AMANLATCHOUMY
604 views
4 days ago
குடும்பத்திற்கு மகிழ்ச்சி தரும் சக்தி தட்சணாமூர்த்தி திருவள்ளூர் மாவட்டம் """"""""""""""""""""""""""""""""""" சிவனும் சக்தியும் ஒன்று என்பதை உலகிற்கு உணர்த்திய அற்புதமான திருத்தலம் திருக்கண்டலம் சிவா நந்தீஸ்வரர் ஆலயம் இக்கோயிலில் மிக உயரிய சிறப்பு உள்ளது தட்சிணாமூர்த்தி தனி சன்னதியில் சத்தி தட்சிணாமூர்த்தியாக அருள்பாலிக்கிறார் பொதுவாக யோக நிலையிலோ அல்லது சீடர்களுக்கு உபதேசிக்கும் நிலையிலோ தட்சிணாமூர்த்தியை பார்த்திருப்போம் ஆனால் இங்கே தட்சிணாமூர்த்தி தனது இடது மடியில் அம்பிகை அமர வைத்து அணைத்தபடி கருணை பொங்க காட்சி தருகிறார் இவருக்கு அருகில் இருக்கும் முனிவர் வணங்கிய நிலையில் உள்ளார் கருத்து வேறுபாட்டால் பிரிந்திருக்கும் தம்பதியர் மீண்டும் இணைய குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்பட திருமணத் தடைகள் நீங்கி நல்ல வரன் அமைய இத்தல வழிபாடு சிறப்புடையதாகும் வியாழக்கிழமைகளில் இந்த சக்தி தட்சிணாமூர்த்திக்கு கள்ளி மலர்களால் அர்ச்சனை செய்து வழிபட்டால் குடும்பத்தில் முன்னேற்றம் மகிழ்ச்சி சந்தோஷம் ஏற்படும் திருமண தடைகள் விலகும் பிரிந்த குடும்ப ஒன்று சேரும் #ஆன்மீகம் #பக்தி