kalifasahib
4 Posts • 997 views
Kalifa Sahib
6K views
*நாகூரில் முக்கிய இடங்களில் சாலை வசதியும் நாகூர் கடற்கரையில் ஹெலிபேட் வசதியும் செய்து தர தமிழக அரசிடம் கோரிக்கை.* நாகூர் தர்கா உலக புகழ்பெற்றது, இத்தகைய நாகூர் தர்கா நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ளது. உலகெங்குமிருந்து ஜாதி மத பேதமின்றி பல லட்சகணக்கான பக்தர்கள் நாகூர் தர்கா தினமும் வருகை புரிகின்றனர். நாகூர் தமிழக அரசின் சுற்றுலா துறையில் மிக முக்கிய அங்கம் வகிக்கிறது. நாகூரில் ஹெலிகாப்டர் இறங்கும் தள வசதி இல்லை. தமிழக அரசு இதனை நாகூரில் அமைத்திட வேண்டும், நாகூர் தர்காவிற்க்கு சொந்தமாக 4 ஏக்கர் இடம் நாகூர் கடற்கரை அருகே உள்ளது. அங்கு இந்த ஹெலிகாப்டர் தரையிறங்கும் வசதி அமைத்தால் மிகவும் வசதியாக இருக்கும் ஆகவே தயவு கூர்ந்து அரசு அடுத்து அறிவிக்க கூடிய நல திட்டத்தில் இதனை செய்து தர வேண்டும்  என்றும் மேலும் சமீபத்தில் ஒரு தனியார் நிறுவனம் நாகூர் தர்காவிற்க்கு ஒரு பேட்டரி கார் நன்கொடையாக கொடுத்தது. அதனை நாகை மாவட்ட ஆட்சியர் அவர்கள் திறந்து வைத்து மக்கள் பயன்பாட்டுக்கு விடும் விழாவில் கலந்து கொண்டார். நாகூருக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் இன்னும் புதிய சாலை வசதி செய்து தராத காரணத்தால் இந்த பேட்டரி கார் இன்னும் மக்கள் பயன்பாட்டு வரவில்லை. மேலும் தற்போதைய சாலை போடும் டெண்டரில் தர்காவை சுற்றியுள்ள வீதிகளில் மட்டும் சாலை வசதி போடும் படியாக டெண்டர் விடப்பட்டுள்ளது. இதன் மூலம் மக்கள் பயன்பாட்டிற்க்காக இந்த பேட்டரி கார்களை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. நாகூர் தர்காவில் இருந்து செய்யது பள்ளி தெரு, பீரோடும் தெரு வழியாக கடற்கரை வரும் செல்லும் சாலைகளையும், நாகூர் தர்காவில் இருந்து மணவரா வடபுறம் தெரு வழியாக தெருப்பள்ளி தெரு வழியாக ரயில் நிலையம் செல்லும் சாலைகளையும், நாகூர் தர்கா கிழக்கு வாசலில் இருந்து கலீபா சாஹிப் தெரு, குளத்தடி தெரு வழியாக யுசுப் நைனா தெரு வழியாக ரயில் நிலையம் செல்லும் சாலைகளையும், நாகூர் தர்காவில் இருந்து கடைத்தெரு வழியாக புதிய பேருந்து நிலையம் செல்லும் சாலைகளையும் புதிதாக நல்ல விதத்தில் அமைத்தால் மட்டுமே இந்த பேட்டரி கார்களை இலகுவாக இயக்கி மக்கள் பயன்பாட்டிற்க்கு விட முடியும் என்றும் ஆகவே உடனடியாக மேற்கன்ட இடங்களில் சாலை வசதி அமைத்து தந்திடுமாறு நாகூர் தர்கா பரம்பரை அறங்காவலரும் பரம்பரை ஆதீனமுமாகிய முஹல்லி முத்தவல்லி ஹாஜி S. செய்யது முஹம்மது கலீபா சாஹிப் காதிரி ஹாசிமி தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளார். #😁தமிழின் சிறப்பு #நாகூர் #kalifasahib #🙏நமது கலாச்சாரம்
52 likes
55 shares
Kalifa Sahib
10K views
வாஞ்சூர் அலிஷா தர்கா கந்தூரி விழா கொண்டாட்டம். காரைக்கால் மாவட்டம் திருமலைராயன் பட்டினம் வாஞ்சூர் அருகே உள்ள ஹஜ்ரத் செய்யது அலி ஷா காதிரி (ரலி) தர்கா இந்தப் பகுதியில் மிகவும் பிரச்சிதம்பெற்றது. ஒவ்வொரு வருடமும் ரஜப் மாதம் பிறை 10 இந்த தர்காவில் வருடாந்திர ஒரு நடைபெறுவது வழக்கம். பத்து நாட்களுக்கு முன்பு அதாவது ரஜப் பிறை முதல் தினம் இந்த தர்காவில் கொடியேற்றத்துடன் 454 வது வருடாந்திர கந்தூரி விழா வெகு சிறப்பாக துவங்கியது. முக்கிய நிகழ்வான சந்தனம் பூசும் நிகழ்வு ரஜப் மாத பிறை 10 அதாவது இன்று மக்ரிப் தொழுகைக்கு பிறகு நடைபெற்றது. மக்ரிப் தொழுகைக்கு முன்னர் திக்ரு மஜ்லிஸ் தர்கா அருகே உள்ள பள்ளிவாசலில் நடைபெற்றது. பின்பு ஹஜ்ரத் செய்யது அலி ஷா காதிரி (ரலி) அவர்களின் புனித சமாதியில் பாரம்பரிய முறைப்படி ஹஜ்ரத் ஹாஜி சையது முகமது கலிபா சாஹிப் காதிரி சந்தனம் பூசி துவா ஓதினார். ஏராளமான மக்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். சந்தனம் பூசம் நிகழ்வு முடிவடைந்ததும் புனித துவா ஓதப்பட்டு அனைவருக்கும் தப்ரூக் என்ற இனிப்பு வழங்கப்பட்டது. #நாகூர் தர்கா வீடியோஸ் #நாகூர் #kalifasahib #😁தமிழின் சிறப்பு #🙏நமது கலாச்சாரம்
74 likes
126 shares