꧁𝙆𝘼𝙇𝘼𝙄𝙎𝙀𝙇𝙑𝘼𝙉꧂
884 views
7 days ago
#🌎பொது அறிவு வரலாற்றில் இன்று டிசம்பர் 21 1913 - ஆர்தர் வின் என்ற இதழியலாளர் உருவாக்கிய குறுக்கெழுத்துப் புதிர், 'வோர்ட்-கிராஸ்' என்ற பெயருடன் 'நியூயார்க் வோர்ல்ட்' இதழில் வெளியான நாள் உலகின் முதல் குறுக்கெழுத்துப் புதிர் என்று இதுவே குறிப்பிடப்பட்டாலும், இதற்கு முன்பே குறுக்கெழுத்துப் புதிர்கள் உருவாக்கப்பட்டுள்ளன. முதல் குறுக்கெழுத்துப் புதிர் எது என்பதற்கான ஆதாரங்கள் தெளிவாக இல்லை. 1793-95 காலக்கட்டத்தில் வெளியான 'தி ஸ்டாக்டன் பீ' என்ற புத்தகத்தில், சொற்புதிர் ஒன்று இடம்பெற்றிருந்தது. குறுக்கெழுத்துப் புதிர் (கிராஸ்வோர்ட் பசில்) என்ற சொல்லாக்கத்தை, 'அவர் யங் ஃபோல்க்ஸ்' என்ற அமெரிக்க இதழ் 1800களின் பிற்பகுதியில் உருவாக்கியது. 1862இல் யூஜின் டி மலேஸ்கா உருவாக்கி, 'பெண்ணின் புத்தகம்' என்ற நூலில் வெளியான குறுக்கெழுத்துப் புதிர் நவீன குறுக்கெழுத்துப் புதிரை ஒத்திருந்ததாகக் கூறப்படுகிறது. 1873இலிருந்து 'செயிண்ட் நிக்கோலஸ்' என்ற இதழ், 'இரட்டை வைரப் புதிர்' என்ற பெயரில் குறுக்கெழுத்துப் போட்டி மாதிரியான ஒரு புதிரை வெளியிட்டு வந்துள்ளது. 'தி இல்லஸ்ட்ரேட்டட் சென்ச்சுரி ஆஃப் சண்டே' என்ற இத்தாலிய இதழில், 'பொழுதைக் கழிப்பதற்கு' என்ற யெரில் கியுசெப்பி ஏரோல்டி என்பவர் ஒரு புதிரை வெளியிட்டார். இது 4க்கு 4 கட்டங்களில், குறுக்கு, நெடுக்கு குறிப்புக்களுடன், கருப்படிக்கப்பட்ட கட்டங்களே இல்லாமல் உருவாக்கப்பட்டிருந்தது. ஆனாலும், தற்போது நாம் காணும் குறுக்கெழுத்துப் புதிரின் பல தன்மைகளை, ஆர்தர் வின் உருவாக்கிய புதிர்தான் அறிமுகப்படுத்தியது. 1916லிருந்து 'வோர்ல்ட்' இதழ் தொடர்ந்து குறுக்கெழுத்துப் புதிர்களை வெளியிட்டது. 1920களில் குறுக்கெழுத்துப் புதிர் புகழ்பெறத் தொடங்கியது. 'கிராஸ்வோர்ட்' என்ற சொல் ஆக்ஸ்போர்ட் ஆங்கில அகராதியில் 1933இல் சேர்க்கப்பட்டது. இரண்டாம் உலகப்போரில், நேச நாடுகளின் 'ஆப்பரேஷன் ஓவர்லார்ட்' என்ற நடவடிக்கையின் ஒரு பகுதியாக, ராணுவ அதிகாரிகளுக்கான தகவல்கள் 'டெய்லி டெலிகிராஃப்' இதழில் வெளியான குறுக்கெழுத்துப் புதிர்களின்மூலம் தெரிவிக்கப்பட்டன என்பது வியப்புக்குரிய கூடுதல் தகவல்! *╭──────────────────╮*   *╔•═•-⊰❉⊱•═•⊰❉⊱• •═•╗♥︎‿♥︎𝗞𝗮𝗹𝗮𝗶𝘀𝗲𝗹𝘃𝗮𝗻♥︎‿♥︎ *╚•═•-⊰❉⊱•═•⊰❉⊱• •═•╝*