ல.செந்தில் ராஜ்
12.8K views
16 days ago
#அருள்_என்றால் #என்னங்க #ஐயா ?? கேட்க்கவிட்டவன் திருவருளால் .. அருள் வேண்டும் ?? அருள் இல்லை ?? அருள் வருகிறது ?? இது அருள் ?? அது சாபம் ?? அருள் வந்து ஆடுகிறார்கள் ?? அருள் ?? திருவருள் ?? அருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை ?? அருள் கிடைக்க வேண்டும் ?? ........... இப்படி எண்ணற்ற சொற்தொடர்களை நாம் கடந்து வந்திருக்கிறோம் !! அருள் என்பது இங்கு இல்லாதது போலவும் ?? அதை பெறவே வாழ்வின் நோக்கம் என்பது போலவும் சித்திகரிக்க படுகிறது !! யாரோ சிலர் மட்டுமே அருள் பெற்றவர்கள் !! மற்றவர்கள் எல்லாம் அருள் பெறாதவர்கள் ?? போன்றும் கருதிக்கொள்ள படுகிறது .. ஆனால் ( இவனுள் அவனால் ..) அருள் என்பது இந்த பிரபஞ்சத்தின் மூலமான இறைவனிடம் இருந்து வெளிப்பாடு ஆற்றலே .. அவ்வாற்றல் அதிர்வலையாக சுழற்ச்சியின் மையத்தில் இருந்து இறையறாது வெளிப்படுகொண்டே இருப்பது .. அவ்வாற்றலே அருளலாக எதையும் உருவாக, இருக்க வைக்க, வளர்க்க, சுருக்க, மாற்ற போன்ற அத்தனையையும் இந்த பிரபஞ்சத்தில் நிகழ்த்திக்கொண்டே இருக்கிறது .. இதை ஓம் என்ற சொல்லின் தாக்கம் வழியே நாம் அறியலாம் .. அதாவது " ஓ " என்பது திறப்பதும் " ம் " என்பது மூடுவதையும் குறிக்கும் .. அதாவது நாம் முச்சு விடுவது போல வெளியேற்றம் / உள்ளேற்றம் .. இருதயத்தின் துடிப்பு கூட திறந்து மூடுவது .. அது போல ஒவ்வொரு அணுவும் இவ்வாறே அதன் இயக்கத்தை பெறுகிறது .. இவ்வனைத்தும் பிரபஞ்சத்தின் மூலம் வழியே வெளிப்படும் அதிர்வலைகள் தான் .. அந்த அதிர்வலையின் தாக்கமே அருள் என்று நம்மால் சொல்லபடுகிறது .. பொதுவாக இறைவனுக்கு ஐந்து தொழில்கள் என்றாலும் அத்தனையின் மூலத்தொழிலாக அருளாலே இடம்பெறுகிறது .. படைத்து அருளால் .. காத்து அருளால் .. மறைத்து அருளால் .. அழித்து அருளால் .. அளித்து அருளால் .. எல்லாம் அருளாலே .. அப்போது இந்த பிரபஞ்சத்தில் உள்ள அத்தனையும் ( நீங்கள் உயிர்கள் / கோள்கள் / ஜீவராசிகள் / உயிரற்றவை ) அருளலை அனுபவித்து கொண்டு இருப்பதாலேயே இருக்கிறது .. இது அருள் என்று சொல்ல வைப்பதும் அருளால் தான் .. இது அருள் இல்லை என்று நினைக்க வைப்பது கூட அருளால் தான் .. இதில் புதிதாக அருளை பெற ஏதுமில்லை .. ஏனென்றால் அருள் வழியே பிறந்து அருள் வழியே வளர்ந்து அருள் வழியே வாழ்ந்து அருள் வழியே வேறு பரிமாணத்திற்கு ( மரணம் ) மாறுவது .. என்பதில் தான் எல்லாம் இருக்கு .. எதுவும் இருக்கு .. அப்புறம் அருளை பெற இதை / அதை செய்யவேண்டும் என்பது ?? இதை / அதை செய்வது எல்லாமே அருளை அருளாக அறிந்து அனுபவிக்க வைக்க அவரவர் கண்ட முறைகளே .. உங்களுக்கான வழியும் உங்களுள் உண்டு !! அப்போது திருவருள் என்பது ?? அருள் என்று பொதுவாக அதில் இதில் என்பதை கடந்து எதிலும் எப்போதும் இருப்பதை அவரவர் நிலைக்கு ஏற்ப அனுபவிக்க தொடங்க .. எங்கு இருந்து இந்த அருள் என்ற ஒன்று வருகிறது என்று அவரவர் தன்னுள்ளே தேட .. எங்கும் நிறைந்த !! யாதுமாகிய !! எதிலும் அதுவான !! இறைவனை உருவம் நாமம் அத்தனையும் கடந்து அனுபவிக்க தொடங்க .. திரு என்ற துய வெட்டவெளியில் எதற்கும் மையமான இறைவனிடம் இருந்து அவனது இயக்கத்தின் வழியே வெளிபடுவது தான் அருள் என்ற அற்புதத்தை உணர .. அருள் எதனால் என்ற மெய் விளங்க .. #திருவருளாக அனுபவிக்க தொடங்குவோம் .. ஏதோ எதுவும் தெரியாதவனை சொல்லெடுத்து கொடுத்து .. உங்களோடு என்னையும் புரிவிக்கும் திருவருளை போற்றி ........ திருச்சிற்றம்பலம் நடராஜா நடராஜா #🙏ஹர ஹர மஹாதேவ்⭐ #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #🙏🏼ஓம் நமசிவாய #🙏கோவில்