள் ஒவ்வொன்றாகச் செல்லச் செல்லக் கோதை குழந்தை நிலையைக் கடந்து சிறிய பெண் ஆனாள். பெரியாழ்வார், தனக்கு கூறுகின்ற கதைகளையும், பக்திக்கு வசப்பட்டு அன்பர்களுக்கு உதவி அருள இறைவன் ஓடி வருதலையும், அவனுடைய கருணைத் திறத்தையும் கோதை அவ்வப்போது எண்ணி மனம் நெகிழிந்தாள். தானும் பக்கதி கொண்டால் தனக்கும் அப்படியே வந்து கண்ணன் உதவுவான் என்று உறுதியாக நம்பினாள். பெரியழ்வார் தினந்தோறும் வடபத்ரசாயிப் பெருமானுக்கென அழகிய மாலை ஒன்று கட்டுவார். கோதையின் மனத்தை அது வெகுவாகக் கவர்ந்தது. கோயிலுக்கு அதை அவர் எடுத்துச் செல்லுமுன் அந்த மாலையை எடுத்துத் தன் கழுத்தில் அணிந்து கொள்வாள்; மெல்ல நடந்து கண்ணாடி முன் நின்று மாலை சூடிய தனது அழகைக் காண்பாள்; பின்பு அதனைக் கழுத்திலிருந்து கழற்றி மறுபடியும் வைத்துவிடுவாள். இப்படி இவள் செய்வது யாருக்கும் தெரியாது; பெரியாழ்வாருக்குக் கூட இது தெரியாது. ஒருநாள் வழக்கம் போல் மாலையை வைத்துவிட்டு வெளியில் சென்றிருந்த பெரியாழ்வார் எதிர்பாராதவிதமாக விரைவில் வீடு திரும்பினார். வந்தவர் பெருமாளுக்கு உரிய மாலையுடன் கண்ணாடி முன்னே தன் மகள் கோதை நின்று கொண்டிருப்பதைக் கண்டார்; இடி விழுந்தார்போல் ஆனார். கோதை அவரைப் பார்த்துவிட்டாள்; என்ன செய்வதென்று தெரியாமல் தடுமாறினாள். ஆழ்வார் தம் கண்களில் நீர் மல்க கைகூப்பி கடவுளை மீண்டும் மீண்டும் தொழுது, பிழை பொறுக்கும்படி வேண்டினார். கோதையும் அழுதுகொண்டே அறியாமல் பிழை செய்த தன்னை மன்னிக்கும்படி வேண்டினாள். அவசரமாக வேறு ஒரு மாலை கட்டி எம்பெருமானுக்குச் சமர்ப்பித்துவிட்டு வீடு திரும்பினார் விஷ்ணுசித்தர். அன்றிரவு உறங்கும்போது எம்பெருமான் அவர் கனவில் தோன்றி, 'ஆழ்வாரே, இன்று ஏன் எனக்கு மணமற்ற மாலைகளை இட்டீர்?' எனக் கனிந்த குரலில் கேட்டார். திகைத்து நின்ற ஆழ்வார் பதிலேதும் கூறாமல் அமைதி காத்து நின்றார். இறைவனும் பெரியாழ்வாருக்குக் கோதையின் அருமை பெருமைகளை எடுத்துரைத்து, 'இனி அவள் சூட்டிய மாலைகளையே எமக்கு அளிக்க வேண்டும்' என்று கூறி மறைந்தார். அன்றுமுதல் கோதை ஆண்டாள் ஆனாள். ஆண்டாள் எப்பொழுதும் திருமால் நினைவாகவே இருந்தாள். கண்ணநைப் பற்றியே எண்ணி எண்ணி மகிழ்பவளானாள். பாவை மோன்பு நோற்பது அவளுக்குப் பரவசமூட்டும் ஒன்றாயிற்று. இந்த நோன்பைப் பற்றி ஆண்டாள் பாடிய முப்பது பாடல்களே 'திருப்பாவை' என்று அழைக்கப்படுகிறது. ஆண்டாள் திருமண வயதை அடைந்தாள் ஆனால், அரங்க நாதனையே கணவனாக அடைய அவள் முடிவு செய்தாள். தந்தையிடம் கூறியும் விட்டாள். இதைக்கேட்டு ஆழ்வார் திகைத்தாலும் ஆண்டாள் மட்டும் இது நடக்கும் என்று உறுதியாக நம்பினாள். ஒருநாள் இரவு. ஆழ்வார் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அவர் கனவில் ஸ்ரீரங்கநாதன் தோன்றி, 'விஷ்ணுசித்தா! உன் மகள் என் மனதைக் கவர்ந்த உத்தமி! அவளை அரங்கத்துக்கு அழைத்து வந்து எனக்கு திருமணம் செய்து கொடு' என்று சொல்லி மறைந்தார். கனவின் படியே பெரியாழ்வார் பாண்டிய மன்னனான ஸ்ரீவல்லபனின் துணையுடன் ஆண்டாளை அழைத்துக் கொண்டு ஸ்ரீரங்கம் சென்றார். இடையே, அரங்கநாதன் தம் அர்ச்சகர் கனவில் போய், ஆழ்வாரும் ஆண்டாளும் வரும் செய்தியைக் கூறி, அவர்களை மிக்க கௌரவத்துடன் நகரவலம் செய்வித்து வருமாறு பணித்தார். இச்செய்தியை அர்ச்சகர் நகரத்து மக்களுக்கு அறிவித்து எல்லோரும் ஆழ்வார் ஆண்டாள் வருகையை எதிர்நோக்கி நின்றனர். ஸ்ரீவல்லப பாண்டி மன்னனும் பெரியாழ்வாரும் ஆண்டளும் ஸ்ரீரங்கம் வந்து சேர்ந்தனர். அரங்கனை கண்ணார கண்ட ஆண்டாள் ஆனந்தக் கண்ணீர் மல்க, கூப்பிய கரங்களுடன் அவனை நோக்கி நடந்தாள்; அவனது திருமலர் பாதங்களைப் பணிந்த பின்னர் ஆண்டாளை யாரும் காணவில்லை; திடீரென மறைந்துவிட்டாள் அவள்; அரங்கன் ஆண்டாளைத் தம்முடன் சேர்த்துக் கொண்டுவிட்டான். இப்படி மானிட உருவில் தோன்றி ஆழ்வார் மகளாய் வளர்ந்த அரங்கன் திருவடிகளை அடைந்து எல்லோரும் வணங்கும் தெய்வமானாள் ஆண்டாள். இறைவன் அருளைப் பெற ஆண்டாள் காட்டிய வழி மிகவும் சுலபமானதாகும். இதற்குப் பணம் வேண்டாம்; படாடோபம் வேண்டாம். இறைவன் நம்மிடம் வேண்டுவது தூய உள்ளம்; உள்ளம் நிறைந்த பக்தி. இந்த பக்தி ஒன்றே போதும் என்பதே ஆண்டாளின் கருத்து. ஆண்டாள் பாடிய பாடல்கள் 'நாச்சியார் திருமொழி' என்ற பெயரில் நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் இடம் பெற்றுள்ளன. மாதங்களில் நான் மார்கழி என்று கீதையில் அருள்கிறார் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா. நாம் குறிப்பிடும் ஓர் ஆண்டு என்பது தேவர்களுக்கு ஒரு நாள், அந்த நாளின் அதிகாலைப் பொழுது மார்கழி! தேவர்களது பிரம்ம முகூர்த்த காலமாகிய மார்கழியில், இறைவனை வழிபட்டால் சகல நன்மைகளும் உண்டாகும் என்கின்றன சாஸ்திரங்கள். எனவேதான் ஆண்டாளும் மார்கழி மாதத்தைத் தேர்ந்தெடுத்து ‘திருப்பாவை நோன்பு’ ஏற்றாள். ஆண்டாளின் அவதாரத் தலமான ஸ்ரீ வில்லிபுத்தூரில், இந்த மார்கழி மாதத்தில் நடைபெறும் திருப்பாவைத் திருவிழா சிறப்பு வாய்ந்தது. மார்கழி மாதம் பிறந்து விட்டால், எல்லா ஆலயங்களையும் அதிகாலையிலேயே திறந்து அபிஷேகம், பூஜை, ஆராதனை என்று பக்திப் பெருக்கை ஊரெங்கும் பரவச்செய்வர். மற்ற மாதங்களில் சற்று தாமதமாக எழுபவர்கூட மார்கழியில் அதிகாலையிலேயே எழுந்து நீராடி தமக்குகந்த ஆண்டவனைத் துதிப்பர். வைணவர்கள் ஆண்டாள் அருளிய திருப்பாவை, தொண்டரடிப் பொடியாழ்வாரின் திருப்பள்ளியெழுச்சி, வேங்கடேச சுப்ரபாதம் போன்ற திருப்பாடல்களைப் பாடுவர். சைவர்கள் மாணிக்கவாசகர் திருப்பெருந்துறை சிவன்மீது பாடிய திருப்பள்ளியெழுச்சி, திருவண்ணாமலையில் பாடிய திருவெம்பாவை முதலிய திருப்பாடல்களைப் பாடுவர். ஜீவாத்மா தனது தாமச குணத்தை நீக்கி, இறைவனைத் துதித்து பரமாத்வுடன் இணையவேண்டும் என்ற தத்துவத்தையே இவை விளக்குகின்றன. அதிகாலையில் இத்தகைய வழிபாடுகள் செய்யும்போது மனம் தெளிவுடன் இருக்கும். அதனால் மனோலயம் எளிதில் வசப்படும். மார்கழிக்கு ஏன் இத்தனை சிறப்பு? இந்த மாதத்தில்தான் மகாவிஷ்ணுவுக்குகந்த வைகுண்ட ஏகாதசி வருகிறது. இந்த நாளை கீதாஜெயந்தி என்று- கண்ணன் கீதை மொழிந்த நாளென்று கீதையை வாசிப்பார்கள். நடராஜப் பெருமானுக்குகந்த திருவாதிரையும் மார்கழியில்தான் அமைகிறது. அந்த நாளில் அதிகாலையிலேயே நடராஜருக்கு அபிஷேகம் செய்து வீதியுலா வரச்செய்வர். "மாஸானாம் மார்க்கசீர்ஷோஹம்' என்பது கண்ணன் வாக்கு. நரசிம்மர் அவதாரம் நிகழ்ந்த வைகாசியையோ, ராமர் அவதரித்த சித்திரையையோ, திருமலைவாசனுக்குகந்த புரட்டாசியையோ, தான் அவதரித்த ஆவணியையோ கண்ணன் குறிப்பிடவில்லை. "மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்' என்றே கூறுகிறார். நமக்கு ஒரு வருடமென்பது தேவர்களுக்கு ஒருநாள். மார்கழி மாதம் அவர்களுக்கு விடியல் பொழுது. நமது விடியல் பொழுதும் தேவர்களின் விடியல் பொழுதும் மார்கழியில் ஒன்றுசேர்கிறது. இந்த சமயத்தில் செய்யப்படும் ஆன்மிக விஷயங்கள் யாவும் அதிக பலன்தரும் என்பர். அந்த சமயத்தில் தெய்வீக அதிர்வலைகள் (Divine Vibrations) வெளிப்படுவதாக ஒலியியல் (Sound Theory) கூறுகிறது. இது மிக உன்னத நிலையைத் தரக்கூடியது. இதைப் பெறுவதற்காகத்தான் மார்கழி அதிகாலை வழிபாட்டை நம் முன்னோர்கள் அறிவுறுத்தினார்கள். மார்கழி என்றாலே ஆண்டாள் எனப்படும் கோதை நாச்சியார் நம் மனக்கண்ணில் தோன்றுவாள். எல்லா வைணவ ஆலயங்களிலும் ஸ்ரீதேவி, பூதேவிக்கிணையாக ஆண்டாளும் போற்றப்படுகிறாள். என்ன காரணம்? ஆண்டாள் ஆடிப்பூரத்தில் உதித்தவள். (பார்வதி, காமாட்சி ஆகியோரின் அவதார நட்சத்திரமும் பூரமே). இவளை பூமாதேவி அம்சம் என்பர். இவள் சிறுவயதிலிருந்தே அரங்கன்மீது பக்திகொண்டு, அவரை மணாளனாக அடைய விரும்பினாள். பிருந்தாவனத்தில் கோபியரான கன்னிப்பெண்கள், அதிகாலையிலேயே யமுனையில் நீராடி, "காத்யாயனி மஹாமாயே மஹாயோகின்ய தீஸ்வரி நந்தகோப சுதம் தேவி பதிம் மே குருதே நம:' என்று தேவியைத் துதித்து, கண்ணனையே கணவனாக அடையவேண்டினர் என்று ஸ்ரீமத் பாகவதம் கூறுகிறது. (மேற்கண்ட துதியைச் சொல்லி தேவியை வழிபட்டு நல்ல கணவனை அடைந்தோர் பலர்). அதுபோல, வில்லிபுத்தூரையே பிருந்தாவனமாக பாவித்த கோதை தன்னை கோபிகையாக எண்ணிக்கொண்டு, அரங்கனை மணாளனாக அடைய மார்கழியில் நோன்பிருந்து திருப்பாவை என்னும் முப்பது பாடல்களைப் பாடினாள். முதல் பாசுரம் 1 மார்கழித்திங்கள் மதிநிறைந்த நன்னாளால், நீராடப்போதுவீர், போதுமினோ, நேரிழையீர்! சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வ சிறுமீர்காள்! கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன் ஏர் ஆர்ந்தகண்ணி யசோதை இளஞ்சிங்கம் கார்மேனிச்செங்கண், கதிர்மதியம் போல் முகத்தான் நாராயணனே நமக்கே பறை தருவான் பாரோர் புகழப் படிந்தேலோரெம்பாவாய். "அழகிய ஆபரணங்களை அணிந்த கன்னிப் பெண்களே! வளமும் சிறப்பும் மிக்க ஆயர்பாடியில் உள்ள செல்வச் சிறுமியரே! மாதங்களில் சிறந்த மார்கழி மாதத்தில், முழு நிலவு வீசும் பௌர்ணமி நன்னாளில், பாவை நோன்பில் கலந்து கொண்டு நீராட விரும்புகின்றவர்கள், வாருங்கள், போகலாம்! கூர்மையான வேலைக் கொண்டு பகைவர்க்கு கொடுமை செய்பவனாகிய நந்தகோபனுடைய குமாரனும், அழகிய விரிந்த விழிகளை உடைய யசோதைக்கு இளம் சிங்கக்குட்டி போன்றவனும், கரிய வண்ண மேனியனும், செந்தாமரை போன்ற கண்களையும், சூரியனைப்போல பிரகாசமாயும் நிலவைப்போல குளிர்ந்ததாயும் உள்ள திருமுகத்தையும், உடையவனும், ஆன நாராயணன், நம் நோன்புக்கு வேண்டிய பொருட்களையும், நாம் விரும்பிய வரங்களையும் தந்து அருள் புரிவான். எனவே உலகத்தார் நம்மை போற்றும் வண்ணம், நோன்பிருந்து அவன் திருவடி பணிவோம், வாருங்கள்!" பாசுர விசேஷம்: 1. அடியவர், தனக்கும் எம்பெருமானுக்கும் ஆன உறவை உணரும் நாள் "நன்னாள்" என்று போற்றப்படுகிறது! "நீராடப் போதுவீர்" என்பது அடியவரை கைங்கர்யம் செய்ய அழைப்பதை உள்ளர்த்தமாக கொண்டுள்ளது. 2. மதி நிறைந்த - அந்த வேண்டுகோளை கேட்ட மாத்திரத்தில், கோபியரின் முகங்களும் பவுர்ணமி நிலவை ஒத்த பிரகாசம் அடைவதாகவும் வைத்துக் கொள்ளலாம் ! வெண்ணிலவு, வானத்தில் மட்டுமே இல்லை 3. 'செல்வ சிறுமீர்காள்' என்பதில் உள்ள 'செல்வம்' என்ற பதம் கண்ணன் மேல் உள்ள பேரன்பையும், அவனது துணை தரும் மகிழ்ச்சியையும் உள்ளர்த்தமாகக் கொண்டுள்ளது. 4. இப்பாசுரத்தில், 'ஆய்ப்பாடி' என்பது சம்சார சாகரத்தை உள்ளர்த்தமாக குறிக்கிறது. 5. "நேரிழையீர்" என்ற பதம் அமைதியையும், புலனடக்கத்தையும் ஒரு சேர வாய்க்கப் பெற்ற மாந்தரைக் குறிக்கிறது. 6. கூர்வேல் கொடுந்தொழிலன் -- தன்னுடைய சங்கல்பத்தால், நமது பாவங்களுக்கு நிவர்த்தி தர வல்லவன் கிருஷ்ணன் என்பதை உள்ளர்த்தமாக உணர்த்துகிறது. 7. கதிர் மதியம் போல் முகத்தான் -- பரந்தாமன் ஒரே சமயத்தில், அடியார்களுக்கு அருளையும் (குளிர்ச்சி), பகைவர்க்குத் துன்பமும் (வெப்பம்) தர வல்லவன் என்பதால் ! 8. பறை தருவான் -- "மோட்ச சித்தியை அடைவதற்கான உபாயங்களை அருள்வான்" என்பது உட்பொருள். 9. "நாராயணனே" என்பது உபய ஸ்வரூபத்தையும், "நமக்கே" என்பது அதிகாரி ஸ்வரூபத்தையும் குறிப்பில் உணர்த்துகிறது. இந்த இரண்டு சொற்களிலும் காணப்படும் ஏகாரம், பரமனை விட்டால் நமக்கு வேறு கதியில்லை என்பதை அறுதியிட்டு உணர்த்துகிறது இல்லையா ? 10. மேலும், கர்ம/ஞான யோகங்களை விடவும், பக்தி யோகமே பரமனின் அருளைப் பெறவும், அவனை அடையவும் சிறந்த மார்க்கமாக, திருப்பாவையின் முதல் பாசுரம் அறிவிக்கிறது.