*நாகூரில் முக்கிய இடங்களில் சாலை வசதியும் நாகூர் கடற்கரையில் ஹெலிபேட் வசதியும் செய்து தர தமிழக அரசிடம் கோரிக்கை.*
நாகூர் தர்கா உலக புகழ்பெற்றது, இத்தகைய நாகூர் தர்கா நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ளது. உலகெங்குமிருந்து ஜாதி மத பேதமின்றி பல லட்சகணக்கான பக்தர்கள் நாகூர் தர்கா தினமும் வருகை புரிகின்றனர். நாகூர் தமிழக அரசின் சுற்றுலா துறையில் மிக முக்கிய அங்கம் வகிக்கிறது. நாகூரில் ஹெலிகாப்டர் இறங்கும் தள வசதி இல்லை. தமிழக அரசு இதனை நாகூரில் அமைத்திட வேண்டும், நாகூர் தர்காவிற்க்கு சொந்தமாக 4 ஏக்கர் இடம் நாகூர் கடற்கரை அருகே உள்ளது. அங்கு இந்த ஹெலிகாப்டர் தரையிறங்கும் வசதி அமைத்தால் மிகவும் வசதியாக இருக்கும் ஆகவே தயவு கூர்ந்து அரசு அடுத்து அறிவிக்க கூடிய நல திட்டத்தில் இதனை செய்து தர வேண்டும் என்றும் மேலும் சமீபத்தில் ஒரு தனியார் நிறுவனம் நாகூர் தர்காவிற்க்கு ஒரு பேட்டரி கார் நன்கொடையாக கொடுத்தது. அதனை நாகை மாவட்ட ஆட்சியர் அவர்கள் திறந்து வைத்து மக்கள் பயன்பாட்டுக்கு விடும் விழாவில் கலந்து கொண்டார். நாகூருக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் இன்னும் புதிய சாலை வசதி செய்து தராத காரணத்தால் இந்த பேட்டரி கார் இன்னும் மக்கள் பயன்பாட்டு வரவில்லை. மேலும் தற்போதைய சாலை போடும் டெண்டரில் தர்காவை சுற்றியுள்ள வீதிகளில் மட்டும் சாலை வசதி போடும் படியாக டெண்டர் விடப்பட்டுள்ளது. இதன் மூலம் மக்கள் பயன்பாட்டிற்க்காக இந்த பேட்டரி கார்களை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. நாகூர் தர்காவில் இருந்து செய்யது பள்ளி தெரு, பீரோடும் தெரு வழியாக கடற்கரை வரும் செல்லும் சாலைகளையும், நாகூர் தர்காவில் இருந்து மணவரா வடபுறம் தெரு வழியாக தெருப்பள்ளி தெரு வழியாக ரயில் நிலையம் செல்லும் சாலைகளையும், நாகூர் தர்கா கிழக்கு வாசலில் இருந்து கலீபா சாஹிப் தெரு, குளத்தடி தெரு வழியாக யுசுப் நைனா தெரு வழியாக ரயில் நிலையம் செல்லும் சாலைகளையும், நாகூர் தர்காவில் இருந்து கடைத்தெரு வழியாக புதிய பேருந்து நிலையம் செல்லும் சாலைகளையும் புதிதாக நல்ல விதத்தில் அமைத்தால் மட்டுமே இந்த பேட்டரி கார்களை இலகுவாக இயக்கி மக்கள் பயன்பாட்டிற்க்கு விட முடியும் என்றும் ஆகவே உடனடியாக மேற்கன்ட இடங்களில் சாலை வசதி அமைத்து தந்திடுமாறு நாகூர் தர்கா பரம்பரை அறங்காவலரும் பரம்பரை ஆதீனமுமாகிய முஹல்லி முத்தவல்லி ஹாஜி S. செய்யது முஹம்மது கலீபா சாஹிப் காதிரி ஹாசிமி தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
#😁தமிழின் சிறப்பு #நாகூர் #kalifasahib #🙏நமது கலாச்சாரம்