꧁𝙆𝘼𝙇𝘼𝙄𝙎𝙀𝙇𝙑𝘼𝙉꧂
998 views
22 hours ago
#🌎பொது அறிவு 1950 ஜனவரி 26 ஆம் நாள் … இந்திய அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்து அனைவரும் ஏற்றுக் கொண்ட நாளே, குடியரசு தினமாக கொண்டாடப்படுகிறது. சுதந்திர தினத்தை விட, குடியரசுத் தினமே மிக முக்கியமான நாளாக கருதப்படுகிறது. மன்னர் ஆட்சி ஒழிக்கப்பட்டு, மக்கள், தாங்கள் விரும்பும் குடியாட்சியை தேர்ந்தெடுக்கும் ஜனநாயக உரிமைகளை வழங்கிய தினம் குடியரசுத் தினமாகும். குடியரசு தினவிழாவில் இந்திய அளவில் குடியரசுத் தலைவரும்; மாநில அளவில் கவர்னரும் தேசிய கொடியை ஏற்றுவார்கள். கொடியை , கொடிக் கம்பத்தில் கட்டி , அதன் கயிற்றை சுண்டி இழுத்து அவிழ்த்து, கொடியை பறக்க விடுவது குடியரசுத் தினத்தில் கொடியை பறக்க விடும் மரபாகும். சுதந்திர தினத்தில் கொடியை, கொடிக்கம்பத்தின் கீழ்ப்பகுதியில் கட்டி கயிற்றை மேல் நோக்கி ஏற்றி கொடியை பறக்க விடுவார்கள். சுதந்திர நாட்டிற்கு தன்னுடைய சட்டம் தேவை. 1947ல் இந்தியா சுதந்திரம் அடைந்தாலும், நாம் ஆங்கிலேயரின் சட்டத்தைத் தான் பயன்படுத்திக்கொண்டிருந்தோம். நமது சட்டத்தை வரைவதற்காக, நமது முதல் சட்ட அமைச்சரான திரு. அம்பேத்கர் அவர்களின் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. 2 வருடங்களுக்கும் மேலாக இந்த குழுவினர் உழைத்து நமக்கு அரசியலமைப்பு சட்டத்தை அளித்தனர். 1949ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நமது பாராளுமன்றம் இந்த அரசியலமைப்பு சட்டத்தை ஏற்று அதற்கு ஒப்புதல் அளித்தது. இந்த சட்டம் 1950 ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் தேதி அமலுக்கு வந்தது. இந்த நாளையே நாம் குடியரசு தினமாகக் கொண்டாடுகிறோம்.✍🏼🌹 *╭──────────────────╮*   *╔•═•-⊰❉⊱•═•⊰❉⊱• •═•╗♥︎‿♥︎𝗞𝗮𝗹𝗮𝗶𝘀𝗲𝗹𝘃𝗮𝗻♥︎‿♥︎ *╚•═•-⊰❉⊱•═•⊰❉⊱• •═•╝*