வாஞ்சூர் அலிஷா தர்கா கந்தூரி விழா கொண்டாட்டம்.
காரைக்கால் மாவட்டம் திருமலைராயன் பட்டினம் வாஞ்சூர் அருகே உள்ள ஹஜ்ரத் செய்யது அலி ஷா காதிரி (ரலி) தர்கா இந்தப் பகுதியில் மிகவும் பிரச்சிதம்பெற்றது. ஒவ்வொரு வருடமும் ரஜப் மாதம் பிறை 10 இந்த தர்காவில் வருடாந்திர ஒரு நடைபெறுவது வழக்கம்.
பத்து நாட்களுக்கு முன்பு அதாவது ரஜப் பிறை முதல் தினம் இந்த தர்காவில் கொடியேற்றத்துடன் 454 வது வருடாந்திர கந்தூரி விழா வெகு சிறப்பாக துவங்கியது. முக்கிய நிகழ்வான சந்தனம் பூசும் நிகழ்வு ரஜப் மாத பிறை 10 அதாவது இன்று மக்ரிப் தொழுகைக்கு பிறகு நடைபெற்றது. மக்ரிப் தொழுகைக்கு முன்னர் திக்ரு மஜ்லிஸ் தர்கா அருகே உள்ள பள்ளிவாசலில் நடைபெற்றது. பின்பு ஹஜ்ரத் செய்யது அலி ஷா காதிரி (ரலி) அவர்களின் புனித சமாதியில் பாரம்பரிய முறைப்படி ஹஜ்ரத் ஹாஜி சையது முகமது கலிபா சாஹிப் காதிரி சந்தனம் பூசி துவா ஓதினார். ஏராளமான மக்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். சந்தனம் பூசம் நிகழ்வு முடிவடைந்ததும் புனித துவா ஓதப்பட்டு அனைவருக்கும் தப்ரூக் என்ற இனிப்பு வழங்கப்பட்டது.
#நாகூர் தர்கா வீடியோஸ் #நாகூர் #kalifasahib #😁தமிழின் சிறப்பு #🙏நமது கலாச்சாரம்