🌎பொது அறிவு
342K Posts • 1481M views
#🌎பொது அறிவு வரலாற்றில் இன்று செப்டம்பர் 25 (Battle of Loos) லூஸ் யுத்தம் 1915 - இங்கிலாந்து முதன்முதலில் நச்சுவாயுவை ஆயுதமாகப் பயன்படுத்திய யுத்தமும், பயன்படுத்திய நச்சுவாயு இங்கிலாந்தின் வீரர்களையே கொன்ற யுத்தமுமான, லூஸ் யுத்தம் தொடங்கியது. முதல் உலகப்போரில், இங்கிலாந்துக்கு மிகப்பெரிய உயிரிழப்புகளை ஏற்படுத்திய யுத்தங்களில் இது குறிப்பிடத்தக்கது. இந்த யுத்தத்தில் ஃப்ரான்சில் லூஸ்-என்-கோஹெல் என்ற கிராமத்தை, ஜெர்மன் படைகளிடமிருந்து கைப்பற்றியதால், இது லூஸ் யுத்தம் என்றழைக்கப்படுகிறது. எரிச்சலை ஏற்படுத்தும் நச்சுவாயுக்களை முதல் உலகப்போரில் 1914 ஆகஸ்ட்டிலேயே ஃப்ரான்சும், அக்டோபரில் ஜெர்மெனியும் பயன்படுத்தத் தொடங்கியிருந்தன. முதல் உயிர்க்கொல்லி நச்சாக, க்ளோரின் வாயுவையும் ஜெர்மெனி பயன்படுத்தியிருந்தது. இதனால், தாங்களும் நச்சுவாயுக்களை, ஃப்ரான்சில் நடக்கும் சண்டைகளில் பயன்படுத்துவது என்று மே 3இல் இங்கிலாந்து முடிவுசெய்தது. இங்கிலாந்தின் படைகளுடன், (ஆங்கிலேய ஆட்சியிலிருந்த) இந்தியாவின் குதிரைப்படை வீரர்களும் பங்கேற்ற இந்த லூஸ் யுத்தத்தில், க்ளோரின் வாயுவைப் பயன்படுத்துவது என்று செப்டம்பர் 6இல் இங்கிலாந்து முடிவெடுத்து, அதை ரகசியமாக வைத்திருந்தது. செப்டம்பர் 25இல் சண்டை தொடங்குவதற்கு முன்பாக, 142 டன் க்ளோரின் வாயு, கலன்களிலிருந்து திறந்துவிடப்பட்டது. ஆம்! ஜெர்மெனி வீசியதுபோன்ற நச்சுவாயு குண்டுகளாக அன்றி, காற்றால் ஜெர்மன் ஆக்கிரமிப்புப் பகுதிக்குள் நச்சுவாயு கொண்டுசெல்லப்படும் என்று நம்பி, கலன்களிலிருந்து திறந்துவிட்டது இங்கிலாந்து. எதிர்பாராமல் திசைமாறிய காற்றால் அந்த நம்பிக்கை பொய்த்தது. இடையிலிருந்த, மனிதர்கள் இல்லாத நிலப்பரப்பிற்கு பெரும்பகுதி க்ளோரின் காற்றால் அடித்துச் செல்லப்பட்டதுடன், எஞ்சியது இங்கிலாந்து படைகளின்மீதே திரும்பியது. இங்கிலாந்துப் படையினருக்கு அளிக்கப்பட்டிருந்த முகக்கவசம் முழுமையாகப் பாதுகாப்பளிக்கும் திறனுடையதாக இல்லை. அத்துடன், மூச்சுக்காற்றினால் உருவாகும் நீராவியால் கவசத்திலிருந்த கண்ணாடிகளை மூடி, பார்ப்பதற்கும் இடையூறாக இருந்தது. பார்ப்பதற்கு மட்டுமின்றி, மூச்சுவிடவும் சிரமமாக இருந்ததால், (கொரோனோ காலத்தில் நம்மைப்போல!) அதுவரை முகக்கவசத்துக்குப் பழகியிராத இங்கிலாந்தின் வீரர்கள், அதனைக் கழற்றியதால், அவர்கள் ஏவிய க்ளோரினால் அவர்களே உயிரிழந்தனர். ஜெர்மெனியின் ஆயுத பலம் அதிகம் என்பதை மட்டுமின்றி, இவர்களைவிடச் சிறந்த முகக்கவசங்களை அவர்கள் அணிந்திருப்பார்கள் என்பதையும் கணிக்கத் தவறிய இங்கிலாந்து, சுமார் 60 ஆயிரம் வீரர்களை இழந்தது. ஒருகட்டத்தில் இங்கிலாந்துப் படைகளிடம் போதுமான ஆயுதங்கள் இல்லாமற்போயின. இரண்டு வாரங்கள் நடைபெற்ற இச்சண்டையில், சுமார் 26 ஆயிரம் வீரர்களை இழந்தாலும், ஜெர்மெனியே வெற்றிபெற்றது. *╭──────────────────╮*   *╔•═•-⊰❉⊱•═•⊰❉⊱• •═•╗♥︎‿♥︎𝗞𝗮𝗹𝗮𝗶𝘀𝗲𝗹𝘃𝗮𝗻♥︎‿♥︎ *╚•═•-⊰❉⊱•═•⊰❉⊱• •═•╝*
10 likes
20 shares