குருவே சரணம்....
ஸ்ரீ ராகவேந்திரர் கோயில்களில் மட்டும் வசிப்பவர் அல்லர். தம்மை உண்மையாக நம்பி தன்னிடம் அடைக்கலம் புகும் பக்தரின் உள்ளத்திலும் வாழ்பவர்.
தான் ஒருவரின் உள்ளத்தில் இருக்கும் போது அந்த பக்தரின் வாழ்வை மாற்றும் விதத்தில் ஆலோசனைகள் வழங்குவது, அனைத்திலும் நல்லதையே பெற்றுத் தருவது போன்றவற் றைச் செய்கிறார் குரு.
சிலசமயம் பல்வேறு பிரச்சினைகளில் சிக்கி க் கொள்ளும் பக்தர்களை யார் மூலமாவது தன்னிடம் வருமாறு செய்து அவருக்குத் தீர்வை தருகிறார்.
இதனால் பல பக்தர்கள் ஸ்ரீ ராகவேந்திரர் உடனே அற்புதம் செய்துவிடுவார் என நினைக்கிறார்கள். எல்லோருக்கும் இது வாய்ப்பில்லை.
முதலில் அற்புதத்தால் தன்னிடம் ஈர்க்கும் குரு, அடுத்து இவன் தன்னை மிகவும் நேசிக்கிறானா என்பதை சோதித்துப் பார்க்க கஷ்டத்தை தந்து பார்க்கிறார்.
எந்தளவுக்கு உனது நம்பிக்கை தாக்குப் பிடிக்கும் என்பதை வரையறுக்கும் விதத்தில் அந்த சோதனை இருக்கும்.
அதில் தாக்குப்பிடிக்க முடியாமல் சிலர் ஓடிப் போய் விடுவார்கள். சிலர் என்னவா னாலும் நீயே கதி என நிலைத்து நிற்பார்கள்.
நிலைத்து நிற்பவரின் துயரங்களை தானே வாங்கிக்கொண்டு அவர்களுக்கு பரிசாக விடுதலையை அளித்து வாழ்த்துவார் குரு ஸ்ரீ ராகவேந்திரர்.
குருவே சரணம்
ஓம் ஸ்ரீ ராகவேந்திராய நமஹா...
11.12.2025.. நேசமுடன் விஜயராகவன்.....
#🕉️ ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் #🙏பெருமாள் #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #✨கடவுள் #🤔 ஆன்மீக சிந்தனைகள்