முனைவர் ச.சு.ஜைனுதீன் நிறுவனத் தலைவர் மு.ம.க.
692 views
17 days ago
#நல்லதே பேசு நல்லதே நினை நிக்காஹ் திருமணம் – முக்கிய பிரமுகர்கள் பங்கேற்பு விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் 27வது வார்டு உமர் சாகிப் தெருவைச் சேர்ந்த அ. அஜிம்துல்லா – பரிதா பேகம் தம்பதியரின் இளைய மகன் இன்ஜினியர் அ. முகமது ரியாஸ் – டாக்டர் மீ. அல்மாஸ் ஆகியோரின் நிக்காஹ் திருமணம் இன்று (5.1.2026) திங்கட்கிழமை மதியம் 12 மணியளவில் திண்டிவனம் – பாண்டி ரோடு தேசிய நெடுஞ்சாலை ஓமந்தூரில் அமைந்துள்ள பிரவாஸ் பேலஸ் சொகுசு ஹாலில் நடைபெற்றது. மஸ்ஜிதே உஸ்மானியா பள்ளிவாசல் ஜமாத்தார் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிக்காஹ் விழாவில் முஸ்லிம் மக்கள் கழகத்தின் நிறுவனத் தலைவர் முனைவர் ச. சு. ஜைனுதீன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் திண்டிவனம் 27வது வார்டு நகர மன்ற உறுப்பினர் கு. ஷபியுல்லா, நவாப் பள்ளிவாசல் இமாம் மௌலானா ஹாஜி ஏ. நியாஸ் அஹமத், மஸ்ஜிதே ரஹ்மானியா பள்ளிவாசல் இமாம் மௌலானா ஹ. முஹம்மத் ஜாவித், தாருஸ்ஸலாம் பள்ளிவாசல் இமாம் மௌலானா முஹம்மத் ஹாரூன், மதினா பள்ளிவாசல் இமாம் மௌலானா ஹபீபுல்லா உள்ளிட்டோர் கலந்து கொண்டு மணமக்கள் வாழ்வில் சிறப்பும் சுபீட்சமும் பெற துவா பிரார்த்தனை செய்தனர். இந்த நிக்காஹ் விழாவில் ஏராளமான உறவினர்கள், நண்பர்கள் மற்றும் ஜமாத்தார் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.