#கேப்டன் விஜயகாந்த் கேப்டன் விஜயகாந்த் 'திரு மூர்த்தி' படத்தில் நடித்தபோது அப்போது வளரும் ஸ்டண்ட் மாஸ்டரான 'தளபதி' தினேஷ்க்கு ஒரு விருப்பம் இருந்தது.
'விஜயகாந்த் சார் கூட ஒரு சோலோ ஃபைட் பண்ணனும். இதை எப்படியாவது சார்க்கிட்ட சொல்லுங்க' என சொல்லியிருக்கிறார்.
தினேஷின் விருப்பத்தை அறிந்த கேப்டன், அவருடைய முந்திய சண்டைக்காட்சிகளை பார்த்தார். தினேஷ் தனது கால்களை தலைக்கு மேல் உயர்த்தி அருமையாக சண்டை போடும் திறமை உள்ளவர் என்பதை விஜயகாந்த் தெரிந்துக் கொண்டார்.
இதுமட்டுமில்லாமல் தனது கால்களை கொண்டு பேக்-கிக் அடிப்பதில் வல்லவரான விஜயகாந்திற்கு தினேஷின் ஃபைட் ஸ்டெப்ஸ் பிடித்து போனது.
இந்த படத்தில் தினேஷ்க்காகவே இந்த சோலோ சண்டைக்காட்சி வைத்தார் கேப்டன். இதுமட்டுமில்லாமல், தினேஷை அழைத்த கேப்டன் சண்டையை எப்படி தொடங்குவது எனக் கூறினார்.
அதாவது, தினேஷின் ஷூ அணிந்த காலை கேப்டனின் முகத்திற்கு மிக அருகில் உயர்த்தி அப்படியே நிற்க வேண்டும். பின்பு, பாதத்தை மட்டும் விஜயகாந்தின் முகத்தை வட்டமடிப்பது போல் சுழற்ற வேண்டும்.
இப்படி விஜயகாந்த் சொன்னவுடன் தினேஷ் அதிர்ந்து போனார். "சார், உங்க முகத்திற்கு நேரா நான் ஷூ காலை வெக்கிறதுல எனக்கு கொஞ்சமும் விருப்பம் இல்ல. இதுமட்டுமில்லாம, இப்படி செஞ்சா உங்க ரசிகர்கள் என்னை பொளந்து கட்டிடுவாங்க. வேணாம் சார்" என தினேஷ் மறுத்துள்ளார்.
"அட..உங்ககிட்ட இப்படி ஒரு திறமை இருக்கு. இதை வேஸ்ட் பண்ணலாமா...? உங்க திறமை மக்களுக்கும் தெரியனும். இப்படி செய்தால் சண்டைக் காட்சியும் சரியாக வரும்" என தினேஷை சமாதனப்படுத்திய கேப்டன் அந்த காட்சியில் ஆரம்பத்தில் தன்னை சிறுமைப்படுத்திக்கொண்டு தினேஷை திறமைசாலியாக காட்டியிருப்பார் விஜயகாந்த்.
இது மட்டுமா...?
'தவசி' படத்தில் ஒரு காட்சி வரும். பொன்னம்பலம் வேண்டுமென்றே சேத்துல தன்னோட செருப்பு காலை விட்டு அந்த சேற்றை விஜயகாந்த்தை விட்டு கழுவ சொல்லும் காட்சி.
இந்த காட்சியை விஜயகாந்திடம் எப்படி விளக்குவது? அவர் இதை ஏற்றுக்கொள்வாரா? என ஒருவித பயம் கலந்த தயக்கத்துடன் இயக்குனர் உதய் சங்கர் இருந்துள்ளார். ஆனால், அந்த காட்சி மிக முக்கியமான, உருக்கமான காட்சி என்பதால் அது நிச்சயம் வேண்டும் என நினைத்து ஒரு திட்டம் போட்டார்.
விஜயகாந்த் கொஞ்சம் தூரத்தில் அமர்ந்திருந்தபோது, அவருக்கு தெரியும் கோணத்தில் கேமராவை வைக்க சொல்லி பொன்னம்பலத்தை அழைத்து அவரது காலை இயக்குனர் கழுவுகிறார்.
"கேமராமேன், இந்த ஷாட் சரியா வருதா"? எனக் கேட்டுள்ளார். இதை தூரத்தில் கவனித்த விஜயகாந்த் நேராக எழுந்து வந்து " சங்கர், பொன்னம்பலம் காலை விடுங்க...நான் கழுவி விடுறேன்".
"சார்...நீங்களா.."?
"ஏங்க...இது என்னோட ஷாட் தானே. என்கிட்ட கேட்க கூச்சப்பட்டுகிட்டு தானே நீங்களே பொன்னம்பலம் காலை கழுவுறீங்க...? இப்ப நான் விஜயகாந்த் இல்ல சங்கர். தவசியோட மகன். அப்படி பாருங்க. வாங்க ஷாட் எடுக்கலாம்" என சொல்லிட்டு பொன்னம்பலத்தின் செருப்பில் இருந்த சேற்றை விஜயகாந்த் கழுவி விடுவார்.
இந்த விஷயத்தை பேட்டியில் கூறி நெகிழ்ந்துள்ளார் இயக்குனர் உதய் சங்கர்.
# பிரபலமான பெரிய நடிகர்கள் எல்லாருமே சாதாரண ஸ்டண்ட் கலைஞர்களுக்கு இவ்வளவு இடம் கொடுக்க மாட்டார்கள். பெரிய ஹீரோ என்கிற அந்த பிம்பத்தை விட்டு கீழே இறங்கி வர மாட்டார்கள்.
ஆனால், கேப்டன் மட்டும் இதற்கு ஒரு விதிவிலக்கு. கேப்டன் நிறைய புதிய இயக்குனர்களை மட்டும் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தவில்லை. நிறைய ஸ்டண்ட் கலைஞர்களுக்கு சினிமாவில் புது அத்தியாத்தை தொடக்கி வைத்தவரும் கேப்டன் தான்.
💖அந்த வானத்தைப்போல மனம் படைத்த மன்னவனே...💖
#சினிமா #🎬தமிழ்ப்பட மாஸ் சீன்ஸ்🔥 #💌நெஞ்ஜோடு கலந்திட்ட படங்கள்💔 #💌நெஞ்ஜோடு கலந்திட்ட படங்கள்💔 #🧑எனக்கு பிடித்த நடிகர்